யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
கிருபன்

அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர உதவுங்கள்..

Recommended Posts

அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர உதவுங்கள்..

June 20, 2019

68902.jpg?resize=800%2C303இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர ஐ.நா உதவி புரியவேண்டும் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோர்ன் சேரேன்செனிடம் ( Joern Soerensen) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Mr.Joern Soerensen, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (20) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். அதன் போதே ஆளூநர் அக் கோரிக்கையை முன் வைத்தார்.

மேலும், இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களுக்கு விபரிக்கப்பட்டது.

போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, வடமாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் நீர்ப்பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கும் வடமராச்சிக்களப்பு திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர் அவர்கள் இதற்கு உதவிபுரியுமாறும் கோரிக்கை விடுத்தார். #இந்தியா #இலங்கைஅகதிகள் #சுரேன் ராகவன் #ஐக்கியநாடுகள்அபிவிருத்திநிகழ்ச்சித்திட்டம்

8932.jpg?resize=800%2C419

 

http://globaltamilnews.net/2019/124713/

Share this post


Link to post
Share on other sites

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை கொண்டுவந்து இலங்கை அரசுடன் இணைந்து தமிழர் தாயகத்தில் குடியமர்த்தும் ஐ.நா. ,  ஏன் சொந்த மக்களை மீளமர்த்த முடியாமல் உள்ளது?  

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
45 minutes ago, ampanai said:

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை கொண்டுவந்து இலங்கை அரசுடன் இணைந்து தமிழர் தாயகத்தில் குடியமர்த்தும் ஐ.நா. ,  ஏன் சொந்த மக்களை மீளமர்த்த முடியாமல் உள்ளது?  

தமிழர்கள் ஏன் இந்தியாவுக்கு அகதியாக போனார்கள்? மீண்டும் இலங்கைக்கு அவர்கள் வருவதா இல்லையா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஐ.நா இலங்கையில் குடியமர்த்தியது அதிலும் பெருமளவானோரை தமிழர் தாயகத்தில் குடியமர்த்துவது தனியே அவர்கள் அகதிகள் என்பதற்காக அல்ல. பின்னணியில் வேறு பல காரணிகள் உள்ளன.

Edited by Lara
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு