• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பெருமாள்

முஸ்லிம்கள் வர்த்தகம் செய்ய தடை: வென்னப்புவ பிரதேசசபை அதிரடி!

Recommended Posts

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேசசபை தடை விதித்துள்ளது.

நாட்டு நிலை சுமுகமடையும் வரை முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர், பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.65557801_10216612250872980_298473386962365557801_10216612250872980_2984733869623738368_n-225x300.jpg

http://www.pagetamil.com/61779/?fbclid=IwAR0KwfZZ3aSAQZ8R22mcqz_WmEXK-Xz-XqTAyRmQx2FKfHQT5RjwdHkFzeE

Share this post


Link to post
Share on other sites

இதில்  எனக்கு  உடன்பாடில்லை

ஆனால்  எமக்கெதிராக  இவ்வாறு நடக்கும்போது

அவர்கள் விலகியாவது  இருந்திருக்கவில்லை

Share this post


Link to post
Share on other sites

ஏப்ரல் 22ம் திகதி, குண்டுகள்  வெடித்த மறுநாள் நான் பதிவு செய்திருந்தேன்....

முஸ்லீம் மக்களின் பொருளாதார வளம் இலக்கு வைக்கப்படும். அவர்களது அரசியல் பலம் தகர்க்க நடவடிக்கை எடுப்பார்கள். முக்கியமாக, கிழக்கின் ஹிஸ்புல்லா, றிசாட் அரசியல் முடக்கப்படும் என்றும்.... சர்வதேச நிலைமைகளினால், முஸ்லிம்கள் என்ற மத ரீதியான நிலைப்பாட்டினை விடுத்து, தமிழ் பேசும் தமிழர்களாக சேர்ந்தால் மட்டுமே இலக்கைத்தீவில் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு...

அதுவே நடக்கின்றது.
 

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் அடிமட்ட முஸ்லீம்கள்தான் பாதிக்க பட போகிறார்கள்  அவர்களுக்கும்  தெரியும் ஆனால் அவர்களின் பணக்காரா அரசியல் தலைமைகளில் இருந்து தப்பி அவர்களால் ஒரு இம்மியும் தூக்கி போட ஏலாது இப்படியான நடவடிக்கைகள் மூலமே அவர்களின் உண்மைத்தன்மையை அவர்கள் அறிய வைக்கலாம் ஆனால் சிங்களம் அவர்களை நோக்கி இலக்கு வைத்து விட்டது எம்மை அழித்த பட்டறிவுடன் இவர்களை அழிக்கும் அடக்கும் இதே கல்முனை பிக்குகள் நாம் அழியும்போது எங்கிருந்தவர்கள் இன்று தமிழனுக்கு நீதி இல்லாவிட்டால் தற்கொலை என்று பிக்கு அறைகூவல் விடுபவரை பார்த்து கேட்கணும் மே 18 எங்கை இருந்தவர் என்று ?

Edited by பெருமாள்

Share this post


Link to post
Share on other sites

வென்னப்புவ பகுதிகளில் வாழும் கரையேர கிறிஸ்தவ சிங்களவர்கள் கடும் துவேசம் மிக்கவர்கள். இத்தாலி சிங்களவ‌ர்களே அதிகம். 

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, colomban said:

இத்தாலி சிங்களவ‌ர்களே அதிகம். 

இத்தாலி ????

த்தாலி ?????

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

இத்தாலி ????

த்தாலி ?????

Italy

Share this post


Link to post
Share on other sites
Just now, colomban said:

Italy

Portuguese - ✔️

Holland   - ✔️

British - ✔️

Italy - ?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

Portuguese - ✔️

Holland   - ✔️

British - ✔️

Italy - ?

இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம்.

கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே.

இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

 தமிழ் பேசும் தமிழர்களாக சேர்ந்தால் மட்டுமே இலக்கைத்தீவில் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு...

அதுவே நடக்கின்றது.
 

தயவு செய்து நடப்பதை கதையுங்கள். 

  • Haha 2

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, Dash said:

தயவு செய்து நடப்பதை கதையுங்கள். 

இப்போது நடப்பதை நீங்கள் சொல்கிறீர்கள்.

பின்னர் நடக்கப்போவதை நான் சொல்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites
57 minutes ago, goshan_che said:

இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம்.

கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே.

இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.

உண்மை

 

Share this post


Link to post
Share on other sites
Just now, விசுகு said:

உண்மை

 

அப்ப, நீங்களும், புங்கையரும் ஊருக்கு திருப்பினால், புங்குடுதீவு வாசிகள் என்று சொல்லாமல், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று சொல்லலாமோ?

கொழும்பான் ஏதோ போட்டிருக்கிறார். அவர் வந்து விளப்பம் தருவார் என்று நினைக்கிறேன். 

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Nathamuni said:

அப்ப, நீங்களும், புங்கையரும் ஊருக்கு திருப்பினால், புங்குடுதீவு வாசிகள் என்று சொல்லாமல், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று சொல்லலாமோ?

கொழும்பான் ஏதோ போட்டிருக்கிறார். அவர் வந்து விளப்பம் தருவார் என்று நினைக்கிறேன். 

