Jump to content

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகிறது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
July 5, 2019

Palali3.png?zoom=1.1024999499320984&resi
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்று (05.07.19) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புனரமைப்பு ஆரம்பம் தொடர்பில் அமைக்கப்பட்ட கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழிலுள்ள இந்திய துணை தூதுவர், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

http://globaltamilnews.net/2019/125990/

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விமான நிலையம்  என்றால்

உலகெங்குமிருந்தா???

Link to comment
Share on other sites

36 minutes ago, விசுகு said:

சர்வதேச விமான நிலையம்  என்றால்

உலகெங்குமிருந்தா???

இந்தியாவுடன் மட்டும் விமானப்போக்குவரத்தை நடத்தும் வகையில் அபிவிருத்தி செய்ய முதலில் கருத்து தெரிவித்து பின் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுடனும் விமானப்போக்குவரத்தை நடத்தும் வகையில் அபிவிருத்தி செய்ய முடிவெடுத்தார்கள். எனவே உலகெங்கிருந்தும் விமானம் வந்து செல்லும் என்று தான் நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Government plans to develop the Palali airport in Jaffna as an international airport at a cost of Rs.20 billion and the construction work is to begin at the end of this year.

The length of the Palali runway is to be expanded to 3,500 metres and it will have the capability to handle large passenger aircraft such as Airbus A320.

http://www.dailynews.lk/2019/02/18/local/177844/palali-be-developed-int’l-airport

பழைய செய்தி தான், தகவலுக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா தெரியாமல்தான் கேட்கிறேன். ஒரே ஒரு ஓடுபாதையை கொண்ட கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை 3441 மீ ஆக இருக்க   (விரைவில் 4000 மீ ஆக விஸ்தீகரிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் கூட) யாழ்ப்பாணத்தின் புதிய பலாலி நரேந்திர மோடி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீ ஆனால் இந்த இரண்டு விமான நிலைய ங்களும் ஏறத்தாள சம அந்தஸ்துடன் இயங்குமா? இது உண்மையில் நடக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:
 
July 5, 2019

Palali3.png?zoom=1.1024999499320984&resi
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்று (05.07.19) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புனரமைப்பு ஆரம்பம் தொடர்பில் அமைக்கப்பட்ட கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழிலுள்ள இந்திய துணை தூதுவர், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

http://globaltamilnews.net/2019/125990/

யாழில் உள்ள இந்திய புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு வந்து 7-8 மணி நேரம் மோட்டார்வண்டியில் யாழுக்கு பிரயாணம் செய்யும் நேரத்தைக் குறைப்பதற்காக ஏதோ மக்களுக்காக நன்மை செய்கிறோம் என்று சொல்லி எங்களை ஏமாற்றுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • Rs. 19.5 b to be spent on upgrade to create international airport 
  • Capacity to handle commercial flights to India, Aussie, China, and Middle East 
  • Airport to be developed in two stages, runway to be developed in first phase

http://www.ft.lk/front-page/Palaly-Airport-construction-work-to-begin-on-Friday/44-681123

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

யாழில் உள்ள இந்திய புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு வந்து 7-8 மணி நேரம் மோட்டார்வண்டியில் யாழுக்கு பிரயாணம் செய்யும் நேரத்தைக் குறைப்பதற்காக ஏதோ மக்களுக்காக நன்மை செய்கிறோம் என்று சொல்லி எங்களை ஏமாற்றுகிறார்கள்.

// ஒரு சிகரட்  புகைக்கும்... நேரமான,  மூன்று நிமிடத்தை விட...
குறைவான நேரத்தில்,  இந்திய விமானப் படைகள், இலங்கைக்கு சென்று விடும்.//
- ராஜீவ் காந்தி.-

ஈழப்பிரியன், இதற்குப் பின் உள்ள இந்தியாவின் காரியங்களை.... சரியாக எழுதியுள்ளீர்கள்.
இலங்கைக்கு, இந்தியாவின்  அமைதிப்  படை வர முன்பு...
யாழ்ப்பாணம் எங்கும்... ஆகாயம் மூலம், இந்திய விமானப் படை, உணவுப் பொதி வழங்கிய காலத்தில். (சில இடங்களில்...  மலம் (பீ ) கலந்த, பைகளும் விழுந்தன என்ற செய்தியும்  வந்தது.)  

