Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நல்லதோர் வாழ்வு இருந்தது


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வாழ்வு இருந்தது 


நல்லதோர் வாழ்வு ஒன்று 
இருந்தது ஒரு காலம் 
நாலு பேர் வந்து போயினர் 
நமக்காய் ஒரு வாழ்வு இருந்தது 

ஒற்றுமை ஒன்று இருந்தது ஒரு காலம் 
உறவுகள் வந்து போயினர் பிரியாமல் 
முற்றத்தில் வந்து இருந்தது முழுநிலவு 
பக்கத்தார் வந்து பேசினர் பல நேரம் 

ஆயிரம் சனம் இருந்தனர் அருகோடு 
அமைதியாய் கூடி வாழ்ந்தனர் குலையாமல் 
அங்கு ஓர் பிரிவும் இல்லை 
அனாதை என்ற ஓர் சொல்லும் இல்லை 

அழகான பனை இருந்தது 
அருகில் ஒரு வேம்பு நின்றது 
அதன் கிளையில் ஒரு குயில் இருந்தது 
கூவிப் பல பாடல் கேட்டது 

காடு இருந்தது காடு நிறையப் பூ இருந்தது 
பூவோடு கனவு இருந்தது 
கனவு மெய்ப்படக் காத்து இருந்தது 
பாட்டும் கேட்டது கூத்தும் கேட்டது 
பகல் எல்லாம் குழந்தை சிரித்தும் கேட்டது 

பறவைகள் வந்தனர் அருகில் இருந்தனர் 
பாடிப் பல பாடல்கள் கேட்டன 
மாடு இருந்தது மடி நிறையப் பால் இருந்தது 
மனிதர்க்கு இதில் அன்பு இருந்தது 
தாயைப் போல் பாலும் தந்தது 
தமிழர்க்கு இது அடையாளமானது 

மார்கழி மாதம் மழையுடன் பூத்த 
மல்லிகை போல் பல பெண்கள் இருந்தனர் 
ஆலய மணியின் ஓசைகள் கேக்க 
அள்ளிக் கூந்தலை கட்டிய பெண்கள் 
துள்ளி திரிந்ததோர் காலம் ஒன்று இருந்தது 

கடல் இருந்தது கார்த்திகை பூ இருந்தது 
கல்லறை எங்கும் தீபங்கள் எரிந்தது 
கனவுகள் கண்ட உயிர்களின் பாடல் 
காத்தினில் கேக்கும் காலம் ஒன்று இருந்தது 

எம்மோடு மண் இருந்தது 
மண்ணில் பல மரம் இருந்தது 
மரத்தில் பல கூடு இருந்தது 
கூடிப் பல குஞ்சுகள் வாழ்ந்தது 

நிலம் ஒன்று இருந்தது நின்மதி இருந்தது 
கடல் இருந்தது வயல் இருந்தது 
வயிறு நிறைய சோறு போட்டது 
காவலுக்கு ஒரு படை இருந்தது 
அது வரை துணிவு இருந்தது 
நிமிர்வும் இருந்தது 

அன்று ஒரு நாள் யுத்தம் வந்தது 
அழகிய எம் வாழ்வை தின்று தீர்த்தது 
அழகிய நிலவு ஒன்று கடலில் வீழ்ந்தது 
அத்தனை கனவும் கரைந்தே போனது 
இருப்பது மட்டும் தொலைந்தவன் கண்ணீர்
இனி ஒரு காலம் இது போல் வருமோ .

