Jump to content

8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்த தயாராகும் சிறிலங்கா

Recommended Posts

8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்த தயாராகும் சிறிலங்கா

Immigration-and-Emigration-Department-30நுழைவிசைவு காலாவதியான நிலையில், சிறிலங்காவில் தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், நுழைவிசைவு காலாவதியான பின்னரும், சிறிலங்காவில் தங்கியுள்ள 7900 வெளிநாட்டவர்கள் பற்றிய தரவுகளை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வு அலகு கண்டறிந்துள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.

“இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா நுழைவிசைவில் வந்தவர்கள். தற்போது விடுதிகள் கட்டுமானத் துறைகளிலும், உணவகங்கள், விவசாயப் பண்ணைகளில் பணியாற்றுவதுடன், வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

நுழைவிசைவு காலாவதியான பின்னரும் தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

குறிப்பாக 1,680 இந்தியர்கள், 936 பாகிஸ்தானியர்கள், 683 சீனர்கள், 291 மாலைதீவு நாட்டவர்கள், 152 பங்களாதேஷ் நாட்டவர்கள், 42 ஜப்பானியர்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.

மேலும், நெதர்லாந்தைச் சேர்ந்த 541 பேரும், உக்ரேனைச் சேர்ந்த 167 பேரும், சவூதி அரேபியாவைச் சேர்ந்த 172 பேரும், ரஷ்யாவைச் சேர்ந்த 157 பேரும், லெபனானை சேர்ந்த 157 பேரும், நைஜீரியாவை சேர்ந்த 130 பேரும், பிரான்சை சேர்ந்த 110 பேரும், பிரித்தானியர்கள் 44 பேரும், நுழைவிசைவு காலாவதியான பின்னரும் சிறிலங்காவில் தங்கியுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/06/23/news/38673

Link to comment
Share on other sites

"நெதர்லாந்தைச் சேர்ந்த 541 பேரும், உக்ரேனைச் சேர்ந்த 167 பேரும், சவூதி அரேபியாவைச் சேர்ந்த 172 பேரும், ரஷ்யாவைச் சேர்ந்த 157 பேரும், லெபனானை சேர்ந்த 157 பேரும், நைஜீரியாவை சேர்ந்த 130 பேரும், பிரான்சை சேர்ந்த 110 பேரும், பிரித்தானியர்கள் 44 பேரும்"

இதை "கண்டறிந்த" குடிவரவுத் திணைக்களத்தின் "புலனாய்வு அலகு" இவர்கள் இந்த திருநாட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை இன்னும் கண்டறியவில்லை போல உள்ளது. 

Link to comment
Share on other sites

36 minutes ago, ampanai said:

அவர்கள் அறிந்துள்ளதினால்தான் அறியாதவர்கள்போல் உள்ளனர். அவர்கள் செய்வது ஒன்றும் பெரிதல்ல. அவர்களிடம் இருந்து கிடைக்கும் சம் திங் பெரியது என தோன்றுகிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்த தயாராகும் சிறிலங்கா

குறிப்பாக 1,680 இந்தியர்கள், 936 பாகிஸ்தானியர்கள், 683 சீனர்கள், 291 மாலைதீவு நாட்டவர்கள், 152 பங்களாதேஷ் நாட்டவர்கள், 42 ஜப்பானியர்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.

மேலும், நெதர்லாந்தைச் சேர்ந்த 541 பேரும், உக்ரேனைச் சேர்ந்த 167 பேரும், சவூதி அரேபியாவைச் சேர்ந்த 172 பேரும், ரஷ்யாவைச் சேர்ந்த 157 பேரும், லெபனானை சேர்ந்த 157 பேரும், நைஜீரியாவை சேர்ந்த 130 பேரும், பிரான்சை சேர்ந்த 110 பேரும், பிரித்தானியர்கள் 44 பேரும், நுழைவிசைவு காலாவதியான பின்னரும் சிறிலங்காவில் தங்கியுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா... 
சனம் எல்லாம் இலங்கையில் நிற்பதை பார்த்தால்...
பொடி மெனிக்கேயுடன்... காதல் வயப் பட்டு இருப்பார்களோ ?  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.