• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

அது என்ன செயற்கை நுண்ணறிவு ?

Recommended Posts

Artificial intelligence / செயற்கை நுண்ணறிவு 

செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். செயற்கைஅறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு தகுந்ததுபோல் அதுவாகவே செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு ஆகும்.

செயற்கை அறிவாற்றலின் பயன்பாடுகளை அனைத்துத் துறைகளிலுமே காணமுடியும். உதாரணமாக, விவசாயம், தொழில்நுட்பம், கார், ஆட்டோமொபைல், மருத்துவம், பொறியியல், ஆசிரியர்பணி போன்ற அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவாற்றல் முறைகளைப் பயன்படுத்தமுடியும்.

செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய இயந்திரம் அல்லது கணினி. ஆனால், கணினியால் தாமாக எந்த வேலையையும் செய்ய முடியாது என்றல்லவா கேள்விப்பட்டிக்கிறோம்? சரிதான். அதாவது மனிதன் எவ்வாறு சிந்திப்பான், செயல்படுவான் என்பதை நிரலாக்கக் குறியீடுகளை வைத்து கணினி செயல்படும். இது கண்டிப்பாக சுலபமான வேலையில்லை. மனிதன் என்ன நினைக்கிறன் என்று மனிதனுக்கே சரியாக தெரியாத போது அதை கணினிக்கு கற்றுக்கொடுப்பது என்பது சுலபம் இல்லை.

செயற்கை நுண்ணறிவின் சிறந்த பயன்பாடுகளின் பட்டியல் இங்கே-

1. ஸ்மார்ட் கார்கள்

இது கூகிளின் சுய-ஓட்டுநர் கார் திட்டத்தையும் டெஸ்லாவின் "தன்னியக்க" திட்டத்தையும் கொண்டுள்ளது. மேலும். செயற்கை நுண்ணறிவானது முதல் வீடியோ விளையாட்டின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது.

2. மோசடி கண்டறிதல்

மோசடிகளை கண்டறிவதற்கு AI ஐ பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பல மோசடிகள் எப்போதும் வங்கிகளில் நடக்கின்றன, இவற்றில் 90% AI யின் துணை கொண்டே கண்டறியப்படுகிறது.

3. ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவு

ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவில் AI முக்கிய பங்கு வகிக்கிறது. பல வலைத்தளங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடி அரட்டை விருப்பம் உள்ளது. பொருட்கள் ரீதியான தேவையான உதவிகளை இது நமக்கு வழங்குகிறது, பல சந்தர்ப்பங்களில், நமது சந்தேகங்களுக்கு பதிலளிப்பது உள்ளீடு கொடுக்கப்பட்ட ஒரு கணிணி மட்டுமே ஆகும்,

4. இதயத் தாக்குதல்களை தடுத்தல்

இப்போதெல்லாம் மருத்துவத்துறையில் உயிர்களை காப்பாற்ற AI பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத் தரவுகளை நுட்பமாக ஸ்கேன் செய்ய இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், நோயாளிக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இருந்தால் எளிதில் கணிக்க முடியும்.

5. தயாரிப்பு

செயற்கை நுண்ணறிவு உற்பத்தி நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி பொருட்களுக்கு உபயோகிக்கிறோம். மேலும் உற்பத்தி பொருட்களில் மாற்றங்களை AI ஐ பயன்படுத்தப்படுகிறது.

6. பொறியியல் வடிவமைப்பு & இரசாயன பகுப்பாய்வு

இது நிபுணத்துவ வரைபடங்கள் மற்றும் இரசாயனத் தொகுப்புகளை வடிவமைக்கப் பயன்படுகிறது.

செயற்கை நுண்ணறி எங்கே தேவைப்படுகிறது ?

இது நீங்கள் கணினி விளையாட்டுகள் விளையாடியிருந்தால் தெரிந்திருக்கும். நீங்கள் இந்த அசைவை செய்தால் என்ன செய்ய வேண்டும், தாக்கினால் என்ன செய்ய வேண்டும், மறைந்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என மனிதனை ஒத்த செயல்களை செய்யுமாறு குறியீடு செய்யப்பட்டிருக்கும்.

சரி, இங்கு மட்டும் தானா? இல்லை. உங்கள் திறன்பேசியில் உள்ள Google Assistant, Siri , Cortana கூட ஒரு செயற்கை நுண்ணறிவு தான். இப்போது டெசுலா நிறுவனத்தின் சுய ஓட்டுதல் தொழில்நுட்பமும் கூட செயற்கை நுண்ணறிவை தான் பயன்படுத்துகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால், இயந்திர மனிதன் (robot) இந்த செயற்கை நுண்ணறிவை தான் பயன்படுத்துகின்றது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இந்த நிரல்களை இயக்க, அதிக திறனுடைய கணிணிப்பாகங்கள் தேவை. செயற்கை நுண்ணறிவு எந்த அளவு மனிதனின் செயல்களை ஒத்த செயல்களை செய்ய முற்படுகிறதோ, அந்த அளவு அதிக திறனுடைய கணிணிப்பாகங்கள் தேவை.

Edited by ampanai
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

பல தகவல்களை அறியத் தந்த, நல்லதொரு கட்டுரை. நன்றி அம்பனை. 

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அம்பனை!

இப் பதிவின் மூலத்தை / இணைப்பை குறிப்பிட மறக்க வேண்டாம். சுய ஆக்கமெனில் அதனை குறிப்பிடுங்கள். 