அப்போ....  இந்தியாவின் பிரதமராக இருந்த.. ராஜீவ்  காந்தி, 
சொல்லிய விடயத்தை... ஒப்பிட்டு பார்க்கும் போது...
இந்தியாவின் நோக்கம், என்ன... என்பது, புரியும்.

Link to comment
Share on other sites

2 minutes ago, தமிழ் சிறி said:

கிழக்கில் முஸ்லிம்கள் பல பல அபிவிருத்தி திட்டங்களையும் கல்வி நிலையங்களையும் கட்டுவதற்கு இஸ்லாமிய நாடுகளின் உதவிகளை பெற்ற மாதிரி இப்போதைக்கு இந்திய உதவிகளைப் பெற்று இவ்வாறு சிறு சிறு முன்னேற்றங்களை காண்பது நல்லது என நினைக்கின்றேன்.

முஸ்லிம்கள் அடி வாங்கும் போது முஸ்லிம்கலின் அபிவிருத்திக்கு உதவிய எந்த ஒரு இஸ்லாமிய நாடும் இலங்கைக்கு எதிராக காத்திரமாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த மாதிரி தான் இந்தியாவும் எமக்கு அடி விழும் போது சும்மா இருக்கும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரு சில முன்னேற்றங்களையாவது பெறுதல் நல்லது.எந்த நாடும் தன் நலனை சார்ந்துதான் இன்னொரு நாட்டுக்கு உதவும் என்பதால்  இதில் இந்தியா வின் நலன்களும் கண்டிப்பாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

நிழலி....  அரபு முஸ்லீம் நாடுகளுடன், இந்தியாவை ஒப்பிடுவது.. பாரிய தவறு என நினைக்கின்றேன். 
ஏனென்றால்... இந்தியா தனது நாட்டில் உள்ள தமிழரை, கால் தூசிக்கும் மதிப்பதில்லை.

# தமிழ் நாட்டின் பாரம்பரியத்தை (கீழடி) மறைக்க நினைத்தார்கள்.
# தமிழகத்தில்... அணுக்  கழிவை கொட்டுகிறார்கள்.
# செம்மொழியான...  தமிழ் மொழியை, அழிக்க  பாடசாலை முதல் நீதிமன்றம் வரை முயற்சி செய்கிறார்கள்.
# உலகத்திலேயே... நதி (ஆறு) போகும் விவசாய நிலங்கள், மற்றைய நாட்டில் இருந்தாலும்,
அதனை மறித்து, அணை கட்ட இரு நாட்டு ஒப்புதல்களும் தேவை.
ஆனால்... ஒரு மாநிலத்திலருந்து அடுத்த மாநிலத்திலத்துக்கு தண்ணீர்  கொடுக்க வேண்டும் என்று, நீதி மன்றம் சொன்னாலும் கொடுக்காமல், தமிழ் நாட்டுக்கு வர வேண்டிய  தண்ணீரை மறித்து, அணை கட்டுகிறார்கள்.

என்று, பல வழிகளில்... தமிழகத்  தமிழனை, வஞ்சிக்கும் இந்திய மத்திய அரசு...
எப்படி.. ஈழத்தமிழனுக்கு, உதவ முடியும். 

Link to comment
Share on other sites

28 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் சிறி.

இந்தியா யாழ்ப்பாணத்தில் செய்யும் சில அபிவிருத்திகளுக்கான காரணம் தமிழ் மக்களின் மீதான அன்பாலும் பாசத்தாலும் அல்ல. சீனாவின் மேலாதிக்கத்தை ஓரளவுக்கேனும் இலங்கையில் குறைப்பதற்காக. தென்னாசியத்தில் தானும் ஒரு சக்தி என்று காட்டுவதற்காக.

