Jump to content

இறைவனுக்கு எந்த மொழி தெரியும்?"


Recommended Posts

நம்மில் எத்தனை பேர் எமக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர்களை நினைவில் வைத்திருக்கிறோம்?  கொஞ்சம் நீளமான
பதிவு தான் :)
************#######*

மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன். ( 1ம் 2ம் வகுப்பு அளவில்)" நேரு மாமா 
வந்தாராம்.." என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை. 
மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான 
அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் "அடப்பாவமே" என்னும் பச்சாதாபமே கி
ட்டியது. 

சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கி
றேன். 'என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்' என்னுமளவிலேயே என்னைக்குறித்தான கணிப்பு ஆசிரியர்க
ளிடம் இருந்தது. ஒரு கல்வி சார்ந்த, கல்வி சாராத போட்டிகளிலும் நான் பங்கெடுத்துக்கொண்டதில்லை. நானே வி
லகியிருந்ததால், சீக்கிரம் விலக்கவும் பட்டேன். இந்த விஷச் சுழற்றலில் தாழ்வு மனப்பான்மை மட்டும் வளர்ந்துகொ
ண்டே போனது.இது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது.

தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி. பத்தாம் வகுப்பில் (10 H வகுப்பு)எனக்கு வகுப்பாசிரியராக வந்தார் 
ஜோசப் ஜெயராஜ் சார். வகுப்பு ஆசிரியர் என்பதோடு இல்லாமல் ஆங்கிலமும் எடுப்பார். 10 B வகுப்பிற்கு அவர் 
சரித்திரம் எடுத்தார். சிறிது தடித்த சரீரம். உருண்டு உருண்டு அவர் வகுப்பறை தாழ்வாரத்தில் நடந்து வருவதை எளி
தில் தெரிந்துகொண்டு, அவர் வகுப்பு ஆரம்பமாகுமுன் அவரவர் இடத்தில் போய் அமர்ந்துவிடுவோம்.
நான் முன்பெஞ்சு( 'கண்ணாடி போட்ட பையன்களெல்லாம் முன்னால வாங்கல' - என்று அவர்தான் முன்னால் உட்கார 
வைத்தார். அதுவரை 2வது 3வத் பெஞ்சு ஒரு மூலையில் யார் கண்ணுலயும் படாம உட்கார்ந்திருப்பேன்).

Tempest ஒரு பாடமாக உரைநடையில் இருந்தது. ஒருநாள் கதை சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென நிறுத்தினார். 
வகுப்பின் பின்பெஞ்சுகளில் சலசலப்பு காரணமாக இருக்கும். 
"இங்க்லீசு எல்லாம் படிச்சிட்டீய? பாடம் நடத்த வேண்டாம்.என்னலா? சரி. சரித்திரம் தெரியுதான்னு பாக்கேன்" அவர் சொல்லவும், விவகாரம் முத்துகிறது என அனைவருக்கும் புரிந்தது.

" வெள்ளைக்காரன் ஏன் இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கணும்-னு முனைப்பா நின்னான்?" வகுப்பு மெளனமா
னது.

பிரம்பைச் சுழற்றிக்கொண்டே பெஞ்சுகளுக்கு இடையில் நடந்தார் " எவனுக்குல தெரியும்? எந்திரி..பாப்பம்" 

மீண்டும் மயான அமைதி. 

எனக்கு பதில் தெரியும். மனசு மோதுகிறது..சொல்லிவிடவேண்டும்.. கையைத் தூக்கு...கையைத் தூக்கு... 

வழக்கமான பயம் என்னை வென்றது. என் முகத்தில் அவர் ஏதோ கண்டிருக்கவேண்டும். நின்றார்.

" ஏல, கண்ணாடி.. எந்திரு." 

எழுந்தேன். " நீ சொல்லு"

வாய் திறந்தேன். வழக்கம் போல வார்த்தைகள் வரவில்லை . உதடுகள் மட்டும் துடித்துக்கொண்டிருந்தன..

"இ..இ..இ..." இஸ்தான்புல் நகரை ஓட்டாமான் துருக்கியர் கைப்பற்றினர் எனச் சொல்லவேண்டும்- இஸ்தான்புல் இ..இ.இ 
ய்ல் நின்றது

அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

" சார் அவனுக்கு திக்குவாயி. இன்னிக்கு பூரா அப்படியே நிப்பான்" பின்னாலிருந்து எவனோ சொன்னான். ஒரு சிரி
ப்பலை மோதியது. 

கையை மேலே தூக்கி, கண்களைத் துடைத்துக்கொண்டேன். வாய் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது.

அருகே வந்தார். " சாயங்காலம் வீட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னைப் பாத்துட்டுப் போ. வெளங்குதா?'

சரியென தலையாட்டினேன். " உக்காரு" என்றவர் வகுப்பு முழுதையும் எழுந்து பெஞ்சு மேல் நிற்கச் சொன்னார். அந
னவருக்கும் கையில் இரண்டு அடி - செமத்தியாக.. 

