Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இழப்பும் நினைப்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பும் நினைப்பும் 

வணக்கம், 
        தமிழருக்கென ஒரு இறைமையுள்ள அரசு இல்லாத காரணத்தால்  தமிழராகிய எமது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றன. இன்றைய நிலையில் தமிழ் மொழி தனது சுயத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறது. அன்னிய மொழி ஆதிக்க வெறி  இதற்கு சான்றாக அமைகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் பறிபோய்கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில்  தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் ஒன்றாகிய வன்னிப் பிரதேசத்தைச் சேர்;ந்த ஒரு பகுதியின் பாரம்பரியச் செயற்பாடுகளை இப்பதிவில் கொண்டுவர முயற்சி செய்து, இழப்பும் நினைப்பும் என்ற தலைப்பில் இவற்றைத் தொகுக்க உத்தேசித்துள்ளேன். இரசனைக்காக காதலையும் இணைத்துள்ளேன். நீங்களும் இதற்கான ஆதரவை அளிப்பீர்களென ஆவலுடன் எதிர்பார்ப்பதுடன், வழமை ஒழிந்து போகும் சொற்பிரயோகங்களையும் பொருட்களின் பெயர்களையும்  பதிவு செய்ய உதவவேண்டுமெனவும்; கேட்டுக்கொள்கிறேன்.  

நன்றி
செண்பகன்


இழப்பும் நினைப்பும்… 
   
01. உதயம்

வன்னி நிலப்பரப்பில்
வளம் கொழிக்கும் நெல் வயல்கள்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
காட்சி தரும் வரட்சியுடன்
 
நெல் வயல்கள் இடைக்கிடையே  
மேட்டு நிலங்கள் தலை காட்டும்
இவற்றில் சிலவற்றில் குடிமனைகள் 
எழுந்து நிற்கும்  

ஓலைக் குடி மனையில் நான்;
உறக்கம் நீங்கிப் படுத்திருக்க 
அதன் ஓலை இடுக்குகளில்   
தோரணமாய் வைக்கோல்கள்

சிட்டுக் குருவிகள் சில
சிறு கூடுகள் அமைத்தங்கே
குடியும் குடித்தனமுமாய் 
கும்மாளம் செய்து வாழும்.

தன் கூடு நோக்கி ஒரு
தாய்க் குருவி பறந்துவரும் 
அக்கம் பக்கம் பார்த்த பின்பு
அக் கூட்டில் அது நுழையும்

தாயைக் கண்ட குஞ்சுகளோ
தம் மொழியில் குதூகலிக்கும் 
தனித்தனியாக் குஞ்சுகளுக்கு
தாய்க் குருவி இரையூட்டும்.  

ஆண்குருவி தான் இரை தேட
அங்கிருந்து பறந்துவிடும்
அதைப் பார்த்து என் மனது
என் பணியை நினைவூட்டும்

வேப்பமரக் கிளைகளிலே வேவ்வேறு சேவல்வகை
விடியலை வரவேற்று விண்ணதிரக் கூவிநிற்க
கொக்கரித்துக் கொக்கரித்துக் 
கோழிகள்  கீழ்ப் பறக்கும். 

கட்டி நிற்கும் ஆடுகளோ
கத்திக் கத்திக் குரல் கொடுக்க 
பால் குடித்த குட்டிகளோ 
பாய்ந்து பாய்ந்து துள்ளி ஓடும்.

காட்சிகள் ஒவ்வொன்றாய் 
களிப்புடனே அரங்கேற
தட்டியால்  ஒளிபாய்ச்சிக் கதிரவன்; 
தன் கதிர்களால் உள்புகுந்தான்

பாயில் கிடந்த நான் 
பகலவன் ஒளி படவே
கைகொண்டு கண்கசக்கி
களிப்பிழந்து துயில் முறித்தேன். 

தொழுவத்தில் எருதுகளைத்
தொட்டுத் தடவியபின்
கடகத்தில் தவிடெடுத்து
களனி கலந்து வைத்தேன் 
 
முற்றத்தில் வாழைகள் 
குலைதள்ளி நிற்கும்   
முற்றிப் பழத்தவையில்; 
அணில்கள் துள்ளி ஓடும். 
இலைகளின் நடுவினிலே 
கிளிகள் காதல் புரியும் 
இனிமையாய்ப் பேசி அவை
தலைகோதி மகிழும்  

தென்னை மரக் கீற்றுகளைத்; 
தென்றல் தழுவிப் போகும் 
செவ்வரத்தம் பூக்களைச் சுற்றி
தேன்சிட்டுக்கள் பறக்கும்.   

வண்டினங்கள்  இரைந்தபடி  
வண்ண மலர்களை மொய்க்கும்  
வகைவகையாய்ப் பறவைகளும் 
வந்து வந்து போகும். 

மஞ்சள் வர்ண ஒளியிலே
மனம் மகிழும் காட்சி
மக்கள் எல்லாம் உசாரடையும் 
உதயணன் மீள் எழிற்சி
 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகான வரிகள். இழந்தவைகள் அதிகம். இனி எங்கே கிடைக்கும் என்ற ஏக்கம் தான் மிஞ்சுகிறது ...பாராட்டுக்கள் மேலும் தொடர்க 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sembagan said:

பாயில் கிடந்த நான் 
பகலவன் ஒளி படவே
கைகொண்டு கண்கசக்கி
களிப்பிழந்து துயில் முறித்தேன். 

தொழுவத்தில் எருதுகளைத்
தொட்டுத் தடவியபின்
கடகத்தில் தவிடெடுத்து
களனி கலந்து வைத்தேன் 

இனி மேல்....எல்லாமே...கனவுகள் தான் செம்பகம்...!


இரத்தினக் கற்களாய்...,
இரண்டு கண்கள்....!

அந்தப் பறவை...,
பின்னேரங்களில்..
பன்னத்தை  தேடி...,
வேலியைக் கிளறும்...! 

இந்தத் தடவை....,
எல்லா இடமும...,
தேடித் திரிந்தேன்...!

எங்கோ மறைந்தது..,
எனது தேசீயப் பறவை..,

ஈழத் தேசத்தின்....,
கனவுகளைப் போல...!


தொடர்ந்தும்  எம்முடன்...பயணியுங்கள்...செண்பகம்..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இயல்பான ஏக்கத்தை சுமந்து வரும் வரிகள்.....சிறப்பான கவிதை , தொடர்ந்து எழுதுங்கள் செண்பகன்.....!  🌻 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். உங்களின் ஆதரவு     என்னை  மீண்டும் மீண்டும் எழுதத்    தூண்டுகிறது.
 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.