Jump to content

சீனாவிடம் 1 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா


Recommended Posts

சீனாவிடம் 1 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா

chinese-dragon-300x200.jpgமத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்த தொடக்கம் மீரிகம வரையான, பகுதியை அமைக்கவே,  சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியே (எக்சிம் வங்கி) இந்தக் கடனுதவியை வழங்கவுள்ளது.

இந்த திட்டத்துக்கு 1.1 பில்லியன் டொலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், 85 வீதத்தை, சீனாவிடம் கடனாகப் பெறவும், 15 வீதத்தை, உள்நாட்டு வங்கிகளிடம் அரசாங்கம் திரட்டவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டமாக, 37.09 கி.மீ தூரமுள்ள பகுதியை  அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/06/23/news/38676

Link to comment
Share on other sites

திரு மோடி வந்து மீண்டும் டெல்லி போய் யோகா தியானம் முடிக்க முன்னர் இந்த கடன் வேண்டப்பட்டுள்ளது. மாலைதீவு போன்று இலங்கை முழுமையாக இந்தியாவின் பிடியில் இல்லை. ஒரு காரணம் வேண்டப்பட்ட கடனின் தொகை. மீண்டும் கடன் வேண்டி,  வேண்டிய கடனின் வட்டியை அடைக்கும் பரிபாத நிலை தொடரும். 

Link to comment
Share on other sites

9 hours ago, ampanai said:

திரு மோடி வந்து மீண்டும் டெல்லி போய் யோகா தியானம் முடிக்க முன்னர் இந்த கடன் வேண்டப்பட்டுள்ளது. மாலைதீவு போன்று இலங்கை முழுமையாக இந்தியாவின் பிடியில் இல்லை. ஒரு காரணம் வேண்டப்பட்ட கடனின் தொகை. மீண்டும் கடன் வேண்டி,  வேண்டிய கடனின் வட்டியை அடைக்கும் பரிபாத நிலை தொடரும். 

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை 4 கட்டங்களாக பிரித்துள்ளனர்.

1. கடவத்த - மீரிகம

2. மீரிகம - குருநாகல்

3. பொதுஹெர - கலகெதர

4. குருநாகல் - தம்புள்ளை

இதில் முதல் கட்டதிற்கு சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் 2015 இலிருந்து பேச்சுவார்த்தை நடந்தும் சீனா கடன் வழங்க தாமதமானதால் தள்ளிச்சென்றது. பின் கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் தெரிவித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்ப முடிவாகி விட்டது போல். இது ஒன்றும் மோடி வந்து போன பின் நடப்பது அல்ல.

இரண்டாம் கட்டத்தை உள்நாட்டு வங்கிகளின் உதவிகளுடன் இலங்கை செயற்படுத்துகிறது.

மூன்றாம் கட்டத்திற்கு ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடந்து அதில் ஒரு நிலை எட்டப்படாமல் இழுபறியுடன் செல்வதால் அதையும் உள்நாட்டு வங்கிகளின் உதவியுடன் செயற்படுத்தினால் என்ன என்று யோசிக்கினம். ஆனாலும் ஐப்பானுடனான பேச்சுவார்த்தை தொடர்கிறது.

நான்காம் கட்டத்திற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியா விரும்பினால் தட்டிப்பறிக்கலாம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது.

கடன் வாங்காமல் சிங்களச்சிறிலங்கா செய்த ஒரு காரியத்தையாவது ஆரெண்டாலும்  சொல்லித் தொலையுங்கப்பா? 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

கடன் வாங்காமல் சிங்களச்சிறிலங்கா செய்த ஒரு காரியத்தையாவது ஆரெண்டாலும்  சொல்லித் தொலையுங்கப்பா? 🤣

அமெரிக்காவும் சீனாவிடம் எக்கச்சக்கமாக கடன் வாங்கித்தான் ஓடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Jude said:

அமெரிக்காவும் சீனாவிடம் எக்கச்சக்கமாக கடன் வாங்கித்தான் ஓடுகிறது.

