யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
வலைஞன்

இத்தால் சகலரும் அறிவது

Recommended Posts

வணக்கம் அனைவருக்கும்,

யாழ் கருத்துக்களம் தொடர்பான அறிவித்தல்கள்,

மாற்றங்கள் - புதியன தொடர்பான விளக்கங்கள்,

உறுப்பினர்கள் தொடர்பான அறிவித்தல்கள்,

கவனயீர்ப்புகள், எச்சரிக்கைகள், அறிவுறுத்தல்கள்

போன்றன இத்தலைப்பின் கீழ் இடம் பெறும்!

நன்றி

Share this post


Link to post
Share on other sites

அறிவுறுத்தல்

1. புதிய கருத்துக்கள விதிமுறைகளை இதுவரை படிக்காதவர்கள், தயவுசெய்து அவற்றை ஒருமுறை வாசித்தறியவும். > கருத்துக்கள விதிமுறைகள்

2. கருத்துக்களத்தில் இணைக்கும் படங்களின் அளவு கருத்துக்கள விதிமுறைகளில் குறிப்பிட்டதற்கு அமைய இருக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க. (அகலம்: max 640px)

Share this post


Link to post
Share on other sites

அதிக பழு காரணமாக கடந்த சில மணி நேரங்களாக ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

எச்சரிக்கை

thamizthukkudu, ithayakani ஆகிய இரண்டு கள உறுப்பினர்களும் யாழ் கருத்துக்களத்தில் தடைசெய்யப்படுகின்றனர். அவர்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் தொடங்கிய தலைப்புகளும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

இவர்களின் கோமாளித்தனமான செயற்பாடுகள் புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கு அசெளகரியங்களைக் கொடுக்கும் என்பதாலும், இவர்களின் நோக்கம் எமக்கு சந்தேகங்களைக் கொடுப்பதாலும் கருத்துக்களத்தில் தடைசெய்யப்படுகின்றனர்.

Share this post


Link to post
Share on other sites

1. மீண்டும் மீண்டும் நாம் நினைவுறுத்த விரும்புவது. கள விதிமுறைகளுக்கு அமைவாக சக கருத்துக்கள உறவுகளை ஒருமையில் விளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும். அநாகரிகமான முறையில் கருத்தாடுவதையும், விளிப்பதையும் தவிர்க்கவும்.

2. சக கருத்துக்கள உறவுகளை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தாக்கிக் கருத்து எழுதுவதையும், அவர்களின் அனுமதி இல்லாமல் நையாண்டி செய்வதற்கு அவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

3. கருத்துகள விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் தவிர ஏனை பிரிவுகளில் வீண் அரட்டைகளைத் தவிர்க்கவும்.

* கருத்துக்கள விதிமுறைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அல்லது கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட விரும்பாதவர்கள் "கட்டாயம்" கருத்துக்களத்தில் கருத்துகள் எழுதவேண்டுமென கள நிர்வாகம் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. எனவே தயவுசெய்து!!!

தொடர்ந்தும் கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாக செயற்படின் எச்சரிக்கை வழங்கப்பட்டு கருத்துக்களத்தில் இருந்து தடைசெய்யப்படுவீர்கள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். யாராக (பழைய, புதிய, நீண்டகால..) இருப்பினும் பாகுபாடில்லாமல் இது செயற்படுத்தப்படும் என்பதையும் அறியத் தருகிறோம்!!!

கருத்துகள நிர்வாகத்தோடு ஒத்துழைத்து செயற்படுமாறு அனைத்து கருத்துக்கள உறுப்பினர்களையும் அன்புடனும், நட்புடனும் கேட்டுக்கொள்கிறோம்.

Share this post


Link to post
Share on other sites

அறிவுறுத்தல்!