நாதமுனி 

இத்தாலியில் அனேகர் சிங்களவர்கள் மேலும் இவர்கள் மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் போலல்லாது. ஒருவித மதாவியர்கள், முரடர்கள், படிப்பறிவில்லாதவர்கள். கீழ்த்தட்டு மக்கள், unskilled laborers.


பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இத்தாலியில் இருப்பார்கள். இப்படி இருப்பதனால் அவர்களுக்கு ஒருவித சமூக அந்தஸ்து கிடைகின்றது. இந்த அர்த்தத்தில் தான் கூறினேன். இவர்கள் இத்தாலி சிங்களவர்கள் என்று வேறொன்றுமில்லை.  

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Nathamuni said:

இப்போது நடப்பதை நீங்கள் சொல்கிறீர்கள்.

பின்னர் நடக்கப்போவதை நான் சொல்கிறேன்

நடக்க போவதே இல்லை, அவர்களது இலக்கு முழு வடக்கு கிழக்கையும் இஸ்லாமிய மயப்படுத்துவது‌..... நாம் வடக்கை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கு அனுமதித்தால் மட்டுமே அது சாத்தியம்

இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழ் முகவர்களை  வைத்தது  காணி வாங்குவது. இப்படி ஒருவர் அறியாமல் காணி விற்று இப்பொழுது சுன்னாகத்தில் பள்ளி வாசல் வருகுதாம் என கேள்வி..‌.. அதை விட வவுனியாவில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றங்களை பார்த்தால் எவ்வளவு காலம் எமது இனத்தால் தாக்கு பிடிக்க முடியும் என்ற கவலை எழுகிறது ..!!

 

 

 

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, Nathamuni said:

அப்ப, நீங்களும், புங்கையரும் ஊருக்கு திருப்பினால், புங்குடுதீவு வாசிகள் என்று சொல்லாமல், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று சொல்லலாமோ?

கொழும்பான் ஏதோ போட்டிருக்கிறார். அவர் வந்து விளப்பம் தருவார் என்று நினைக்கிறேன். 

நான்  உண்மை  என்று  சொன்னது இத்தாலியில் சிங்களவர்பெரும்பான்மை  என்பதற்கே  ராசா

 

அப்புறம்

முன்பு  சிங்கப்பூர் பென்சினியர்மார் என்று  இருந்தது போல்

இனி  பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று வரும்  போலத்தான் கிடக்கு

ஏனென்றால் இனி  பென்சினியர்மார்   மட்டும் தான் 

புங்குடுதீவில்   இருக்கப்போகிறார்கள்  என உணரமுடிகிறது

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, Dash said:

அதை விட வவுனியாவில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றங்களை பார்த்தால் எவ்வளவு காலம் எமது இனத்தால் தாக்கு பிடிக்க முடியும் என்ற கவலை எழுகிறது ..!!

வறுமையிலுள்ள மக்களுக்கு பண உதவி செய்வதாக கூறி தான் பல மதமாற்றங்கள் நடக்கின்றன. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உதவி செய்திருந்தால் பல மதமாற்றங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்த கூட்டமைப்பு இதில் எங்கே கவனம் செலுத்தப்போகிறது?

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, Dash said:

நடக்க போவதே இல்லை, அவர்களது இலக்கு முழு வடக்கு கிழக்கையும் இஸ்லாமிய மயப்படுத்துவது‌..... நாம் வடக்கை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கு அனுமதித்தால் மட்டுமே அது சாத்தியம்

இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழ் முகவர்களை  வைத்தது  காணி வாங்குவது. இப்படி ஒருவர் அறியாமல் காணி விற்று இப்பொழுது சுன்னாகத்தில் பள்ளி வாசல் வருகுதாம் என கேள்வி..‌.. அதை விட வவுனியாவில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றங்களை பார்த்தால் எவ்வளவு காலம் எமது இனத்தால் தாக்கு பிடிக்க முடியும் என்ற கவலை எழுகிறது ..!!

 

 

 

அதெல்லாம் கவலைப்படாதீங்க.

நம்ம ஞானசேரர், சும்மா அதிர வைப்பார். கல்முனை விசயம் போல, இந்த விசயங்களையும் காதில் போட்டு வைக்க வேண்டும்.

சம்பந்தர் கோஸ்டிக்கு, ரவூப் கக்கீம் என்ற தலையை காட்டிக் கொண்டு, ஹிஸ்புல்லா, ரிசாத் போன்ற வால்கள், அதே சுத்துமாத்துக்களை தமிழர்களுக்கு எதிராக செய்வது இனி கஸ்டமான வேலை.

சும்மாவா சொன்னார்கள், சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் பார்க்க, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று.

வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டால் பல விட்டுக் கொடுப்புகள் சாட்சிக்காரர் கோரினர்.

இப்போது, வடக்கு, கிழக்கு இணைப்பு தானே நடக்கும். காரணம் அவர்கள் பாதுகாப்பு.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பிள்ளை பெறும் இயந்திரங்களாக முஸ்லிம்கள் பயன்படுத்தியுள்ளார்கள்..

தமிழ் பெண்களை மதம்மாற்றி இரண்டாவது அல்லாது மூன்றாவதாக   மணம் முடித்து பிள்ளை பெறும் இயந்திரங்களாக முஸ்லிம்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என அதுரலியே ரதனன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

தனக்கு கிடைத்த தகவல்களில் அடிப்படையில் 90 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எண்னிக்க தொடர்பில் வாத விவாதம் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

 

தான் வடக்கு பகுதிக்கு சென்ற போது இது விடயமாக அங்கு மக்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளா

https://www.madawalaenews.com/2019/06/blog-post_914.html

 

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Nathamuni said:

வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டால் பல விட்டுக் கொடுப்புகள் சாட்சிக்காரர் கோரினர்.