கடன்களுக்குள் பல வகை.
அரிசி பருப்பு முதல் ......காலுக்கு போடும் செருப்பு வரைக்கும் கடன் வாங்குவதற்கு சிறிலங்கா மாலைதீவு அல்லவே? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் எதோ ஒரு கால கட்டத்தில் கடன் வாங்குவது உண்டு அவர்கள் எல்லாம் மீள் அழிப்பு தகுதியுடன் ஆனால் சிங்கள சொறிலங்கா வின் கடன் வட்டி கட்டவே கடன் வாங்கவேண்டிய நிலையில் உள்ளனர் இதை அவர்களின் ஆட்களே செய்தியாளர் சந்திப்பில் போட்டுடைத்தனர் .

அமெரிக்காவும் சைனாவும் வரிசையில் சொரிலன்காவும்  உலக அறிவு அவ்வளவுதான் .

Link to comment
Share on other sites

"மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது".

இதுவரை போட்ட பெருதெருக்களால் பொருளாதாரம் வளர்ந்தா? இல்லை சில அரசியல் வாதிகளின் வங்கி கணக்கு பருமானதா? நாட்டின் கடன் தான் குறைந்ததா? 
  
ஒரு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி இல்லாத நாட்டில் ஏன் இப்படி பெருந்தெருக்களை 
போடுக்கிறார்கள்? எல்லாம் ஒரு  'சோ'க்காட்டல் தான்.  

Link to comment
Share on other sites

அண்மையில் சர்வதேச அமைப்பான 'மூடி' இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை குறைத்து இருந்தது. 2009க்கு பின்னர் 8-9 வீதமாக வளர்ந்த பொருளாதாரம் இப்பொழுது 3-3.5 வீதம். 

சீனாவை தவிர வேறு எந்த நாடும் கடன் தரும் நிலை இருக்கின்றதா ? என்ற கேள்வியும் உள்ளது. அத்துடன், சீன அரசு கடனை தர முடியாது போனால் எதையாவது ஒன்றை தனக்கு எழுதி வேண்டியும் விடும். 

Link to comment
Share on other sites

On 6/23/2019 at 11:55 PM, ampanai said:

ஒரு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி இல்லாத நாட்டில் ஏன் இப்படி பெருந்தெருக்களை போடுக்கிறார்கள்? எல்லாம் ஒரு  'சோ'க்காட்டல் தான்.  

இலங்கையை சிங்கப்பூர் போலாக்க முயல்கிறார்கள். 😂

Link to comment
Share on other sites

ஐக்கிய அமெரிக்க, பிரித்தானியா நாடுகளில் இருந்து இரண்டு அமெரிக்க மில்லியன்கள் கடனாக பெறும் இலங்கை !

Sri Lanka is to receive a sum of US 2 billion from UK and USA, Prime Minister Ranil Wickremesinghe said today.

Mr. Wickremesinghe said this at the opening of the new lubricant blending plant in Muthurajawala which is a joint venture between Hyrax Oil Malaysia and Ceylon Petroleum Corporation (CPC).

http://www.dailymirror.lk/top_story/SL-getting-USD-2-billion-from-UK--US:-PM/155-169944

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/23/2019 at 10:55 PM, ampanai said:

ஒரு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி இல்லாத நாட்டில் ஏன் இப்படி பெருந்தெருக்களை 
போடுக்கிறார்கள்? எல்லாம் ஒரு  'சோ'க்காட்டல் தான்.  

கடன் கட்டமுடியாவிட்டால் பொதுமக்களிடம் அந்த பாதையை உபயோகபடுத்துவதுக்கு பணம் அறவிடலாம்  இந்த திட்டத்தை கொண்டு வந்த அரசியல்வாதியின் வெளிநாட்டுகனக்கில் கொமிசன் பணம் சேர்ந்து விடும் .