நன்றி

Share this post


Link to post
Share on other sites

சிறப்பான பகிர்வு அம்பனை, தொடருங்கள்......!   👍

Share this post


Link to post
Share on other sites

1. ஸ்மார்ட் கார்கள்

இது கூகிளின் சுய-ஓட்டுநர் கார் திட்டமானது வெமோ என்ற பெயர் கொண்டுள்ளது. டெஸ்லாவின் "தன்னியக்க" திட்டத்தை கொண்டுள்ள வாகனங்கள் வேண்டுமா பொழுது செயல் கொள்ள வைக்க முடியும். 

முதல் பயனாக வீதி விபத்துக்கள் இல்லாமல் போகும். காரணம், வாகனங்களுக்கு இடையில் பேணப்படும் இடைவெளி இதை செயற்கை நுண்ணறிவு உறுதிப்படுத்தும். இதனால், வாகன காப்புறுதி தேவைகள் வலுவாக குறைந்துவிடும். அடுத்து, எரிபொருள் சேமிப்பு. சாதாரண மனிதன் உணர்வுகளுக்கு கட்டுபட்டவன், ஆனால், செயற்கை நுண்ணறிவுக்கு அது கிடையாது, எனவே, வேகம் கூடி குறைவது மற்றும் வீதி விதி முறைகளை பேணுவது என்பனவற்றை நேர்த்தியாக நிறைவேற்றும். இது, புவி வெப்பமடைதலை கூட குறைக்க உதவும்.  

ஆக, வாகன ஓட்டுனர்கள் என்ற வேலை கூட குறைந்து இல்லாமல் போகும் சாத்தியம் உள்ளது. அதேவேளை, இது சம்பந்தமான புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தரும். ஏனெனில்,  செயற்கை நுண்ணறிவு தானாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமை கொண்டதானாலும் அதற்கு அந்த சிந்தனை திறனை மனிதனே வடிவமைத்து கொடுத்துள்ளான். சிந்தனை திறனை மனிதனாலேயே வடிவமைக்க, சிறப்பிக்க முடியும். 

Share this post


Link to post
Share on other sites

இன்றைய காலத்திற்கு ஏற்ற பதிவு..

கடந்த மாதம் அவுஸ்ரேலிய வங்கிகளில் ஒன்றான Westpac, Red எனும் chatbotஐ அறிமுகப்படுத்தி உள்ளது.. இதன் மூலம் அதன் வாடிக்கையாளர்கள் பயனடைந்தாலும் பலபேர் வேலைகளை இழக்கும் நிலை கூட வரலாம். AI மூலம் நன்மைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்ற பயம் கூட எழுகிறது.. 

https://www.afr.com/business/banking-and-finance/westpac-turns-on-ai-chatbot-as-cost-pressures-mount-20190507-p51ksr

