Sign in to follow this  
Sembagan

இழப்பும் நினைப்பும்

Recommended Posts

இழப்பும் நினைப்பும் 

வணக்கம், 
        தமிழருக்கென ஒரு இறைமையுள்ள அரசு இல்லாத காரணத்தால்  தமிழராகிய எமது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றன. இன்றைய நிலையில் தமிழ் மொழி தனது சுயத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறது. அன்னிய மொழி ஆதிக்க வெறி  இதற்கு சான்றாக அமைகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் பறிபோய்கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில்  தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் ஒன்றாகிய வன்னிப் பிரதேசத்தைச் சேர்;ந்த ஒரு பகுதியின் பாரம்பரியச் செயற்பாடுகளை இப்பதிவில் கொண்டுவர முயற்சி செய்து, இழப்பும் நினைப்பும் என்ற தலைப்பில் இவற்றைத் தொகுக்க உத்தேசித்துள்ளேன். இரசனைக்காக காதலையும் இணைத்துள்ளேன். நீங்களும் இதற்கான ஆதரவை அளிப்பீர்களென ஆவலுடன் எதிர்பார்ப்பதுடன், வழமை ஒழிந்து போகும் சொற்பிரயோகங்களையும் பொருட்களின் பெயர்களையும்  பதிவு செய்ய உதவவேண்டுமெனவும்; கேட்டுக்கொள்கிறேன்.  

நன்றி
செண்பகன்


இழப்பும் நினைப்பும்… 
   
01. உதயம்

வன்னி நிலப்பரப்பில்
வளம் கொழிக்கும் நெல் வயல்கள்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
காட்சி தரும் வரட்சியுடன்
 
நெல் வயல்கள் இடைக்கிடையே  
மேட்டு நிலங்கள் தலை காட்டும்
இவற்றில் சிலவற்றில் குடிமனைகள் 
எழுந்து நிற்கும்  

ஓலைக் குடி மனையில் நான்;
உறக்கம் நீங்கிப் படுத்திருக்க 
அதன் ஓலை இடுக்குகளில்   
தோரணமாய் வைக்கோல்கள்

சிட்டுக் குருவிகள் சில
சிறு கூடுகள் அமைத்தங்கே
குடியும் குடித்தனமுமாய் 
கும்மாளம் செய்து வாழும்.

தன் கூடு நோக்கி ஒரு
தாய்க் குருவி பறந்துவரும் 
அக்கம் பக்கம் பார்த்த பின்பு
அக் கூட்டில் அது நுழையும்

தாயைக் கண்ட குஞ்சுகளோ
தம் மொழியில் குதூகலிக்கும் 
தனித்தனியாக் குஞ்சுகளுக்கு
தாய்க் குருவி இரையூட்டும்.  

ஆண்குருவி தான் இரை தேட
அங்கிருந்து பறந்துவிடும்
அதைப் பார்த்து என் மனது
என் பணியை நினைவூட்டும்

வேப்பமரக் கிளைகளிலே வேவ்வேறு சேவல்வகை
விடியலை வரவேற்று விண்ணதிரக் கூவிநிற்க
கொக்கரித்துக் கொக்கரித்துக் 
கோழிகள்  கீழ்ப் பறக்கும். 

கட்டி நிற்கும் ஆடுகளோ
கத்திக் கத்திக் குரல் கொடுக்க 
பால் குடித்த குட்டிகளோ 
பாய்ந்து பாய்ந்து துள்ளி ஓடும்.

காட்சிகள் ஒவ்வொன்றாய் 
களிப்புடனே அரங்கேற
தட்டியால்  ஒளிபாய்ச்சிக் கதிரவன்; 
தன் கதிர்களால் உள்புகுந்தான்

பாயில் கிடந்த நான் 
பகலவன் ஒளி படவே
கைகொண்டு கண்கசக்கி
களிப்பிழந்து துயில் முறித்தேன். 