இப்போது, வடக்கு, கிழக்கு இணைப்பு தானே நடக்கும். காரணம் அவர்கள் பாதுகாப்பு.

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்து சட்ட ரீதியாக பிரித்தது JVP.

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, Lara said:

வறுமையிலுள்ள மக்களுக்கு பண உதவி செய்வதாக கூறி தான் பல மதமாற்றங்கள் நடக்கின்றன. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உதவி செய்திருந்தால் பல மதமாற்றங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்த கூட்டமைப்பு இதில் எங்கே கவனம் செலுத்தப்போகிறது?

இதற்கு கூட்டமைபை தவறு சொல்ல வேண்டாம்; வறிய மக்களுக்கு உதவ வேண்டியதே புலம்பெயர் மக்கள் இலகுவாக  செய்ய கூடியது

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களுக்குத் தடை

வென்னப்புவ, தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தங்கொட்டுவ-சந்தையில்-முஸ்லிம்களுக்குத்-தடை/175-234561

வென்னப்புவ , தங்கொட்டுவ ... அடுத்து ...

Share this post


Link to post
Share on other sites

பொருட்கள் வாங்க வருகின்ற, முஸ்லிம்களை தடுப்பீர்களா..? தடுமாறிய வென்னப்புவ தவிசாளர்

 
unnamed.jpg
 

வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருடன் தொலைபேசியில் உரையாடக்கிடைத்தது.

 

முஸ்லிம் வியாபாரிகள் சந்தையில் வியாபாரம் செய்வது தொடர்பாக தற்காலிக தடை விதித்து கடிதமொன்றை பொலிசுக்கு அனுப்பினீர்களா?

 

ஆம், அனுப்பினேன். எனது பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்தேன்.

 

இந்த கடிதம் தொடர்பாக சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினீர்களா?

 

இல்லை, இது நான் தனிப்பட எடுத்த முடிவு.

 

இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையில் இவ்வாறான தடையொன்றை கொண்டுவர முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா?

 

( கதையை மாற்ற முயற்சித்தார்) .... இல்லை. அவ்வாறான தடை ஒன்றும் விதிக்க முயலவில்லை. எனது பிரதேச மக்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களது பாதுகாப்பை பொலிசார் உத்தரவாதப்படுத்தினால் முஸ்லிம்கள் கடைகளை வைப்பதில் பிரச்சினை இல்லை.

 

அது வரை இது தற்காலிக தடை.

 

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபை இவ்வாறான தீர்மானம் ஒன்றை சபையில் நிறைவேற்றிய போதும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் அதன் தவிசாளரை அழைத்து பொலிசார் அந்த தீர்மானம் தொடர்பில் எச்சரித்ததை அறிவீர்களா?

 

ஆம், ஆம் இது பொலிசார் எடுக்க வேண்டிய தீர்மானந்தான்.... மக்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்கவே நான் இந்த கடிதத்தை அனுப்பினேன் ( பிறகு கேள்விக்கு சம்பந்தமில்லாத பலதையும் பேசினார்)

 

இந்த நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் இருக்கும் ஆட்சியில் வெறுப்படைந்து மஹிந்த ராஜபக்‌ஷ பக்கம் சாயத்தொடங்கியிருந்த நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் அதற்கு பாதகமாக அமையாதா?

 

நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதனைத்தான் நாங்கள் சொல்கிறோம். நாட்டில் நடந்த சம்பவங்களை பார்த்தீர்கள்தானே இதற்கு யார் பொறுப்பு.... யார் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்று அரசு கண்டுபிடித்து சொல்ல வேண்டும். எங்களது கார்டினலும் எமக்கான நீதி கிடைக்கவில்லை என்றே சொல்கிறார்.

 

( நான் என்னமோ கேட்டால் அவர் என்னமோ சொல்கிறார்)

 

சரி இப்போது நீங்கள் முஸ்லிம் வர்த்தகர்களை பாதுகாப்பு கருதி வரவேண்டாம் என்று சொல்கின்றீர்கள். அப்படியென்றால் பொருட்களை வாங்குவதற்கு வருகின்ற முஸ்லிம்களையும் தடை செய்ய வேண்டுமே? அவர்களும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்தானே?

 

இந்தக்கேள்விக்கு அவர் தடுமாறிய விதத்தை எழுத்தில் வர்ணிக்க முடியாது.

 

Speechless என்றும் சொல்லலாம்.

 

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, Lara said:

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்து சட்ட ரீதியாக பிரித்தது JVP.

ஆம்...

வடக்கு, கிழக்கு இணைந்தால், தாம் சிறுபான்மையாகி, அதிகாரமற்றவராவோம் என ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிசாத் கோஸ்டிகள் கூறின.

கிழக்கின் அதிகாரம் கையில் வந்த நிலையில் நடந்த அவலத்தை ஏப்பிரல் மாதம்  நாடும், உலகமும் பார்த்தது...

