Jump to content

தெரிவுக்குழு அழைத்தால் தெரிந்த அனைத்தையும் கூறுவேன் - முஜுபூர் ரஹ்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தினுஷா) 

தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக ஒருசிலர் குற்றஞ்சுமத்துகிறார்கள்.ஆனால் பொலிஸ் விசாரணை குழுவில் இன்னும் என் மீது எந்த முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட வில்லை. 

mujibur.jpg

அதேபோன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கென எனக்கு இன்னும் அழைப்ப விடுக்கப்பட வில்லை.அழைப்பு வந்தால் எனக்கு  தெரிந்த சாட்சிகளை நிச்சயமாக வழங்குவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாற குறிப்பிட்ட அவர் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ;

கேள்வி : கடந்த ஐக்கிய தேசிய கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்  பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் முரண்பாடுகள்  உள்ளதா ? 

பதில் : ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில்  ஒவ்வொருவரும்  ஒவ்வொரு நிலைபாட்டில் உள்ளனர்.  அது அவர்களின்  தனிப்பட்ட கருத்துக்கள். அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. வேட்பாளர் யார் என்பது குறித்து  கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படும். 

கேள்வி : முஸ்லிம் பிரதிநிதிகள் தமது அமைச்சுக்களை கூட்டாக ராஜினாமா செய்திரந்த நிலையில் மீண்டும் கபீர் ஹாஷிம் மற்றும் ஹலீம் ஆகியவர்கள் அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ளனர்.  முஸ்லிம் பிரதிநிதிகளிடையே கருத்து முரண்பாடுகள்  எதுவும் ஏற்பட்டுள்ளதா?

பதில் : முஸ்லிம் பிரதிநதிகளிடம் எந்த கருத்து முரண்பாடும் கிடையாது.  அனைத்து தரப்பினருதும் வேண்டுகோளின் பேரிலேயே இருவரும் அமைச்சு பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக்கொண்டனர்.  அமைச்சுக்களை பொறுப்பேற்பதற்கு முன்னர் சகல முஸலிம் பிரதிநதிகளுடனும்  கட்சி தலைவருடனும் கலந்துரையாடியதன் பின்னரே இருவரும் இந்த தீர்மானத்தை எடுத்தனர்.  

கேள்வி : மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைபாடு என்ன? 

பதில் : நம்பிக்கையில்லா பிரேரணையை நிச்சயமாக எதிர்க்கொள்வோம்.  பிரேரணையின் முடிவும் எங்களுக்கு சாதமாகவே இருக்கும்.  அதற்கான பலமும் எம்மிடம் உள்ளது. 

கேள்வி : தாக்குதல் சம்பவங்களுக்கும் உங்களுக்கம் தொடர்புள்ளதாக எதிரணியனர் குற்றஞ்சுமத்துகின்றனர். இது தொடர்பில் நீங்கள் என்ன நிலைப்பாட்டில் உள்ளீர்கள் ? 

பதில் : தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைண நடவடிக்கைகள் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் விசாரணை செய்யவென்று  பொலிஸ் விசாரணை குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறானவொரு நிலைமையில் என்மீதும் ஒருசிலர் குற்றஞ்சுமத்துகின்றனர். ஆனால் இதுவரையில் பொலிஸ் விசாரணை குழுவில் என்மீது எந்த முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட வில்லை. 

ஒருபுறம் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றது.  பல்வேறு உண்மை தகவ்லகளும் இதனூடாக வெளியாகி வருகின்றன. தெரிவுக்குழுவின் விசாரணைக்கு என்னை இன்னும் அழைப்பு விடுக்கப்பட வில்லை.  அழைப்பு வந்தால் விசாரணைகளின் போது என்க்கு தெரிந்த விடயங்களை குறிப்பிடுவேன் என்றார்.  

https://www.virakesari.lk/article/58775

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கிருந்து செல்லும் சிறிய பென்சன்காரர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா??
    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஊட் போடும் ஷெய்க் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.