Jump to content

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தொடர்பில்லை…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தொடர்பில்லை…

June 29, 2019

Rishad-asath-hisbulla.jpg?resize=800%2C4முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பதில் காவற்துறை மா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்கிற்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி நேற்று தெரிவுக்குழுவின் அமர்வில் தெரிவித்தார்.

தெரிவுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சாட்சியமளித்தார். இவரது சாட்சியம் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்த போது பிரதி சபாநாயகர் இதனை அறிவித்தார்.  குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இதுதொடர்பாக கிடைத்த கடிதத்தின் பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தெரிவுக்கு குழுவின் பிரதி இணைப்பென அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி மேலும் தெரிவித்தார். #ரிஷாட்பதியுதீன் #அசாத்சாலி #ஹிஸ்புல்லாஹ் #உயிர்த்தஞாயிறுதாக்குதல்

 

http://globaltamilnews.net/2019/125563/

Link to comment
Share on other sites

அப்படியே கைது செய்யப்பட்டு எந்த குற்றமும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் முஸ்லீம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடலாம், ஆனால் விட மாட்டார்கள் 😞

சட்டத்திற்கு முன்னால் எல்லோரும்  சமம்  இல்லை  ==  இலங்கை  !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த டொக்டரும் குற்றவாளி இல்லையாம்  

Link to comment
Share on other sites

முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒன்றும் செய்ய மாட்டார்கள். சாதாரண முஸ்லிம்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என முன்பே எழுதியிருந்தேன். :)

Link to comment
Share on other sites

51 minutes ago, ரதி said:

அந்த டொக்டரும் குற்றவாளி இல்லையாம்  

அவருக்கெதிரா இப்ப ரத்ன தேரர் கிளம்பியிருக்கிறார்.

ஷாபி விவகாரம்: ரத்தன தேரர் முறைப்பாடு

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி சஹாப்தீன் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறுவதில்லை என எழுத்து மூலம் முறைப்பாடொன்றை அத்துரலிய ரத்தன தேரர் பதில் பொலிஸ் மா அதிபரிடம் நேற்று (28) கையளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை அனுப்புமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அந்த அறிக்கையிலுள்ள விடயங்களுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஷாபி-விவகாரம்-ரத்தன-தேரர்-முறைப்பாடு/175-234758

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.