இதன் காரணாகவே, வடக்கு கிழக்கு இணைப்பை சிங்களம் நடாத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, colomban said:

சரி இப்போது நீங்கள் முஸ்லிம் வர்த்தகர்களை பாதுகாப்பு கருதி வரவேண்டாம் என்று சொல்கின்றீர்கள். அப்படியென்றால் பொருட்களை வாங்குவதற்கு வருகின்ற முஸ்லிம்களையும் தடை செய்ய வேண்டுமே? அவர்களும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்தானே?

இந்தக்கேள்விக்கு அவர் தடுமாறிய விதத்தை எழுத்தில் வர்ணிக்க முடியாது.

Speechless என்றும் சொல்லலாம்.

பிரபல்யமான ( விலை கூடிய) கடைகளுக்கு வருபவர்களை அவர்களின் பைகளை சோதித்து தானே அனுமதிக்கிறார்கள், அவர்கள் சிங்களவர்கள் என்றாலும் கூட ?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • -இலட்சுமணன் உள்நாட்டு அரசியல் செயற்பாடுகளும் சர்வதேச அணுகுமுறைகளும், இலங்கை அரசியலுக்குத் தேவையான, தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்துள்ளன.  என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் தரப்பினரின் பிரிவினைப் போக்கும் சிங்கள தேசியவாத கட்சிகளின் ஒன்றிணைதலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிதைவும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கையறு நிலையும், இலங்கை அரசியலில் மீள முடியாத, தேசியவாத சிந்தனைகளின் வௌிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில், சிங்களத் தேசியவாத அரசை நிலைநிறுத்த, பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் முறையாகத் திட்டம் வகுத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதன் விளைவாக, வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில், பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி கூட்டு, தேர்தல் களத்தில் குதிக்கும்.  இதன் நோக்கம், அறுதிப் பெரும்பான்மையைச் சிங்கள மக்களிடமிருந்து அறவீடு செய்து கொள்வதே ஆகும். தாம் வடக்கு, கிழக்கு மக்களை நம்பவில்லை; சிங்கள மக்களையும் அவர்களின் அதிகாரத்துடனான அரசாங்கத்தையும் ஸ்தாபிப்பதாகவே அமையும். மேலும், இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையைத்தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைச் செயற்பாடு தொடர்பான 31/1 இணை அனுசரணையில் இருந்து வெளியேறியதன் மூலம், சிங்கள தேசத்தின் காவலர் தாமே என்பதையும் சிங்கள மக்களின் நாயகர்களாகத் தம்மை அமைத்துக்கொள்வதையும் தமிழருக்குத் தமது ஆட்சியில் தீர்வு இல்லை என்பதையும் பிரசாரப்படுத்துவதாக அமைந்துள்ளது.  இவற்றைவிட, பட்டதாரிகள் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி அப்பணி தொடர்வதாக அறிவித்திருப்பதும் அதைச் செயலில் காட்டி இருப்பதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்களித்தது போல், எதிர்வரும் மாதத்தில் 1,000 ரூபாய் வேதனம் வழங்க முன்வந்தமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய காய்நகர்த்தல்கள் ஆகும்.  இவற்றைவிட, நின்று போயிருந்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், 50 ஆயிரம் வேலை வாய்ப்பை முதற்கட்டமாக, எதிர்வரும் வாரத்தில் வழங்க  முனைந்துள்ளதுமான செயற்பாடுகள், நுகர்வோர் நலன் கருதி 15 ஆயிரம் பொருள்களுக்கு விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள், தேர்தல் பிரசாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.  “இது சிங்கள நாடு; சிங்கள மக்கள்; சிங்கள ஆட்சி; பௌத்த மதம்; நாட்டைப் பாதுகாக்க எம்மால்தான் முடியும்” என, மிக இறுக்கமான உசுப்பேற்றலும் பிரசார வியூகமாக அமைந்துள்ளது.   இத்தகைய சூழலில், ஐ.தே.க பலம் குன்றிய நிலையில், இந்தப் பிரசார யுத்திகளுக்கு முகம்கொடுத்து, எவ்வாறு தாக்குப்பிடிக்க போகிறது? ஐ.தே.கவுக்குள் தோன்றியுள்ள குத்து வெட்டுகள், போட்டியாளர்களின் வியூகங்களுக்கான எதிர் வியூகங்களை வகுக்க முடியாத சூழலை உருவாக்கி உள்ளதுடன், இம்முறை சிங்கள இனவாதத்தைக் கையில் எடுத்தே தீரும். அதன் வெளிப்பாடே, இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத்தடை விதித்தபோது, சஜித் பிரேமதாஸ வெளியிட்ட ஊடக அறிக்கை ஆகும்.  எனவே, இன்றைய சூழலில், ஐ.தே.க இனவாதத்தை கையில் எடுப்பதால், தமிழர் தரப்பும் முஸ்லிம் தரப்பும் போக்குக்கு இடம் இன்றி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்குதாரர்களாக முடியாத சூழலை, முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு அரசாங்கம் வெளிகாட்டி இருப்பதும் அரசாங்கத்தின் மனநிலையைப் புரியவைத்துள்ளது.  தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில், கடந்த 72 வருட காலத்தில் உரிமை, சலுகை, எதிர்ப்பு அரசியல் செய்ததன் மூலம், எதையும் அடையவும் இல்லை; சாதிக்கவும் இல்லை. தமிழ் அரசியல் தலைவர்கள், உரிமை அரசியலின் பெயரால், அவர்களே சுகபோகத்துடன் வாழ்ந்துள்ளனர்; சலுகைகளை அனுபவித்து உள்ளனர் என்ற நிலைப்பாடு, மிகமிக வேகமாக மேலெழுந்து வருகிறது.  கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் அதிகார மய்யங்களும் முன்னெடுத்த செயற்பாடுகள், தம்மை ஆதரித்த மக்களை அவர்கள் கண்டு கொள்ளாதமை, தீர்வைப் பெற்றுத் தருவோம் என வாக்குரைத்து, அதுவும் கைநழுவிப் போனதுமை போன்ற விமர்சனங்கள் தமிழ் மக்களைக் கடுமையாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளன.  அத்துடன், தேர்தல்களின்போது தீர்வு தொடர்பாகப் பிரஸ்தாபிப்பதும் ஐக்கியமாகச் செயற்பட்டு தமிழரின் பலத்தை வௌிக்காட்டுவதன் மூலமே, தமிழ்த் தேசிய உரிமையையும் தீர்வையும் பெறலாம் என்ற தமிழ் அரசியல்வாதிகளின் பிரசாரமும் தேர்தல் முடிந்த பின்னர் கையறு நிலைமைகளும் கூட, இம்முறை தமிழ் மக்களைச் சிந்திக்கத் தூண்டியுள்ளன.  இந்த அடிப்படையில், தேர்தல் பிரசாரத்தின் மூலம், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் ஏதும்  இல்லை. ஏனெனில், அரசமைப்பு செயலிழந்து விட்டது; ஐ.நா தீர்மானம் கைநழுவிப் போய்விட்டது. ஒப்பந்தம் செய்தவர்களே அதிலிருந்து விலகுவதால், அது நீர்த்துப்போன ஒன்றே ஆகும். சர்வதேசமும் இந்தியாவும் தமிழர் தீர்வு விடயத்தில், அதன் தேச நலன் சார் விடயங்களை விடுத்து தலையிடப் போவதில்லை.  தமிழர் பிரச்சினை என்பது, சர்வதேச நாடுகளின் அரசியல், வியாபாரம், பாதுகாப்பு போன்ற நலன்களுக்குப் பாதகம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், மூக்கை நுழைப்பதற்கான ஒரு துரும்பே தவிர, இதயசுத்தியுடன் தமிழரும் தமிழ் அரசியல் தலைவர்களும் கனவு காணும் அளவுக்கு, எந்தவித யதார்த்தமான சூழ்நிலைகளும் காணப்படவில்லை.  இது தமிழ்த் தலைமைகளுக்கும் தெரியும்.  ஆயினும், தமது கையாலாகாத்தனத்தை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கே, தமது பிரசாரங்களில் இந்தியாவையும் சர்வதேசத்தையும் இழுத்துவிட்டு, அவர்கள் தீர்வு தருவார்கள் எனத் தமிழர்களை நம்ப வைக்க முனைகின்றனர்.  எனவே, இந்த அரசியல் அணுகுமுறை தமிழ்ப் பகுதிகளில், தமிழ் மக்களை விழிப்படைய வைத்துள்ளது. தமிழர்கள், 70 வருடங்களுக்கு மேலாக, அஹிம்சை வழி, ஆயுத வழி எனப் போராடியும்  தமிழர் பிரச்சினையை, சர்வதேச விவகாரம் ஆக்கியும், போர் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவு  பெற்ற பின்னரும், சிங்கள தேசியவாத அரசாங்கம், தமிழருக்குப் பிரச்சினை இல்லை; இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதாகவே கூறி வருகின்றது. இப்பொழுது, அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு வழங்கினால் போதும் என, வெளிப்படையாக அறிவித்திருப்பதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் இனி ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதையும் தெளிவாக மக்கள் புரிந்துள்ளார்கள்.  இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து பிரிந்து சென்ற மாற்றுத் தலைமைக்காரரும் தமிழ்த் தேசிய முன்னணியும் ஆனந்தசங்கரியின் புதிய கூட்டும் இனி எதைச் சாதிக்க போகின்றன. மேலும், கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகள், மக்களின் ஆதரவைப் பெறவில்லை. மேலும், “தமிழருக்குத் தீர்வைத் தர மாட்டோம்” என்று, அரசாங்கம் அடித்துச் சொல்லியுள்ள சூழலில், விக்னேஸ்வரனின் ‘சமஷ்டி’, கஜேந்திரகுமாரின் ‘ஒரு நாடு; இரு தேசம்’ எவ்வாறு சாத்தியமாகும். கூட்டமைப்பினர், துரோகிகள் எனச் சொல்லும் இவர்கள், தமது தீர்வை மீண்டும் மீண்டும் பேசுவோம் எனக் கூட்டமைப்பு பாணியில் சொல்வார்களா? அல்லது, விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் அணியினர் மீண்டும்  ஆயுதப்போராட்டத்தைத் தங்கள் தலைமையில் தொடங்கப் போகிறார்களா?  ஆனந்தசங்கரியின் கூட்டு, தமது கட்சி ஒன்று இருப்பதாகத் தேர்தலில் காட்டிக் கொள்வதற்கான ஒரு கூட்டு. இந்த வகையில், இம்முறை ஆளும் தரப்புச் சார்பாக போட்டியிடும் கட்சிகள் பக்கம், மக்கள் பார்வை கணிசமாகத் திரும்பக் கூடிய சூழல் தோன்றியுள்ளது.  ஆளும் பக்கம் சேர்ந்தால், ஏதாவது கிடைக்கும் என எதிர்பார்க்கும் சலுகை அணி, தமிழ் அரசியலில் விரக்தியுற்ற மக்களின் ஆதரவும் அரசாங்கத்தின் பக்கம் சாயும் சூழல் மேலோங்கியுள்ளது. இந்நிலைமை, இக் கட்சிகளில் போட்டியிடுபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தாலும், பொதுஜன பெரமுன வகுத்த வியூகத்தில் வடக்கு, கிழக்கில், ஐக்கிய சுதந்திர முன்னணி தேர்தலில் போட்டியிடும் என அறிவித்து, கருணா அம்மானை அதன் தலைவராக நியமித்திருப்பது, கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அல்லது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கான வாக்கு சதவீதத்தை எடுத்தால் மாத்திரமே, அரசியல்  பங்காளிகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு எதுவும் இல்லை. மாறாக, கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைப்பதற்கான ஒரு மூலோபாயமும் ஆகும்.   