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ரத்த மகுடம்-89 பிரமாண்டமான சரித்திரத் தொடர் ‘‘பேசா மடந்தைகள் வாட்கள் கொண்டு உரையாட வந்ததற்கு வந்தனங்கள்!’’ தன் வாளை நீட்டியபடி சொன்ன சிவகாமி, சற்றே அதைத் தாழ்த்தி ஒருவர் மீது ஒருவராக நின்றிருந்த அவ்விரு பெண்களுக்கும் வணக்கம் தெரிவிப்பதுபோல் குனிந்தாள்.இதுதான் சமயம் என்று காவி உடை தரித்திருந்த பெண்ணின் தோள் மீது நின்றிருந்த மற்றொரு காவி உடை அணிந்த பெண், தன் வாளுடன் சிவகாமியின் மீது பாய்ந்தாள். இதற்காகவே காத்திருந்தது போல் தன் வலது காலை அரைவட்டமிட்ட சிவகாமி, நின்றிருந்த காவி உடை தரித்த பெண்ணின் பாதங்களைத் தட்டிவிட்டாள்.இதை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண், நிலைதடுமாறி சரிந்தாள்.அதேநேரம் தன் வாளின் இரு பக்கங்களையும் தன்னிரு கைகளால் பிடித்தபடி மல்லாந்து படுத்தவண்ணம் தன் மீது பாய்ந்த மற்றொரு காவி உடை அணிந்த பெண்ணின் வாளை சிவகாமி தடுத்து நிறுத்தினாள். இமைக்கும் பொழுதுக்குள் வாளைத் தடுத்தபடியே படுத்த நிலையில் இருந்து சிவகாமி எழுந்தாள். மேலிருந்து தன்மீது பாய்ந்த பெண்ணை தன் இடது காலால் எட்டி உதைத்தாள். காவி உடை அணிந்திருந்த இரு பெண்களும் இருவேறு திக்குகளில் விழுந்தார்கள். அலட்சியமாக தனது ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை நீட்டி, வாளைப் பிடித்திருந்த கையை நீட்டியும் மறு கையை மடக்கி யும் நின்றாள் சிவகாமி. அவளது கருவிழிகள் அவ்விருவரையும் அலசின. தடுமாறி விழுந்த நிலையிலும் அவர்கள் தத்தம் வாட்களை இறுக்கமாகப் பிடித்திருந்தார்கள். வாட்களை ஏந்திய அவர்களது தோரணை, தொடர்ந்து அவர்கள் வாட்பயிற்சி மேற்கொண்டு வருவதைப் பறைசாற்றியது.எப்போது, எந்த இடத்தில் இவர்கள் வாட் பயிற்சி மேற்கொண்டார்கள்... இவர்களுக்கு பயிற்சி அளிப்பது யாராக இருக்கும்..? கிளைவிட்ட வினாக்களை வெட்டி எறியாமல் தன்னுள் அவற்றை சிவகாமி படரவிட்டாள். அதேநேரம் தன் கவனத்தை அவ்விருவர் மீதும் குவித்தாள். விழுந்த அதிர்ச்சியில் சற்றே உறைந்த அவர்கள், கணங்களில் தங்களைச் சமாளித்துக் கொண்டு எழுந்தார்கள்.சிவகாமியை இருபுறங்களில் இருந்தும் தாக்க ஆயத்தமானார்கள். அவ்விருவரின் பாத அசைவுகள் சிலம்பாட்டத்தை நினைவுபடுத்தின. ‘வீடு கட்டுகிறார்கள்’!தனக்குள் புன்னகைத்த சிவகாமி, சிலையாக அப்படியே நின்றாள். தன் கருவிழிகளை மட்டும் இருவர் பக்கமும் மாறி மாறி சுழற்றினாள். ஆனால், மனதுக்குள் அவர்களை எப்படி சமாளிப்பது என திட்டமிட்டாள். அதன் ஒருபகுதியாக தன் பங்குக்கு அகத்தில் ‘வீடு கட்டினாள்’! ஆனால், கணங்கள்தான் நகர்ந்தனவே தவிர அவ்விருவரும் தத்தம் இடங்களை விட்டு அசையவில்லை. தாக்குதலைத் தொடுக்கவில்லை. சிவகாமிக்கு இது புதிராக இருந்தது. இருவரும் தன்னை நோக்கி வாட்களை நீட்டியிருக்கிறார்கள். ஆனால், சண்டையிட முற்படவில்லை. மாறாக தங்கள் பாதங்களை மட்டும் சிலம்புப் பயிற்சி மேற்கொள்ளும்போது அடி எடுத்து வைப்பதுபோல் அசைக்கிறார்கள். ஆனால், அசைக்கவில்லை! அசைப்பதுபோல் தங்கள் செய்கை செய்கிறார்கள்.கவனித்த சிவகாமியின் புருவங்கள் எழுந்து தாழ்ந்தன. இருவரும் தங்கள் உடலை இறுக்கத்தில் இருந்து தளர்த்துகிறார்கள்; கொடியாக மாறுகிறார்கள்!இது ஒருவகையான போர் முறை. மரத்தைப் போல் உடலின் நாடி நரம்புகளை இறுக்கினால், வளைவது கடினம். தசைகள் பிடிக்கலாம். எதிராளி தன் முழு வலுவையும் பயன்படுத்தும் பட்சத்தில் எலும்புகள் முறியவும் வாய்ப்பிருக்கிறது. மாறாக செடி போல் உடலின் நாடி நரம்புகளைத் தளர்த்தினால், புயலிலும் வளைந்து தாக்குப் பிடிப்பதுபோல் யுத்தத்தில் நிற்கலாம். எதிராளியின் வலிமை அப்போது பயன்படாமல் போகும்.