தொழுவத்தில் எருதுகளைத்
தொட்டுத் தடவியபின்
கடகத்தில் தவிடெடுத்து
களனி கலந்து வைத்தேன் 
 
முற்றத்தில் வாழைகள் 
குலைதள்ளி நிற்கும்   
முற்றிப் பழத்தவையில்; 
அணில்கள் துள்ளி ஓடும். 
இலைகளின் நடுவினிலே 
கிளிகள் காதல் புரியும் 
இனிமையாய்ப் பேசி அவை
தலைகோதி மகிழும்  

தென்னை மரக் கீற்றுகளைத்; 
தென்றல் தழுவிப் போகும் 
செவ்வரத்தம் பூக்களைச் சுற்றி
தேன்சிட்டுக்கள் பறக்கும்.   

வண்டினங்கள்  இரைந்தபடி  
வண்ண மலர்களை மொய்க்கும்  
வகைவகையாய்ப் பறவைகளும் 
வந்து வந்து போகும். 

மஞ்சள் வர்ண ஒளியிலே
மனம் மகிழும் காட்சி
மக்கள் எல்லாம் உசாரடையும் 
உதயணன் மீள் எழிற்சி
 

 

Share this post


Link to post
Share on other sites

மிகவும் அழகான வரிகள். இழந்தவைகள் அதிகம். இனி எங்கே கிடைக்கும் என்ற ஏக்கம் தான் மிஞ்சுகிறது ...பாராட்டுக்கள் மேலும் தொடர்க 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, Sembagan said:

பாயில் கிடந்த நான் 
பகலவன் ஒளி படவே
கைகொண்டு கண்கசக்கி
களிப்பிழந்து துயில் முறித்தேன். 

தொழுவத்தில் எருதுகளைத்
தொட்டுத் தடவியபின்
கடகத்தில் தவிடெடுத்து
களனி கலந்து வைத்தேன் 

இனி மேல்....எல்லாமே...கனவுகள் தான் செம்பகம்...!


இரத்தினக் கற்களாய்...,
இரண்டு கண்கள்....!

அந்தப் பறவை...,
பின்னேரங்களில்..
பன்னத்தை  தேடி...,
வேலியைக் கிளறும்...! 

இந்தத் தடவை....,
எல்லா இடமும...,
தேடித் திரிந்தேன்...!

எங்கோ மறைந்தது..,
எனது தேசீயப் பறவை..,

ஈழத் தேசத்தின்....,
கனவுகளைப் போல...!


தொடர்ந்தும்  எம்முடன்...பயணியுங்கள்...செண்பகம்..!

Share this post


Link to post
Share on other sites

இயல்பான ஏக்கத்தை சுமந்து வரும் வரிகள்.....சிறப்பான கவிதை , தொடர்ந்து எழுதுங்கள் செண்பகன்.....!  🌻 

