Jump to content

அது என்ன செயற்கை நுண்ணறிவு ?


Recommended Posts

Artificial intelligence / செயற்கை நுண்ணறிவு 

செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். செயற்கைஅறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு தகுந்ததுபோல் அதுவாகவே செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு ஆகும்.

செயற்கை அறிவாற்றலின் பயன்பாடுகளை அனைத்துத் துறைகளிலுமே காணமுடியும். உதாரணமாக, விவசாயம், தொழில்நுட்பம், கார், ஆட்டோமொபைல், மருத்துவம், பொறியியல், ஆசிரியர்பணி போன்ற அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவாற்றல் முறைகளைப் பயன்படுத்தமுடியும்.

செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய இயந்திரம் அல்லது கணினி. ஆனால், கணினியால் தாமாக எந்த வேலையையும் செய்ய முடியாது என்றல்லவா கேள்விப்பட்டிக்கிறோம்? சரிதான். அதாவது மனிதன் எவ்வாறு சிந்திப்பான், செயல்படுவான் என்பதை நிரலாக்கக் குறியீடுகளை வைத்து கணினி செயல்படும். இது கண்டிப்பாக சுலபமான வேலையில்லை. மனிதன் என்ன நினைக்கிறன் என்று மனிதனுக்கே சரியாக தெரியாத போது அதை கணினிக்கு கற்றுக்கொடுப்பது என்பது சுலபம் இல்லை.

செயற்கை நுண்ணறிவின் சிறந்த பயன்பாடுகளின் பட்டியல் இங்கே-

1. ஸ்மார்ட் கார்கள்

இது கூகிளின் சுய-ஓட்டுநர் கார் திட்டத்தையும் டெஸ்லாவின் "தன்னியக்க" திட்டத்தையும் கொண்டுள்ளது. மேலும். செயற்கை நுண்ணறிவானது முதல் வீடியோ விளையாட்டின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது.

2. மோசடி கண்டறிதல்

மோசடிகளை கண்டறிவதற்கு AI ஐ பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பல மோசடிகள் எப்போதும் வங்கிகளில் நடக்கின்றன, இவற்றில் 90% AI யின் துணை கொண்டே கண்டறியப்படுகிறது.

3. ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவு

ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவில் AI முக்கிய பங்கு வகிக்கிறது. பல வலைத்தளங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடி அரட்டை விருப்பம் உள்ளது. பொருட்கள் ரீதியான தேவையான உதவிகளை இது நமக்கு வழங்குகிறது, பல சந்தர்ப்பங்களில், நமது சந்தேகங்களுக்கு பதிலளிப்பது உள்ளீடு கொடுக்கப்பட்ட ஒரு கணிணி மட்டுமே ஆகும்,

4. இதயத் தாக்குதல்களை தடுத்தல்

இப்போதெல்லாம் மருத்துவத்துறையில் உயிர்களை காப்பாற்ற AI பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத் தரவுகளை நுட்பமாக ஸ்கேன் செய்ய இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், நோயாளிக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இருந்தால் எளிதில் கணிக்க முடியும்.

5. தயாரிப்பு

செயற்கை நுண்ணறிவு உற்பத்தி நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி பொருட்களுக்கு உபயோகிக்கிறோம். மேலும் உற்பத்தி பொருட்களில் மாற்றங்களை AI ஐ பயன்படுத்தப்படுகிறது.

6. பொறியியல் வடிவமைப்பு & இரசாயன பகுப்பாய்வு

இது நிபுணத்துவ வரைபடங்கள் மற்றும் இரசாயனத் தொகுப்புகளை வடிவமைக்கப் பயன்படுகிறது.

செயற்கை நுண்ணறி எங்கே தேவைப்படுகிறது ?

இது நீங்கள் கணினி விளையாட்டுகள் விளையாடியிருந்தால் தெரிந்திருக்கும். நீங்கள் இந்த அசைவை செய்தால் என்ன செய்ய வேண்டும், தாக்கினால் என்ன செய்ய வேண்டும், மறைந்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என மனிதனை ஒத்த செயல்களை செய்யுமாறு குறியீடு செய்யப்பட்டிருக்கும்.

