Jump to content

முஸ்லிம் அமைச்­சர்கள் பணத்துக்காக மீண்டும் பத­வி­யேற்­றமை வெட்­கப்பட வேண்டியது – ஜே.வி.பி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Sunil-Handunnetti-2.jpg

முஸ்லிம் அமைச்­சர்கள் பணத்துக்காக மீண்டும் பத­வி­யேற்­றமை வெட்­கப்பட வேண்டியது – ஜே.வி.பி.

முஸ்லிம் அமைச்சர்கள் தாமாக பதவி வில­கி­ய­மையும், மீண்டும் பதவியை ஏற்றுக்கொண்­ட­மையும் பணத்­திற்­கா­கவே என்­பது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும் என நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் நல­னுக்­காக அன்றி இன்று நாட்டில் பணத்­திற்­காக அர­சி­யலில் ஈடு­படும் அர­சி­யல்­வா­தி­களே அதி­க­மாக இருக்­கின்­றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­களில் இருவர் மீண்டும் பத­வி­யேற்றுக் கொண்­டமை குறித்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், “போதைப் பொருள் வியா­பாரம் செய்­ப­வர்­களோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­ப­வர்­களோ ஜே.வி.பி.யில் இல்லை. அவை ஐக்­கிய தேசிய கட்­சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும், பொது­ஜன முன்­ன­ணி­யிற்கும் உரித்­தா­னவை.

இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களில் அகப்படு­ப­வர்­களும் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களும் இந்தக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களே. ஆனால், அவர்கள் எமக்கு சேறு பூசு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர்.

இவ்­வா­றான தலை­வர்­களை தெரிவுசெய்த மக்­களும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டின் ஜன­நா­ய­கத்தை கட்­சி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­பது தவ­றாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் பொது­ஜன முன்­னணி என்று வெவ்­வேறு கட்­சி­க­ளாக இருந்­தாலும் இவர்கள் அனை­வரும் ஊழல் மோசடி செய்­வதில் ஒரே அணி­யா­கவே செயற்­ப­டு­கின்­றனர்.

இர­க­சிய ஒப்­பந்­தங்கள் மூலம் நாட்டை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பதே இவர்கள் அனை­வ­ரி­னதும் நோக்­க­மாகும். இவை மாத்­தி­ர­மன்றி, இன­வாத அர­சி­ய­லிலும் ஈடு­ப­டு­கின்­றனர். சிலர் பணத்­திற்­காக அர­சியல் செய்­கின்­றனர்.

அமைச்சு பத­விகள் கூட பணத்­திற்­கா­கவே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இன்று தானாக பதவி விலகுவதும், மீண்டும் பதவி ஏற்றுக் கொள்வதும் பணத்திற்காக என்பதே உண்மையாகும். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்” என்று தெரிவித்தார்.

http://athavannews.com/முஸ்லிம்-அமைச்சர்கள்-பண/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.