எனவே, பொதுஜன பெரமுனவின் தேர்தல் வியூகம், தமிழ்ப் பிரதேசங்கில் தோல்விகளை மறைப்பது; ஆட்சியில் பங்காளிகள் ஆகாமல் இருப்பது; சிங்களப் பகுதிகளில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதன் மூலம், சிங்கள மக்களின் முழுமையான ஆதரவை பெற்றவர்களாக, தம்மைச் சிங்கள மக்களே தேர்ந்தெடுத்தார்கள் என்பதை வௌியுலகுக்கு காண்பிப்பதாகும்.   எனவே, தமிழ்த் தரப்புக்கு இம்முறை தேர்தல் பிரசாரத்துக்கு ‘வாய்க்கு அவல் ஒன்றும் இல்லை’. வெற்றிக்காகக் கடந்த காலங்களைப் போல் செயற்பட முடியாது. ‘கல்லிலே நார் உரிப்பார்கள்’ இல்லாவிட்டால், வீட்டில் இருப்பார்கள்.  தமிழ்த் தலைவர்கள் எதைச் சிந்திக்கிறார்கள் என்பது, தமிழ் மக்களுக்குப் புரியவில்லை. எனவே, மாற்றம் நிகழுமா என்பது, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ் தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த ஆப்பு வைக்கும் தேர்தல் வியூகத்துக்குள் என்பதே, இன்று உள்ள கேள்வியாகும்.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆபப-வககம-தரதல-வயகம/91-246142
    • புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 07:11 - 0     - 1   ஜனாதிபதித் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ராஜபக்‌ஷர்கள், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற இலக்கோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம், 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து வெளியேறும் வரையில் தாம் வைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு அப்பாலான நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையையும் மீண்டும் அடைந்துகொள்ளலாம் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. ராஜபக்‌ஷர்களைத் தோற்கடித்து வெளியேற்றியதும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கில், ரணில் - மைத்திரி அரசாங்கத்தால், 19ஆவது திருத்தச் சட்டம்  நிறைவேற்றப்பட்டது. அது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு எதிரான திருத்தமாகச் சொல்லப்பட்டாலும், அதன் சரத்துகளில் ராஜபக்‌ஷர்களின் அரசியல் எழுச்சிக்கு எதிரான விடயங்களும் மறைமுகமாகச் சேர்க்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி வேட்பாளர், 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற விடயம் அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. அது, 2020 ஜனாதிபதித் தேர்தலில், நாமல் ராஜபக்‌ஷ வேட்பாளராக வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டது. ஆனால், ரணில் - மைத்திரியின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கி, பௌத்த சிங்கள பேரினவாதத்தைப் பெருந்தீயாக எரியவிட்டுக் கொண்டு, ராஜபக்‌ஷர்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றார்கள். அதுவும், கட்சியிலிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு ஒதுக்கப்பட்ட கட்டத்திலிருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்கள் மீள எழுந்திருக்கிறார்கள். பேரினவாதத்தின் மூலம் அதனை அடைய முடியும் என்று அவர்கள் முழுமையாக நம்பிக்கொண்டு, புதிய கட்சியை அமைத்து, எழுபது வருடப் பாரம்பரியம் கொண்ட இரண்டு கட்சிகளைப் புறந்தள்ளி முதலிடத்துக்கு வந்திருக்கிறார்கள். பொதுத் தேர்தலில் அறுதிக் பெரும்பான்மையுடனான வெற்றியை அடைவது தொடர்பில் அவர்களுக்கு எந்த நம்பிக்கையீனமும் இல்லை. ஆனால் அவர்கள், அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டி, அரசமைப்பில் மற்றவர்களின் தலையீடுகளின்றித் தாம் விரும்பியவாறான மாற்றங்களைச் செய்வதற்கான வெற்றியை நோக்கியே இயங்குகிறார்கள். அதற்காகத்தான், அவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி தேவைப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களும் அவர்களுக்கு ஒரு விதத்தில் உதவின. அதுபோல, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளும், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான வெளிப்படையாக உதவப்போகின்றன. நாட்டின் நீண்டகால நலன்களுக்கு, ராஜபக்‌ஷர்களின் அரசியலில் இடமிருப்பதில்லை. அவர்கள், அதிகாரத்தின் குவிப்பு தொடர்பிலேயே நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக, எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள். 