தமிழகத்தில் மத்திய அரச தான் நினைத்ததை செய்யக் காரணம் வெறுமனே தமிழ் மக்களின் மீதான எதிர்ப்பினால் அல்ல. தமிழ அரசின் கையாலாகாத்தனத்தாலும் ஆகும். அணுக் கழிவு, மீத்தேன் வாயு போன்ற திட்டங்களை கேரளா, கர்னாடகா, ஆந்திரா மற்றும் இதர மானிலங்களில் கொண்டு வர முயன்று இருந்தால் அந்தந்த மானில அரசுகள் ஒற்றக் காலில் நின்று எதிர்த்து இருக்கும். ஆனால் எடப்பாடி அரசுக்கு தன் ஆட்சிக்கு பங்கம் வந்துடும் என்ற பயத்தால் எதிர்க்க துணிவில்லை. ஜெயா ஆட்சியிலிருக்கும் போது எதிர்த்த போது மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாமல் இருந்ததை அறிந்து இருப்பீர்கள்.

கீழடி போன்று வேறு எந்த நாகரீகமாகவாவது வெளித் தெரிய ஆரம்பித்து இருப்பின் அதனையும் பார்ப்பன அரசு / மோடி அரசு தடுத்து நிறுத்த முயற்சிகள் செய்தே இருக்கும் ஏனெனில் ஆரிய பொய்களை அது காட்டிக் கொடுத்து இருக்கும். சிந்து வெளி நாகரீகத்தை விடம முதன்மையானது என நாகரீகம் என இன்னொரு நாகரீகம் மேலே எழும்புவதை தடுக்க தன்னாலான அனைத்தையும் செய்து இருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

கிழக்கில் முஸ்லிம்கள் பல பல அபிவிருத்தி திட்டங்களையும் கல்வி நிலையங்களையும் கட்டுவதற்கு இஸ்லாமிய நாடுகளின் உதவிகளை பெற்ற மாதிரி இப்போதைக்கு இந்திய உதவிகளைப் பெற்று இவ்வாறு சிறு சிறு முன்னேற்றங்களை காண்பது நல்லது என நினைக்கின்றேன்.

முசுலீம் நாடுகள் பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்

இந்தியா சோலைவனங்களை பாலைவனமாக மாற்ற முயற்சிப்பதை இன்னுமா உணரமுடியவில்லை.

சிங்களவர் ஆட்சியில், அதுவும் ஈழத் தமிழ் மண்ணில், அபிவிருத்தி என்பது மகாவலி அபிவிருத்திபோல்  தமிழின அழிவுக்கானது என்ற உண்மையை மறுக்க முடியுமா.?  

Link to comment
Share on other sites

11 minutes ago, Paanch said:

முசுலீம் நாடுகள் பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்

இந்தியா சோலைவனங்களை பாலைவனமாக மாற்ற முயற்சிப்பதை இன்னுமா உணரமுடியவில்லை.

சிங்களவர் ஆட்சியில், அதுவும் ஈழத் தமிழ் மண்ணில், அபிவிருத்தி என்பது மகாவலி அபிவிருத்திபோல்  தமிழின அழிவுக்கானது என்ற உண்மையை மறுக்க முடியுமா.?  

முசுலீம் நாடுகள்  இறுதியில் பயங்கரவாத வனமாகவும் ஆக்கித் தான் முடித்தார்கள். நன்மையை போல தீமையும் எந்த முயற்சிகளாலும் விளையும்.

 வடக்கு கிழக்கில் இந்தியா அபிவிருத்தி செய்யக் கூடாது. இலங்கை அபிவிருத்தி செய்யக் கூடாது. அமெரிக்கா அபிவிருத்தி செய்ய வந்தால் அது வளைகுடா நாட்டுக்கு செய்தது போல ஆகிவிடும், சீனா முதலீடு செய்தால் அது சிங்களவருக்கு சாதகமாக ஆகிவிடும், பாகிஸ்தான்.. கூடவே கூடாது..... அப்ப யார் செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

மற்றது, இந்தியாவின் இந்த உதவிகளை தாயகத்தில் இருக்கும் எந்த அமைப்புகளாவது, எந்த கட்சிகளாவது, மக்களாவது எதிர்க்கின்றனரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தமிழ் சிறி.

இந்தியா யாழ்ப்பாணத்தில் செய்யும் சில அபிவிருத்திகளுக்கான காரணம் தமிழ் மக்களின் மீதான அன்பாலும் பாசத்தாலும் அல்ல. சீனாவின் மேலாதிக்கத்தை ஓரளவுக்கேனும் இலங்கையில் குறைப்பதற்காக. தென்னாசியத்தில் தானும் ஒரு சக்தி என்று காட்டுவதற்காக.

