• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

கிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்

Recommended Posts

கிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்விபத்து இன்று மத்திய 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மதிய நேர கடுகதி புகையிரதத்தில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்து இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனம் மோதியிதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

புகையிரத அருகில் வருவதனை அவதானிக்காத இராணுவ சாரதி புகையிரத பாதையினை கடக்க முற்பட்ட போதே புகையிரதத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்;டுள்ளது. குறித்த புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவையாகும். இதற்கு முன்னரும் இரண்டு விபத்துக்களில் மூவர் பலியாகியிருந்தனர். இது மூன்றாவது விபத்து. 

 

 

https://www.virakesari.lk/article/59042

"புத்தளத்தில் சடலமாக மிதந்த 19 வயது இராணுவ வீரர்....!

புத்தளம் சின்னவில்லு குளத்திலிருந்து இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த வீரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருவளை பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் தனது நண்பர்களுமன் குறித்த வீரர் குளத்திற்கு வருகை தந்துள்ளதோடு, தனது உடைகளை சலவை செய்யவுள்ளதாக தெரிவித்து அவர் நண்பர்களை அனுப்பிவிட்டு குளக்கரையில் சலவை செய்துக்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே அவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதணைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.hirunews.lk/tamil/219076/புத்தளத்தில்-சடலமாக-மிதந்த-19-வயது-இராணுவ-வீரர்

Share this post


Link to post
Share on other sites

கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் இராணுவத்தினர் நால்வர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

dgfdtrfgd.jpg?zoom=0.9024999886751175&refgfgfdfd.jpg?zoom=0.9024999886751175&res

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி தொடருந்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்து நடந்துள்ளது.

மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

https://newuthayan.com/story/14/சற்றுமுன்னர்-கோரவிபத்து.html

Share this post


Link to post
Share on other sites

அடுத்த கிழமையே  வடகிழக்கு எங்கும் ரயில்வே கடவை  பாதுகாப்பு உத்தியோகத்தர் வேலை  கேள்வி பத்திரம் தினசரிகளில் பிரசுரமாகும் .

Share this post


Link to post
Share on other sites

 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, பிழம்பு said:

