Jump to content

இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம். - மகிந்த ராஜபக்சே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்.!

Rajabakshea.png

இலங்கையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் சார்பில் விகாரமகாதேவி பூங்கா அருகே நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கையில் போர் காலம் முடிந்து 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வசித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நிலை மாறியுள்ளதாக தெரிவித்தார்.

இன்றைய சூழலில் இலங்கை மக்களுக்கு நாட்டை நேசிக்கும் தலைவர் அவசியம் என குறிப்பிட்ட அவர், இன்னும் 4 மாதங்களில் இந்த அரசின் ஆயுட்காலம் முடிவடைந்துவிடும் என தெரிவித்தார். எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவது உறுதி எனவும், தன் ஆட்சியின் கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.

http://www.ns7.tv/ta/tamil-news/india/22/6/2019/sri-lankas-regime-change-soon?fbclid=IwAR05tcpMYVepsAdgp4O1h3L6qUmAt_idRRcwaTg-F_BxDEBuwP5DZfC3H2s

Link to comment
Share on other sites

பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைமையுடனான அரசாங்கத்தை உருவாக்குவோம்  : மஹிந்த ராஜபக்ஷ 

அசாங்கத் தரப்பினர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறாது  என்று  அரசாங்கத்தரப்பில் இருந்து இன்னும் நம்பகத்தன்மையான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.  

இன்னும்  நான்கு  மாதங்களில்  இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மக்களின் பாதுகாப்புக்கு சிறப்புரிமை கொடுக்கும் நாட்டையும் மக்களையும் நேசிக்க கூடியதலைமைத்துவத்துடனான அரசாங்கமொன்றை உருவாக்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு மாத பூர்த்தியை முன்னிட்டு  நேற்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் எதிரணியினரால் ஏற்பாடுசெய்ப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வு எதிர்கட்சி தலைவரின் தலைமையில் இடம்பெற்றது.  இந்த நிகழ்வில்  தேசிய சுகந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,  பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்பன்பில, மறிங்நதானந்த அலுகமகே உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.   

எதிர்க்கட்சி தலைவர் அங்கு மேலும் கூறியதாவது;  

எதிர்வரும் நான்கு  மாதங்களில் இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. இந்த நான்கு மாதங்களுக்கு பின்னர்  கட்டாயம்  தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.  தேர்தல்களுக்கு  களமிறங்குவது  அவசியமாகும் . மாகாணபைகளுக்கான தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்.  

ஆனால்  அரசாங்கம்  இந்த தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை எமக்கு கிடையாது.  முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறவுள்ளது.  ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாங்கள் உருவாக்கும் அரசாங்த்தில்  நிச்சயமாக மக்களின்  பாதுகாப்புக்கு முக்கிய இடம் வழங்கப்படும். தேசிய பாதுகாப்புக்கு முக்கிய இடத்தை வழங்கும் வகையிலேயே எங்களின் அரசாங்கம் அமையும். 

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று  2 மாதங்கள் நிறைவடைகின்றது. இந்த தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நடவடிக்கைகள் இன்னும் இயல்பு நிலைமைக்கு திரும்ப வில்லை. 

அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை.பொறுப்புக்களை அடிமட்ட அதிகாரிகளிடம் விட்டு விட்டு அரசாங்கம் தன்னை பாதுகாத்து கொள்ளவே முயற்சித்து வருகிறது.  

எதிர்காலத்தில்  இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது  என்பதற்கு சாதகமானதும் நம்பிகையானதுமான எந்த  கருத்தும் இன்னும் அரசாங்கத்தரப்பில் இருந்து வெளியாக வில்லை. சிலர் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து விட்டதாகவும் குறுகிய காலத்தில்  தாங்களே பயங்கரவாத செயற்பாடுகளை முழுமையாக  கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் மார்த்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தரப்பில்  பீல்ட்  மார்ஷல் சரத் பொன்சேகா பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைளில் அனுபவம் பெற்றவராக இருக்கிறார். 

இந்த நிலையை அவ்வளவு விரைவாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்றும், கட்டுபடுத்தாவிட்டால் மீண்டும் தாக்குதல்களை சந்திக்க நேரிடும்  என்றும் அவர்  எச்சரிக்கிறார். 

இவ்வாறானவொரு நிலையில்  சகலரும் அச்சத்துடன் தமது அன்றாட வாழ்ககை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.சிலரின் செயற்பாடுகளின் காரணமாக முழு முஸ்லிம் சமுகத்தின் மீதும் நம்பகமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. 

