• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
அபராஜிதன்

மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

Recommended Posts

மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?

2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க?

3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?

4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?

5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?

6) க்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு ப்ரச்னைன்னா ஏன் இருக்க மாட்டீங்குது?

7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?

😎 ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க?

9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க? அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?

10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா?

#மீள் 

பரிசல் கிருஸ்ணா

Share this post


Link to post
Share on other sites
On 6/23/2019 at 1:52 PM, அபராஜிதன் said:

5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?

நாங்க டெக்னீக் பற்றி தான் பாக்கிறம்.
நீங்களோ சதி திட்டம் தீட்டுவதை எல்லோ பாக்கிறீங்க!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஒரு நாட்டுக்குள் இருக்கும் சிங்கள பெண்களையே ஏற்க மறுக்கும் சமூகம் எமது சமூகம்.ஏனெனில் சிங்களத்தியள் மோசமானவளவையள் என்றொரு கொள்கை எம்மிடம் உண்டு.தமிழ் நாட்டு திரைப்படங்களில் கூட கதாநாயகிக்கு பிற மாநிலத்தவர்தான் தேவைப்படுகின்றனர்.  அவ்வளவிற்கு எமது கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டது. அரசர் காலத்தில் காதலில் தகுதிக்கேற்ப மூழ்கியிருந்தார்கள் தான். ஆனால் பெண்களை எந்த மட்டத்தில் வைத்திருந்தார்கள்?
  • ரத்த மகுடம் 91 ஐக் காணவேயில்லை குங்குமம் தொடர்களில். வேறு யாராவது முயன்று கண்டுபிடித்தால் போட்டுவிடுக. ரத்த மகுடம்-92 பிரமாண்டமான சரித்திரத் தொடர் நெகிழ்ந்த நரம்புகள் சட்டென பாறையைப் போல் கடினமாகின.‘‘என்ன கேட்டீர்கள்..?’’ கரிகாலனை உதறியபடியே சிவகாமி நாசி துடிக்கக் கேட்டாள். உதறியவளை இழுத்து அணைத்தான் கரிகாலன்: ‘‘ஒரு காத தொலைவில் இருந்தபடி ஒருவர் சுவாசித்தாலும் அந்த ஓசையை உள்வாங்கும் இயல்பு படைத்தவள் நீ என்பது உலகுக்கே தெரியும்... அப்படியிருக்க உன் செவியை வருடிய என் சொற்களின் அர்த்தம் உனக்குப் புரியவில்லையா..?’’ ‘‘இல்லை...’’‘‘நம்பும்படி இல்லையே..?’’‘‘இதுவரை எதைத்தான் நம்பியிருக்கிறீர்கள்..?’’ ‘‘அனைத்தையும் நம்புவதால்தானே சகலத்தையும் நம்பாமல் இருக்கிறேன்!’’ ‘‘இந்த வார்த்தை ஜாலங்கள் என்னிடம் வேண்டாம்...’’ சீறியபடி அவனை விட்டு விலகினாள்: ‘‘முத்துக்கள் உதிர்ந்தாலும் பரவாயில்லை... சொல்லுங்கள்... என்ன கேட்டீர்கள்..?’’