Link to comment
Share on other sites

55 minutes ago, பெருமாள் said:

கடன் கட்டமுடியாவிட்டால் பொதுமக்களிடம் அந்த பாதையை உபயோகபடுத்துவதுக்கு பணம் அறவிடலாம்  இந்த திட்டத்தை கொண்டு வந்த அரசியல்வாதியின் வெளிநாட்டுகனக்கில் கொமிசன் பணம் சேர்ந்து விடும் .

 

2 hours ago, Lara said:

இலங்கையை சிங்கப்பூர் போலாக்க முயல்கிறார்கள். 😂

 

பிணை விற்பனை ஊடாக 2 பில்லியன் டொலர்களை நிதியாக திரட்டிய இலங்கை

5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கான பிணை விற்பனை ஊடாக இலங்கை 2 பில்லியன் டொலர்களை நிதியாக திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இடம்பெறும் இரண்டாவது பிணை விற்பனை இதுவாகும்.

500 மில்லியன் பெறுமதியான 5 ஆண்டு பிணைகள் 6.35 சதவீத அடிப்படையிலும், 1.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான 10 ஆண்டு பிணைகள் 7.55 சதவீத அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

http://www.hirunews.lk/tamil/business/219079/பிணை-விற்பனை-ஊடாக-2-பில்லியன்-டொலர்களை-நிதியாக-திரட்டிய-இலங்கை

இது தான் பொதுவாக நாடுகள் அபிவிருத்திக்கு பணம் சேர்க்கும் முறை. இங்கே, அதிக வட்டி தரப்படுகின்றது,.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ampanai said:

500 மில்லியன் பெறுமதியான 5 ஆண்டு பிணைகள் 6.35 சதவீத அடிப்படையிலும், 1.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான 10 ஆண்டு பிணைகள் 7.55 சதவீத அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையில் இந்த திட்டத்துக்கு தான் கடன் வாங்குகிறார்களா என்பது கேள்வி குறியே கடவத்தை க்கும் மீறிகமவுக்கும் உள்ள வாகன பயண நேரம் 90களில் 100 நிமிட க்குகளுக்குள் முடிந்துவிடும் இப்போ இன்னும் 60அல்லது 70 நிமிட நேரமே இருக்கும் என்று நினைக்கிறன் இந்த அளவுள்ள சிறிய தூர இடைவெளிக்கு ஏன் 1 பில்லியன் டொலர் சிலவளிப்பு ? அல்லது மீரிகம எனும் வேறு இடங்கள் இருக்கின்றனவா  தெரியலை . (90 களில் ஜேவிபி அது இது என்று தர மற்ற வீதிகளின் பயணம் நேரம் எடுக்கும்  இப்போ அப்படியல்ல என்று கூற கேள்வி )

Link to comment
Share on other sites

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிட்டு தான் கடன் வேண்டுதல் புத்திசாலித்தனம், அப்படி பார்க்கையில் நாட்டின் பொருளாதாரம் 4% க்கும் குறைவாகவே வளர்கின்றது.

இவர்கள், ஒன்றில் அதைவிட வேகமாக வளரும் என்ற நம்பிக்கையில் அதிக வட்டிக்கு கடன் எடுக்கிறார்கள் இல்லை நீங்கள் கூறியது போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிட்டு தான் கடன் வேண்டுதல் புத்திசாலித்தனம், அப்படி பார்க்கையில் நாட்டின் பொருளாதாரம் 4% க்கும் குறைவாகவே வளர்கின்றது.

இவர்கள், ஒன்றில் அதைவிட வேகமாக வளரும் என்ற நம்பிக்கையில் அதிக வட்டிக்கு கடன் எடுக்கிறார்கள் இல்லை நீங்கள் கூறியது போல...

சிலோனில் அபிவிருத்தியை விட இனவாதம் ம்தான் முக்கியம் பாஸ் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.