நிழலி...

நீங்கள் சொல்வதை பார்த்தால்,   இந்தியா... "நானும்  ரவுடி தான்..."  என்று,  
சீனாவுக்கு  சொல்வதற்காக.... எமது ஈழத்து  தமிழ் மண்ணான, பலாலியில் வைத்து.....
சண்டித்தனக்காரன்  சீனாவை...  கோபம் ஊட்டும், செயலாக இருக்காதா...
இந்தியா... தனது,  ரவுடித் தனத்தை...  வடக்கு மாநிலங்களில் காட்ட பயமா...?

"யாதும்... ஊரே, யாவரும்... கேளிர்."
"வந்தாரை.. வாழ வைக்கும், தமிழகம்"

போன்ற, சொற் தொடர்களே....  இப்போ தமிழர்,  "சோணகிரி"  நிலைமையில்  இருப்பதற்கு காரணம். 

அதற்காக... கணியன் பூங்குன்றனை,  குறை சொல்ல முடியாது என்றாலும்,
காலத்திற்கு ஏற்ற மாற்றம்... தமிழரின் அரசியலுக்கு  தேவை.

கருணாநிதி, சம்பந்தன், சுமந்திரன், மாவை....  மாதிரி....
"பப்பரப்பே"  அரசியல்  செய்தால்... 
உலகத்தில்....  தரம் தாழ்ந்த,  இனமாக... தமிழன்  இருப்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

சர்வதேச விமான நிலையம்  என்றால்

உலகெங்குமிருந்தா???

எங்கிருந்து வருவதாயினும் முதலில் விமான நிறுவனம்கள் முடிவெடுக்கணும் குதிரைகள் தண்ணி குடிக்க விருப்பமில்லாவிட்டால் அரிசி குடோனாய் மாத்தி போடுவார்கள் மாத்தள போல் . 

Link to comment
Share on other sites

9 hours ago, விசுகு said:

சர்வதேச விமான நிலையம்  என்றால்

உலகெங்குமிருந்தா???

ஆம்.

The strategically located Palali airport when developed will be capable of handling direct flights to countries like India, Australia, China, Japan, Middle-East and several European nations.

http://www.dailynews.lk/2019/02/18/local/177844/palali-be-developed-int’l-airport

Link to comment
Share on other sites

7 hours ago, நிழலி said:

மற்றது, இந்தியாவின் இந்த உதவிகளை தாயகத்தில் இருக்கும் எந்த அமைப்புகளாவது, எந்த கட்சிகளாவது, மக்களாவது எதிர்க்கின்றனரா?

எதிர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

தமிழினப் படுகொலைகளை செய்தவர்கள் ஏதோ காரணங்களுக்காக வழங்கும் நிதிகளை பெற்றுக்கொண்டு நாம் எமது கொள்கைகளை இலக்குகளை மாற்றாமல் பயணிக்க வேண்டும் என்று அண்மைக் காலமான முன்னாள் உயர்நீதிமன்ற விக்னேஸ்வரன் சொல்லிவருவதை, முன்னர் நானும் பல இடங்களில் பதிவிட்டுள்ளேன்!

அதே கருத்தையே நீங்களும் கூறியுள்ளீர்கள்! மிகவும் யதார்த்தமான கருத்துக்கள்!

எனது பதிவில் தமிழினப் படுகொலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்த, குறிப்பாக நீண்டகாலமாக முக்கிய பங்கெடுத்த, சிங்கள இந்திய படுகொலை அரசுகள் உட்பட, அனைவரும் வழங்கும் உதவிகளை ஈழத் தமிழினப் படுகொலைகளுக்கு அவர்கள் வழங்கக் கடமைப்பட்டுள்ள பெரும் இழப்பீடுகளின் மிகச் சிறுபகுதி எனக் கருதி பெற்றுக்கொண்டு, அந்தப் படுகொலைகளுக்கு எவ்விதத்திலும் முண்டு கொடுக்காமல், எமது கொள்கைகளை மாற்றாமல் இலக்குகளை மாற்றாமல் உறுதியுடன் பயணிக்க வேண்டும் என்ற கருத்தைப் பலதரம் குறிப்பிட்டுள்ளேன்.    
 
