Jump to content

சம்பியனாகியது


Recommended Posts

 

சம்பியனாகியது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி

 

image_b1fae75815.jpg

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் பெரு விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனானது.

தமது கல்லூரி வலைப்பந்தாட்டத் தொடரில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை 34-18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியிருந்தது.

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனாகியது-தெல்லிப்பழை-யூனியன்-கல்லூரி/88-234413

சம்பியனானது விநாயகபுரம் விநாயகர் வி. க

image_ca91fbf5a6.jpg

சரவனை கந்தையா வெற்றிக் கிண்ண மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட ஆலையடிவேம்பு முதல் கோமாரி வரையான 26 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற இத்தொடரில்இ விநாயகபுரம் மகாவித்தியாலய மைதானத்தில் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் உபதலைவர் வை. கமலநாதன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில்இ விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தை வென்றே விநாயகர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய விநாயகர் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குஇ 85 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மின்னொளி விளையாட்டுக் கழகம்இ 9.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்களையே பெற்ற நிலையில் 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அந்தவகையில்இ சம்பியனான விநாயகர் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணமும் 20இ000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியின் நாயகன்களாக கே. கோபிநாத்இ ஜ. கவிதாஸ் ஆகியோர் தெரிவானதுடன்இ தொடரின் நாயகனாக தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ராஜிதன் தெரிவானார்.

இறுதிப் போட்டியில்இ திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி. கமலராஜன்இ சபை உறுப்பினர்களான கே. காந்தரூபன்இ கே. கமல்இ திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் ஜீ. விநாயகமூர்த்திஇ மதகுருமார்இ வங்கி முகாமையாளர்கள்இ அனுசரளையாளர்கள்இ கழங்களின் விளையாட்டு வீரர்கள்இ நிர்வாகிகள்இ பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்த கொண்டு இருந்தனர்.

சம்பியனானது திருக்கோவில் உதயசூரியன் வி.க

image_3b452f4a08.jpg

பாண்டிருப்பு விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்கான கிரிக்கெட் தொடரில் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

பாண்டிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் பாண்டிருப்பு விளையாட்டுக் கழகத் தலைவர் என். சங்கீர்த் தலைமையில் நடைபெற்ற 32 கழகங்கள் பங்கேற்ற எட்டு ஓவர்கள் கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகத்தை வென்றே திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம், எட்டு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 75 ஓட்டங்களை வெற்றியிலகாகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகம் எட்டு ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று 30 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 இறுதிப் போட்டியைத் தொடர்ந்து என். சங்கீர்த் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பாண்டிருப்பு விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர் என். குமாரசூரியம், கழக ஆலோசகர் எஸ். தருமலிங்கம் ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டனர்.

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனானது-திருக்கோவில்-உதயசூரியன்-வி-க/88-234383

சம்பியனானது வசாவிளான் மத்திய கல்லூரி

image_c01c45d77b.jpg

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் வசாவிளான் மத்திய கல்லூரி சம்பியனானது. 

புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையை வென்றே வசாவிளான் மத்திய கல்லூரி சம்பியனானது.

இப்போட்டியின் முதலாவது செட்டை 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை வென்றபோதும், அடுத்த இரண்டு செட்களையும் 25-16, 26-24 என்ற வகையில் கைப்பற்றிய வசாவிளான் மத்திய கல்லூரி சம்பியனானது.

இத்தொடரில் மூன்றாமிடத்தை முத்துத்தம்பி மகா வித்தியாலயம் பெற்றது. 

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனானது-வசாவிளான்-மத்திய-கல்லூரி/88-234382

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.