Jump to content

தமிழ் அரசியல் தலைமைகள் - தொடரும் தவறுகள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் தவறுகள்..!

தமிழ் அர­சியல் ஓர் இக்­கட்­டான நிலை­மைக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையில் இருந்து அது எவ்­வாறு வெளி­வரப் போகின்­றது என்­பதும், பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கும், அர­சியல் ரீதி­யான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் ஆளா­கி­யுள்ள தமிழ் மக்­களை எவ்­வாறு அது வழி­ந­டத்தப் போகின்­றது என்­பதும் சிந்­த­னைக்­கு­ரி­யது. 

நல்­லாட்சி அர­சாங்கம் வாய்ப்­பேச்சில் தனது வீரத்தைக் காட்­டி­ய­தே­யொ­ழிய, காரி­யத்தில் எத­னையும் சாதிக்­க­வில்லை. எதேச்­ச­தி­கா­ரத்தை ஒழித்­துக்­கட்டி, ஜன­நா­ய­கத்துக்குப் புத்­து­யி­ர­ளித்து, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­போ­வ­தாக நல்­லாட்சி அரச தலை­வர்கள் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர். ஆனால், காலப் போக்கில் அந்த உறு­தி­மொ­ழி­களை அவர்கள் காற்றில் பறக்­க­விட்­டனர். 

தம்மை ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருத்­திய நாட்டு மக்­களின் மன­ம­றிந்து அவர்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்து நல்­லாட்சி புரி­வ­தற்கு மாறாக மனம் போன­போக்கில் ஆட்சி செலுத்­தி­ய­தையே இந்த ஆட்­சி­யா­ளர்­களின் 4 வருட காலத்தில் மக்கள் அனு­ப­வ­மாகப் பெற்­றி­ருக்­கின்­றார்கள்.

தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில், யுத்­தத்தை வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் இரா­ணுவ ஆட்­சி­யி­லேயே ஆர்வம் காட்­டி­யி­ருந்­தது. யுத்­தத்தின் பின்னர் அர­சியல் தீர்வு காண்­ப­திலும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­திலும் அக்­கறை காட்­டவே இல்லை. 

மஹிந்த அர­சாங்­கத்­துக்கு மாற்­றீ­டாக, பல முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்­களைச் செய்­யப்­போ­வ­தாக உறு­தி­ய­ளித்த, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகிய மும்­மூர்த்­தி­க­ளுக்கும் தமிழ்த் தரப்பு தேர்­தலில் ஆத­ர­வ­ளித்­தது. இந்த ஆத­ரவின் மூலம் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய நல்­லாட்சி அர­சாங்கத் தலை­வர்கள் முன்­னைய அர­சாங்­கத்­தை­யும்­விட தமிழ் மக்­களை மோச­மாக நடத்­து­வ­தி­லேயே கவ­ன­மாக இருக்­கின்­றனர். அவர்கள் நாட்டை சீர­ழிப்­ப­தி­லேயே வெற்றி கண்­டி­ருக்­கின்­றனர். 

எதேச்­ச­தி­காரப் போக்கைக் கொண்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சி­யிலும் பார்க்க இந்த அர­சாங்கம் முன்­னைய அரசாங்கத்­திலும் பார்க்க மோச­மா­னது என்ற அவப்­பெ­ய­ரையே இது­வ­ரையில் சம்­பா­தித்­துள்­ளது. 

உறு­தி­யற்ற (ஸ்திர­மற்ற) அர­சியல் நிலைமை, பொரு­ளா­தார பாதிப்பு, பொறுப்பு கூறு­கின்ற சர்­வ­தேச கடப்­பாட்­டையும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிலை­மா­று­கால நீதியை வழங்­கு­கின்ற கட­மை­யையும் புறக்­க­ணித்த போக்கு, சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்தின்  மேலாண்­மைக்கு வழி­யேற்­ப­டுத்­தி­யமை, மத சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்கு இட­ம­ளித்­தமை, சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் நாட்­டுக்குள் பிர­வே­சித்­ததைத் தடுப்­பதில் பொறுப்­பற்ற முறையில் செயற்­பட்­டமை, மக்கள் மத்­தியில் நல்­லு­றவு, நல்­லி­ணக்கம், ஐக்­கியம், சக வாழ்வு என்­ப­வற்றை ஏற்­ப­டுத்தத் தவ­றி­யமை போன்ற பல்­வேறு குறை­பா­டு­க­ளையே இந்த அர­சாங்கம் சாதனைப் பட்­டி­ய­லாகக் கொண்­டி­ருக்­கின்­றது.