தலைப்புக்களை/ஆக்கங்களை உரிய பகுதிகளில் இணைக்கவும். சற்றும் பொருத்தமில்லாத பிரிவில் பொருத்தமில்லாத தலைப்பை இணைப்பதைத் தவிர்க்கவும். (சில தலைப்புகளை எங்கு இணைப்பது என்பதில் குழப்பம் வரலாம் - அவற்றை எம்மால் புரிந்துகொள்ளமுடியும்). ஆனால், அறியாதவர்கள் போல் செய்திகளை அறிமுகப்பகுதியில் இணைப்பதை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.

யாழ் அரிச்சுவடி, யாழ் உறவோசை போன்ற பிரிவுகளை அவற்றுக்குரிய கருத்துக்களுக்கு மட்டும் பயன்படுத்தவும். ஏனைய விவாதங்களைத் தவிர்க்கவும். அங்கே, பொருத்தமில்லாத தலைப்புக்களை இடுவதையும் தவிர்க்கவும்.

எச்சரிக்கை!

ஜமுனா, வானவில் ஆகிய இருவருக்கும் நாம் மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறோம்: தயவுசெய்து தேவையற்ற அரட்டைகளைத் தவிர்க்கவும். கருத்துக்கள விதிமுறைகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீண் அரட்டைகளைத் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பலமுறை எச்சரித்திருக்கிறோம் - தனிமடல்கள் ஊடாகவும் அறிவுறுத்தியிருக்கிறோம் - தடைசெய்யப்பட்டு, மீளவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களை சீண்டும் வகையிலான கருத்துக்களைத் தவிர்க்கவும். இதனைக் கடைசி எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்தால், தடைசெய்யப்படுவீர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். புரிந்துகொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்!

Share this post


Link to post
Share on other sites

எச்சரிக்கை

கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

அண்மைக் காலங்களாக வெவ்வேறு புதிய பெயர்களில் இணைந்து கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாகவும், கோமாளித்தனமாகவும் கருத்துக்களை வைக்கப்பட்டுக்கொண்டிருப்ப

Share this post


Link to post
Share on other sites

களத்தின் மேலதிக பாதுகாப்புத் தேவைகருதி, தற்போது முதல் புதிதாகப் பதிபவர்களை பொறுப்பாளர்கள் பார்வையிட்டு அங்கீகரித்த பின்னரே கருத்துக்களைப் பதியத் தொடங்க முடியும்.

Share this post


Link to post
Share on other sites

அறிவுறுத்தல்

மதம்சார் பிரச்சார வடிவிலான எந்தப்பதிவுகளையும் யாழ் கருத்துக்களத்தில் இணைக்கவேண்டாம். விவாதங்களுக்கான களம் இது என்பதைக் கருத்தில்கொண்டு - விவாதத்தளத்துக்குள் மதங்களைக் கொண்டு செல்லும் விதமாக பதிவுகளை இடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், வெறுமனே எந்தவொரு மதம்சார்ந்த பிரச்சாரப் பதிவுகளையும் யாழ் கருத்துக்களத்தில் இணைப்பது தவிர்க்கப்படவேண்டும். இனி மதம்சார்ந்து இணைக்கும் பரப்புரை வடிவிலான பதிவுகள் அனைத்தும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்படும் என்பதை அறியத்தருகிறோம்.

* மதம்சார்ந்த பதிவுகள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்தமைக்கு வருந்துகிறோம்.

Share this post


Link to post
Share on other sites

அறிவித்தல்

யாழ் கருத்துக்களத்திற்கு புதிய மட்டுறுத்துனர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.

பெயர்: இணையவன்.

குறிப்பா செம்பாலை (செய்திக்களம்) பகுதியில், செய்திகளைத் தொகுத்து ஒழுங்கமைக்கும் பணியை இவர் செய்வார். கருத்துக்கள உறவுகள் அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை இணையவனுக்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Share this post


Link to post
Share on other sites

எச்சரிக்கை

ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாக்குவதும், கருத்தாடற் பண்புமுறையை மீறிக் கருத்தாடுவதும், சக கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் விதமாகக் கருத்துக்களை முன்வைப்பதும், இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதை உணராமல் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை எழுதுவதும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களைத் தொடராமல் வெறுமனே மற்றவரைத் தாக்கவேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை பதிவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாம் பலமுறை அறிவுறுத்திவிட்டோம். பலதடவைகள் எச்சரித்துவிட்டோம். இதற்குமேலும் நிர்வாகம் பொறுமைகாக்கும் - நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கவேண்டாம்.