இயற்கை நியதி இந்தப் படுகொலைகாரர்களை ஏதோ காரணங்களுக்காக நீதி நியாயத்தின் பக்கம் தள்ளியே ஆகும்.

எனவே இந்தியப் படுகொலைகாரர்கள் வழங்கும் மிகச் சிறிய இழப்பீடுகளை தமிழர் எதிர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

அமைதிப்படை என்ற போலிமுகத்துடனும் ஏனைய வடிவங்களிலும் இந்தியப் பயங்கரவாதிகள் தமிழ் மண்ணில் நீண்ட காலமாக அரங்கேற்றிய அரங்கேற்றிவரும் படுகொலைகளுக்கும் தமிழின அழிப்புக்கும், தமிழ் மண்ணில் இருந்து கொள்ளையடித்த சொத்துக்களுக்கும் இப்போது வழங்கும் உதவிகள் கால் தூசுக்கும் ஈடற்றது.

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

மற்றது, இந்தியாவின் இந்த உதவிகளை தாயகத்தில் இருக்கும் எந்த அமைப்புகளாவது, எந்த கட்சிகளாவது, மக்களாவது எதிர்க்கின்றனரா?

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக காணி சுவீகரிக்க முற்பட்ட பொழுது மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர். விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய காணிகள் அவை என்றும், தமது காணிகளில் தம்மை மீளக்குடியமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது எதிர்ப்பை தொடர்ந்து மேலதிக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படாமல் பலாலி விமான நிலையம், விமானப்படைக்கு சொந்தமான காணிகளை பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு பயன்படுத்தவுள்ளார்கள் என இறுதியாக கூறப்பட்டது.

விக்னேஸ்வரனும் அபிவிருத்திக்கு தான் எதிர் கிடையாது, ஆனால் மக்களை முதலில் மீள் குடியமர்த்தி விட்டு பின் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றே முன்னர் கூறியிருந்தார்.

இப்படி தான் ஏனைய பகுதிகளிலும் பாதிக்கப்படும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

 வடக்கு கிழக்கில் இந்தியா அபிவிருத்தி செய்யக் கூடாது. இலங்கை அபிவிருத்தி செய்யக் கூடாது. அமெரிக்கா அபிவிருத்தி செய்ய வந்தால் அது வளைகுடா நாட்டுக்கு செய்தது போல ஆகிவிடும், சீனா முதலீடு செய்தால் அது சிங்களவருக்கு சாதகமாக ஆகிவிடும், பாகிஸ்தான்.. கூடவே கூடாது..... அப்ப யார் செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

உண்மயில் உதெல்லாம் போலிக்காரனங்கள்.உண்மையில் அபிவிருத்தியை பலர் விரும்ப வில்லை.காரனம் சின்னப்பிள்ளைத்தனமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கிற்கு அற்ப சலுகைகள் தேவையில்லை அரசியல் தீர்வே முக்கியம் என்று  முக்கி முழங்கி  கொண்டிருக்கும் தமிழர் கட்சிகள்.

அவர்கள் மட்டும் சிங்கள அரசு தரும் அற்ப சலுகைகளை ஒன்று விடாமல் பெறுவது ஏனோ?

அபிவிருத்தியும் இல்லை

அரசியல் தீர்வும் இல்லை

சலுகைகளும் இல்லை என்று நடுதெருவில் நிற்கும் தமிழினம்

எவனாச்சும் வந்து அரசியல் தீர்வு தரும்வரை  கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் எமது பிரதேசத்தை  அவிருத்தி செய்ய பாவிப்பதே புத்திசாலிதனம்.

அரசியல் தீர்வுகளும் அபிவிருத்தியும்  உரிமைக்காக போராடும் இனத்துக்கு குறுக்கே வராது அதற்கு மிக பெரிய உதாரணம் அனைத்து வசதிகளூம் உலகின் உச்ச தரத்தில் பெற்றிருந்த போதும் கனடாவின் கியூபெக்குவா மக்கள் தனிநாடாக ப்ரிந்து செல்ல அவர்கள் நடத்திய போராட்டம்.

சரி அது நிற்க .எமது விஷயத்தில்.

உரிமைக்காக போராடிய இனம் சலுகைகளை சரியாக பயன்படுத்த ஏங்கி நிற்கிறது.

சலுகையைவிட உரிமைதான் முக்கியம் ஆனால் அதற்கு தமிழர்கள் சார்பில் உரிமையை பெற்றுதர எமக்காய் தலைமை தாங்குகிறவர்கள் யார் என்ப்தே அதைவிட முக்கியம்.

நல்லதோ கெட்டதோ..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஒன்று மட்டும் நிகழாதிருந்தால் 

சிங்களமும்  இஸ்லாமியமும் சேர்ந்து அவர்கள் கால் செருப்பை துடைக்க தமிழர்களை பாவித்திருப்பார்கள்.

பல உயிர்களை காவு கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதம் 

இந்த தாக்குதலின் மூலம் தமிழனும் சிங்களவனும் பகையை கொஞ்சமாவது மறந்து செண்டிமீட்டர் அளவில் ஒன்றுபடுவான் என்று தெரிந்திருந்தால் 

மறந்தும்  மருந்துக்குகூட இந்த தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள்.

2009 இல் நாமிருந்த நிலமையில் இன்று சிக்கி சீரழிந்து கிடக்கிறது ஒருகாலம் சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழரை அழித்த இஸ்லாம்.

பலாலிக்கு எந்த பிளேனும் வந்து போகட்டும், ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவம் பெறும்  எமது பிரதேசதக்கு  கொஞ்சமாவது வெளிச்சம் கொடுக்க  எவர் உதவியும்எந்த பிளானும் திராணியும்  இல்லாமலே எம்மாலும்  முடியாமலே  ஏதோ அதுபாட்டில் நடக்கிறது

காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் கெளரவம் பெறும் எம் பகுதியின் வளர்ச்சி  அதனை எதிர்க்காதீர்க்ள்.

எதிர்த்தால் உங்களை  திட்டபோவது சிங்களவனல்ல,,,

எதிரியிடம்  தோற்றுபோய்   வடகிழக்கில்எங்கு போவதென்று தெரியாமல் நடு ரோட்டில்  நிற்கும் ஈழ தமிழன்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்துக்கள் நிழலி மற்றும் வளவன்

Link to comment
Share on other sites

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தியடைந்தாலும் விசாவிற்காக கொழும்பு வரை செல்லும் நிலை மாறி வடக்கு கிழக்கில் விசா பெறும் நிலை உருவாக வேண்டும். இந்திய விசா யாழ்ப்பாணத்தில் பெற முடியும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2019 at 5:04 AM, தமிழ் சிறி said:

என்று, பல வழிகளில்... தமிழகத்  தமிழனை, வஞ்சிக்கும் இந்திய மத்திய அரசு...
எப்படி.. ஈழத்தமிழனுக்கு, உதவ முடியும். 

ஈழத்தமிழனுக்கு ஒருத்தனும் உதவமாட்டான்.......வெளிநாடுகள் தங்கள் நலன் கருதி சில அபிவிருத்திகளை செய்யும்....அதை நாம் ஏற்றுகொண்டு எமது பகுதிகளை பாதுகாத்துகொள்ள வேண்டும் .....

Link to comment
Share on other sites

15 hours ago, Lara said:

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தியடைந்தாலும் விசாவிற்காக கொழும்பு வரை செல்லும் நிலை மாறி வடக்கு கிழக்கில் விசா பெறும் நிலை உருவாக வேண்டும். இந்திய விசா யாழ்ப்பாணத்தில் பெற முடியும் என நினைக்கிறேன்.

உலகில் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் விசா பெற வேண்டிய நிலையில் உள்ளது. அந்த அந்த நாடுகள் தான் விசா அலுவலகங்களை வடக்கு கிழக்கில் திறக்க வேண்டும். 

எந்தெந்த நாட்டு விசா வடக்கு கிழக்கில் பெறும் நிலையை விரும்புகிறீர்கள்?

4 hours ago, putthan said:

ஈழத்தமிழனுக்கு ஒருத்தனும் உதவமாட்டான்......

  1. ஒருவருக்கு மற்றவர் உதவுவது ஏன்?
  2. ஈழத்தமிழனுக்கு ஏன்  ஒருத்தனும் உதவமாட்டான்?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.