கேள்­விகள்

இந்த நிலையில் நன்­மை­களைப் பெற்றுத் தரும். பிரச்­சி­னை­களைத் தீர்த்து நாட்டின் சுபிட்­சத்­துக்கு வழி­கோலும் என்ற நம்­பிக்­கையில் இந்த அர­சாங்­கத்­துக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, அதனை சரி­யான வழியில் கையாள முடி­யாமல் தடு­மாற்­றத்­துக்கு ஆளாகி இருக்­கின்­றது. 

முன்­னெப்­போதும் இல்­லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்­கொண்­டுள் ளோம் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப் பின் பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்திரன் தெரி­வித்­துள்ளார். அவ­ரு­டைய கூற்று இன்­றைய தமிழ் அர­சி­யலின் கடி­ன­மான சூழலைப் பிர­தி­ப­லித்­தி­ருக்­கின்­றது. 

தமிழ் மக்­களின் அர­சியல் பய­ணத்­திலே பல வித்­தி­யா­ச­மான தசாப்­தங்­களைக் கடந்து வந்­தி­ருக்­கின்றோம். ஆனால், இன்று நாங்கள் இருக்­கின்ற சூழல் இதற்கு முன்­னெப்­போதும் இல்­லாத சூழ­லாக இருக்­கின்­றது என்று அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

sambanthan_.jpg

யாழ்ப்­பாணம் ஆழி­ய­வ­ளையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் பேசு­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். 

எங்­க­ளுக்கு உகந்த ஒரு சூழலை நாம் உரு­வாக்­கி­விட்டோம் என்று நினைத்­தி­ருந்­த­போது, அந்தச் சூழலே எங்­க­ளுக்கு மாறா­ன­தா­கவும், நாங்கள் சறுக்கி விழக்­கூ­டி­ய­தா­கவும், விழுந்தால் பாரிய காயம் ஏற்­படக் கூடி­ய­தா­கவும் இன்று எங்கள் முன்னால் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. கஷ்­ட­மான இந்த சவா­லுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்­களின் இலக்கை அடைந்தே தீருவோம் என அவர் கூறி­யுள்ளார். 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மற்றும் கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோரும் இந்த அர­சாங்கம் தங்­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் ஏமாற்­றி­விட்­டது என்றே தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அர­சாங்­கத்தின் மீது அவர்கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை இப்­போது ஏமாற்­ற­மாக மாறி­யி­ருக்­கின்­றது. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­களின் அர­சியல் தலைமை என்ற பொறுப்பில் சரி­யான வழி­மு­றையைத் தெரிந்­தெ­டுத்துச் செயற்­படத் தவ­றி­யி­ருக்­கின்­றது என்ற ஒப்­புதல் கூற்­றா­கவும் சுமந்­தி­ர­னு­டைய கூற்றைக் கருத முடியும். அதே­போன்று, இரா.சம்­பந்தன் மற்றும் மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோரின் அரசு மீதான ஏமாற்ற உணர்­வையும், தலை­வர்கள் என்ற ரீதியில் அவர்கள் தீர்க்­க­த­ரி­ச­ன­மான முடி­வு­களை மேற்­கொள்ளத் தவ­றி­விட்­டார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன என்றே கொள்ள வேண்டி இருக்­கின்­றது. ஏனெனில் அடுத்த கட்­ட­மாக அவர்கள் என்ன செய்யப் போகின்­றார்கள், இந்த அர­சாங்­கத்­தையும் பேரின அர­சியல் தலை­வர்­க­ளையும் எவ்­வாறு கையாளப் போகின்­றார்கள் என்­பது தெரி­யாத ஒரு நிலை­மை­யி­லேயே தமிழர் தரப்பு அர­சியல் காணப்­ப­டு­கின்­றது.  

