Jump to content

யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான் ; விக்னேஸ்வரனையும் சந்தித்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான் ; விக்னேஸ்வரனையும் சந்தித்தார்

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்.

thumbnail?provider=spo&inputFormat=jpg&c

குறித்த சந்திப்பின் போது பத்தரிகையாளர் எவரும் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், சந்திப்பினை முடித்தவிட்டு இருதரப்பினரும் பத்திரிகையாளரை சந்திருந்தனர். இச்சந்திப்பு குறித்து  ஆறுமுகன் தொண்டமான் கூறுகையில்,

நான் வந்தது யாழில் உள்ள ஆலயங்களை தரிசிப்பதற்கே. அந்தவகையில் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருக்கிறார் அந்தவகையில் மரியாதையின் நிமித்தம் வந்து பார்த்தேன். அது தானே தமிழ்ப்பண்பாடு.  

நீங்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சேர்ந்து புதிய கூட்டணி ஒன்று அமைப்பதாக தகவல் வருகின்றதே எனக் பத்திரிகையாளர்கள் கேட்டபோது,  என்னை உங்கள் கூட்டணயில் சேர்த்துக் கொள்கிறீர்களான என பத்தரியைாளரைப் பார்த்து கேட்டார். அரசியல் சம்பந்தமாக ஏதும் பேசப்படவில்லையா எனக் கேட்டகபோது நான் மலை போட்டிருக்கிறன் அதைப்பற்றி பேசுவோம் என்றார். 

மேலும், கல்முனை பிரதேச செயலகம் பற்றிய உங்கள் கருத்து என்ன எனக் கேட்டபோது,

நான் இன்னும் அதனை முழுமையாகப் பார்க்கவில்லை. அதைப்பற்றி கேட்டுச் சொல்லுமாறு செந்திலிடம் கூறியிருக்கிறேன். அதனை அறிந்து கொண்டு கட்சியின் நிலைப்பாட்டினை சொல்கிறேன். 

மேலும் தோட்டத் தொழிலார்களுக்கு வழங்கிய 50 ரூபா ஊதிய உயர் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறுகின்றார்கள் அது பற்றிய உங்கள் கருத்து என்ன எனக் கேட்டபோது, அதனை நான் கொடுப்பதாகச் சொல்ல வில்லை. கொடுப்போம் எனக் கூறியவரிடும் தான் சென்று கேட்க வேண்டும். 

மக்கள் உங்களிடம் முறைப்பாடு செய்யவில்லையா எனக் கேட்டபோது, இல்லை என்னிடம் கேட்கவில்லை. நான் வாங்கிக் கொடுத்த சம்பளம் நியாயமானது போதும் என மக்கள் சொல்கிறார்கள். இந்தநிலையில் யார் யார் ஆசை வார்த்தை கூறினார்களோ அவர்களைத் தான் போய்க் கேட்க வேண்டும் என்றார்.

இந்தச் சந்திப்பு தொடா்பகா முன்னாள் முதல மைச்சர் விக்னேஸ்வரன் கூறும்போது,

இவர் எனக்கு மிகவும் அறிமுகமானவர் பழக்கமானவர். இவருடைய அப்பப்பாவையும் எனக்கு தெரியும். அந்த வகையிலேயே யாழிற்கு வரும் போதெல்லாம் என்னை சந்தித்துவிட்டுப்போவார். 

இருந்போதும், வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யார் யார் வருவார்கள் என்றும், எமது செயற்பாடுகள் பற்றியும், சிறு சிறு விடயங்களைப் பற்றிப்  பேசினோமே தவிர வேறெதனையும் பேசவில்லை என்றார். 

 

https://www.virakesari.lk/article/58879

Link to comment
Share on other sites

"மக்கள் உங்களிடம் முறைப்பாடு செய்யவில்லையா எனக் கேட்டபோது, இல்லை என்னிடம் கேட்கவில்லை. நான் வாங்கிக் கொடுத்த சம்பளம் நியாயமானது போதும் என மக்கள் சொல்கிறார்கள். இந்தநிலையில் யார் யார் ஆசை வார்த்தை கூறினார்களோ அவர்களைத் தான் போய்க் கேட்க வேண்டும் என்றார்" 

அரசியல்வாதி என்றால் கூட இப்படி பொய் கூறுவதற்கும் ஒரு முட்டாள் தனமான துணிவு வேண்டும், அதுவும் மாலை போட்டபடி.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

மகிந்த அணியிடம் இருந்து தூது?

நானும் இதைத்தான் நினைத்தேன்

Link to comment
Share on other sites

16 hours ago, கிருபன் said:

மேலும், கல்முனை பிரதேச செயலகம் பற்றிய உங்கள் கருத்து என்ன எனக் கேட்டபோது,

நான் இன்னும் அதனை முழுமையாகப் பார்க்கவில்லை. அதைப்பற்றி கேட்டுச் சொல்லுமாறு செந்திலிடம் கூறியிருக்கிறேன். அதனை அறிந்து கொண்டு கட்சியின் நிலைப்பாட்டினை சொல்கிறேன். 

மாலை போட்டால் பொதுநல அரசியல் செய்யகூடானு பத்திரிகைகாரங்களுக்கு தெரியல.
(இவர் எப்பவும் பொதுநல அரசியல் செய்றதில்ல என்கிறது வேற விஷயம்)

16 hours ago, கிருபன் said:

வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யார் யார் வருவார்கள் என்றும், எமது செயற்பாடுகள் பற்றியும், சிறு சிறு விடயங்களைப் பற்றிப்  பேசினோமே தவிர வேறெதனையும் பேசவில்லை என்றார். 

இவருக்கு உண்மையை மறைக்கிற ராஜதந்திரம் 🤣 தெரியா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.