Sign in to follow this  
ampanai

அது என்ன டேட்டா அனலிடிக்ஸ்?

Recommended Posts

Data Analytics / அது என்ன டேட்டா அனலிடிக்ஸ்?
டேட்டா என்றாலே நம் அனைவர்க்கும் நினைவுக்கு வருவது கஸ்டமர் முகவரி, மொபைல் நம்பர் போன்றவைதான். ஆனால், டேட்டா அனலிடிக்ஸ் என்பது அணுவைத் துளைத்து புரோட்டான், நியூட்ரானை துல்லியமாக அளவிடுவதுபோல நம் மொபைலில் நாம் எடுக்கும் ஒரு புகைப்படத்தை வைத்து, அது எடுக்கப்பட்ட இடம், அதன் அட்சரேகை, தீர்க்கரேகை விவரங்கள், அந்த இடத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் அவை அளிக்கும் சலுகைகள் என்று அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். நாம் முகநூல் பார்க்கும்போது ``உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்" என்று மற்றவர்களை நமக்குக் காட்டுமே! அதுவும் டேட்டா அனலிடிக்ஸின் அடிப்படையில் தான். மொத்தத்தில் இதுவும் ஒரு செயற்கை நுண்ணறிவுதான்.

 

 

விரிவடைந்து வரும் ஐ.டி துறையில், டேட்டா சயன்ஸ், மெஷின் லேர்னிங் துறையில் 50,000 வேலைவாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு தேடுவோர் எண்ணிக்கை, காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் போன்றவற்றின் மூலம் இது கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டேட்டா சயன்டிஸ்ட் பணிக்கான தேவை கடந்த 2017-ம் ஆண்டில் உச்சத்தில் இருந்துள்ளது. 

இணையம் அறிமுகமான காலந்தொட்டே புதுப்புது துறைகளும், அவற்றுக்கான வேலைவாய்ப்புகளும் வளர்ந்துவருகின்றன. இணையத்தின் அடுத்த பரிமாண வளர்ச்சியாக சமூக வலைதளங்கள் அதிகரித்துவருவதால், உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான தகவல்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. இந்தத் தகவல்களைத் திரட்டி, அதிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்கள், ஆய்வுகளை நடத்த டேட்டா சயின்ஸ் உதவுகிறது. உலக அளவில் டேட்டா சயின்ஸ், மெஷின் லேர்னிங் துறைகளில் 12% வேலைவாய்ப்புகளை இந்தியா நிரப்புகிறது.

வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமர்ஸ், ஹெல்த்கேர் மற்றும் மீடியா துறைகளில் டேட்டா சயன்ஸ் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் பணிகளுக்கான வாய்ப்புகள் மிகுதியாக இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த 2017-ம் ஆண்டில், வங்கிகள் மற்றும் நிதித்துறைகளில் மட்டும் டேட்டா சயன்டிஸ்ட் மற்றும் அனலிஸ்ட் பணிகளுக்கான தேவை 44% இருந்தது. வரும் 2020-ம் ஆண்டுக்குள் 39,000 அனலிடிக்ஸ் பணியிடங்கள், சைபர் செக்யூரிட்டி துறையில் 5,000 பணியிடங்கள், ஹெல்த்கேர் துறையில் 15,000 பணியிடங்கள் உருவாகக்கூடும் என்றும் தெரியவருகிறது. எனவே இவற்றை கணக்கில்கொண்டு அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்வது வேலைதேடுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் விஜய் பிரவீன் மகாராஜன்.  
தமிழனுக்கு பெருமை சேர்த்த, உங்களுக்கு பாராட்டுக்கள். 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அம்பனை!

இப் பதிவின் மூலத்தை / இணைப்பை குறிப்பிட மறக்க வேண்டாம். சுய ஆக்கமெனில் அதனை குறிப்பிடுங்கள். 