இந்த கடி­ன­மான அர­சியல் சூழலில் இருந்து தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை எவ்­வாறு வென்­றெ­டுக்க முடியும்? எவ்­வாறு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு செயற்­படப் போகின்­றது? – என்ற  கேள்­விகள் பூதா­க­ர­மாக எழுந்து நிற்­கின்­றன.

பொறுப்­புக்கள்

தமிழ் மக்­களின் அர­சியல் தலைமை என்ற பாரிய பொறுப்பை ஏற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, வெறு­மனே தேர்­தல்­களை இலக்கு வைத்த கொள்­கை­களைக் கொண்­ட­தா­கவே இது­வ­ரையில் செயற்­பட்டு வந்­துள்­ளது. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான மூலோ­பாயத் திட்­டங்கள் எதுவும் கூட்­ட­மைப்பின் தலை­மை­யிடம் இல்லை. அதே­போன்று கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சி­யி­டமும் இல்லை. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்­பது பல கட்­சிகள் ஒன்­றி­ணைந்­ததோர் அர­சி யல் கூட்டு என்­பதில் எந்­த­வி­த­மான சந்­தே­கமும் இல்லை. வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறை­மையின் அடிப்­ப­டையில் அதி­காரப் பகிர்வு, சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறைமை என்ற பொதுக் கொள்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே பங்­காளிக் கட்­சிகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இணைந்­துள்­ளன. 

ஆனால் கல் தோன்றா, மண் தோன்றா காலத்­துக்கு முன் தோன்­றிய மூத்த குடி­களே தமி­ழர்கள் என்ற மிகவும் பழை­மை­யான பெருமை பேசு­வதைப் போன்று தாயகம், பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறைமை, சுய­நிர்­ணய உரிமை, சமஷ்டி  என்ற பழைய கொள்­கைகள் பற்றிப் பேசு­வ­திலும் அதன் அடிப்­ப­டை­யி­லான தீர்வே வேண்டும் என்று பிர­சாரம் செய்­வ­தி­லுமே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் காலம் கரைந்து கொண்­டி­ருக்­கின்­றது. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் இந்தத் தேர்தல் காலப் பிர­சாரக் கொள்­கையை அல்­லது இலக்கை அடை­வ­தற்­கான ஓர் அர­சியல் வழித்­தடம் பற்­றிய திட்­டங்கள் எதுவும் கூட்­ட­மைப்பின் தலை­மை­யிடம் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அத்­த­கைய வழித்­தடத் திட்­டத்­துக்­கான வேலைத் திட்டம் பற்­றிய சிந்­தனை ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வில்லை. 

தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கு­ரிய தீர்க்­க­த­ரி­ச­ன­மிக்க பார்வை அவர்­க­ளிடம் இருப்­ப­தா­கவும் தென்­ப­ட­வில்லை. அத்­த­கைய பார்வை ஒன்று குறித்த கலந்­து­ரை­யா­டல்­களோ விவா­தங்­களோ யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­ன­ரான ஒரு தசாப்த காலப் பகு­தியில் இடம்­பெ­ற­வு­மில்லை. 

ஆறு தசாப்த கால வர­லாற்றைக் கொண்­ட­தோர் அர­சியல் போராட்­டத்தைத் தொட ர்ந்து முன்­னெ­டுப்­பது என்­பது சாதா­ரண அர­சியல் செயற்­பா­டல்ல. அது மிகவும் பொறுப்பு வாய்ந்­தது. மிகுந்த தொலை நோக்­குடன், அர­சியல் தீர்க்­க­த­ரி­ச­னத்­துடன் திட்­ட­மி­டப்­பட வேண்­டி­யது. அது, வெறு­மனே காலத்துக்குக் காலம் தேர்­தல்­களில் வெற்றி பெற்று பாராளு­மன்றக் கதி­ரை­களை அலங்­க­ரிக்­கின்ற சாதா­ரண அர­சியல் செயற்­பா­டல்ல. தேர்தல் வெற்­றி­களின் மூலம், பாராளு­மன்­றத்தில் தமது அர­சியல் சக்­தியை காட்­சிப்­ப­டுத்­து­கின்ற சாதா­ரண அர­சியல் அவர்­க­ளுக்கு அவ­சி­ய­மில்லை. 