சொல்வதற்கு எளிதாக இருக்கும் இச்செயல், கடுமையான பயிற்சிக்குப் பிறகே கைகூடும் என்பதை சிவகாமி அறிவாள். எனில், நாள் தவறாமல் இப்பெண்கள் இப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்... யார் தலைமையில்..? எவரது மேற்பார்வையில்..? இவர்களுடன் பேசிப் பழகிய காலங்களில் தங்கள் உடல்மொழியால் கூட, தாங்கள் வாள் பயிற்சி மேற்கொண்டு வருவதை இவர்கள் பறைசாற்றவில்லையே..? அந்தளவுக்கு ரகசியத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் என்றால்... தன் பாத கட்டை விரலை இருமுறை உயர்த்தி தாழ்த்தினாள் சிவகாமி. ஆச்சர்யத்தின் ரேகைகள் அவளது மேனி முழுவதும் படர்ந்தன. இவர்களது ஆசான் யார்..? யாராக இருந்தாலும் தமிழக வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத போர்த் தளபதியாக, முக்கியமானவராக இருக்க வேண்டும். தனக்குக் கூட தெரியாதபடி வாழ்ந்து வரும் அந்த நபர் யார்..? அறிந்து கொள்ளும் ஆவல் சிவகாமிக்குள் பொங்கி எழவே, இருவரிடமும் பேச்சுக் கொடுக்க முற்பட்டாள்.ஆனால், அதற்குள் கனவிலும் அவள் நினைத்துப் பார்க்காத காட்சிகள் எல்லாம் அரங்கேறத் தொடங்கின.தனக்கு இரு பக்கமும் இருந்த அவ்விரு பெண்களையும் ஒரு பக்கமாக வரவழைக்க, சிவகாமி நகர்ந்தாள்.இதை ஊகித்தது போல் சாளரத்தின் அந்தப் பக்கத்தில் இருந்து ஒரு பெண் வாளுடன் குதித்தாள். குதித்தவள் வேறு யாருமல்ல... சில கணங்களுக்கு முன் சிவகாமியால் தள்ளிவிடப்பட்ட மயிலின் கழுத்து நிற ஆடையை உடுத்தியிருந்தவள்தான்! ஆக, இப்போது, தான் மூவரை எதிர்க்க வேண்டும். அதுவும் குனிந்த தலை நிமிராதவர்கள்... பயந்த சுபாவம் கொண்டவர்கள் என்றெல்லாம் தங்களைக் குறித்த பிம்பங்களை சுற்றிலும் இருந்தவர்களுக்கு ஏற்படுத்தியவர்கள்! வித்தைக்காரன்தான் இவர்களின் ஆசான்... காற்றுக்குக் கூட தெரியாதபடி எவ்வளவு ரகசியமாக இம்மூவரையும் வீராங்கனைகளாக தயார்படுத்தியிருக்கிறான்... கண்டிப்பாக அந்தப் பயிற்சியாளனை சந்தித்தே ஆக வேண்டும்... அதற்கு இம்மூவரையும் விரைவாக வீழ்த்திவிட்டு விசாரிக்க வேண்டும்... முடிவுடன் தன் வாளைச் சுழற்றி காற்றைக் கிழித்த சிவகாமி தாக்குதலில் இறங்க முற்பட்டபோது - சர்... சர்... சர்... என பல பெண்கள் உப்பரிகைக்குள் குதிக்கத் தொடங்கினார்கள்! அனைவரது கரங்களிலும் வாட்கள் அந்த நள்ளிரவிலும் மின்னின. சொல்லி வைத்ததுபோல் சிவகாமியை அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அனைவருமே தென் தமிழக கிராமப் பெண்கள்! ‘‘மன்னா...’’ தயக்கத்துடன் ஒலித்த குரலைக் கேட்டு சட்டென திரும்பினார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்.அவரை வணங்கியபடி நின்றிருந்தான் கடிகை பாலகன். மறைந்து, கரைந்துவிட்டதாகக் கருதப்பட்ட வேளிர்களின் தலைவனாக திடீரென்று சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரால் ‘முடிசூட’ப்பட்டவன்!தனது சயன அறையின் கதவுக்கு நடுவில் கம்பீரமாக நின்ற அரிகேசரி மாறவர்மர், பாலகனை உற்றுப் பார்த்தார். அவர் உதட்டில் புன்னகை மலர்ந்தது. ‘‘சொல்லுங்கள் வேந்தே! நடுச்சாமத்தில் என்னைக் காண தாங்கள் வந்திருப்பதன் காரணத்தை அடியேன் அறியலாமா..?’’‘‘மன்னா...’’ அதிர்ந்துபோனான் கடிகை பாலகன். ‘‘என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்..? காஞ்சி கடிகையில் பயிலும் சாதாரண மாணவன் நான்... என்னைப் போய் தாங்கள் வேந்தே என அழைக்கலாமா..?’’ ‘‘அழைப்பது தவறா..? வேளிர்களின் தலைவன்தானே நீங்கள்..?’’ ‘‘இல்லை மன்னா... கடிகை மாணவன்தான்... பல்லவர்களை வீழ்த்த என்னை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் சாளுக்கிய மன்னர்...’’ ‘‘அந்த ஆயுதம் பாண்டியர்களுக்கும் எதிரானதுதானே..?’’ ‘‘இல்லை மன்னா...’’‘‘எப்படி நம்புவது..?’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், பாலகனை உற்றுப் பார்த்தார். ‘‘வேளிர்களை வேரோடு வீழ்த்தி பேரரசு காலத்தை உருவாக்கியது பல்லவர்கள் மட்டுமல்ல... பாண்டியர்களும்தான்...’’ ‘‘அந்தப் பாண்டியர்கள் இப்போது வேளிர்களின் நண்பர் என்னும்போது எப்படி ‘இந்த’ ஆயுதம் தங்களுக்கு எதிராகத் திரும்பும்..?’’ தலைதாழ்த்தி வணங்கியபடி கேட்ட பாலகனைக் கண்ட அரிகேசரி மாறவர்மரின் கண்கள் ஒளிர்ந்தன: ‘‘சொல்... என்ன விஷயம்..?’’ மரியாதையைக் கைவிட்டு நேரடியாக உரையாட முற்பட்டார்.‘‘மன்னா... வந்து... ஒரு விஷயம்...’’ பாலகன் உமிழ்நீரை விழுங்கியபடி தவித்தான். ‘‘அதுதான் வந்துவிட்டாயே... என்ன விஷயம்..?’’‘‘எங்கள் படை...’’ பாலகன் முடிப்பதற்குள் அரிகேசரி மாறவர்மர் குறுக்கிட்டார்: ‘‘இப்பொழுது சிவகாமியை சுற்றி வளைத்திருக்கிறது... அப்படித்தானே..?’’ பிரமை பிடித்து நின்றான் பாலகன். ‘‘இதைச் சொல்லத்தான் இங்கு வந்தாயா..?’’ ‘‘மன்னா... தங்களுக்கு எப்படி...’’ ‘‘வேளிர்களின் ரகசியப் படை குறித்து தெரியும் என்று கேட்கிறாயா..?’’ பதிலேதும் சொல்லாமல் பாலகன் தலைகுனிந்தான்.‘‘தென் தமிழகத்தை ஒரு குடையின் கீழ் ஆளும் மன்னன் நான்... ஆயிரம் கண்கள் இல்லாமல் அரியாசனத்தில் அமர முடியாது... என்னதான் கால ஓட்டத்தில் வேளிர்கள் ஒடுங்கிவிட்டாலும் முற்றிலுமாக அவர்கள் அழியவில்லை என்பதும்... இழந்த தங்கள் நிலப்பரப்பைப் பெற என்றேனும் ஒருநாள் அவர்கள் முயற்சிப்பார்கள் என்பதும்... சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தமிழக மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். குறிப்பாக பல்லவனுக்கும் பாண்டியனுக்கும்! அப்படியிருக்க எனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அதுவும் தென்பாண்டி கிராமத்தில் வேளிர்களின் படை பயிற்சி பெற்று வருவதை அறியாமல் இருப்பேனா என்ன..?’’   ‘‘மன்னா...’’ ‘‘தடுக்காமல் இருந்ததற்கான காரணம், அப்படையை எப்போது வேண்டுமானாலும் பாண்டியப் படையுடன் இணைக்கலாம் என்பதால்தான்!’’ சட்டென மலர்ந்தான் பாலகன்: ‘‘நன்றி மன்னா... நீங்கள் எப்பொழுது சொல்கிறீர்களோ அப்பொழுது படையை இணைத்து விடுகிறேன்!’’ ‘‘கடிகை பாலகனாக இல்லாமல் வேந்தனாக வாக்குக் கொடுக்கிறாய்!’’ கடகடவென சிரித்தார் அரிகேசரி மாறவர்மர்: ‘‘நல்லது... படையில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?’’ ‘‘நூ...று பேர் மன்னா...’’ ‘‘நூற்றைம்பது!’’ அழுத்திச் சொன்னார் பாண்டிய மன்னர். ‘‘ம...ன்...னா...’’‘‘அனைவரும் பெண்கள். வீராங்கனைகள்! வாள் சண்டையில் சூரர்கள். அதங்கோட்டாசான்தானே வாள் பயிற்சி அளிக்கும் ஆசான்..?’’ பாலகன் சிலையென நின்றான்: ‘‘மன்னா... தங்களுக்கு அதங்கோட்டாசானைத் தெரியுமா..? அவர்... அவர்...’’ ‘‘எவர் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்கிறார்!’’ ‘‘தங்கள் பார்வையில் எப்பொழுது அவர் தட்டுப்பட்டார் மன்னா..?’’ ‘‘அவர் பிறந்தபோது!’’ அலட்சியமாக சொன்ன அரிகேசரி மாறவர்மர், ஏதோ சொல்ல வந்த பாலகனை தன் கரம் உயர்த்தி தடுத்தார்: ‘‘நாளை சந்திப்போம். உனது படையிடம் சிவகாமி சிக்க மாட்டாள். சென்று வா...’’ சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் தன் சயன அறைக்குள் நுழைந்தார் அரிகேசரி மாறவர்மர்.படுக்கைக்கு அருகில் இருந்த மேஜையில் தாயப் பலகை இருந்தது. கூடவே மூன்று முத்துக்கள்.அவற்றை எடுத்து திக்குக்கு ஒன்றாக வைத்தார்: ‘‘இது பல்லவன்... இது சாளுக்கியன்... இது பாண்டியன்...’’ முணுமுணுத்த அரிகேசரி மாறவர்மர், தந்தத்தாலான தாயத்தை எடுத்து உருட்டினார். சிவகாமி சலிக்கவேயில்லை. துவளவுமில்லை. தன்னைச் சூழ்ந்த அத்தனை பெண்களையும் வாளால் தடுத்து நிறுத்தினாள்.சூழ்ந்த பெண்கள் அனைவருமே சிலம்பாட்டம் கற்றவர்கள் என்பதை அவர்களது பாத நடவுகளில் இருந்தே அறிந்துவிட்டாள். எனவே தன் வாளையும் சிலம்பம் போலவே சுற்றினாள். தன்னைச் சுற்றிலும் எதிராளிகளின் வாள் நுழையாதபடி பார்த்துக் கொண்டாள். யாரையும் காயப்படுத்தவோ அல்லது வீழ்த்தவோ சிவகாமி விரும்பவில்லை. ஆண்களுக்கு சமமாக பெண்கள் உக்கிரமாக வாள் சண்டையிட்டது அவளைக் கவர்ந்தது. அவர்களது திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும்... அதேநேரம், தானும் அவர்கள் கையில் சிக்கக் கூடாது. தவிர கரிகாலனும் சீனனும் என்ன ஆனார்கள்... மதுரையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்... அதற்கு முதலில் இங்கிருந்து வெளியேற வேண்டும்...   முடிவுடன் தன் வாளைச் சுழற்றியபடியே நகர ஆரம்பித்தாள். உப்பரிகையின் அந்தப் பக்கம் சுவர் இருப்பதை முன்பே பார்த்துவிட்டாள். எனவே சுவருக்கு அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ கதவு இருக்க வேண்டும். சுவரை நோக்கி சிவகாமி நகர்ந்தாள்.   