Jump to content

கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது

 

20-06-2019-1561035810.jpg
 

 

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1)  வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது,
2) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசிடம் கோருகிறது,
3) ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்டவாறு, தெளிவான கால அட்டவணைக்கு அமைவாக அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கையிடம் கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் இடையில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது,
4) இலங்கையில் தமிழர்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலை மற்றும் 2009 ஆம் ஆண்டில் போரின் இறுதிக் காலம். குறித்த விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனடிய அரசு கோரிக்கை விடுக்கிறது.

இந்த தீர்மானம் NDP கட்சியின் மனித உரிமைக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் Cheryl Hardcastle பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். NDP கட்சிக்கும் மற்றும் அதன் தலைவர் Jagmeet Singh அவர்களுக்கும் கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்முயற்சியில் Liberal கட்சியினுடைய முன்முயற்சியை, MP Shaun Chen ன் ஊடாக பாராளுமன்றதில் மே 25ல் தீர்மானமாக கொண்டு வந்ததற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Minister Nadeep Bains மற்றும் MP Gary Anadasangaree ஆகியோர் தொடர்ச்சியாக NCCT யுடன் தீர்மான வரைபில் ஈடுபட்டு, NDP கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானம் முன்வைத்ததை ஆதரித்திருந்தனர். கனடிய பிரதமர் Justin Trudeau மற்றும் கனடிய வெளிநாட்டமைச்சு இந்த விடயத்தில் முக்கிய தலைமத்துவத்தை கொடுத்ததை வரவேற்று கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Conservative கட்சி சார்பில் MP Garnett Genuis அவர்கள் இவ்வரைபை மே 25 பாராளுமன்றத்தில் முன்வைத்ததற்கும், தீர்மானத்தின் திருத்தத்தை ஏற்றுக் கொண்டதற்கும், மீண்டும் அத் தீர்மானத்தை வெளிநாட்டு அமைச்சின் குழுவிற்கு ஜூன் 18ல் சமர்ப்பித்ததற்கும், எதிர்க்கட்சி தலைவர் Andrew Scheer அவர்கள் இவ்விடயத்தில் ஒருமித்த ஆதரவை வழங்கியதற்கும் கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் அவர்கள் மத்திய Conservative கட்சியுடனான பேச்சுவார்த்தை பரிமாற்றத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக இத் தீர்மானத்தின் வரைபை முன்வைப்பதற்கு அயராது உழைத்து, அனைத்து கட்சியையும் இத்தீர்மானத்தை ஆதரிக்க வைத்திருந்தனர்.

இத் தீர்மான வரைபில், கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக, மற்றைய பிரதேச அமைப்புக்கள், தன்னார்வலர்கள், கனடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் கடுமையான உழைப்பினூடகவே நிறைவேற்றி இருந்தனர்.

தமிழர்களின் நீதிக்கான ஒரு சரியான முன்னகர்வாக அமைகின்றது.

 

http://www.thedipaar.com/newsdetail.php?id=24311&fbclid=IwAR3R5Ilb5VjQDhS3DzkSmjg5KGmqaVyTmtgVzAAiI_tM-_A86kHuQsTVhoo

Link to comment
Share on other sites

முதல்தடவையாக இந்த பிரேரணை முன்வைக்கப்பட்ட பொழுது, சகல கட்சிகளும் ஆதரிக்கவில்லை.

பிரிவுகளுக்கும் ஒற்றுமையாக செயல்படுதல் வெற்றியை தரும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழருக்கு சார்பாக/ ஆதரவாக இனி எங்கும் எதுவுமே நடக்கப்போவதில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இலங்கை தமிழருக்கு சார்பாக/ ஆதரவாக இனி எங்கும் எதுவுமே நடக்கப்போவதில்லை.
 