தமிழ் அர­சியல் என்­பது சாதா­ர­ண­மா­ன­தல்ல. தீர்­மானம் மிக்க இர­க­சி­ய­மான தந்­தி­ரோ­பா­யங்­களைக் கொண்ட பேரி­ன­வாத பௌத்த மேலா­திக்கம் கொண்­டதோர் இன­வாத அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்கு ஈடு­கொ­டுத்துச் செயற்­பட வேண்­டிய பாரிய பொறுப்பை அது கொண்­டி­ருக்­கின்­றது. 

ஜன­நாயகப் போர்­வையில் பெரும்­பான்மை என்ற பாரிய பலத்தைக் கொண்­டுள்ள இன­வாத, மத­வாத போக்­கையும் சிறு­பான்மை இன மக்­களை இன ரீதி­யா­கவும், மத ரீதி­யா­கவும் அடக்கி ஒடுக்கி மேலாண்மை கொண்­டதோர் ஆட்­சியைக் கொண்டு செலுத்­து­கின்ற பலம் வாய்ந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக அர­சியல் செய்ய வேண்­டிய பொறுப்பை, தமிழ் அர­சியல் கொண்­டி­ருக்­கின்­றது. 

இத்­த­கைய பொறுப்­பு­மிக்க தமிழர் தரப்பு அர­சி­யலைக் கொண்டு நடத்­து­வது என்­பது தனிப்­பட்ட ஒரு சிலரின் தீர்­மா­னங்­க­ளிலோ அல்­லது கட்சி அர­சியல் நலன்­களை முதன்ைமப்­ப­டுத்­திய அர­சியல் செயற்­பா­டு­க­ளிலோ தங்­கி­யி­ருக்­க­வில்லை. அவ்­வாறு தங்­கி­யி­ருப்­ப­தென்­பது தமிழ்த் தரப்பு அர­சி­யலின் பொறுப்­பு­ண­ராத செயற்­பா­டா­கவே அமையும். இத்­த­கைய ஓர் அர­சியல் பின்­ன­ணியில் தமிழ்த் தரப்பு அர­சியல் எந்தத் திசையில் சென்று கொண்­டி­ருக்­கின்­றது, அது எத்­த­கைய அர­சியல் செல்­நெ­றியில் வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றது என்­பதைத் தெளி­வாகப் புரிந்து கொள்ள முடியும். 

வெற்றுப் பிர­க­டனம்  

பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து, சம அர­சியல் உரி­மை­க­ளுடன் வாழ்­வ­தற்­கான சாத்­வீகப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மித­வாத தமிழ் அர­சியல் தலை­வர்கள், தங்­க­ளு­டைய முயற்­சிகள் தொடர்ந்து தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்தே தனி­நாட்டுக் கொள்­கையைப் பிர­க­டனம் செய்­தி­ருந்­தனர். ஆனாலும் அந்தத் தனி­நாட்டை அடை­வ­தற்­கான அர­சியல் ரீதி­யான வழி­மு­றைகள் குறித்த எந்­த­வொரு திட்­டமும் அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை. 

அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சாத்­வீகப் போராட்­டத்தை மக்கள் மயப்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொண்ட அர­சியல் பிர­சா­ரத்­தையே தனி­நாட்டுக் கோரிக்கை தொடர்­பான திட்­டத்தின் செயற்­பா­டா­கவும் அவர்கள் கொண்­டி­ருந்­தார்கள். 

சம அர­சியல் உரி­மைக்­கான பேச்­சு­வார்த்­தைகள் வெற்­றி­க­ர­மாக இடம்­பெற்ற போதிலும், பேச்­சுக்­க­ளின்­போது எட்­டப்­பட்ட உடன்­பா­டுகள் நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக அந்த ஒப்­பந்­தங்­களும் உடன்­பா­டு­களும் கிடப்பில் போடப்­பட்­டன. அல்­லது கிழித்­தெ­றி­யப்­பட்­டன. அதனைத் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்ட சாத்­வீகப் போராட்­டங்கள் தொடர்ச்­சி­யாகத் தோல்­வியைத் தழு­வின. 