சரி, இங்கு மட்டும் தானா? இல்லை. உங்கள் திறன்பேசியில் உள்ள Google Assistant, Siri , Cortana கூட ஒரு செயற்கை நுண்ணறிவு தான். இப்போது டெசுலா நிறுவனத்தின் சுய ஓட்டுதல் தொழில்நுட்பமும் கூட செயற்கை நுண்ணறிவை தான் பயன்படுத்துகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால், இயந்திர மனிதன் (robot) இந்த செயற்கை நுண்ணறிவை தான் பயன்படுத்துகின்றது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இந்த நிரல்களை இயக்க, அதிக திறனுடைய கணிணிப்பாகங்கள் தேவை. செயற்கை நுண்ணறிவு எந்த அளவு மனிதனின் செயல்களை ஒத்த செயல்களை செய்ய முற்படுகிறதோ, அந்த அளவு அதிக திறனுடைய கணிணிப்பாகங்கள் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல தகவல்களை அறியத் தந்த, நல்லதொரு கட்டுரை. நன்றி அம்பனை. 

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அம்பனை!

இப் பதிவின் மூலத்தை / இணைப்பை குறிப்பிட மறக்க வேண்டாம். சுய ஆக்கமெனில் அதனை குறிப்பிடுங்கள். 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான பகிர்வு அம்பனை, தொடருங்கள்......!   👍

Link to comment
Share on other sites

1. ஸ்மார்ட் கார்கள்

இது கூகிளின் சுய-ஓட்டுநர் கார் திட்டமானது வெமோ என்ற பெயர் கொண்டுள்ளது. டெஸ்லாவின் "தன்னியக்க" திட்டத்தை கொண்டுள்ள வாகனங்கள் வேண்டுமா பொழுது செயல் கொள்ள வைக்க முடியும். 

முதல் பயனாக வீதி விபத்துக்கள் இல்லாமல் போகும். காரணம், வாகனங்களுக்கு இடையில் பேணப்படும் இடைவெளி இதை செயற்கை நுண்ணறிவு உறுதிப்படுத்தும். இதனால், வாகன காப்புறுதி தேவைகள் வலுவாக குறைந்துவிடும். அடுத்து, எரிபொருள் சேமிப்பு. சாதாரண மனிதன் உணர்வுகளுக்கு கட்டுபட்டவன், ஆனால், செயற்கை நுண்ணறிவுக்கு அது கிடையாது, எனவே, வேகம் கூடி குறைவது மற்றும் வீதி விதி முறைகளை பேணுவது என்பனவற்றை நேர்த்தியாக நிறைவேற்றும். இது, புவி வெப்பமடைதலை கூட குறைக்க உதவும்.  

ஆக, வாகன ஓட்டுனர்கள் என்ற வேலை கூட குறைந்து இல்லாமல் போகும் சாத்தியம் உள்ளது. அதேவேளை, இது சம்பந்தமான புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தரும். ஏனெனில்,  செயற்கை நுண்ணறிவு தானாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமை கொண்டதானாலும் அதற்கு அந்த சிந்தனை திறனை மனிதனே வடிவமைத்து கொடுத்துள்ளான். சிந்தனை திறனை மனிதனாலேயே வடிவமைக்க, சிறப்பிக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்திற்கு ஏற்ற பதிவு..

கடந்த மாதம் அவுஸ்ரேலிய வங்கிகளில் ஒன்றான Westpac, Red எனும் chatbotஐ அறிமுகப்படுத்தி உள்ளது.. இதன் மூலம் அதன் வாடிக்கையாளர்கள் பயனடைந்தாலும் பலபேர் வேலைகளை இழக்கும் நிலை கூட வரலாம். AI மூலம் நன்மைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்ற பயம் கூட எழுகிறது.. 

https://www.afr.com/business/banking-and-finance/westpac-turns-on-ai-chatbot-as-cost-pressures-mount-20190507-p51ksr

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.