Jump to content

கல்முனை உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையில் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனும் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

இந்நிலையில் கல்முனையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல்  உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுமென ஞானசார தேரர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து நால்வர் தமது போராட்டத்தை நிறைவு ஏற்கனவே செய்தனர். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொது அனைவரும் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளனர்.

http://globaltamilnews.net/2019/125022/

Link to comment
Share on other sites

2 hours ago, பிழம்பு said:

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுமென ஞானசார தேரர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து நால்வர் தமது போராட்டத்தை நிறைவு ஏற்கனவே செய்தனர்.

தமிழர் தரப்பு ஒரு நீதியான போராட்டத்தை சனநாயக பண்பாடுகளுக்கு இணங்க நடத்தி வருகின்றனர்.

முஸ்லீம் சமூகத்தை அடக்கவேண்டும் என்ற நிலையில் இந்த பௌத்த 'துறவிகள்' தமிழருக்கு உதவ முன்வருகின்றனர். இந்த இதய சுத்தியில்லாத உதவிகளை பெறுவது சந்தர்ப்பவாதமாக தெரிந்தாலும், இதில் தமிழர் தரப்பை, மக்களை  யாரும் குறை சொல்ல முடியாது,.    

Link to comment
Share on other sites

10 hours ago, ampanai said:

தமிழர் தரப்பு ஒரு நீதியான போராட்டத்தை சனநாயக பண்பாடுகளுக்கு இணங்க நடத்தி வருகின்றனர்.

முஸ்லீம் சமூகத்தை அடக்கவேண்டும் என்ற நிலையில் இந்த பௌத்த 'துறவிகள்' தமிழருக்கு உதவ முன்வருகின்றனர். இந்த இதய சுத்தியில்லாத உதவிகளை பெறுவது சந்தர்ப்பவாதமாக தெரிந்தாலும், இதில் தமிழர் தரப்பை, மக்களை  யாரும் குறை சொல்ல முடியாது,.    

சந்தர்ப்பவாதம் காரணமாக இவ் உதவிகளை பெறவில்லை. இந்து குருக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டதால் பின்னணியில் இந்துத்துவா உள்ளது.

இந்துத்துவா இலங்கை இந்துக்கள், பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தம், ஏனையோர் வெளியேறுங்கள் என முன்னர் கூறியிருந்தது. அது கிறிஸ்தவர்களையும் சேர்த்து தான்.

இந்துத்துவா ஆரியர்களை மட்டுமே இந்துக்களாக கருதுபவர்கள். சிங்களவர்களும் ஆரியர்கள். எனவே அவர்கள் ஆரியர்களாக இணைவார்கள். தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் அவர்களை அழிக்க தான் துணைபோவார்கள். இந்தியாவில் சிவசேனா உருவானதும் Bombay இல் தமிழர்களை தாக்கியது போல்.

இந்த பிக்குகள் தம்மை கதாநாயகர்களாக காட்டிக்கொண்டு ஒரு பக்கம் தமிழ் முஸ்லிம் பிரச்சினையை தூண்டிக்கொண்டு இன்னொரு பக்கம் வரும் தேர்தலில் தாம் ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவார்கள். எனவே அவர்கள் தமிழர்களுக்கு உதவுவதற்கு இங்கு வரவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.