கருத்துக்களத்தில் எச்சரிக்கை முறை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. பண்பற்ற முறையில், கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படின் எச்சரிக்கை (warning) வழங்கப்படும். அது கருத்துக்கள உறுப்பினரின் பெயருக்குக் கீழ் காண்பிக்கப்படும். குறிப்பிட்ட அளவு எச்சரிக்கை வழங்கப்பட்டபின் கருத்துக்களத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள். இங்கு புதிய உறுப்பினர்கள், நீண்டகால உறுப்பினர்கள், முன்னர் நல்ல கருத்துக்கள் எழுதியவர் என்கிற தயவு எதுவும் பார்க்கப்படமாட்டாது.

கருத்துக்கள உறவு "பூனைக்குட்டி" க்கு எச்சரிக்கை வழங்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் கருத்துக்களவிதிமுறைகளை மீறும்வகையில் கருத்தெழுதிய அனைவருக்கும் மீண்டும் அறிவுறுத்துகிறோம். உங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து கருத்துக்களை எழுதுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

மீள நினைவூட்டல்

யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும் .

இடையிடையே ஆங்கிலத்தை தமிழில் எழுதுவதை அல்லது ஆங்கில வார்த்தைகளை அவசியமின்றி பயன்படுத்துவதை அனைவரும் தவிர்ப்பது நல்லது.

Edited by yarlpaadi

Share this post


Link to post
Share on other sites

warn system தொடர்பான விளக்கம்

பலரும் தனிமடலூடாகவும், பொதுவிலும் இது தொடர்பாக கேட்டபடியால் தெளிவுபடுத்தும் பொருட்டு இந்த விளக்கம்: யாழ் கருத்துக்களத்தில் warn system அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது அனைவரும் அறிவீர்கள். இதற்கான அடையாளமாக உங்கள் உங்கள் பெயர்களின் கீழ் warn (0%) என்று காண்பிக்கும். உங்களது மட்டும் தான் உங்களுக்குக் காண்பிக்கும். மற்றவர்களுடையது உங்களுக்கு காண்பிக்கப்படமாட்டாது. warn என்பது 0% இருக்கும் வரை நீங்கள் எந்தக் குழப்பமும் அடையத்தேவையில்லை. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

எச்சரிக்கை

* கருத்துக்கள விதிமுறைகளை மதித்து செயற்படாமை

* கருத்துக்கள உறுப்பினர்கள் மீதான தனிநபர் தாக்குதல் கருத்து எழுதியமை

* கருத்துக்கள கருத்தாடல் பண்பை மீறியமை

* கருத்துக்கள நிர்வாகத்தினரின் நிர்வாகம்/மட்டுறுத்தல் சார் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை

போன்று காரணங்களுக்காக

சிவக்கொழுந்து (Sivakolunthu)

டங்கிளஸ் (Danklas)

தூயவன்

காவியா (kaviya)

நேசன்

ஆகிய நால்வருக்கும் முதலாவது எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் அது தொடர்பாக தனிமடலில் அறியக்கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள உறுப்பினர்கள் மீதான தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் எழுதுவதையும் - அவற்றுக்கு பதிலளிப்பதையும் தவிர்க்கவும். கருத்துக்கள நிர்வாகத்தினரின் நிர்வாகம் மற்றும் மட்டுறுத்தல் சார் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி

Share this post


Link to post
Share on other sites

எச்சரிக்கை

* கருத்துக்கள விதிமுறைகளை மீறி செயற்பட்டமை

* கருத்துக்கள கருத்தாடல் பண்பை கடைப்பிடிக்காமை

ஆகிய காரணங்களால்

Panangkai என்கிற உறுப்பினருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

அறிவுறுத்தல்

1. தயவுசெய்து தனிப்பட்ட பிரச்சனைகளை பொதுக்களத்துக்கு கொண்டு வராதீர்கள்.