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது முதல், ராஜபக்‌ஷர்கள் அதனையே நிரூபித்து வந்திருக்கிறார்கள். இலங்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையை முழுவதுமாக எதிர்ப்பதாக, அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட காலம் முதல் ராஜபக்‌ஷர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில், தேர்தலில் வெற்றிபெற்றால், குறித்த பிரேரணைக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்றும் அறிவித்திருந்தார்கள். இன்றைக்கு (பெப்ரவரி 26, 2020 புதன்கிழமை) அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை, மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வெளியிட இருக்கின்றார். இது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் இந்த நடவடிக்கை, இலங்கையில் உண்மையான நீண்டகால நலன்களுக்குத் துணையாக இருக்குமா என்றால், இல்லை என்பதே பதில். ஏனெனில், உடலில் காயங்கள் இருக்கும் போது, அதனை மருந்திட்டுக் குணப்படுத்தாமல், அந்தக் காயங்களை மறைப்பதால் உடலுக்குத்தான் கேடு. நாட்டிலுள்ள பிரச்சினைகளின் முக்கிய கட்டங்களைப் பொறுப்புக்கூறல் என்ற நியாயமான நடவடிக்கைகளின் மூலம் கடக்க முடியும் என்பதே அடிப்படை. அந்த அடிப்படையைப் புறந்தள்ளிவிட்டுச் செய்யப்படுகின்ற எவையும், குறுகிய நலன்கள் சார்ந்ததுதான். ஐ.நா பிரேரணையில் இருந்து வெளியேறுவது, தற்போதைக்கு தங்களுக்கு அதிகாரத்தை முழுமையாக அடைவதற்கு உதவும் என்பது ராஜபக்‌ஷர்களின் நம்பிக்கை. அத்தோடு, தற்போதுள்ள சர்வதேச அரசியலில் கட்டங்களில், தங்களுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை என்பது, அவர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், கடந்த ரணில் - மைத்திரி அரசாங்கம், இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் அடங்கிய விடயங்களைச் சர்வதேச ரீதியில் நெகிழ்வுப்படுத்தி வைத்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது சந்தித்த நெருக்கடிகளுக்குச் சமமான நெருக்கடிகள், மீண்டும் எழுவதற்கு வாய்ப்பில்லை என்பது அவர்களின் உள்ளுணர்வு. அப்படியான கட்டத்தில், எந்த எல்லை வரையிலும் சென்று ஆட முடியும் என்ற அந்தக் கட்டத்தை நோக்கியே, ராஜபக்‌ஷர்கள் மீண்டும் நகரத் தொடங்கியிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இராணுவம் இழைத்ததாகச் சொல்லப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தவர்களில், தற்போதைய இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா முக்கியமானவர். அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிரான நுழைவுத் தடையின் மூலம், ராஜபக்‌ஷர்கள் மீது அமெரிக்கா நெருக்கடியை வழங்கும் கட்டத்தை ஆரம்பித்திருப்பதாகச் சில தரப்புகள் நம்புகின்றன. ஆனால், தன்னுடைய நாட்டின் முன்னாள் பிரஜையுடனான இணக்கப்பாட்டின் பிரகாரமே, அமெரிக்கா இலங்கை தொடர்பிலான சில இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்திருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இராணுவத் தளபதிக்கு எதிரான தடை என்பது, ராஜபக்‌ஷர்களுக்கான வெற்றியின் அளவை அதிகரிக்கும் நோக்கிலான நடவடிக்கை என்று மனோ கணேசனே குற்றஞ்சாட்டுகிறார். வெளிப்படையான அடைவுகள் சார்ந்து அந்தக் குற்றச்சாட்டில் பாரிய உண்மை இருக்கவும் செய்கின்றது. ஆனால், ஓர் இராஜதந்திர நகர்வு என்பது, வெளிப்படையான அடைவுகளைக் காட்டிலும் மறைமுகமான அடைவுகளிலேயே அதிக அக்கறையோடு இருக்கும். இராணுவத் தளபதிக்கு எதிரான தடையை, தேர்தலொன்று அண்மித்திருக்கின்ற நிலையில் அமெரிக்கா விதித்திருப்பதானது, ஆழமாக நோக்கப்பட வேண்டியதுதான். ஏனெனில், அது கடந்த காலத்தில் ராஜபக்‌ஷர்களுக்கும் அமெரிக்காவுக்கும் இருந்த முரண்பாடுகளைப் பொது வெளியில் தக்க வைத்துக்கொண்டு, இரகசியமான முறையில் இணக்கமான நிலையொன்றை ஏற்படுத்தும் போக்கிலானதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. ஏனெனில், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கின்ற தலைமைகளைத் தவிர்த்துவிட்டு, இரண்டாம் மூன்றாம் கட்ட நபர்களைக் குறிவைப்பதென்பது, நீதியின் போக்கிலானது அல்ல. அதனால், ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான நுழைவுத் தடையை வெற்றியாக அறிவிப்புச் செய்யும் தரப்புகள், நின்று நிதானித்து அறிக்கையிட வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில், அவசரப்பட்டு வெற்றி அறிவிப்பை வெளியிட்டு புளகாங்கிதப்பட்டு விடயங்களில் கோட்டைவிடாமல், கவனமாக இருக்க வேண்டும். ஜெனீவா விடயத்திலும், அதாவது 30/1 ஐ.