Sign in to follow this  
கிருபன்

ஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்

Recommended Posts

ஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஈரா­னுக்கு எதி­ராக வான் தாக்­கு­தல்­க­ளை­ ந­டத்­து­வ­தற்­கான திட்­டத்தை கைவிட்­டி­ருந்த நிலையில்  அந்­நாட்டு ஆயுத  முறை­மைகள் மீது இணைய­தளம் மூல­மான சைபர் தாக்­கு­த­லொன்றை   ஆரம்­பித்­துள்ளதாக  அமெ­ரிக் கா­வி­லி­ருந்து நேற்று ஞாயிற்­றுக்­கிழமை  வெளியா­கி­யுள்ள அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

cyber_attack.jpg

அந்த சைபர் தாக்­கு­த­லா­னது  ஈரானின் ஏவு­கணை மற்றும்  ஏவு­க­ணையை ஏவும்  உப­க­ர­ணங்கள் என்­ப­வற்றைக் கட்­டுப்­ப­டுத்தும் கணினி முறை­மை­களை  செய­லி­ழக்க வைக்கும் வகையில் மேற்கொள்­ளப்­பட்­ட­தாக  வாஷிங்டன் போஸ்ட் பத்­திரிகை செய்தி வெளியிட்­டுள்­ளது.

எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள்  மீது  ஈரானால் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் தாக்­குதல் மற்றும்  அந்­நாட்டால் அமெ­ரிக்க  ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­டமை என்­ப­வற்­றுக்கு பதி­லடி நட­வ­டிக்­கை­யா­கவே இந்த சைபர் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக  நியூயோர்க் டைம்ஸ் ஊடகம் தெரி­விக்­கி­றது. 

அமெ­ரிக்க ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­டமை  ஈரா­னிய எல்­லை­களை மீறு­வது தொடர்பில் அமெ­ரிக்­கா­வுக்­கான ஒரு சிவப்பு எச்­சரிக்கை என  ஈரா­னிய இஸ்­லா­மிய புரட்­சி­கர காவல் படை கூறுகிறது.

அந்த ஆளற்ற விமா­னத்துக்கு அருகில்  35 பேர் வரை­யா­னோரை  ஏற்­றிச் செல்லக் கூடிய இரா­ணுவ விமா­ன­மொன்றும் பறந்­த­தா­கவும் அதனையும் தாம் சுட்டு வீழ்த்­தி­யி­ருக்க  முடியும் எனவும் ஆனால் தாம் அதனைச் செய்­ய­வில்லை  எனவும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் உயர் மட்ட அதிகாரியான அமீர் அலி  ஹஜிஸ்டெல்லாஹ் குறிப்பிட் டிருந்தார். 

 

 

https://www.virakesari.lk/article/58934

Share this post


Link to post
Share on other sites

கொஞ்ச காலத்துக்கு முன்புதான் stuxnet virus மூலம் ஈரானின் அணு உலை போன்றவற்றை சல்லடை போட்டவை அதே போல் தாக்குதல் மீண்டும் நடத்தபடாது என்று ஈரான் சும்மா இருந்து இருக்காது .

Share this post


Link to post
Share on other sites

இன்னுமொரு டிறோனும் (அமெரிக்க) சுட்டு வீழ்த்தப்படும் என ஈரானின் அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நீதிக் கட்டமைப்பு பாதுகாக்கப்படும் – தலதா அத்துகோரள     சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார். சட்டவிரோத போதைப் பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். சட்டவிரோதமான போதைப் பொருட்களை நாட்டிற்குக் கொண்டு வருவதை முற்றாக இல்லாமல் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சில அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பின்னிற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இரத்தினபுரி மாவட்டத்தின் சமூக சேவையாளர்கள் 120 பேருக்கு சமாதான நீதவான் நியமனம் வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சமாதான நீதவான்களின் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தலத்தா அத்துகோரள குறிப்பிட்டார் http://www.dailyceylon.com/188149/
  • இலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன்     இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டீ டுவென்டி தொடரில் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு ஒய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த டீ டுவென்டி தொடரின் அணித்தலைவராக டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை கேன் வில்லியம்ஸனுடன் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்டுக்கும் டீ டுவென்ட்டி தொடரில் ஒய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கைக்கெதிரான நியூசிலாந்து டீ டுவென்டி அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/188138/
  • மதம் பிடித்த எல்லோருமே அதைத்தான்  செய்தார்கள். சம்பந்தருடன் வாதில்  தோற்ற 8000 சமணர்களை பாண்டிய சைவ மன்னன் கழுவில் ஏற்றி படுகொலை செய்ததைப்போல. ஆனாலும் ஓரு நிலைக்கப்பால் மதத்தை அவர்கள் முழுமையாக நம்பாமல் அதை சம்பிரதாயத்திற்காக மட்டும் கைக்கொண்டனர். தமது மூளையை பாவித்து முன்னேறினர்    பிராமணர்களால்  ஏமாற்றப்பட்ட தமிழ் மன்னரகள் தம்மை பாதுகாக்க கோட்டைகளை கட்டாமல் பிராமணர்கள் உழைக்காமல் சாப்பிட கோவில்களையும் மடங்களையும் கட்டி ஏமாந்த சோணகிரிகளாக அனைத்தையும் இழந்ததுடன் அவர்களின் சந்ததிதியும் அடிமையானது தான் கண்ட மிச்சம்.  
  • மஹேஷ் சேனாநாயக்கவுக்கு பதவி உயர்வு   ஓய்வுபெற்ற இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜெனராலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/188143/
  • கோவில்களை கட்டியவர்கள் பல தேசங்களை ஆண்ட வரலாறும் உள்ளது. வெள்ளையர்கள் அடுத்தவன் நாட்டை சுரண்டி வாழ்ந்தான்/வாழ்கிறான்.  போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் இலங்கையில் மதத்தை பரப்பி, தேவாலயங்களையும் அமைத்தது சிலருக்கு தெரிந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள். சிங்களவனும் விகாரைகளை கட்டி எம்மை ஆக்கிரமிக்கிறான். ஆனாலும் இந்துக்களை போட்டு தாக்குவோம்.