Share this post


Link to post
Share on other sites

உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். உங்களின் ஆதரவு     என்னை  மீண்டும் மீண்டும் எழுதத்    தூண்டுகிறது.
 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நிலாக்காவை இந்த‌ திரியில் க‌ண்ட‌து மிக்க‌ ம‌கிழ்ச்சி 😁🤞,  ஓம் அக்கா 2014ம் ஆண்டில் இருந்து யாழை பார்க்க‌ல‌ , யாழை பார்க்காட்டியும் நான் நேசித்த‌ யாழ் உற‌வுக‌ளை ம‌ற‌க்க‌ வில்லை ,  ஜ‌முனாவை ந‌ம்ம‌ முடியாது அக்கா அவ‌ன் பூனை பெய‌ரில் வ‌ந்து நாங்க‌ள் எழுதுவ‌த‌ மேல் ஓட்ட‌ம் விடுவான் , ஆனா ப‌டியால் இந்த‌ திரியில் நீங்க‌ள் சுக‌ம் விசாரிச்ச‌து அவ‌ருக்கு  தானாக‌வே போய் சேரும் , லொள் 😁😂 உங்க‌ளுக்கும் த‌ங்க‌மான‌ ம‌ன‌சு நிலா அக்கா , அது தான் யாழ் உற‌வுக‌ள் உங்க‌ளை ம‌ற‌க்காம‌ல் இருக்க‌ கார‌ண‌ம் 👏/  நிலாக்கா நான் கிழ‌வ‌ன் அகினாலும் யாழில் இந்த‌ பைய‌ன்26 என்ற‌ பெய‌ர் தான் இருக்கும் , பெய‌ரை பார்த்து பார்க்கிர‌வ‌ குழ‌ம்பி போயிடுவின‌ம் இவ‌ன் இன்னும் வ‌ள‌ர‌ வில்லையா என்று ஹா ஹா 😂😁 உங்க‌ளின் வ‌ருகைக்கும் அன்பான‌ ப‌திவுக்கும் ந‌ன்றி அக்கா  👏😁/
  • 13.09.2012 அன்றைய ஆனந்த விகடன் இதழில் இயக்குனர் சீமான் அவர்களின் பேட்டியில், விகடன் : ஈழத்தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்? சீமான் : முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதிய கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப்பிள்ளைகளான நாங்கள் இவர்கள் பின்னால் செல்ல முடியாது.
  • நிலாம‌தி அக்கா , ச‌த்திய‌மாய் ந‌ல்ல‌ அக்கா , நானும் நிலாம‌தி அக்காவும் 2008ம் ஆண்டு ஒன்னா யாழில் இணைந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் / அந்த‌ கால‌த்தில் நிலாம‌தி அக்கா யாழில் கூட‌ நேர‌ம் யாழில் நின்று  எழுதுவா , என‌க்கு நினைவு இருக்கு 2008ம் ஆண்டு நிலாம‌தி அக்காவை நான் கிண்ட‌ல் அடிச்ச‌து , அதை நிலாம‌தி அக்கா பார்த்து சிரிச்சு எழுதினா , கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடு அக்கா ,  அந்த‌ கால‌த்து கிண்ட‌ல் ந‌க்க‌ல் எல்லாத்தையும் நினைத்து பார்த்தா மீண்டு அந்த‌ கால‌ம் திரும்ப‌ வருமோ என்று இருக்கு , நிலாம‌தி அக்கா ந‌ல்ல‌ அக்கா  /    நன்றி பையா  நல்ல ஞாபகம் வைத்து எழுதி உள்ளீர்கள். உங்கள் வரவு கொஞ்சக் காலம் இல்லை.  இன்னும் பையனாகவே  இருக்கிறீர்.  மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி ...நான் இணைந்து பதினோரு   வருடங்களாகி விட்ட்து ...காலங்கள் ஓடும்போது வாழ்க்கையும் மாறுகிறது. தொடர்ந்து இருங்கோ ..ஜமுனாவையும் கேட்ட்தாக சொல்லவும். எனக்கு சில பொறுப்புகள். அதனால் எழுதுவது குறைவு ..ஆனால்  தினமும். சில நிமிடங்களாவது ..யாழை பார்ப்பேன் . தொடர்ந்து இணைந்து இருங்கள். பையனுக்கு வெள்ளை மனசு போல ...நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். .   
  • Nagarajah Niszanthan 👉மனிதர்கள் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள் ..! விமானத்தில் பெண் ஒருத்தி ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து அந்த ஆபிரிக்கரை காட்டி 'நீக்ரோ'வின்(நீக்ரோ என்றால் அடிமை என்பது இனத் துவேசிகளின் மொழியில் ) அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால், விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர். அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டவளாக, "முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது, விமானியும் "எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்." என்று கூறி முடித்தாள். சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச் சிரிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள். சரியாக அச்சமயம் பணிப்பெண் அந்த கறுப்பின மனிதனைப் பார்த்து, சார், தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள். விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விரும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமர நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றார்." என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பின்தொடருமாக கேட்டுக் கொண்டாள். குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப்பெண்ணைப் பாராட்டினர். அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும். தலைமை விமானியும் நிறுவனத்தின் அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊழியர்களின் பார்வைக்காகவென்று அனுப்பி வைக்கப்பட்டது. "நீங்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்கள் என்பதை மனிதர்கள் மறந்து விடுவார்கள் ..! "அதே போலவே நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதையும் மனிதர்கள் மறந்து விடுவார்கள் ..! "ஆனால் உங்களின் செயல்களால் அவர்களுடைய உள்ளங்களில் எவற்றை ஆழமாக பதித்து விட்டீர்களோ அவற்றை மனிதர்கள் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள் "..! I've learned that ..... people will forget what you said.... people will forget what you did.... .......But....... people will never forget ..... how you made them feel.....