யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
தமிழ் சிறி

புற்றுநோய்களுக்குக் காரணமாகும் உடற்பருமன்!

Recommended Posts

107658937_gettyimages-157287734-720x450.jpg

புற்றுநோய்களுக்குக் காரணமாகும் உடற்பருமன்!

பிரித்தானியாவில் புகைபிடிப்பதைவிட நான்கு பொதுவான புற்றுநோய்களுக்கு உடற்பருமனே காரணமாகிறது என தொண்டு நிறுவனமொன்றின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புகையிலை புகைப்பதை விட அதிக எடை கொண்டிருப்பதால் குடல், சிறுநீரகம், கருப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கான்ஸர் ரிசேர்ச் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் எடை காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் புகைப்பதை விட உடற்பருமன் காரணமாக ஒருவர் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக புற்றுநோயைத் தடுக்கக்கூடிய முக்கிய காரணியாக புகைபிடித்தல் உள்ளது. உடல் பருமன் இரண்டாவது இடத்தில் உள்ளது என கான்ஸர் ரிசேர்ச் யூகே (CRUK) கூறுகிறது. ஆனால் புகைபிடிக்கும் வீதங்கள் குறையும் நிலையில் உடற்பருமன் வீதங்கள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://athavannews.com/புற்றுநோய்களுக்கு-காரணம/

Share this post


Link to post
Share on other sites

 

 

விளà®à¯à®à®ªà¯à®ªà®à®®à¯

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • அவள் மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்..  கைகள் தறியில் லயித்திருந்தாலும், மனம் முழுதும் மாறனே வியாபித்திருந்தான். உள்ளத்தில் அவன் நினைப்பு வர உதட்டில் புன்னகை அரும்பியது! பால்யவயதுத் தோழன் தான், எனினும் பருவ வயது வந்தவுடன் தான் அந்த மாற்றம் புரிந்தது! அவனைப் பார்த்ததும் எங்கிருந்தோ அவளுக்கு வெட்கம் வந்துவிடும், சொற்கள் இடம்மாறும்! கால்கள் தடுமாறும்!! பக்கத்து வீட்டு வள்ளி சொல்லித்தான் தெரிந்தது இது "அது" தான் என்று... கிட்டத்தட்ட 10 வருடங்கள்...  10 இன்பமயமான வருடங்கள்...  அவனுக்காக காத்திருப்பதிலும், கதை பேசுவதிலும் அத்தனை இன்பம் அவளுக்கு...! இடையிடையே கைபிடிப்புகள், கட்டியணைப்புகளும் இடம்பெறத் தவறுவதில்லை. அரசகுமாரி அவள்.. அரண்மனை தோட்டகாரன் மகன் அவன்..! காதலுக்கு தெரியுமா சாதி பேதம்... மொட்டாகி முகிழ்ந்து மாலையாக காத்திருந்தது அவர்களது காதல்.... அன்றைய சந்திப்பு அதிவிசேசமானது! அவளது தந்தையிடம் அனுமதி பெறவென்று அவன் சென்றிருந்தான். தாயிடம் அவள் ஏலவே சொல்லியிருந்தாளாயினும் தந்தையின் கோபம் அவள் அறியாததல்ல.. மனம் படபடக்க காத்திருந்தாள்! ஆஹ் .  அதோ இலை அசைகிறது,  அவன் வந்து விட்டான் என எழுந்...  அய்யோ அது வள்ளி அல்லவா..  வள்ளியின் நடையில் ஏன் அவசரம், கண்ணில் கலவரம்? நடக்கக் கூடாதது ஏதோ நடந்து விட்டது,  " முருகா " ......... என்றவளின் குரல் முருகனுக்கு கேட்டிருந்தால் ஒருவேளை முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சம் பேர் இறந்திருக்க தேவையில்லாமல் இருந்திருக்கும்!  அந்தோ,!  இடியை இறக்கினாள் தோழி! அவள் மாறனின் தலை தந்தையின் வாள்வீச்சில் தனியாகி விட்டாதாம்... அதிர்ச்சியில் உறைந்தாள்.. அழுகை வரவில்லை.. உணர்ச்சிகள் திடீரென மரத்துவிட்டன அவளுக்கு... அடக்கிய உணர்ச்சிகள் யாவும் தந்தையின் மீதும், தன்னை வாழவிடாத அந்த ராஜ்ஜியத்தின் மீதும் அனலாய் திரும்பியது.. கண்ணகியல்லவே அவள் கனலாய் பொழிந்து அந்த மண்ணை அழிக்க.. காத்திருந்தாள்..! அன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் கழிந்து.... ******************** .... அவள் அந்த மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்... தூரத்தில் வந்து கொண்டிருந்தது, அந்த இளவரசனையும், அவனது எழுநூறு தோழர்களையும் ஏற்றிய கப்பல்... அவனது பெயர் விஜயன்.!! பின்னுரை! மாறனின்_தலை_அவனது உடலிலேயே அன்று இருந்திருப்பின், இலங்கையின் இன்றைய சனாதிபதி சம்பந்தராகவும்,🤣 பிரதமர் சுமந்திரனாகவும் 😂இருந்திருக்கக் கூடும்!!🙄   ஆக்கம் பேரின்பராஜா சஜிதன்  மூலம் முகப்புத்தகம்   
    • டோனி கிரிக்கெட் விளையாடி இருக்காட்டி , இந்தியா இராணுவ‌த்தில் த‌ன்னை இணைத்து இருப்பேன் என்று சொன்ன‌ மாதிரி இருக்கு க‌ட‌ந்த‌ கால‌த்தில் , வ‌டிவாய் நினைவில்லை 😉😁 /
    • உங்க‌ ஓய்வோடு இல‌ங்கை அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் விட்ட‌து /  இனி இல‌ங்கை அணி ப‌ழைய‌ நிலைக்கு வ‌ரும் என்ப‌து க‌ற்ப‌னையில் தான் / அப்கானிஸ் தான் அணியில் ப‌ல‌ வீன‌ம் ம‌ட்டை , அதையும் அந்த‌ அணி ச‌ரி செய்தா , ஆசியாவில் மூன்றாவ‌து பெரிய‌ அணி என்ர‌ பெருமையை அந்த‌ அணி பெரும் 😁😉 / 
    • எங்கள் உறவுகள் அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பிறந்த நாடு அதுஎன்பதை மறந்து எப்படா விழும் ஏறி மிதிக்கலாம் என்று சிலர் காத்துக் கிடக்கின்றனர்
    • இன்னொரு பக்கத்தால் புலிகள் பதுக்கிவைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தாள் என்று ஒரு மூட்டை மிளகாயை அரைக்கவும் ஒரு கூட்டம் அலையுது. அதுக்கு எந்த வலயப்பணிப்பாளர் மாட்டப்போறாரோ