அது மட்­டு­மல்ல. சாத்­வீகப் போராட்­டத்தில் ஈடு­பட்ட அர­சியல் தலை­வர்­களும், அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக அணி­தி­ரண்­டி­ருந்த தமிழ் மக்­களும் அடித்து நொறுக்­கப்­பட்­டார்கள். அரச படை­களின் ஆயுத முனையில் அவர்­களை அடக்கி ஒடுக்­கு­கின்ற செயற்­பா­டு­களை ஆட்­சி­யா­ளர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இதனால் போராட்­டங்கள் நசுக்­கப்­பட்­டது ஒரு புற­மி­ருக்க, தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளி­னதும் தமிழ் மக்­க­ளி­னதும் பொது பாது­காப்பு அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யி­ருந்­தது. இத்­த­கைய ஒரு நிலை­யி­லேயே தனி­நாட்­டுக்­கான கொள்கைப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டது. 

ஆனால் அந்த தனி­நாட்டு கொள்­கையை நிறை­வேற்­று­வ­தற்­கான அர­சியல் செல்­நெறி குறித்த திட்­டங்­களோ முன் ஆயத்­தங்­களோ மித­வாத அர­சியல் தலை­வர்­க­ளிடம் இருக்­க­வில்லை. ஆனால், அவர்­களின் அர­சியல் விழிப்­பூட்­ட­லுக்­கான பிர­சா­ரங்கள், தமிழ் இளை­ஞர்கள் மத்­தியில் உணர்ச்­சி­யையும் வேகத்­தையும் தூண்­டி­விட்­டி­ருந்­தன. இந்தத் தூண்­டு­தலின் அடிப்­ப­டை­யி­லேயே ஆயுதப் போராட்டம் முளை­விட்­டி­ருந்­தது. 

அர­சியல் வழி­ந­டத்­தல்கள்

தமிழ் மக்­களின் அர­சியல் விடு­த­லைக்­கான ஆயுதப் போராட்டம் இந்­தியப் பிர­தமர் இந்­திரா காந்­தியின் அனு­ச­ர­ணை­யையும், ஆத­ர­வையும் பெற்­றி­ருந்த போதிலும், அது பிராந்­திய நலன்­சார்ந்­ததோர் அர­சியல் நட­வ­டிக்­கை­யா­கவே அமைந்­தி­ருந்­தது. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்கும் நலன்­க­ளுக்கும் முன்­னு­ரிமை கொண்­ட­தா­கவோ அல்­லது அதனை முழு அளவில் முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தா­கவோ அமைந்­தி­ருக்­க­வில்லை. 

புற­நி­லையில் இந்­தி­யாவின் ஆத­ரவு இருந்­தது போன்று அக­நி­லையில் அர­சியல் வழி­ந­டத்­தல்­களோ அல்­லது அர­சியல் சாணக்­கியம் மிகுந்த உத­வி­களோ ஆயுதப் போரா­ளி­களுக்கு இருக்­க­வில்லை. மித­வாத அர­சியல் தலை­வர்­க­ளுக்கும், போரா­ளி­க­ளுக்கும் இடையில் இறுக்­க­மான பிணைப்பு இருக்­க­வில்லை. மாறாக முரண்­பா­டான ஓர் அர­சியல் நிலை­மையே காணப்­பட்­டது. இந்த முரண்­பாட்டின் விளை­வா­கவே மித­வாத அர­சியல் தலை­வர்கள் அவ­ல­மாக உயி­ரி­ழக்க நேர்ந்­தது என்­று­கூடக் கூறலாம். 

ஆயுதப் போராட்­டத்தின் ஆரம்­ப­காலம் மட்­டு­மல்ல. ஆயுதப் போராட்டம் வீறு­கொண்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் காலத்­தி­லும்­கூட உரிய இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான அர­சியல் தந்­தி­ரோ­ப­ாய அனு­ச­ர­ணையோ அல்­லது அர­சியல் வழி­மு­றை­க­ளுக்­கான வழி­ந­டத்­தல்­க­ளுடன் கூடிய உத­வி­களோ கிட்­டி­யி­ருக்­க­வில்லை. அந்தப் போராட்டம் முழுக்க முழுக்க இரா­ணுவ மய­மா­ன­தா­கவே காணப்­பட்­டது. அர­சுக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இடை­யி­லான நீண்­ட­கால யுத்த நிறுத்தம் மற்றும் நோர்­வேயின் மத்­தி­யஸ்­தத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போதும் அர­சியல் தந்­தி­ரோ­பாயச் செயற்­பா­டுகள் அரு­கியே காணப்­பட்­டன என்­பதே அர­சியல் அவ­தா­னி­க­ளி­னதும், இரா­ணுவ ஆய்­வா­ளர்­க­ளி­னதும் கருத்­தாகும்.

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர், தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மையைப் பொறுப்­பேற்றுக் கொண்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு உள்­ளக ஜன­நா­ய­கத்­துக்கு அதிக மதிப்­ப­ளித்­தி­ருக்­க­வில்லை. வலி­மை­யான ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியில் சாத்­வீக ரீதியில் அர­சியல் போராட்­டத்தை முன்­னெ­டுப்­பது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. 

ஆட்­சி­யா­ளர்கள் ஆயுதப் போராட்டத்தை வெற்­றி­கொண்டு, பயங்­க­ர­வாதத்தை இல்­லாமல் செய்­து­விட்டோம் என்ற வெற்றி மம­தையில் உள்ள அர­சியல் உள­வியல் நிலையில் திட்­ட­மிட்ட வகையில் இரா­ஜ­தந்­தி­ரோ­பாய ரீதியில் முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். அத்­த­கைய முற்­த­யா­ரிப்­பு­ட­னான போராட்டம் என்­பது தனியே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் மட்­டு­மன்றி, தமிழர் தரப்பின் துறை­சார்ந்த பல­த­ரப்­பி­ன­ரு­டைய பங்­க­ளிப்­பு­டனும், வழி­ந­டத்­த­லு­டனும் ஈன்றெடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். 

யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்னர்,  அத்­த­கைய போராட்டம் முன்னெடுக் கப்படவில்லை. அத்தகைய போராட்டத் துக்கான முன் ஆயத்தங்கள்கூட செய் யப்படவில்லை என்றே கூற வேண் டும். மொத்தத்தில் கட்சி அரசியல் நலன் சார்ந்த நிலையில் கூட திட்டமிட்ட வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வல்ல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வில்லை. 

பாதிக்கப்பட்ட மக்களை முதன்மைப்படுத்தி பிரசார அரசியல் நலன்சார்ந்த போராட்டங்களே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற எரியும் பிரச்சினைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டன. அந்தப் போராட்டங்களும்கூட, பாதிக்கப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்தியதாக இருந்ததேயொழிய பெரிய அளவில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களாக பரிணமிக்கவில்லை. 

பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சி பெற்று வீதிகளில் இறங்கிப் போராடிய போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேட் டுக் குடி அரசியல் போக்கில் ஒதுங்கி நிற் கின்ற ஒரு போக்கைக் கடைப் பிடித்ததே தவிர போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்க ளின் நம்பிக்கையை வென்றெடுத்து, அவர் களுக்கு அவசியமான அரசியல் தலை மையை வழங்கவில்லை. 

இத்தகைய ஒரு பின்னணியில்தான், தமிழ் அரசியல் ஒரு இக்கட்டான சூழ லில், கடினமான சவாலுக்கு முகம் கொடுத்தி ருக்கின்றது. இந்தியாவின் தலையீடு ஒரு வாய்ப்புக்கான வழி திறந்திருக்கின்ற ஒரு சமிக்ஞையைக் காட்டியுள்ள இந்தச் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரந்த அரசியல் மனப்பான்மையுடன் ஏனைய அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் துறைசார்ந்தவர்களையும் இணைத்துக் கொண்டு வகுத்தொதுக்கப்பட்ட ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் அரசியல் நட வடிக் கைகளை முன்னெடுக்க வேண்டும். 

அத்தகையதோர் அரசியல் முயற்சியே தமிழ் அரசியலில் இப்போது அவசியம். இது குறித்து தமிழ் அரசியல் தலைவர் களும், அரசியல் தலைமைகளும் சிந்திப் பார்களா? சிந்திக்க முன் வருவார்களா?

 

https://www.virakesari.lk/article/58553

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.