Jump to content

நடராஜரே அசந்துபோகும் அளவுக்கு அவரது போஸில் அருமையா ஆடும் இந்திய வீரர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜரே அசந்துபோகும் அளவுக்கு அவரது போஸில் அருமையா ஆடும் இந்திய வீரர்கள்.!

nataraja-sot-jpg_710x400xt.jpg

இந்திய  வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகிய மூவருமே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடராஜா ஷாட்டை அபாரமாக ஆடினர்.

ஷார்ட் பிட்ச், பவுன்ஸர் பந்தை ஒற்றை காலை தூக்கிக்கொண்டு, நடராஜரின் போஸ் போல ஆடும் ஷாட்டுக்கு பெயர் "நடராஜா ஷாட்". இந்த ஷாட்டை அடிக்கடி அபாரமாகவும் நேர்த்தியாகவும் ஆடக்கூடியவர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா. 

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவானுக்கு மிகவும் பிடித்த இந்த நடராஜா ஷாட்டை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மிகவும் நேர்த்தியாக ஆடினர் இந்திய வீரர்கள். நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். அதில் ஒரு ஷாட் நடராஜா ஷாட். ரோஹித் ஷார்ட் பிட்ச் பந்துகளை நன்றாக ஆடுவார் என்பதால் இந்த ஷாட்டை அடிக்கடி ஆடுவார். 

ரோஹித்தைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரும் நடராஜா ஷாட்டை ஆடினர். 

https://tamil.asianetnews.com/sports-cricket/indian-batsmen-executes-nataraja-shot-very-well-ptt1t7

டிஸ்கி :

sd.jpg


அப்போ உது என்ன.  ? சாமி கும்புடுற ஸ்ரொக்கா..! 😄

 

Link to comment
Share on other sites

இந்திய அணியின் புதிய ஜெர்ஸி வெளியானது - கிரிக்கெட்டையும் காவி மயமாக்குவதாக குற்றச்சாட்டு!

நாளை இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் புதிய ஜெர்ஸியில் இந்திய அணி களம் இறங்க இருக்கிறது. சர்வதேச போட்டியில் களம் காணும் இரு அணிகளும் ஒரே நிற சீருடையில் விளையாடக் கூடாது என ஐசிசி புதிய விதிகளை வகுத்துள்ளது. இதனால் ஏதேனும் ஒரு அணி மாற்று நிற உடை அணிய வேண்டியுள்ளது.

இந்திய அணியின் சீருடை காவியும் நீலமும் கலந்தவையாக உள்ளது. கழுத்துப்பகுதியும், முன்பகுதியும் கரும் நீல நிறத்திலும், தோள்பட்டை, பின்புறம் காவி நிறத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இனிவரும் வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளில் இந்திய அணி, இந்த ஜெர்ஸியை தான் அணிந்திருக்கும் என எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புதிய நிற ஜெர்சிக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மோடி அரசு நாட்டை காவி மையமாக்க எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என குற்றம்சாட்டியுள்ளனர்.

à®à®¨à¯à®¤à®¿à®¯ à®à®£à®¿à®¯à®¿à®©à¯ பà¯à®¤à®¿à®¯ à®à¯à®°à¯à®¸à®¿ வà¯à®³à®¿à®¯à®¾à®©à®¤à¯ - à®à®¿à®°à®¿à®à¯à®à¯à®à¯à®à¯à®¯à¯à®®à¯ à®à®¾à®µà®¿ மயமாà®à¯à®à¯à®µà®¤à®¾à® à®à¯à®±à¯à®±à®à¯à®à®¾à®à¯à®à¯!

 

https://www.kalaignarseithigal.com/sports/2019/06/29/icc-official-announcement-for-indian-cricket-team-new-jersey

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.