சரியாக சுவரை அவள் நெருங்கவும், திரைச்சீலை போல் அந்தச் சுவர் உயரவும் சரியாக இருந்தது!ஒரு கரம் வலுவாக அவளை உள்ளே இழுத்தது! சிவகாமி உள்ளே வந்ததும் பழையபடி அந்தச் சுவர் மூடிக் கொண்டது! பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் யோசிக்கத் தொடங்கினார்: ‘‘இந்த தாயம்தான் அதங்கோட்டாசான்... எந்த எண்ணை விழவைத்து யாரை எப்படி நகர்த்தப் போகிறான்..? அவனுக்கும் சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா..?’’   (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16475&id1=6&issue=20200124
  • உந்த அமெரிக்கா கிந்தி பிரதமர் மோடிக்கு போடாத தடையா? இப்ப பாக்கேல்லையே கட்டிப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள் 
  • ரத்த மகுடம்-88   பிரமாண்டமான சரித்திரத் தொடர் தன்னை நோக்கி வாளைச் சுழற்ற முற்பட்ட பெண்ணைக் கண்டு சிவகாமி ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தாள்.ஆச்சர்யத்துக்குக் காரணம், அந்தப் பெண்ணை சிவகாமி நன்றாகவே அறிவாள். அவளது வயதுதான். கொற்கைக்கு அப்பால் தென்பாண்டி நாட்டில் வசித்து வரும் அவளை பலமுறை பல இடங்களில் பார்த்திருக்கிறாள். கூர்மையான நாசியும், எடுப்பான தாடைகளும், மிரட்சியுடன் கூடிய நயனங்களையும் தாண்டி எந்நேரமும் மயிலின் கழுத்து நிறத்தில் கச்சையையும் இடுப்புத் துணியையும் அணிந்திருப்பதுதான் அவளது அடையாளம். இதோ, இப்போதும் அதே வண்ண ஆடையைத்தான் அணிந்திருக்கிறாள். நிலவின் ஒளியிலும் உப்பரிகையின் தூணில் எரிந்து கொண்டிருந்த தீப் பந்தத்தின் வெளிச்சத்திலும் அந்த அடையாளம் துலக்கமாகவே தெரிகிறது. அது என்னவோ... இந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் இந்த வண்ண ஆடையில்தான் காட்சி அளிக்கிறாள். எப்படி சிவப்பு நிற உடையிலேயே, தான் வலம் வருகிறோமோ அப்படி என தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் சிவகாமி.என்றாலும் சிவகாமி ஆச்சர்யப்பட்டதற்குக் காரணம், இந்த புற அடையாளம் மட்டுமல்ல... அகத்தின் மாற்றமும்தான்.ஆம். தலைகீழாக அந்தப் பெண் மாறியிருந்தாள். சிவகாமி அவளைச் சந்திக்க நேர்ந்தபொழுதெல்லாம் ஒன்றைக் கவனித்திருக்கிறாள். அதுதான் அந்தப் பெண்ணின் கண்களில் வழியும் மிரட்சி. சின்னச் சின்ன ஓசைக்கும் அச்சப்படுவாள். தன்னையும் அறியாமல் அருகில் இருப்பவர்களின் கரங்களைப் பற்றிக் கொள்வாள். ஒருமுறை முயல் ஒன்று பாய்ந்து ஓடியபோது சிவகாமியின் கைகளையும் அப்படிப் பற்றி இருக்கிறாள். அப்போது தன் கரங்களுக்குள் நடுங்கிய இப்பெண்ணின் விரல்களை ஆதரவாக, தான் பற்றி அவளுக்கு ஆறுதல் சொன்னதை இப்போது நினைத்துக் கொண்டாள். ஒருபோதும் இந்தப் பெண்ணை தனியாக சிவகாமி பார்த்ததேயில்லை. வேறு இரு பெண்கள் சூழத்தான் வலம் வருவாள். அவர்களுக்கும் இந்தப் பெண்ணின் வயதுதான் இருக்கும். இவளைப் போலவே அவ்விருவர் நயனங்களிலும் மிரட்சி தாண்டவமாடும். என்றாலும் அவ்விருவரும் இந்தப் பெண்ணைப் போல் மயிலின் கழுத்து வண்ணத்தில் ஆடைகளை அணிய மாட்டார்கள். மாறாக மெல்லிய காவி வண்ணத்தில்தான் கச்சையையும் இடுப்புத் துணியையும் அணிந்திருப்பார்கள். அதாவது சிவகாமி, பார்த்த சமயத்தில் எல்லாம், சந்திக்க நேர்ந்த தருணங்களில் எல்லாம் இந்தப் பெண் அவ்விருவருடனும்தான் காட்சி தந்தாள். ஆடைகளின் வண்ணங்கள் ஒருபோதும் மூவரிடமும் மாறியதில்லை.ஒரே வயதுதான் என்பதால் அம்மூவருடனும் சிவகாமி பேசி சிரித்திருக்கிறாள். அப்போது ஒரு விஷயத்தை கவனித்தாள். மூவருமே பூரண நிலவிலும் வெளியே வர அஞ்சினார்கள். சூரிய அஸ்தமனத்துக்கு முன்பே தத்தம் இல்லங்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். யாராவது சற்றே குரலை உயர்த்தினாலும் அம்மூவரின் கண்களும் கலங்கிவிடும். உதடுகளும் நாசிகளும் ஒருசேர துடிக்கத் தொடங்கிவிடும். அப்படிப்பட்ட குணாம்சமுள்ள மூவரில் ஒருத்தியான இந்தப் பெண், மதுரைக்கு வந்திருக்கிறாள்... அதுவும் தன் இரு தோழிகளும் இல்லாமல்! ஆச்சர்யமளித்த இந்த புள்ளி, சிவகாமிக்குள் அதிர்ச்சியாக விஸ்வரூபம் எடுத்ததற்குக் காரணம், எப்போதும் போல் இரவின் மூன்றாம் ஜாமத்தில் தன் இருப்பிடத்தில் அடங்கி, முடங்கி, ஒடுங்கி இருக்காமல் இந்தப் பெண் தன்னந்தனியாக வணிகர் வீதியில் இருந்த மாளிகை ஒன்றின் உப்பரிகைக்கு வந்து நின்றதுதான். அதுவும் ‘உங்களை மாதிரி என்றுதான் நாங்கள் தைரியசாலியாக மாறுவோமோ...’ என இமைகள் படபடக்க தன்னைப் பார்த்து எப்போதும் வியப்பவள் இப்போது தன்னை நோக்கியே வாளைச் சுழற்ற முற்படுகிறாள் என்றால் அதிர்ச்சி அடையத்தானே வேண்டும்! கரிகாலன் உட்பட சாளுக்கிய, பல்லவ, பாண்டிய பேரரசுகள், தான் யார்... தனது பூர்வீகம் என்ன... உண்மையில், தான் எந்த தேசத்தின் ஒற்றர் என குழம்பித் தவித்து வரும் நிலையில்... அப்படி முப்பேரரசுகளையும் குழப்பத்தில், தான் ஆழ்த்தி வரும் சூழலில்... தனது சித்தத்தையே இந்தப் பெண் கலங்க வைக்கிறாளே... ஆமாம்... எல்லோரும் தன்னைக் கேட்கும் அதே கேள்வியை, தானும் இப்பெண்ணை நோக்கி கேட்க வேண்டியதுதான்! யார் இவள்..? எந்த தேசத்தின் ஒற்றர் இவள்..? தனக்குள் கேட்டுக்கொண்ட சிவகாமி, அதிர்ச்சி விலகாமல் ‘‘நீயா..? நீ... எப்படி... இங்கு..?’’ என்று வினவினாள். கேட்ட சிவகாமிக்கு அந்தப் பெண் உதட்டைப் பிரித்து எந்த பதிலையும் சொல்லவில்லை. மாறாக தன் கரத்தில் இருந்த வாளால் விடையளிக்க முற்பட்டாள். சிவகாமியின் புருவங்கள் எழுந்து தாழ்ந்தன. முன்னால் இருந்த பெண்ணை ஊன்றிக் கவனித்தாள்.கண்களில் மிரட்சிக்கு பதில் தீர்க்கம். வீச்சில் கைதேர்ந்தவள் என்பதைப் போல் வாளை இறுக, வலுவாகவே பற்றியிருந்தாள். எனில், பயந்த சுபாவம் கொண்டவளாக இவள் தோற்றம் தந்தது நாடகமே! யாருக்கு விசுவாசமாக இருக்க எல்லோரையும் இதுநாள் வரை ஏமாற்றியிருக்கிறாள்..? ஒட்டிப் பிறந்த இரட்டை வாழையாக எப்போதும் இவளுடன் வலம் வரும் அந்த இரு காவி வண்ண உடைகள் அணியும் பெண்கள் எங்கே..? அவர்களும் இவளைப் போலவே இன்னொரு பக்கத்தைக் கொண்டவர்களா அல்லது தன்னைப் போலவே இவளிடம் ஏமாந்தவர்களா..? சிவகாமி யோசித்தாள். அதை அறுத்து எறிந்தது முன்னால் இருந்த பெண்ணின் வாள் வீச்சு.தன்னிரு கரங்களாலும் வாளைப் பிடித்து தன் சிரசுக்கு மேல் உயர்த்தினாள். அதே வேகத்தில் சிவகாமியை நோக்கி இறக்கினாள்.சிவகாமி இதை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாள் சண்டையிலும், அசுவங்களைப் பிரித்து பயிற்சி அளிப்பதிலும் செலவிட்டிருந்ததால் அநிச்சையாகவே அவள் உடல் வாள் சண்டைக்கு தயாரானது. இறங்கிய வாளைத் தடுத்து நிறுத்தியது. சரியான வேகம். எனில், அல்லும்பகலும் இந்தப் பெண் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவள். தான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முற்படவில்லை. அதாவது பேச்சுக் கொடுக்கவோ உரையாடலில் பொழுதைக் கழிக்கவோ இவள் விரும்பவில்லை. தன்னை வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள் எனச் செயல்படுகிறாள். இங்கு... இந்த இடத்துக்கு, தான் வருவோம் என அறிந்து காத்திருக்கிறாள். அப்படியானால் மதுரை மாளிகையில் இருக்கும் சுவர் பொறிகளை அறிந்தவள். ஒருவேளை பாண்டிய சேனாதிபதி மாறவர்மனுடனும் சாளுக்கிய உபசேனாதிபதியுடனும், தான் பேசும்போது இந்தப் பெண்ணும் அங்கு மறைந்து இருந்தாளா..? அதாவது கரிகாலனுடன் நிழலில்... அவரை ஒன்றியபடி... பரந்த அவரது முதுகுக்குப் பின்னால் நின்றிருப்பாளோ... உரசியிருப்பாளோ... சட்டென சிவகாமியின் கண்கள் சிவந்தன. உக்கிரத்துடன் அந்தப் பெண்ணின் வாள் வீச்சை சமாளிக்கத் தயாரானாள். அவள் இறக்கிய வாளைத் தடுத்து, தான் அப்பால் தள்ளியதுமே இரண்டடி பின்னோக்கிச் சென்றாள்தான். ஆனால், மூன்றடியாக அதை அதிகரிக்கவில்லை! பாதங்களை அழுத்தமாக ஊன்றி அப்படியே நின்றவள், மீண்டும் வாளை நீட்டினாள். சிவகாமி கவனித்தது இதை மட்டுமல்ல... அவளது பாதங்களின் அசைவுகளையும்தான். இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் பார்வை