ப‌ல‌தை ந‌ம்பி ஏமாந்த‌வ‌ர்க‌ளுக்கு , நீங்க‌ள் எழுதின‌து புரியும் தாத்தா  /

ஒரு இட‌த்தில் ஈழ‌ த‌மிழ‌னின் அடி
அகோர‌மாய் விழுந்தா ஒட்டு மொத்த‌ உல‌க‌மும் ஈழ‌ த‌மிழ‌ர‌ உத்து நோக்குவின‌ம் / 

அதுக்கு முத‌ல் அண்டை நாட்டில்
எம‌க்கு என்று ஒரு ந‌ம்பிக்கையான‌ அர‌சிய‌ல் க‌ட்சி தேவை /

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம்
ஒரு போதும் வீன் போக‌ கூடாது 😓 /

 


 

Link to comment
Share on other sites

6 hours ago, விசுகு said:

தமிழர்களின் நீதிக்கான ஒரு சரியான முன்னகர்வாக அமைகின்றது.

இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் நாம் நீண்ட தூரம் பயணப்பட வேண்டியுள்ளது.

Genocide இனப்படுகொலை என சொல்ல மறுக்கும் தமிழ் கூட்டமைப்பினர்  கூட்டங்களை இனியாவது கதிரைகளில் இருந்து இறக்குங்கள் !

#motion #Genocide #pass #Canadianparliament

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் நாம் நீண்ட தூரம் பயணப்பட வேண்டியுள்ளது.

மண்ணாங்கட்டி நீண்ட தூரம்.
இன்னும் எத்தனை சந்ததிகளை பலி கொள்ளப்போகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013ம் ஆண்டு ச‌ண‌ல்4 ஊட‌க‌ம் எவ‌ள‌வு உண்மையை எடுத்து சொல்லியும் ந‌ம‌க்கு ந‌ட‌ந்த‌ ந‌ண்மை என்ன‌ /

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால‌ம் மிக‌ வேக‌மாக‌ ஓடுது /
2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌த்தில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ம் ப‌ற்றி பெரிசா தெரியாது /

அதுங்க‌ளின் உல‌க‌ம் இபோது ( ஜ‌போன் ம‌ற்றும் பேஸ்வுக் )

புல‌ம் பெய‌ர் நாட்டில்  பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு , எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌லும் த‌மிழீழ‌ ம‌ண்ணின் பெருமைக‌ளும் தெரியாது / 

யாழ்பாண‌த்தில் சிங்க‌ள‌வ‌னின் 
ஆதிக்க‌ம் அதிக‌ரிக்குது /
ஒரு க‌ட்ட‌த்தில் த‌மிழீழ‌த்தின் த‌லை ந‌க‌ர‌ம் ஆனா திருகோன‌ம‌லையில் த‌மிழர்க‌ள் ம‌ட்டும் தான் வாழ்ந்தார்க‌ள் , 
இப்போ திருகோன‌ம‌லை எங்கும் சிங்க‌ள‌வ‌னின் ஆதிக்க‌ம் /

இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் பொறுத்தா நான் பிற‌ந்து வ‌ள‌ந்த‌  ஊரிலும் சிங்க‌ள‌னின் குர‌ல்க‌ள் கேக்கும் 😠 /

 

 

Link to comment
Share on other sites

கனடாவின் ஐ.நா. பிரதிநிதி ஊடாக இதை, இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை, அடுத்தகட்டமாக ஐ.நா. சபைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு முன்பாக எடுத்து செல்ல வேண்டும்,

தமிழர்கள் வாழும் நாடெல்லாம் கடனா தீர்மானத்தை முன்னுதாரணமாக காட்டி அந்தந்த நாடுகளின் ஆதரவையும் பெறல் வேண்டும்.  

நம்பிக்கையும் முயற்சியும் இருக்கும் வரை எதையும் வெல்லலாம், சாதிக்கலாம். 

Link to comment
Share on other sites

23 minutes ago, ampanai said:

கனடாவின் ஐ.நா. பிரதிநிதி ஊடாக இதை, இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை, அடுத்தகட்டமாக ஐ.நா. சபைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு முன்பாக எடுத்து செல்ல வேண்டும்,

ஐநா சபையில் ஈழத்தில் நடாத்தப்பட்டது இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றுவதனால் பெரிதான மாற்றங்கள் எதுவும் ஈழத்தில் இடம்பெறப்போவதில்லை. மியன்மாரில் இடம்பெறுவது இனச்சுத்திகரிப்பு என ஐநாவில் தீர்மானம் செய்யப்பட்டபோதும் அந்த மக்களுக்கு அதனால் தீர்வு எதுவும் கிட்ட வில்லை.

