Jump to content

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்

June 19, 2019

 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது. நாளை(20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில்  குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் போராட்டமானது பொதுப்போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவசரகால சட்ட விதிகளுக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் என காவல்துறையிடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை மேலும் வலுவடைந்துள்ள இப்போராட்டமானது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அரசை கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் 17 ஆம் திகதி கல்முனையில் ஆரம்பமாகிநடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#கல்முனை #உண்ணாவிரதப்போராட்டம் #முறைப்பாடு #பிரதேச செயலகத்தை

(பாறுக் ஷிஹான்)

 

http://globaltamilnews.net/2019/124697/

தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் சத்தியாகிரகம் போராட்டம்….

June 20, 2019

k01.jpg?resize=800%2C600

தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இன்று(20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று கூடிய அப்பிரதிநிதிகள் இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி சத்தியாகிரகம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தை அரச சார்பற்ற பல்வேறு அமைப்புகளுடன் மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக கல்முனை வர்த்தக சமூகம் பங்கெடுத்துள்ளது.#சத்தியாகிரகப்போராட்டம் #முஸ்லிம்பிரதிநிதிகள் #கல்முனை #தமிழ்பிரதேசசெயலகம்

k05.jpg?resize=800%2C480k04.jpg?resize=800%2C600k02.jpg?resize=800%2C600

பாறுக் ஷிஹான்

 

http://globaltamilnews.net/2019/124742/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கும் இடத்தை மேம்படுத்து என ஒருவன் போராடுகிறான்.

  அந்த இடத்தை  மேம்படுத்தாதே என பக்கத்திலிருப்பவன் உண்ணாவிரதம் இருக்கிறான் .

அல்ஹம்துலில்லாஹ் , மாசா அல்லா , யா அல்லா ,  அஸ்லாமு அலைக்கும் வரைக்காத்துஹு   ( எனக்குத்  தெரிந்த சில அரபித் தமிழ் ) 

என்னப்பா நடக்குது இங்கே  !!

அதி மேதாவி யாரிடமாவது தான் இதனை விட வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு அடி விழுந்த போது பரிந்து பேச வந்த தமிழர்கள் யாரையும் இங்கு காணோமே அவர்களின் முஸ்லிம் சகோதரர்களிடம் ஆதரவு கோரி ஒரு அறிக்கை விட.

கல்முனை நகர் உட்பட பல பகுதிகள் தமிழ் மக்களின் வாழ்விடங்களாக இருந்தன. 

கடந்த காலங்களில் தொடர் முஸ்லிம் பயங்கரவாதத்தால்.. படுகொலை செய்யப்பட்டும்.. விரட்டி அடிக்கப்பட்டும்.. தமிழர்கள் அற்ற பிரதேசமாக்கப்பட்டு.. இன்று மிஞ்சி இருக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு விடிவும் வரக்கூடாது என்று எண்ணும்.. இந்தக் கொடியவர்களை என்னென்பது.

ஒரு நிலத்தொடர்பும் அற்று குறிச்சிகளாக வாழும்.. முஸ்லிம்கள் மட்டும் கிழக்கில்.. தனி அலகுக்கு என்ன தகுதி பெற்றுள்ளனர். காத்தான்குடி என்ன.. அரபிக்கடலுடன் இணைந்தா இருக்கிறது. 

ஆக.. காணி பறிப்பு.. தமிழ் மக்கள் விரட்டி அடிப்பு..என்பவை எல்லாம்.. தமிழ் மக்களை நிரந்தர.. நிலத்தொடர்பற்றவர்களாக மாற்ற திட்டமிட்டு இந்த முஸ்லிம் பயங்கரவாதத்தால் செயற்படுத்தப்படும் ஒரு விடயமாகும். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் மதவாதப் பயங்கரவாதிகளால். 

இது இன்று கிழக்கில் இருந்து வடக்கு நோக்கியும் விரைந்து செயற்படுத்தப்படுவதும்.. வடக்கு யாழ் பல்கலைக்கழகம்.. கிழக்குப் பல்கலைக்கழகங்கள் முஸ்லிம்.. மற்றும் சிங்கள மயமாக்கப்படுவதும்.. தமிழ் மக்கள் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளதையே இனங்காட்டுகிறது. ஆனால்.. தமிழ் அரசியல்வியாதிகள்.. பேசாமடைந்தைகளாக உலா வருகின்றனர்.

எனி தமிழ் மக்கள் தான் விழித்தாக வேண்டும். இன்றேல்.. இலங்கைத் தீவில் அவர்களின் இருப்பு மிக விரைவில் காலி செய்யப்பட்டு விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201712

அரசியல்வாதியள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.