தனது கருவிழிகளையே ஊடுருவிக் கொண்டிருந்தது. அதாவது பார்வையால் தன்னைக் கட்டிப் போட்டபடி தாக்குதலை நிகழ்த்த ஆயத்தமாகிறாளாம்! முகத்தின் அசைவை வைத்தே உடலின் இயக்கத்தை அறியும் திறன் தனக்கு உண்டு என்பதை பாவம் இவள் அறியவில்லை! பெண்ணே! நீ வாள் பயிற்சி பெற்ற பள்ளியின் ஆசான் நான்! அதுவும் கரிகாலரின் உள்வட்டத்தைச் சேர்ந்தவளாக நீ இருக்கலாம் என்ற பொறி எனக்குள் விழுந்த பிறகு... ம்ஹும்... உன்னை விடுவது என் மனதுக்கு நானே செய்யும் துரோகம்! மனம் எரிய... கண்கள் கனலைக் கக்க... உடல் அதிர... அப்பெண்ணை வீழ்த்தும் நடவடிக்கையில் சிவகாமி இறங்கினாள்! ‘‘வா  மாறவர்மா... மாளிகைக்குள் திடீரென சுவர் ஏறி இறங்கியதா..?’’ சர்வசாதாரணமாகத்தான் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் கேட்டார்.ஆனால், அந்த வாக்கியம் அசாதாரணமான அமைதியை அந்த இடத்தில் ஏற்படுத்தியது. அதிர்ச்சியின் உச்சிக்கே பாண்டிய சேனாதிபதியான மாறவர்மனும், சாளுக்கிய உபசேனாதிபதியும் சென்றார்கள். சிலையாக நின்றார்கள். உண்மையில் அவ்விருவரும் சிந்திக்கும் ஆற்றலை இழந்து நாழிகை ஆகியிருந்தன. வணிகர் வீதியில் நடந்தவை அனைத்தும் அவர்களது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது என்றால்... அரண்மனைக்குள் அவர்கள் நுழைந்தது முதல் நடைபெறும் சம்பவங்கள் மேலும் மேலும் அவர்களை ஸ்தம்பிக்கச் செய்தன. அரண்மனைக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தபோது காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் தலை வணங்கி தங்கள் சேனாதிபதியை வரவேற்றார்கள். ஓடோடி வந்தான் காவல் தலைவன். ‘‘மூன்றாம் ஜாமத்தில் மன்னரை எழுப்புவது தவறுதான். ஆனால், வேறுவழியில்லை... உடனடியாக அவரைப் பார்க்க வேண்டும்...’’ என்று காவல் தலைவனிடம் சொல்ல பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன், வாயைத் திறந்தார். ஆனால், அதற்குள் அவனே, ‘‘வாருங்கள் சேனாதிபதி... உங்களுக்காகத்தான் நம் மாமன்னர் காத்திருக்கிறார்... நீங்கள் வந்ததுமே உப்பரிகைக்கு வரச் சொன்னார்...’’ அழைத்தபடி சென்ற காவல் தலைவனை அதிர்ச்சி நீங்காமல் இருவரும் பின்தொடர்ந்தார்கள்.உப்பரிகையை நெருங்கியதும் இருவருக்கும் தலைவணங்கிவிட்டு அங்கேயே காவல் தலைவன் நின்றுவிட்டான்.புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக இருவரும் அவனைக் கடந்து உப்பரிகைக்குச் சென்றார்கள். கம்பீரமாக அமர்ந்திருந்த பாண்டிய மன்னரை வணங்கினார்கள்.இதனை அடுத்துதான் ‘‘என்ன விஷயம் மாறவர்மா..?’’ என்று கேட்காமல், தாங்கள் சொல்ல வந்த சுவர் ரகசியத்தை தனக்கு முன்பே தெரியும் என்பதுபோல் மன்னர் சொன்னார். ‘‘ஆம் மன்னா...’’ பாண்டிய சேனாதிபதி மென்று விழுங்கினார். ‘‘சரி... சிவகாமி என்ன சொன்னாள்..?’’ ‘‘சோழ இளவரசன் எதற்காக மாறுவேடத்தில் மதுரைக்கு வந்திருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றாள்...’’ ‘‘அவளுக்கு எதுவும் தெரியாதா..?’’ ‘‘அறிய முடியவில்லை என்று தான் சொன்னாள் மன்னா...’’ ‘‘இப்போது அவள் எங்கே..?’’ ‘‘இறங்கிய சுவருக்கு அப்பால் சென்றுவிட்டாள்...’’ ‘‘அங்கு கரிகாலனும் சீனனும் மறைந்திருப்பதாக அவள் சொன்னாளா..?’’ ‘‘....’’ அரிகேசரி மாறவர்மர் புன்னகைத்தார். ‘‘நல்லது... இருவரும் சென்று ஓய்வெடுங்கள்... நாளை பகலில் சந்திக்கலாம்...’’ சொல்லி விட்டு தனது சயன அறையை நோக்கி நிதானமாக நடந்தார் பாண்டிய மன்னர்! தன் வாள் வீச்சை சமாளிக்க முடியாமல் தரையில் விழுந்துவிட்ட அந்தப் பெண்ணை சிவகாமி அலட்சியமாகப் பார்த்தாள். உதட்டைப் பிதுக்கியபடி அவளைக் கடந்து செல்ல சிவகாமி முற்பட்டபோது - எங்கிருந்தோ காவி உடை அணிந்த ஒரு பெண் வாளுடன் குதித்தாள். அடுத்த கணம் இன்னொரு காவி உடை அணிந்த பெண் வாளுடன் தோன்றினாள். முந்தையவளின் தோள் மீது ஏறினாள். அவ்விருவரையும் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் சிவகாமி!   (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16448&id1=6&issue=20200117