இவர்களின் செயற்பாடுகளினால் முஸ்லிம் சமுதாயமே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறானவொரு நிலையில்  முஸ்லிம் சமய தலைவர்களுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் முக்கிய பொறுப்பு காணப்படுகிறது. சமுதாயத்தில்  இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை மீண்டும் உருவாகாத வகையிலும்  இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்களுக்கு புனர்வாழ்வை பெற்றுக்கொடுப்பதும் அவர்களின் முக்கிய பொறுப்பாக காணப்படுகிறது.  

சமூகத்தில்  ஏற்பட்டுள்ள அச்சநிலைமை போக்கி  இயல்பு நிலையை உருவாக்குவதில் அரசாங்கத்துக்குப் பாரிய பொறுப்பு உள்ளது.  ஆனால் அரசாங்கம் அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றுகின்றதா என்ற சந்தேகமும் எமக்கு ஏற்பட்டுள்ளது. மாறாக எங்களையே அரசாங்க தரப்பு குற்றவாளியாக பார்க்கிறது. இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும்.  

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவுக்கு  கொண்டுவந்து பத்து வருடங்கள் முழுமையடைவதற்கு முன்னர் மீண்டும்  பயங்கரவாத தாக்குதல்களை சந்திக்க நேர்ந்துள்ளது.  

குறைந்தது  பத்த வருட காலமாவது நாட்டின் அமைதியை பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் ஏப்ரல் நான்காம் திகதி அரசாங்கத்துக்கு கிடைகக்ப்பெற்றுள்ள போதிலும் அந்த முன் அறிவித்தல்கள் தொடர்பில்  அரசாங்கம் எந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கமால்  இருந்திருக்கிறது. 

சம்பந்தப்பட்ட தகவல்கள் பொறுப்பான அதிகாரிகளுக்க கையளிக்கப்பட்டுள்ள போதிலும்  அது குறித்தும் கவனம் செலுத்தாமலேயே அரசாங்கத்தினர் செயற்பட்டுள்ளனர். 

நாட்டின் எதிர்காலம் தொடர்பில்  எதிர்க்கட்சிக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதனை செய்யவே நாங்கள் முயற்சிக்கிறோம் என அவர் இதன் போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/58846

Link to comment
Share on other sites

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போது கூட்­ட­மைப்பு கைகாட்­டிய திசையை நோக்கி அணி­வ­குத்துச் செல்ல தமிழ் மக்கள் ஒன்­று­சேர தயா­ராக இருந்­தார்கள். காரணம் ஜார் மன்­னனைப் போன்ற ஒரு கொடுங்­கோண்மை ஆட்­சி­யா­ளனை வீழ்த்­தி­விட வேண்­டு­மென்ற வெறி  இருந்­தது. ஆனால் அந்த சூழ்­நி­லையோ நெருக்­க­டியோ வரப்­போகும் ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஏற்­ப­டு­மென்று கட்­டியம் கூறி­விட முடி­யாது.

உண்­மையை உரைப்­ப­தாயின் தமிழ் மக்­க­ளுக்­கான நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணுவேன் என்று வாக்­கு­று­தி­ய­ளிக்­கக்­கூ­டிய  ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர் எதிர்­கால தேர்­தலில் களம் இறங்­கு­வா­ரென்று கூற முடி­யாது.

கூட்டமைப்பின் வார்த்தைகளை மீறி, மாற்றுத் தலைமைகளை நம்பவோ அல்லது, எதிரணிக்கட்சிகளை நாடவோ தமிழ் மக்கள் தயாராகப் போவதில்லையென்ற பலமான யதார்த்தத்தையும் நாம் நம்பாமல் இருக்கமுடியாது. எனினும், கூட்டமைப்பு தன்னை சுயமதிப்பீடு செய்து சுதாகரித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

திரு­மலை நவம்

https://www.virakesari.lk/article/58848

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் ஓர் ஆசை, மைத்திரிக்கும் ஓர் ஆசை, ரணிலுக்கும் ஓர் ஆசை, கோத்தாவுக்கும் ஓர் ஆசை.

சீனாவுக்கும், அமேரிக்காவுக்கும் பேராசை.

இந்தியாவுக்கு நிராசை.

Link to comment
Share on other sites

31 minutes ago, Nathamuni said:

வருக்கும் ஓர் ஆசை, மைத்திரிக்கும் ஓர் ஆசை, ரணிலுக்கும் ஓர் ஆசை, கோத்தாவுக்கும் ஓர் ஆசை.

சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கிற மாதிரியும் ஒரு கதை போகுது. 😀 ராஜபக்ச குடும்பத்தில் யார் வேட்பாளர் என்றே குழப்பமா இருக்கு. 😂

ஆனால் வரும் தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைத்து சிங்கள பௌத்த பெரும்பான்மையுடன் ஆட்சியை ஏற்படுத்த முயல்கிறார்கள். இது ராஜபக்ச குடும்பத்துக்கு வாய்ப்பாக அமையவும் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்வி பட்ட வரையில், ஜனாதிபதித் தேர்தலோ, பாராளுமன்றத் தேர்தலோ, மகிந்த கட்சிதான் வெல்லுமாம்.

மகிந்தட பிளான் என்னெண்டா - முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி, வென்று, 19 சட்ட திருத்தத்தில் 2 முறைக்கு மேல் ஜனாதிபதியாக முடியாது என்னும் சரத்தை நீக்கி, பின் ஜனாதிபதி தேர்தலை நடத்தி ஜனாதிபதி ஆவது.

கோத்தஅபய வின் பிளான் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி தானே ஜனாதிபதி ஆவது.

எப்படியாவது ஐதேகவின் வேட்பாளராக ஆக சஜித் பெரும் பிரயத்தனம் செய்கிறார்.    ரணிலும், மைத்திரியும் என்ன பண்ணுவார்களோ? என்பதுதான் கேள்வி.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா சார்பு மகிந்த எதை விரும்பினாலும், அமெரிக்க, இந்திய கணக்கு வேறாயின் ஒன்றுமே பண்ண முடியாது.

Link to comment
Share on other sites

17 minutes ago, goshan_che said:

எப்படியாவது ஐதேகவின் வேட்பாளராக ஆக சஜித் பெரும் பிரயத்தனம் செய்கிறார்.

ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படலாம் என்ற ரீதியில் முன்பே கதை வந்தது. இப்ப கரு ஜயசூரியவும் தான் ஐதேக வேட்பாளராக முயல்கிறார். 😀

ரணில், சஜித், கரு..... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி லிங்கம் 🤦‍♂️😂😜

6 minutes ago, Lara said:

 

ரணில், சஜித், கரு..... 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

சீனா சார்பு மகிந்த எதை விரும்பினாலும், அமெரிக்க, இந்திய கணக்கு வேறாயின் ஒன்றுமே பண்ண முடியாது.

நாங்கள் நினைப்பது போல இந்த பிராந்திய போட்டி அப்படி ஒன்றும் கறுப்பு/வெள்ளை விடயமல்ல. மோடி ஒரு நாட்டின் தலைவர், ஒவ்வொரு முறை வரும் போதும், ஒரு ஆறு மாதம் முதல் வரை எதிர்கட்சி தலைவராக கூட இருக்காத மகிந்தவை சந்தித்தே செல்வார்.

முற்றாக சைனாவின் பக்கமோ அல்லது இந்தியா/யூஎஸ் இன் பக்கமோ சாய்வதினால் தமக்கும் நாட்டுக்கும் ஏற்படும் பாதகங்களை மகிந்தவும், ரணிலும் அறிந்தே நடக்கிறனர்.

பிரதம மந்திரி குழப்பத்தின் போது, ரணிலை ஒரு இந்திய ஊடகம் பேட்டி காணும், அவரின் வாயால் சைனா மகிந்தவை ஆதரிக்கிறது என சொல்ல வைக்க அந்த ஊடகவியளாலர் படாதபாடு படுவார், ஆனால் ரணில் ஒரு இடத்திலும் சீனாவை குற்றம் சொல்லாமல் விடை அளிப்பார்.

ஆகவே, கள யதார்தம் யாதெனில்,

மகிந்த 60% சைனா 40% இந்தியா/யூஎஸ் 

ரணில் 60% இந்தியா/யூஎஸ் 40% சைனா

மக்கள் ஆதரவு நாட்டில் இருக்கும் அணி வெல்லும். யார் வெண்டாலும், அவர்களை தம் பேச்சு கேட்டு நடக்கும் படி சைனாவும், இந்தியா/யூஎஸ் தரப்புகள் அழுத்தம் பிரயோகிக்கும்.

மகிந்த வெல்ல போகிறார் எண்டால் அதை தடுத்து நிறுத்த இந்தியா/யூஎஸ் முயலாது, மாறாக வென்றபின் முடியுமானவரை தம் வட்டத்துள் அவரை எப்படி கொண்டு வரலாம் என இப்பவே ஸ்கெட்ச் போட்டிருப்பர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.