அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை திருப்பி அனுப்பாது திட்டமிடப்பட்ட வேலைகளை செய்து முடிக்கும்படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வேண்டியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் இவ் வருடத்துக்கான இரண்டாவது அமர்வு இதன் குழுக்கூட்டத்தின் தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்ைகயில்
ஏற்கனவே இவ் மாவட்ட அபிவிருத்தி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிறுத்தி இவ் அபிவிருத்தி வேலைகளை முடக்குவது நல்லதல்ல.
இந்த நிதி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒரு முதல். இவற்றை திருப்பி அனுப்புவது விரும்பத்தகாததொன்றாகும். மன்னார் பகுதியில் அதிகமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே செய்யக்கூடிய வேலைகளை சீக்கிரம் செய்வது நலமாகும். அத்துடன் விடுபட்ட வேலைகளுக்கான நிதியை அடுத்த வருடம் கேட்டு பெற்றுக் கொண்டு விடுபட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
மன்னார் மாவட்டத்தின் முதலீடாக பெறப்பட்ட அபிவிருத்திக்கான பணத்தை திருப்பி அனுப்ப நேரிட்டால் அதை அரசாங்க அதிபரூடாக விண்ணப்பித்து மீண்டும் அந் நிதியை ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தலைமன்னார் நிருபர்
https://www.thinakaran.lk/2019/12/14/உள்நாடு/45386/மன்னார்-மாவட்ட-அபிவிருத்தி-நிதி-திருப்பி-அனுப்பப்பட-கூடாது
உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம்!
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார்.
உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார்.
http://eelamurasu.com.au/?p=23875
அவரின் பெயர் பொரிஸ் யெல்சின். பெரும் குடிகாரர். அரச விழாக்களில் கூட குடி வெறியில் கோமாளித்தனம் பண்ணியவர்.
ரஸ்யாவை உலகின் கோமாளியாக மாற்றிய பெருமைக்குரியவர். இப்பவும் கோபர்சேவ்வுக்கு அடுத்து ரஸ்யர்கள் வெறுப்பது யெல்சினைத்தான்.
யெல்சின் காலத்தில் அமெரிகாவிடம் கையேந்தி பிழைத்தது ரஸ்யா.
Sunderland இல் நிசான்
Swindon இல் ஹொண்டா
Burnaston இல் டொயோட்டா
இன்னும் பல வெளிநாட்டு கார்கள் இப்பவே யூகேயில் அசெம்பிளி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறன. இப்போ இவை எந்த வரியும் இல்லாமல் ஈயூ முழுமைக்கும் ஏற்றுமதியாகிறன.
இந்த ஏற்பாட்டை குழப்பி, உலக வர்த்தக மையங்களை உருவாக்கினாலும், காரை ஈயூவில்தான் விற்க வேண்டும். அவர்கள் வரி போட்டால்? ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம்.
ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
தேம்ஸ் நடுவே விமான நிலையம்
லண்டனில் பூங்காப் பாலம்
என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂.
பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா? பொறுத்திருந்து பார்போம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 123 டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட டிரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
தன்னை பதவியை விட்டு நீக்குவது நியாயமல்ல என்றும், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும் டிரம்ப் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டிவிட்டரை தமது டைப் ரைட்டர் என அறிவித்த அமெரிக்க அதிபர் தமக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். தமக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் இனி பதவி நீக்கம் செய்வார்கள் என்றும் எதிர்க்கட்சியினரையும் சாடியுள்ளார்.
https://www.polimernews.com/dnews/92859/2-மணி-நேரத்தில்-டிவிட்டரில்123-பதிவுகளை-வெளியிட்டார்அதிபர்-டிரம்ப்
இலங்கையில் கூட மகிந்த அண்ட் கோ மற்றும் சீன அரசும் கூட அம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் இதேபோன்ற அணுகுமுறையை செய்ய முயற்சிக்கின்றன.
தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள்.
ஆனால், இந்த சிக்கலான பொருளாதார வலைக்குள் தன்னை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் மற்றையவர்கள் வியக்கும் வண்ணமும் வளர்ந்து வருபவர்கள் - சிங்கப்பூரியர்கள். அங்கும் தமிழர்கள் உள்ளார்கள், வெற்றியின் பாதையில் அவர்களும் தமக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்கள்.
பிரித்தானியா வெற்றியிலும் தமிழர்கள் இருப்பார்கள் !