நன்றி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஜெய்ஷங்கரின் வருகை: ’அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது’ -எம்.றொசாந்த் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிநாட்டமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது என்றே தான் கருதுவதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  “இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து சென்றிருப்பது குறித்தும் இந்த சந்திப்பின் பின்னர் கோட்டாபய இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் உங்களின் கருத்து என்ன?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டெனவும் அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறதெனவும் தெரிவித்தார். அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளதெனத் தெரிவித்த அவர், அதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் ஆலோசனைகளை இந்தியா கொடுக்கும் என்று தான் ஆழமாக நம்புவதாகவும் கூறினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது தனது எதிர்பார்ப்பெனத் தெரிவித்த அவர், இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பெனவும் கூறினார். “ஏற்படுத்தப்படும் எந்த ஒரு தீர்வும் நிலையானதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்கள் தமது பூர்வீகப் பகுதிகளில் தமது பாரம்பரியம், அடையாளம் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றைத் தாங்களே நிர்வகிக்கும் வகையில் காணி மற்றும் பொருளாதார விடயங்களில் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் தீர்வு அமையவேண்டும்” என்றார். “தனி ஒரு மதத்துக்கு முன்னுரிமையையும் சிறப்பு சலுகையையுங் கொடுப்பது எந்தளவுக்கு ஏனைய சமூகங்களின் மனித உரிமைகள் மற்றும் கலாசாரங்களைப் பாதிக்கும் என்பவை எல்லாம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். “ஆகவே, இறுதி தீர்வு  தொடர்பில் எல்லா தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற வழி வகுப்பப்பட வேண்டும். ஐந்து கட்சிகளும் தற்போதும் 13 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அறிவித்தால் எம்முள் ஒருவர் எமது கருத்தொற்றுமையை புதிய அரசாங்கத்திடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தலாம்” எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜயஷஙகரன-வரக-அரசயல-ரதயல-மகவம-மககயமனத/71-241312
    • “விலைதான் ரொம்ப ரொம்ப  அதிகம். வெள்ளைகளுக்கும் விலை அதிகமே” பொருட்கள் தரமாக இருந்தால் ஓரளவிற்கு விலையை கொடுக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதுமட்டுமல்ல, சுரேஷ் அவர்களுடன் கதைத்த பொழுது.. சிரட்டைகளை கூட பணம் கொடுத்தே வாங்கி இந்த கைவினைப்பொருட்களை தயாரிப்பதாக கூறினார். அத்துடன்.. வேலை செய்யபவர்களுக்கான் சம்பளம், வங்கிக்கடன், மற்றும் இயந்திரங்களைப் பாராமரிப்பதற்கான செலவுகள் என பல்வேறு செலவுகளையும் சமாளிக்க விலையை கொஞ்சம் அதிகமாக வைத்திருக்கலாம். அத்தோடு இவர்களை ஊக்குவிக்க வேண்டுமானால் விலையை பார்க்காமல் வாங்குவது ஒன்று. மற்றவர்களுக்கு இவர்களைப்பற்றி விளம்பரம் செய்வது இரண்டாவது.  லக்சலவின் தரம் இதற்கு இப்பொழுது வரமாட்டாது ஆனால் இது எங்களில் ஒருவரது முயற்சி என்பதால் ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
    • இலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம். வரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…? -தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –
    • தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது. கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக புதுடில்லியில் இன்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.  தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானம் மற்றும் கன்னியத்துடனும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங்கை ஜனாதிபதியிடம் ஜெய்ஷங்கர் பேச்சுவார்த்தையின் போது தெரியப்படுத்தினார் என்று கூறிய பேச்சாளர் குமார், இனத்துவ அடையாள பாகுபாடு இன்றி சகல இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் இருப்பேன் என்று கோத்தாபய ராஜபக்ஷ ஜெய்ஷங்கரிடம் கூறியதாகக் குறிப்பிட்டார்.  இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் பேச்சாளர் கூறினார். https://www.virakesari.lk/article/69453      
    • இம்ரான் கான் கோத்தபாயவிற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த போது அவரை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இன்று மகிந்தவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த போது அவரையும் பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.