Sign in to follow this  
ampanai

வட்ஸ் அப் செயலி விண்டோஸ் ஸ்டோரில் இருந்து நீக்கம்

Recommended Posts

வட்ஸ்அப் செயலி விண்டோஸ் மற்றும் குறிப்பிட்ட அண்ட்ராய்டு இயங்குதளங்களில் இனி இயங்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக தற்போது விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் நீக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக இன்று (ஜூலை 1) முதல் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் செயலி நீக்கம் செய்யப்படுகிறது. இதனால், இனி வட்ஸ்அப்பை விண்டோஸ் மொபைல்களில் டவுன்லோட் செய்ய முடியாது. ஏற்கனவே, விண்டோஸ் மொபைலில் வாட்ஸ்அப் இருந்தால், அதுவும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு இயங்காது. 

whatsapp.jpg

மேலும், அண்ட்ரோய்ட் 2.3.7 மற்றும் iOS 7 இயங்குதளத்தில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வட்ஸ்அப் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்ஸ்அப்பின், சமீபத்திய கேள்வி பதில்கள் (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலமாக புதிதாக வட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வட்ஸ்அப் இருக்கும் பட்சத்தில், அதுவும் வேலை செய்யாது. 

பயனாளர்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, தங்களுடைய போன் எந்த வெர்ஷனில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு Settings பிரிவுக்குள் சென்று Phone>About என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், ஸ்மார்ட்போன் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது காட்டப்படும். அண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் இருந்தால், அந்த போனில் அடுத்த வருடம் வட்ஸ்அப் வேலை செய்யாது. 

அண்ட்ராய்டு 4.03 வெர்ஷன் அல்லது அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போனில் தான் வருங்காலத்தில் வட்ஸ்அப் வேலை செய்யும். வட்ஸ்அப்பை புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/59455

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சபாநாயகருக்கு இரு கடிதங்கள்..! ஐ.தே.கட்சிற்குள் குழப்பம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இக் கடிதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவர்களான முன்னாள் தவிசாளர் கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 45 பேர் கையொப்பம் இட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பு மற்றும் எதிர்க் கட்சித் தலைமை பதவியை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/69435
  • (ஆர்.யசி) எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது. இது  ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம், இதனை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேச அவசியமில்லை என  சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.  எதிர்க்கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ள கட்சியில் பாராளுமன்றக் குழுத் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது.  அடுத்த பாராளுமன்ற அமர்வுகளை கூட்டும் காலம், அடுத்ததாக ஆளும் மற்றும் எதிர் கட்சிகளின் ஆசன ஒதுக்கீடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் அதிகமாக பேசப்பட்டது. இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியல்ல, டலஸ் அழகப்பெரும, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, தினேஷ் குணவர்த்தன, மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, நிமல் சிறிபால.டி.சில்வா, அமீர் அலி, அஜித்.பி.பேரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்தே ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரு நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இருவரின் பெயர்களும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று பாராளுமன்றத்தில் கூடிய  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.   இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சையும் இதன்போது எழுப்பப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி பிரதான எதிர்கட்சியாக மீண்டும் பாராளுமன்றத்தில் அமரவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை ஒரு தரப்பினரும் சஜித் பிரேமதாசவின் பெயரை இன்னொரு தரப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ரணில்  - சஜித் என்ற  இருவருடைய பெயர்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.  எனினும் இதன்போது பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்த சபாநயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்தும் யாரை தெரிவுசெய்ய வேண்டும் என்பது குறித்தும்  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேசி அர்த்தமில்லை. இந்த விடயமானது குழுவின் விடயப்பரப்புக்கு உட்பட்டதும் அல்ல.  ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் அமரவுள்ள நிலையில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்பது  ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம், இதனை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேச அவசியமில்லை என  சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/69455
  • 2014 செய்தியில், ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும்.  - மோடி https://yarl.com/forum3/topic/140659-பிரத்தியேக-செய்தி-மஹிந்தவிடம்-மோடி-கூறியவை-என்ன/
  • இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த எரிபொருள் விலைச்சூத்திரத்தை இரத்துச்செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எரிபொருட்களில் விலை மாற்றம் இனிமேல் முன்னெடுக்கப்பட மாட்டாது என தெரிவிப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/எரபரள-வலசசததரம-இரதத/175-241316    
  • ஜெய்ஷங்கரின் வருகை: ’அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது’ -எம்.றொசாந்த் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிநாட்டமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது என்றே தான் கருதுவதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  “இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து சென்றிருப்பது குறித்தும் இந்த சந்திப்பின் பின்னர் கோட்டாபய இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் உங்களின் கருத்து என்ன?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டெனவும் அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறதெனவும் தெரிவித்தார். அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளதெனத் தெரிவித்த அவர், அதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் ஆலோசனைகளை இந்தியா கொடுக்கும் என்று தான் ஆழமாக நம்புவதாகவும் கூறினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது தனது எதிர்பார்ப்பெனத் தெரிவித்த அவர், இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பெனவும் கூறினார். “ஏற்படுத்தப்படும் எந்த ஒரு தீர்வும் நிலையானதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்கள் தமது பூர்வீகப் பகுதிகளில் தமது பாரம்பரியம், அடையாளம் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றைத் தாங்களே நிர்வகிக்கும் வகையில் காணி மற்றும் பொருளாதார விடயங்களில் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் தீர்வு அமையவேண்டும்” என்றார். “தனி ஒரு மதத்துக்கு முன்னுரிமையையும் சிறப்பு சலுகையையுங் கொடுப்பது எந்தளவுக்கு ஏனைய சமூகங்களின் மனித உரிமைகள் மற்றும் கலாசாரங்களைப் பாதிக்கும் என்பவை எல்லாம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். “ஆகவே, இறுதி தீர்வு  தொடர்பில் எல்லா தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற வழி வகுப்பப்பட வேண்டும். ஐந்து கட்சிகளும் தற்போதும் 13 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அறிவித்தால் எம்முள் ஒருவர் எமது கருத்தொற்றுமையை புதிய அரசாங்கத்திடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தலாம்” எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜயஷஙகரன-வரக-அரசயல-ரதயல-மகவம-மககயமனத/71-241312