"வெக்கமாயில்ல? உங்கூடப் படிக்கிற பயலுக்கு திக்குவாயின்னா சிரிக்கேங்களே? நீங்கெல்லாம் ஓவியமோ?அடுத்தவன் 
கஷ்டத்தப்பாத்து சிரிக்கவால சொல்லிக்கொடுத்திருக்கு ? சோத்தத் திங்கீயளா ** யத் திங்கீயளா?" அவர் போட்ட 
சத்தத்திலும் அடியிலும் வகுப்பு உறைந்து தலை குனிந்தது.

சாயங்காலம் , ஆசிரியர் அறையில் அவரைப் பார்க்கப் போனேன். கிளம்பியிருந்தார். சைக்கிள் ஸ்டாண்டு வரை 
அவருடன் நடந்தேன்.

"நீ பேசணும்டா. நிறையப் பேசணும்.. தைரியமா பேசு.பேசப்பேசத்தான் நீ புத்திசாலின்னு தெரிஞ்சுக்குவாங்க?"

அவரது வார்த்தைகளில் விம்மினேன்.

"இல்ல சார். எனக்கு படிப்பு வராது. நான் மக்குளி சார்."

" இல்லடே. நீ படிப்பே. ஒரு நாளு நீ மேடைல பேசுவ. பெரிசா பரிசெல்லாம் வாங்குவ பாரு. " அன்போடு தோளில் கை போட்டு அழுத்தினார்.

"எங்கேந்துடே வார?"

"ஹார்பர் குவார்டர்ஸ் சார்"

" கடற்கரைக்குப் போ. தனியா நீ பாட்டுக்கு கத்தி கத்திப் பேசு. என்னதான் பேசணும்னு இல்ல. நீ படிச்ச பாடத்தை 
உரக்கச் சொல்லிப்பாரு. உம்-முன்னால இருக்கிற மணலெல்லாம் ஆளுங்கன்னு நினைச்சுக்க." 

என் தலையில் வலக்கையை வைத்தார் " என் பிள்ளேள் எவனும் சோடைபோனதில்ல. போவ விடமாட்டேன். கர்த்தர் இருக்காரு. தைரியமா இரு ராசா"

கிளம்பினவனை மீண்டும் நிறுத்தினார்

" திக்குவாயி நோயில்ல தம்பி. தைரியமாப் போராடு. ஓடியே போயிரும். முதல்ல உன்னை நம்பு"

மறுநாள் தனியே கடற்கரைக்குப் போனேன். அலைகள் சோம்பலாக அடித்துக்கொண்டிருந்தன.தெரிந்த கேள்வி பதில்களைச் சொல்லத்தொடங்கினேன். முதலில் வெட்கமாக இருந்தது. 'கோட்டிக்காரங்கணக்கா என்னல தனியா பினாத்திக்கிட்டு கிடக்கே?'ன்னு எவனாச்சும் கேட்டான்னா?

யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த இராவணன் மீசை முட்களைப் பார்த்து கொஞ்சம் 
கத்திப் பேசத் தொடங்கினேன். 

நானே கேள்வி கேட்டேன். நானே பதிலும் சொன்னேன். சில சமயங்களில் கையைத் தூக்கியும் "சார் சார்" எனக் கூவி 
சொல்லிப்பார்த்துப் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் விட்டு , சுவாரசியமாக ஆனது. 

பேசுமுன் ஒரு முறை மனதுள் " பொறுமை.பொறுமை" எனச் சொல்லிக்கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினேன். 

இருநாட்களில் அம்மா ஆச்சரியப்பட்டாள். " என்னடா, இன்னிக்கு கொன்னலே இல்லையே?!" அண்ணன் சந்தோஷத்தில் முதுகில் தட்டினார். தனிமையான கடற்கரைப் பேச்சுப் பயிற்சி மறைமுகமாகத் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சம
஡க என் பேச்சு தெளிவானது. திக்குவாய் நின்றே போனது.

இரு வருடங்கள் பின் கல்லூரியில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் என மேடையேறி பரிசுகளை 
வென்றேன். ஒவ்வொரு முறையும் ஜோசப் ஜெயராஜ் சாரை மனத்துக்குள் நினைத்துக்கொள்வேன். 

இன்று வருடங்கள் பல கழிந்து, கோப்பைகளுடன் நான் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கையில் அவர் நினைவு வந்தது. அதுதான் இப்பதிவின் உந்துதல்.

"இறைவனுக்கு எந்த மொழி தெரியும்?" என யாராவது என்னிடம் கேட்டால், சொல்லுவேன். " அராமிக்கோ, அரபியோ, சமஸ்க்ருதமோ அல்ல.

தமிழ்.. தூத்துக்குடித் தமிழ்”//

 

சுதாகர்.க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.