கிளிநொச்சியிலும் கிளையைக் கொண்ட உதயன் பத்திரிகை எங்கோ கிடைத்த பழைய படங்களைப் போட்டு ஊடகத்தின் வறட்சி நிலையை காட்டியுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எம்.இஸட்.ஷாஜஹான் வருகின்ற காலம் மிக சவாலான காலமாகும் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம்,  நடைபெறவுள்ள தேர்தலில், எமது சமூகம் சார்ந்த  அரசியல் பிரிதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார். நீர்கொழும்பு-அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விக் கண்காட்சி நிகழ்வில், நேற்று(26) பங்கேற்று உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,  மஹர சிறைச்சாலையிலுள்ள பள்ளிவாசல், ஏப்ரல்  குண்டுத் தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ளது. தற்போது அங்கு வேறு மதச் சின்னங்களை வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். அவர், சிறைச்சாலைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கலந்துரையாடி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் பிரச்சினையைத் அவர்கள் தீர்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்  என்றார். இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வகையில்,  எல்லா தரப்பிலிருந்தும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகின்றனர். இவர்களைக் கையாள்வது இலகுவான விடயம் அல்லவென, நாடாளுமன்ற உறுப்பினர் ரஹுப் ஹக்கீம் தெரிவித்தார்.   http://www.tamilmirror.lk/செய்திகள்/தவரவதகள-தலதகக-வரகனறனர/175-246127
  • ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வரை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடுமாறு இன்றைய தினம் வலியுறுத்தியுள்ளார். ஜப்பானின் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாகாத பயணிகள் வெளியேறியுள்ளனர். இவர்களின் வெளியேற்றம், அந்த கப்பலில் பயணித்த பயணிகளின் வைத்திய சோதனைகள் தொடர்பில் விமார்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் மாதம் இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 700 க்கும் மேற்பட்டோர் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் அடையாளம் காணப்பட்டனர். அது மாத்திரமல்லாது ஜப்பானில் இதுவரை கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Photo Credit : CNN   https://www.virakesari.lk/article/76677
  • இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை அவுஸ்திரேலியா வீழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்றிருந்த நிலையில், கேப் டெளணில் நேற்றிரவு நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றதன் மூலமே தொடரைக் கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா: 193/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 57 (37), ஆரோன் பின்ஞ் 55 (37), ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 30 (15), மிற்செல் மார்ஷ் 19 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 1/25 [4], லுங்கி என்கிடி 1/33 [4], டுவைன் பிறிட்டோறியஸ் 1/42 [4], ககிஸோ றபாடா 1/42 [4], அன்றிச் நொர்ட்ஜே 1/46 [4]) தென்னாபிரிக்கா: 96/10 (15.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஸி வான்டர் டுஸன் 24 (19), ஹென்றிச் கிளாசென் 22 (18), டேவிட் மில்லர் 15 (18), டுவைன் பிறிட்டோறியஸ் 11 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்தன் அகர் 1/16 [4], மிற்செல் ஸ்டார்க் 3/23 [2.3], அடம் ஸாம்பா 2/10 [3], மிற்செல் மார்ஷ் 1/3 [1], பற் கமின்ஸ் 1/27 [3]) போட்டியின் நாயகன்: மிற்செல் ஸ்டார்க் தொடரின் நாயகன்: ஆரோன் பின்ஞ்   http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/தென்னாபிரிக்காவை-வீழ்த்தியது-அவுஸ்திரேலியா/44-246133
  • இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணம் தீவப் பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்தனர். யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி யாழிலுள்ள இந்திய துணைத் தூதரம் வரை சென்று நிறைவடைந்தது.   இதன் போது கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்தொழில் அமைச்சர் , இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கு மகஐரொன்றையும் கையளித்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப் படகுத் தொழிலால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் கடற்தொழிலாளர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றதாகவும் தெரிவித்த மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/76676
  • ரம்யா நம்பீசன் இயக்கியிருக்கும் குறும்படம் `UNHIDE'. இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தக் குறும்படம் குறித்து அவரிடம் பிபிசி தமிழுக்காக வித்யா காயத்ரி பேசியதிலிருந்து...   கேள்வி: இயக்குநராக வேண்டும் என்கிற எண்ணம் எப்பொழுது வந்தது? பதில்: இயக்குநர் என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை. என்னுடைய முதல் அடியாகத் தான் இதை நினைக்கிறேன். நம்முடைய சமூகத்தில் நடைபெறக்கூடிய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. எப்பொழுதும் பெண்கள் மீதே பழி வந்து கொண்டிருக்கிறது. யார் தவறு செய்தார்களோ அவர்களை ஏன் குற்றம் சாட்டவில்லை? Ramya Nambeesan Encore-னு ஒரு யூடியூப் சேனல் வைச்சிருக்கேன். அந்த தளத்தில் பொழுதுபோக்கைத் தவிர மக்களுக்குத் தேவையான விஷயங்களையும் சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்தக் கதை எனக்குள் தோன்றியவுடன் இதைத் தமிழ் மொழியில் தான் எடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். ஏனெனில், நம்முடைய எண்ணங்களை உணர்வுபூர்வமாக பதிவு செய்ய தமிழ் மொழி நல்ல களம்.   கேள்வி: `UNHIDE' பொறுத்தவரை வசனங்கள் மிகவும் அழுத்தமாக உள்ளன. வசனங்களை நீங்கள்தான் எழுதினீர்களா? படத்தின் காப்புரிமை Facebook/RemyaNambeesan பதில்: `பிளான் பண்ணி பண்ணனும்` என்கிற காமெடி படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் என்னுடைய ஐடியாக்கள் குறித்து சொன்னேன். வசனங்கள் ஷார்ப் ஆக இருக்க வேண்டும் என ஆங்கிலத்தில் உதாரணங்கள் சொன்னேன். ஏதாவது செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் வசனங்கள் அமைப்பதற்கு எனக்கு உதவி செய்தார். கேள்வி: பாலியல் ரீதியான குற்றங்களுக்கு எதிரான நிரந்தரத் தீர்வு என்ன என்பது இன்றளவும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. நீங்கள் அந்தக் குற்றங்களுக்கு எது தீர்வாகும் என நினைக்கிறீர்கள்? பதில்: இந்த சிஸ்டம் தவறாக இருக்கிறதா இல்லை நம்முடைய பார்வை தவறாக உள்ளதா என எதுவுமே தெரியவில்லை. நாம அந்தக் குற்றத்திற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என எனக்குள்ளே தோன்றிய கேள்விகளைத்தான் இந்தக் குறும்படம் மூலமாக கேட்டிருக்கிறேன். இப்போதிலிருந்தாவது அந்தக் கேள்விக்கான பதிலை முன்னெடுக்க வேண்டும். நான் பெண்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பெண்ணோ, ஆணோ அவர்களை மனிதர்களாகப் பாருங்கள் என்பது தான் நான் சொல்ல நினைக்கிற விஷயம். இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு என்ன வழி என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும். கேள்வி: தமிழ் சினிமாவில் படங்கள் மூலமாக சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதா? பதில்: எனக்கு இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால், அப்படி இயக்குநராவதற்கு நிறைய அனுபவமும், வாசிப்பும் தேவைப்படுகிறது. இயக்குநர் ஒரு கதையை அழகாக எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு எனக்கு கொஞ்சம் காலமும், அனுபவமும் தேவை. நிச்சயம் இயக்குநராக என்னைப் பார்க்கலாம். ஆனால், இத்தனை வருடங்கள் நான் சினிமாவில் இருந்திருக்கிறேன். என் மனதுக்குள் பல ஆண்டுகளாகத் தோன்றிய விஷயங்களை என்னுடைய கலை வடிவம் மூலமாக வெளிப்படுத்த நினைத்தேன். அதன் வெளிப்பாடே இந்தக் குறும்படம். கேள்வி: 'மீ டூ'குறித்து உங்களின் பார்வை? பதில்: தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களை முதலில் தைரியமாக அவர்கள் வெளியில் சொல்வதற்காகவே தலை வணங்குகிறேன். ஏனெனில், பல வலிகளைத் தாண்டித்தான் அவர்கள் மீ டூ குறித்துப் பேசுகிறார்கள். யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அதற்கு சமமான உரிமையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால்தான் சமூகத்தில் ஏதாவது மாறும். இப்பொழுது எல்லா இடங்களிலும் பெண்கள் குறித்த பார்வை மாறிக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் இந்த விஷயங்கள் மாறாது. தொடர்ந்து இது குறித்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/arts-and-culture-51599751