Link to comment
Share on other sites

கிழக்கு திமோர், எரித்தேரியா போன்ற நாடுகள் ஐ,நா. தீர்மானம் ஊடான சுயநிர்ணய வாக்கெடுப்பு ஊடாக உருவான நாடுகள். 

 

Link to comment
Share on other sites

எதுவும் கிட்டவில்லை என்பதற்காக முயற்சிக்காமல் இருக்க முடியாது. இல்லை சிங்களவன் குடியேறிவிட்டான் என்பது முடிவான முடிவும் இல்லை. என்றோ ஒருநாள் இறக்கப்போகிறோம் என்பதற்காக இன்று வாழ மறுக்கின்றோமா?  

தங்கள் நிலம் பறிபோய் விட்டதால் அதை கேட்டு போராடும் போப்பாபிலவு மக்கள் யார்? 
இன்றும் வவிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் ஏன் போராடுகிறார்கள்? 

அவர்கள் தான் சாதிப்பார்கள்.   

எமக்கான சுயநிர்ணய உரிமை ஏற்கனவே முடிவான ஒன்று, 1977 ஆம் ஆண்டு நடந்தேறிய ஒன்று. 

தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழர் விடுதலைக் கூட்டணியானது வட்டுக்கோட்டையில் நடத்திய அதன் மாநாட்டில், மாநாடு நடந்த்த கிராமமான வட்டுக்கோட்டையை அடைமொழியுடன் பின்னர் பரவலாக அறியப்பட்ட "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி18 இடங்களைப் பெற்று பெரும் வெற்றி பெற்றது. 

Taking part in a side-event on Tamils Right to Self-Determination, Tamil National Alliance (TNA) Parliamentarian Sivagnanam Shritharan on Monday called for a UN referendum among Eezham Tamils to exercise their external Self-Determination. The TNA MP was referring to 1977 democratic mandate for Tamil Eelam and the 2009-2010 referenda held in the Tamil diaspora.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

மண்ணாங்கட்டி நீண்ட தூரம்.
இன்னும் எத்தனை சந்ததிகளை பலி கொள்ளப்போகின்றீர்கள்?

இந்த  திரியில்  இத்தனை எதிர்பார்ப்பு  எழுத்துக்கள்  எதையோ  தேடுபவர்களால் தானே  அண்ணா??

Link to comment
Share on other sites

  • சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் உள்நாட்டு விசாரணைகள் பயன் தர மாட்டா என்பதை முன்னெடுக்கவேண்டும்
  • முன்மொழியப்பட்ட தீர்மானங்ககளில், இனப்படுகொலை சம்பந்தப்பட்ட தீர்மானம் முன்னெடுக்கப்பட உழைக்கவேண்டும் 
  • Welcoming the move, the Tamil activists in the island urged the Canadian Tamil diaspora to concentrate on educating their host country on the unworkability of transitional justice in the island without international investigations on the genocide taking precedence over the other two demands.

https://tamilnet.com/art.html?catid=79&artid=39487

Time for Canadian Eezham Tamils to chart next course of diaspora action

The latest Canadian move is also a lesson for the dormant Tamil diaspora groups in London, the activists in Jaffna further said.

கனடாவின் தீர்மானம் பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கும் ஒரு புதுவேகத்தை தரவல்லது

Link to comment
Share on other sites

Press Release: TGTE Applauds Call by Canada’s House of Commons for UN Led Int'l Investigation Into Sri Lanka’s Genocide Against Tamils

"The Unanimous motion was passed on June 19th" -

- "TGTE views this resolution as a critical commentary on the continuous structural genocide of the Tamils"

LINK: https://world.einnews.com/pr_news/489242162/tgte-applauds-call-by-canada-s-house-of-commons-for-un-led-int-l-investigation-into-sri-lanka-s-genocide-against-tamils 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.