நா பிரேணையில் இருந்து இலங்கை வெளியேறுவது, ராஜபக்‌ஷர்கள் மீதான அழுத்தங்களை ஏற்படுத்தும் என்ற நிலை, ஆராயப்பட வேண்டியது. ஏனெனில், தேர்தல் காலங்களில் மேடைகளில் வெளியிட்ட எல்லா அறிவிப்புகளையும் எந்தக் கட்சியும் முழுவதுமாகச் செய்ததில்லை. அப்படியிருக்கின்ற நிலையில், தேர்தல் வெற்றிகளை இலக்காக வைத்து ஐ.நா பிரேரணையில் இருந்து விலகும் அறிவிப்பை ராஜபக்‌ஷர்கள் கையாண்டிருக்கிறார்களா என்றும் மறுவளமாக நோக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில், சமயோசிதமான தலைவர்களைக் காட்டிலும், துடுக்குத்தனமான தலைவர்களைக் கொண்டுக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று அமெரிக்கா உள்ளிட்ட தரப்புகள் இயங்கினால், வெளி வேஷங்களைப் பார்த்து ஏமாற்றமடைய வேண்டியிருக்கும். அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களுக்கும் சர்வதேச இராஜதந்திர நிறுவனங்களுக்கும் இடையிலான வெளிப்படை மற்றும் இரகசியமான உறவுகளைக் குறித்து விழிப்பாக இருப்பது முக்கியமானது. இலங்கையில் இனி வரப்போகும், பத்து வருட ஆட்சியை, ராஜபக்‌ஷர்கள் தக்க வைப்பார்கள் என்ற நிலையில், தமக்கான தேவைகளை அவரகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்பும் எந்தத் தரப்பும், அவர்களைப் பகைக்க ஆர்வம் கொள்ளாது. கடந்த ஆட்சிக்காலத்தில், நாடுகள் சார்ந்து சார்பு நிலையெடுத்ததாலேயே, தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக ராஜபக்‌ஷர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். அப்படியான நிலையில், நாடுகளுக்கிடையிலான தொடர்பாடலைச் சார்பு நிலைகள் தாண்டி நடுநிலையாகக் கையாளப் போவதாகவும் ராஜபக்‌ஷர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறான கட்டத்தில், இராணுவத் தளபதிக்கு எதிரான அமெரிக்காவின் தடையும், ஐ.நா பிரேரணையில் இருந்து விலகும் இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பும், உற்று நோக்கப்பட வேண்டியவையே.அவை, வெளிப்படையான கட்டங்களைத் தாண்டி, இரகசிய அடைவுகளை அதிகம் கொண்டிருப்பவையாக இருக்கலாம். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமரககவடனன-ரஜபக-ஷரகளன-இரகசய-நகரவ/91-246138
    • இரண்டு வார கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடி தீவைப்பெற்றுக்கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிபர் , ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுதத்த போரட்டத்தில் ஈடுப்படுவதாக தொழிற்சங்கங்கள்  எச்சரித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த தேசிய கல்வி  சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பத்லேரிய , மேலும் கூறுகையில், ஆசிரியர் - அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக கடந்த அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில்,அந்த நடவடிக்கைளை  முன்னெடுக்கும் வரையிலான இடைக்கால கொடுப்பணவை வழங்குமாறு கோரிக்கையொன்றினை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். அதனை வழங்குவதாக கூறி கடந்த அரசாங்கம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி மீண்டுமொருஅமைச்சரவை தீர்மானத்தை வெளியிட்டிருந்தது. இருப்பினும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு  வந்ததை அடுத்து அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இந்த அரசாங்கம் அதற்கான தீர்வினைப்பெற்றுத்தருவதாக கூறியிருந்த போதிலும் எந்த தீர்மானத்தையும் பெற்றுத்தரவில்லை. ஆகவே இடைக்கால கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்டஏழு அம்ச கோரிக்கைளை கல்வி அமைச்சில் கையளித்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கான அனுமதியினை கேட்டிருந்தோம். இருப்பினும் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது எமக்கு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. ஆகவே , இரண்டு வார காலத்திற்குள்;அரசாங்கம் தகுந்த தீர்மானத்தை பெற்றுத்தர தவறும் பட்சத்தில் மார்ச் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து தொடர் அடையாள  வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளோம் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76679                 
    • தனது இனம் எனும் போதுதான் தீவிரமாக தெரிகிறது. இதுவே மற்ற இனமாக இருக்கும் போது தியாகமாக தெரியும். கிழக்கில் எத்தனை சைவகோவில்கள் பள்ளிவாசல்களாகவும் புத்தகோவில்களாகவும் ஆக்கப்பட்டுள்ளன.இதைப்பற்றி இதுவரை வாயே திறக்கவில்வையே.
    • ஒவ்வொருவரும் அந்தந்த நிலைக்கு தள்ளுப்படும் போதுதான் அதைப்பற்றிய தெளிவு வரும்.