 

 

 

 

 • Sad 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தலைமுடிப்பிரச்சனை தமிழ்செல்வனின் மகளுக்கும் நடந்தது. அப்போ பாடசாலை நிர்வாகம் தான் வென்றது.  
  • இந்த வகையிலான தேடல்கள் எமக்கு எந்தவிதத்தில் உதவப் போகின்றது கோஷான்? இன்று, நாம் எந்த மனித அமைப்பிலிருந்து வந்திருந்தாலும்கூட, இன்று தமிழர்கள் எனும் இப்போதிருக்கும் நிலையினை அடைந்திருக்கிறோம். ஆகவே, இங்கிருந்துதான் எமது விடுதலைக்கான பயணமே ஆரம்பிக்கப்படவேண்டும். இதை விடுத்து, எமது தோலினதோ அல்லது முஅக எலும்புகளின் உருவ அமைப்பினதோ தோற்றப்பட்டை வைத்து எமது அடிகளைக் கண்டுபிடிப்பதென்பதோ அல்லது, தமிழினம் இதற்கு முன்னர் எவ்வாறான இன மரத்திலிருந்து வந்ததென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதோ இன்றிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தமிழினத்தை விடுவிக்க எப்படி உதவப்போகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 
  • கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது.  நேற்று புதன்கிழமை பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாக தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது.  பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணிநேரம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. விடயம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,  262 பாடசாலை மாணவர்களை கொண்ட குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. அதற்காக அதிபர் அடங்கலாக 19 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்றனர். இவ்வாறான நிலையில் நேற்று புதன்கிழமை பாடசாலை மாணவர் ஒருவரை தலைமுடியை சீராக்கி பாடசாலைக்க வருமாறும், பாடசாலை ஒழுக்க விதிகளை பேணுமாறும் பாடசாலை அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் சகோதரர் பாடசாலை நேரத்தில் அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், தடுக்க முற்பட்ட ஆசிரியரில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாதவாறு அதிபர், ஆசிரியர்களை பாதுகாத்து தருமாறு கோரியே பெற்றோர் மற்றும் மாணவர்களால் பிராத வாயிலை மூடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.   குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிசார் பெற்றோரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளனர். பாடசாலையின் கௌரவத்தை பாதுகாக்குமாறும், உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் கிளிநொச்சி பொலிசாரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இதனையடுத்து போராட்டம் கைவிட்டதுடன் குறித்த பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன், அச்சுறுத்தலுக்குள்ளான பாடசாலை அதிபர் இன்றைய தினம் சமூகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதேவேளை இவ்வாறான அச்சுறுத்தல்கள் மத்தியில் கடமைகளை சீராக செய்ய முடியாத மனநிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/90637
  • உண்மைதான் சிங்களவன் எங்களுக்கு செய்யும் அநியாயங்களுக்குள் தமிழர்கள் குறிப்பாக அரச அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் தமிழர்களாக இருந்துகொண்டு செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களும், செல்வாக்குகளும், பாராமுகமும் எம் மக்களுக்கு சில வேளைகளில் சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கவைக்கின்றன. கோத்தபாய செய்வது போல எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீர் விஜயம் செய்து குறைகளை வெளிப்படுத்தலாம். அன்றும் சரி இன்றும் சரி பயம் தான் சரியாக வழிநடத்துகிறது. உணர்வோ தேசியமோ இரண்டாம் பட்சம் தான். அல்லது மிக சொற்பம் தான்.
  • எதிர்க்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுவது கவலையளிக்கிறது - மங்கள சமரவீர (நா.தனுஜா) தற்போதைய அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் என்பன நாட்டிற்கு ஒருபோதும் அவசியமானவை அல்ல. அவ்வாறிருக்க முன்னர் எதிர்க்கட்சியிலிருந்த பொதுஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர்க்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுவது கவலையளிக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் வெளியிட்டிருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கடந்த புதன்கிழமை அணிந்துவந்த ஆடை பாராளுமன்றத்திற்குள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. அதாவுல்லா ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வதைப்போன்ற ஆடையில் இலங்கையின் பாராளுமன்றத்திற்கு வருகைதந்திருக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டியமை பற்றிய செய்திகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டன. அதனை மேற்கோள்காட்டி மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: முன்னர் எதிர்க்கட்சியில் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர்க்கட்சியும் செயற்படுவது வருத்தமளிக்கிறது. இலங்கைக்கு ஒரு மாற்றுப்பார்வையே அவசியமானதாக இருக்கின்றதே தவிர, தற்போதைய அரசாங்கத்தின் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார் https://www.virakesari.lk/article/90656
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.