‘‘அதங்கோட்டாசான் உயிருடன் இருப்பதை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் தெரிவித்து விட்டாயா என்று கேட்டேன்...’’‘‘இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்..?’’‘‘உன்னிடம் கேட்காமல் வேறு யாரிடம் வினவ முடியும்..?’’ ‘‘உரியவரிடம்...’’‘‘அவரிடம்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்!’’ எரித்து விடுவதுபோல் கரிகாலனைப் பார்த்தாள் சிவகாமி: ‘‘போதும்... விளையாடுவதற்கும் எல்லையிருக்கிறது...’’ ‘‘அந்த எல்லையை வகுத்தது யார் சிவகாமி..?’’‘‘நீங்கள்!’’‘‘நானா..?’’‘‘ஆம்... கணம்தோறும் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறீர்கள். இதோ, இப்பொழுது சாளுக்கிய மன்னரிடம் ஏதோ தகவலைச் சொல்லிவிட்டாயா என்று கேட்டீர்களே... அப்படி!’’ ‘‘இது எல்லையை விரிவாக்கும் செயலா..?’’ ‘‘இல்லையா..? சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்கிறது..?’’ ‘‘அதைச் சொல்லாமல் நீதானே விளையாடிக் கொண்டிருக்கிறாய்!’’‘‘இன்னமும் என்னை நீங்கள் நம்பவில்லை... அப்படித்தானே..?’’ உதட்டைக் கடித்தபடி கேட்ட சிவகாமி, சட்டென திரும்பி நடக்கத் தொடங்கினாள்: ‘‘என் அண்ணன் என்னை நம்புகிறார்... அது போதும்...’’ அவளுடன் இணைந்தபடியே கரிகாலன் நடக்கத் தொடங்கினான்: ‘‘அண்ணனா..? அது யார் சிவகாமி... நான் அவரைச் சந்தித்ததேயில்லையே!’’ நின்ற சிவகாமி தன் காலை உயர்த்தி ஓங்கி தரையை அடித்தாள்: ‘‘பல்லவ இளவரசர் இராஜசிம்மர்தான் என் அண்ணன்... உங்கள் முன்னால்தானே என்னை தன் சகோதரி என்றார்... அதற்குள் மறந்துவிட்டீர்களா..?’’ ‘‘குடிமக்கள் அனைவரையும் தன் உடன் பிறந்தவர்களாக நினைப்பது அவரது வழக்கம்... அப்படி...’’ ‘‘என்னையும் தன் சகோதரியாக ஏற்றுக்கொண்டார்... பூவை புஷ்பம் என்றும் சொல்லலாம்... மலர் என்றும் அழைக்கலாம்... எப்படியிருந்தாலும் அது பூதான்... நான் அவர் சகோதரிதான்... எனவே...’’ ‘‘பல்லவ பிரஜை என்கிறாய்... சாளுக்கிய மன்னருக்கும் உனக்கும் தொடர்பேதும் இல்லை என்கிறாய்... அப்படி...’’ ‘‘...தான்! இப்பொழுது விளங்கிவிட்டதல்லவா..?’’ ‘‘விளங்காததால்தான் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!’’ நேருக்கு நேராக கரிகாலனை உற்றுப் பார்த்தாள் சிவகாமி: ‘‘உங்கள் பிரச்னை என்ன..?’’ ‘‘சிக்கலை அறிவதுதான்...’’‘‘சிக்க வைத்தா..?’’ ‘‘சிக்குகளை அவிழ்த்து..!’’ ‘‘அவிழ்ப்பது போல் தெரியவில்லை...’’ தலையைச் சிலுப்பிக் கொண்டாள் சிவகாமி: ‘‘மேலும் மேலும் முடிச்சிடுபவராகத்தான் இருக்கிறீர்கள்...’’ ‘‘முடிச்சுப் போடுவதே அவிழ்ப்பதற்குத்தான்...’’ ‘‘அதாவது..?’’ ‘‘பொறியை வைப்பதே பிடிக்கத்தான்!’’ ‘‘பிடித்துவிட்டதாகக் கருதுகிறீர்களா..?’’ ‘‘இல்லை என்கிறாயா..?’’ ‘‘பிடிபட்டது அப்பாவி என்கிறேன்!’’ ‘‘எந்த விதத்தில்..?’’ ‘‘எல்லா வகையிலும்!’’ சொல்லும்போதே சிவகாமிக்கு மூச்சு வாங்கியது. எந்தளவுக்கு அவள் உள்ளுக்குள் வெந்து சாம்பலாகிறாள் என்பதை அனலாக வெளிப்பட்ட அவளது சுவாசம் உணர்த்தியது: ‘‘எப்படி வளைத்து வளைத்து நீங்கள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். சாளுக்கிய மன்னருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை... இல்லை... இல்லை... இதுதான் உண்மை..!’’ ‘‘யாருக்கு..?’’ ‘‘என்ன..?’’ ‘‘யாருக்கு உண்மை என்று கேட்டேன்!’’‘‘நபருக்கு நபர் உண்மை மாறுமா..?’’‘‘மாறும்... அதற்கு நாம் இருவருமே உதாரணம்! சிவகாமி... தொடக்கம் முதலே நாம் இருவர் மட்டுமல்ல... நாம் சந்தித்த அனைவருமே - சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர், சாளுக்கிய போர் அமைச்சர் ராமபுண்ய வல்லபர், கடிகை பாலகன், பல்லவ இளவரசர்... என சகலரும் அவரவருக்கான உண்மைகளுடன்தான் நடமாடிக் கொண்டிருக்கிறோம்... அதனாலேயே நம் கதையை பிற்காலத்தில் யார் சொன்னாலும் எழுதினாலும் அதை யார் பார்வையில்... யாரது கண்ணோட்டத்தில் சொல்வது எனத் தடுமாறுவார்கள்... ஏனெனில் பலரது பார்வையில் பலவாறாக கிளை பரப்பும் வல்லமை படைத்தது நம் கதை..!’’ ‘‘நல்ல கதை!’’ இகழ்ச்சியுடன் சொன்ன சிவகாமி நகர முற்பட்டாள்.கரிகாலன் அவளது கரங்களைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்: ‘‘எங்கு செல்கிறாய்..?’’ ‘‘எனக்கான உண்மையைத் தேடி!’’‘‘அதற்கு எனக்கான உண்மையின் வழியேதான் நீ பயணப்பட்டாக வேண்டும்...’’ ‘‘கட்டளையா..?’’‘‘தண்டனை!’’ அழுத்தம்திருத்தமாகச் சொன்ன கரிகாலன், சட்டென சிவகாமியை இழுத்து தன் மார்பில் சாய்த்தான். அவள் சுதாரித்து விலகுவதற்குள் அவள் இதழ்களில் தன் உதட்டைப் பதித்தான்: ‘‘சிவகாமி... கவனி... சற்று நேரத்துக்கு முன் நிலவறையில் ஒரு முதியவரைச் சந்தித்தாயே... ம்... ம்... இளைஞர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தாரே... அவரேதான்... அவர்தான் அதங்கோட்டாசான்! அவர் உயிருடன் இருக்கும் தகவலை... ம்ஹும்... புருவத்தை இப்படி உயர்த்தாதே...’’ என்றபடி தன் ஒரு கரத்தால் அவளது புருவங்களை நீவினான் கரிகாலன்: ‘‘நீ எழுதுவது போலவே எழுதி... அந்த ஓலைக்குழலுக்கு உனது முத்திரையையிட்டு... அதை சாளுக்கிய ஒற்றனிடம் கொடுத்துவிட்டேன்... இந்நேரம் சாளுக்கிய மன்னருக்கு அந்த விவரம் போய்ச் சேர்ந்திருக்கும்!’’ ‘‘எதற்காக இப்படிச் செய்தீர்கள்..?’’ ‘‘உண்மையை நோக்கிப் பயணப்பட... அதாவது... எனக்கான உண்மையை நோக்கி நீ செல்ல!’’ ‘‘மறுத்தால்..?’’‘‘எந்த நோக்கத்துக்காக ‘சிவகாமி’யைப் போல் நீ நாடகமாடிக் கொண்டிருக்கிறாயோ... அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும்..!’’ ‘‘மிரட்டுகிறீர்களா..?’’‘‘சேச்சே... உனக்கு உதவி செய்கிறேன்..!’’ அவள் கன்னத்தை அழுத்தமாகக் கடித்துவிட்டு இமைக்கும் நேரத்தில் கரிகாலன் விலகினான்: ‘‘இன்று இரவு பாண்டிய இளவரசனுக்கு விருந்தளிக்கப் போகிறான் சாளுக்கிய இளவரசன்... அதற்கு உனக்கும் அழைப்பு வரும். மறுக்காமல் செல். தனிமையில் பாண்டிய இளவரசன் உன்னிடம் ஓலை ஒன்றைக் கொடுப்பான்... அதை அப்படியே கொண்டு வந்து என்னிடம் கொடு!’’ சிவகாமியின் கன்னத்தில் தட்டிவிட்டு கரிகாலன் அகன்றான்.வெறித்தபடி எத்தனை கணங்கள் சிவகாமி அங்கு நின்றாளோ... சுயநினைவுக்கு அவள் வந்தபோது கதிரவன் உச்சியில் இருந்தான்.முகமெல்லாம் இறுக மெல்ல அந்த நந்தவனத்தைவிட்டு வெளியே வந்தாள். வணிகர் வீதியைக் கடந்து, தான் தங்கியிருந்த சத்திரத்துக்கு வந்தாள். எதிர்பார்த்ததுபோலவே இரவு விருந்துக்கு அழைப்பு வந்திருந்தது. தலையசைத்துவிட்டு ஸ்நான அறைக்குள் நுழைந்தாள். கதவை இறுகத் தாழிட்டுவிட்டு தன் இடுப்பில் இருந்து ஓலைக்குழல் ஒன்றை எடுத்து முத்திரையை உடைத்தாள். பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த ஓலையை எடுத்துப் படித்தாள்: ‘அதங்கோட்டாசான் உயிருடன் இருக்கிறார்...’ அவளது கையெழுத்தில், அவளைப் போலவே கரிகாலன் எழுதியிருந்தான்! சிவகாமியின் உதட்டில் புன்முறுவல் பூத்தது. தன் இடுப்பில் இருந்த சுருக்குப் பையை எடுத்தாள். அதனுள் இருந்த சிக்கிமுக்கிக் கல்லை எடுத்து உரசி, நெருப்பை வரவழைத்தாள். அந்த ஓலையைப் பஸ்பமாக்கினாள்.பின்னர் அலுப்புத்தீர வாசனைப் பொடிகளைப் பூசியபடி குளித்து முடித்தாள். அறுசுவை உணவு காத்திருந்தது. சாப்பிட்டாள். அறைக்குச் சென்று படுத்தாள்.உறக்கம் கலைந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது.தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே வந்தவள், சாளுக்கிய இளவரசர் தங்கியிருந்த மாளிகையை நோக்கி நிதானமாக நடந்தாள்.வாசலில் காத்திருந்த ராமபுண்ய வல்லபர், பார்வையாலேயே அவளை வரவேற்று அழைத்துச் சென்றார். மாளிகை நந்தவனத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது. சற்றுத் தள்ளி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருந்த பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரன், எழுந்து நின்று சிவகாமியை வணங்கினான். பதிலுக்கு வணக்கம் தெரிவிக்காமல் சிலையென நின்றாள் சிவகாமி. அவள் பார்வை பாண்டிய இளவரசனின் மீது படியவில்லை. பதிலாக கோச்சடையன் இரணதீரனுக்குப் பக்கத்தில், பாண்டிய இளவரசனின் தோழனாக நின்றிருந்த வாலிபனின் மீது படிந்தது. அந்த வாலிபன், கரிகாலன்தான்!   (தொடரும்) செய்தி: கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம்  
  • வெளிநாடுகளிலை விற்கிற ரின்/பக்கற் சாப்பாடுகள் இன்னும் மோசம். 
  • ரத்த மகுடம்-90 பிரமாண்டமான சரித்திரத் தொடர் சிந்தனை தடைப்பட தலையை மட்டும் திருப்பினார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.‘‘என்ன..?’’ என்பதற்கு அறிகுறியாக அவரது புருவங்கள் உயர்ந்தன.‘‘நமது போர் அமைச்சர் ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது...’’ காவலர் தலைவன் பயபக்தியுடன் தெரிவித்தான். அவன் கையில் எந்த ஓலையும் இல்லாததை விக்கிரமாதித்தர் கண்டுகொண்டார்: ‘‘வரச் சொல்...’’ உத்தரவுக்கு அடிபணிந்து அவரை வணங்கிவிட்டு வெளியேறினான் காவலர் தலைவன். மீண்டும் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைத் திருப்பினார் சாளுக்கிய மன்னர். அவரால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. நாட்டைப் பறிகொடுத்த பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மன், இன்னமும் மறைந்து திரிகிறார். பல்லவ நாட்டை மீட்பதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர் இறங்கவில்லை.அப்படியும் சொல்ல முடியாது.   படைகளை அவர் திரட்டி வருவதாக ஒற்றர்கள் தெரிவிக்கிறார்கள். ஆங்காங்கே பாசறைகள் அமைக்கப்பட்டும் வருகின்றன. சாளுக்கிய நாட்டைத் தாக்கவும் தன் படையின் ஒரு பிரிவை அனுப்பினார். அப்போரில் பல்லவ மன்னர் தோல்வியும் அடைந்தார். இவை அனைத்துமே சாளுக்கிய மன்னருக்கு விளையாட்டாகத் தெரிந்தது. பல்லவ மன்னரின் மனதில் என்னதான் இருக்கிறது..? எதற்காக இப்படி போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்..? இந்த வினாதான் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரைக் குடைந்துகொண்டிருந்தது. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. குறிப்பாக சாளுக்கியர்களான தங்களுக்கு. அது என்ன..? பல்லவர்களின் உபதளபதியும் சோழ இளவரசனுமான கரிகாலன் எதற்காக காஞ்சிக்கு வந்தான்... இப்பொழுது எதற்காக மதுரைக்கு சென்றிருக்கிறான்..? காஞ்சியில் இருந்தபோது கடிகைக்கு ஏன் சென்றான்..? அர்த்த சாஸ்திர ஓலைச்சுவடியில் சிவகாமி குறித்த மர்மம் இருப்பதாகச் சொல்லி அங்கு அவனை அனுப்பியதும், தான்தான்... ஆனால், உண்மையில் தன் வார்த்தைக்கு கட்டுப்பட்டுதான் கடிகைக்கு கரிகாலன் சென்றானா..? அர்த்த சாஸ்திர சுவடிகளை அவன் எடுத்ததாக வேளிர்களின் தலைவனாக தன்னால் ‘முடி’சூட்டப்பட்ட பாலகன் சொல்கிறான்... ஆனால், எடுத்த சுவடிகளை இப்பொழுதுவரை அவன் படிக்கவேயில்லை என்கிறாள் சிவகாமி. என்ன நடக்கிறது... பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனும் கரிகாலனும் என்ன நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்..? என்ன சூது இதற்குள் புதைந்திருக்கிறது..? தொடரும் வினாக்களின் அடிவேரைக் காண சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் முற்பட்டபடி திரும்பினார். அதேநேரம் ராமபுண்ய வல்லபரிடம் இருந்து செய்தியைத் தாங்கியபடி மதுரையில் இருந்து வந்த வீரனும் அவரது அந்தரங்க அறைக்குள் நுழைந்தான். அவரை வணங்கினான்.‘‘செய்தி என்ன..?’’ ‘‘பாண்டிய மன்னரை விரைவில் நம் பக்கம் இழுத்துவிடலாம் என போர் அமைச்சர் ராமபுண்ய வல்லபர் தெரிவித்தார்...’’ ‘‘அதாவது இன்னமும் பாண்டிய மன்னர் பிடி கொடுக்கவில்லை... அப்படித்தானே..?’’ ‘‘அப்படியில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தங்களிடம் அவர் தெரிவிக்கச் சொன்னார்... நம் இளவரசர் விநயாதித்தர் தன் கடமையை சரிவர ஆற்றியிருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி தங்களை வந்தடையும் என்றும் தெரிவித்தார்...’’ ‘‘நல்லது... இப்போதைய என் மனநிலைக்கு இச்செய்தி ஆறுதல் அளிக்கிறது...’’ ‘‘தங்களை உற்சாகப்படுத்தும் செய்தியும் இருக்கிறது மன்னா...’’ விக்கிரமாதித்தர் கேள்வியுடன் அவனைப் பார்த்தார். கணத்தில் அவர் முகம் பிரகாசமடைந்தது. உதட்டிலும் புன்முறுவல் பூத்தது. ‘‘சிவகாமி என்ன சொல்லி அனுப்பினாள்..?’’ வீரன் மீண்டும் அவரை வணங்கினான். ‘‘அதங்கோட்டாசான் இருக்கும் இடத்தை, தான் அறிந்துவிட்டதாக உங்களிடம் நம் ஒற்றர் படைத்தலைவி தெரிவிக்கச் சொன்னார்!’’ அதுவரை பிடிபடாமல் இருந்த ஆழம், துல்லியமாகத் தெரியத் தொடங்கியதும் வியப்பின் எல்லைக்குச் சென்றார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர். ‘‘அதங்கோட்டாசான்... அதங்கோட்டாசான்...’’ முணுமுணுத்தார். ‘‘இன்னமுமா அவர் உயிருடன் இருக்கிறார்..?’’ ‘‘இல்லை மன்னா... அதங்கோட்டாசான் மறைந்து பல ஆண்டுகள் ஆகின்றன என்ற பேச்சும் அடிபடுகிறது...’’ நிதானமாகச் சொன்னார் பாண்டிய அமைச்சர். ‘‘இதை நீங்கள் நம்புகிறீர்களா அமைச்சரே..?’’ மாறாத அமைதி யுடன் கேட்டார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர். ‘‘அடிபடும் பேச்சைக் குறிப்பிட்டேன் மன்னா...’’ ‘‘வதந்திகளின் ஊற்றே பேச்சுதானே..?’’ ‘‘உண்மையின் பிறப்பிடமும் அதுதானே மன்னா...’’ வாய்விட்டுச் சிரித்தார் அரிகேசரி மாறவர்மர்:  ‘‘அதாவது அதங்கோட்டாசான் மறைந்துவிட்டார் என்கிறீர்கள்...’’ ‘‘அப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்கிறேன் மன்னா...’’ ‘‘எனில், வேளிர்களின் தலைவனாக சாளுக்கிய மன்னரால் ‘முடி’சூட்டப்பட்ட பாலகன், தனது ரகசியப் படைக்கு அதங்கோட்டாசான்தான் வாள் பயிற்சி அளித்து வருகிறார் என்கிறானே..?’’ ‘‘அதை முழுக்க நம்ப வேண்டாம் என்கிறேன் மன்னா...’’ ‘‘அவன் சொல்வதையா..?’’ ‘‘அவனையே!’’ நிதானத்தைக் கைவிடாமல் அதேநேரம் அழுத்தமாகச் சொன்னார் பாண்டிய அமைச்சர். பழுத்த பழமாக தன் வயதை ஒத்த அந்த முதியவரை உற்றுப் பார்த்தார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்: ‘‘சிவகாமி யார்... அவள் எந்தப் பக்கம் இருக்கிறாள்... என்ற குழப்பம் சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நிலவுவதுபோல் பாண்டியர்கள் பக்கமும் ஒரு நிலையாமை சர்ச்சை என்னும் பெயரில் உலாவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா அமைச்சரே..?’’ ‘‘அந்தப் பார்வையுடனும் அணுகுவது நல்லது என்கிறேன் மன்னா...’’ ‘‘சற்று விளக்க முடியுமா..?’’ ‘‘அறிந்த தங்களுக்கு அடியேன் அறிவிக்க வேண்டுமா..? சோதிக்காதீர்கள் மன்னா... வேளிர்கள் என எவருமே இன்று இல்லை என்பதும் அக்குலம் பாண்டிய பல்லவ அரச குலத்துடனும் இரு நாட்டு படைகளுடனும் இரண்டறக் கலந்துவிட்டன என்பதும் தங்களுக்குத் தெரியாதா..? என்றோ எப்பொழுதோ பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேளிர் இனம் மீண்டும் இன்று இப்பொழுது உயிர்பெற்று எழும் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது..?’’ ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அதை நம்புகிறாரே..?’’ ‘‘அவரை அப்படி நம்ப வைத்தவர்கள் பல்லவர்களாகவும் இருக்கலாம் அல்லவா..?’’ ‘‘அமைச்சரே..!’’ ‘‘மன்னா! உங்கள் ஊகம் சரி! கரிகாலனால் ஏற்பாடு செய்யப்பட்டவன்தான் அந்த பாலகன்! கரிகாலன் சொல்படியே சாளுக்கிய மன்னரைச் சந்தித்து வேளிர்களின் தலைவனாக அவன் மாறியிருக்கிறான்! காஞ்சியை பல்லவர்கள் ஆண்டபோது அங்குள்ள கடிகையில் அப்பாலகன் பயிலவேயில்லை என்பதும், சாளுக்கியர்களின் வசம் காஞ்சி சென்றபிறகே அந்தப் பாலகன் கடிகையில் மாணவனாக சேர்ந்தான் என்பதும் உலகம் அறிந்த செய்தியல்லவா!’’ ‘‘அந்த பாலகனை கடிகையில் சேர்த்தது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்தான் என்பதும் உண்மைதானே..? அமைச்சரே... பல்லவர்களையும் பாண்டியர்களையும் வீழ்த்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆள சாளுக்கியர்கள் நினைக்கிறார்கள். போலவே பல்லவர்களும் பாண்டியர்களான நாமும் நினைக்கிறோம். இதற்காக மூவருமே மூவருடனும் நட்பும் பாராட்டுகிறோம்... பகைமையையும் வெளிப்படுத்துகிறோம்...’’ சட்டென பாண்டிய அமைச்சர் தன் மன்னரை வணங்கினார்: ‘‘அடியேன் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் மன்னா..?’’ ‘‘மதுரை காவலைப் பலப்படுத்துங்கள். நகரை விட்டு வெளியேறும் மக்கள் அனைவரும் அத்தாட்சியை வாயிலில் காண்பிக்க வேண்டும் என வீரர்களிடம் சொல்லுங்கள்...’’ ‘‘எதற்காக மன்னா..?’’ ‘‘நமக்கே தெரியாமல் பல்லவப் படை நம் மண்ணில் பயிற்சி எடுத்து வருகிறது அமைச்சரே! அதங்கோட்டாசான் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்!’’ ‘‘மன்னா...’’ ‘‘அதங்கோட்டாசான் இறக்கவில்லை! பிறப்பில் இருந்தே அவரை அறிந்தவன் நான்... அப்படியிருக்க அவர் மறைவு எனக்குத் தெரியாமலா போய்விடும்?!’’   கண்விழித்த சிவகாமி, நிலவறையில், தான் இருப்பதை உணர்ந்தாள். மயக்கத்தின் பிடியில் சில நாழிகை, தான் இருந்ததை உணர அவளுக்கு அதிக கணம் பிடிக்கவில்லை. சுவர் எழுந்து தன்னை இழுத்த நபர் கண்டிப்பாக கரிகாலன் இல்லை என்பதை தொடுகையில் இருந்தே அறிந்துவிட்ட அவள், தன்னைக் காப்பாற்றியதும் மயக்கமடைய வைத்து தன்னை உறங்க வைத்ததும் யாராக இருக்கும் என யோசித்தபடியே சுற்றிலும் பார்த்தாள்.   கண்ட காட்சியில் அவள் நயனங்கள் விரிந்தன.அகண்ட மீசை கொண்ட முதியவர் ஒருவரின் மேற்பார்வையில் கட்டிளம் காளைகள் வாள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்!   (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம்     http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16506&id1=6&issue=20200131