2. களம் சார்ந்த பிரச்சனைகளை "யாழ் உறவோசை பகுதியில்" எழுதுங்கள்.

3. முறைப்பாடுகளை நிர்வாகத்தினரோடு தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்.

4. தனிநபர் தாக்குதல் இடம்பெறுவதாகக் கருதினால் பதிலுக்கு தனிநபர் தாக்குதலை நிகழ்த்தாமல், நிர்வாகத்துக்கு அறியத் தாருங்கள்.

5. தனிமடல்களை பொதுக்களத்தில் பிரசுரிக்காதீர்கள்.

6. தனிமடலை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் நிர்வாகத்திடம் எழுதித் தெரிவியுங்கள்.

நிர்வாக மற்றும் மட்டுறுத்தல் பணிகளைச் செய்வதற்கு நிர்வாகத்தினர் இருக்கிறோம் என்பதை பலர் பல சந்தர்ப்பங்களில் மறந்து போய்விடுகிறார்கள். நாம் சிலவேளைகளில் சில தலைப்புகளை கவனிக்காமல் போகலாம் - அதனால் சில பிரச்சனைகள் எமக்கு தெரியாமல் போகலாம். எனவே, அறிந்தவர்கள் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தலாம்.

Share this post


Link to post
Share on other sites

தனிமடல்

4. தனிமடற் சேவை

1. கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினை பயன்படுத்தலாம்.

2. தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.

3. (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)

4. தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.

இது தனிமடல் தொடர்பாக யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையில் உள்ளது. அனைவரும் வாசித்திருப்பீர்கள். இதுவரை வாசித்தறியாதவர்கள் கருத்துக்கள விதிமுறைகளை மறுபடியும் வாசிக்கவும்.

கருத்துக்களத்தில் அண்மைக் காலமாக தனிமடல் பிரச்சனை தொடர்பாக சில முறைப்பாடுகள் வந்துள்ளன. இவை தொடர்பாக கருத்துக்கள நிர்வாகம் சில விசாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் நாம் சில விடயங்களை அனைவருக்கும் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

1. தனிமடல் சேவையானது கருத்துக்கள உறுப்பினர்கள் தமக்குள் நட்புப் பாராட்டுவதற்கும், கருத்துக்களம் தொடர்பான விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், கருத்துக்கள நிர்வாகத்தினரோடு தொடர்புகொள்வதற்குமான ஒரு சேவையாகவே அமையவேண்டும். இவை தவிர்த்து நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, வேறு இணையத்தளங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, எரிதங்களை (SPAM MAILS) அனுப்புவதற்கோ பயன்படுத்துதல் ஆகாது. உங்கள் இணையத்தளம் பற்றி அறியத் தர விரும்பின் - அதனை யாழ் வழிகாட்டி பகுதியில் இணைக்கலாம். யாழ் கருத்துக்களம் சாராத எந்த விளம்பரங்களுக்கும் அனுமதியில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

2. உங்களின் (கருத்துக்களம் சாராத) தனிப்பட்ட பிரச்சனைகளை தனிமடலில் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். யாழ் கருத்துக்களம் என்பது கள உறுப்பினர்களிடையே பகையுணர்வை வளர்ப்பதற்கான களமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் - எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தால் யாழ் கருத்துக்களம் என்பது அவசியமில்லை. எனவே, கருத்துக்களத்தில் ஏற்படும் கருத்தாடல் முரண்பாடு என்பது வெளியில் பகையுணர்வாக வளரக்கூடாது என்பதே எமது அவா. அப்படி வளருமானால் அதற்கு கருத்துக்கள நிர்வாகம் எவ்விதப் பொறுப்புமேற்காது. அந்தவகையில், உங்கள் "சண்டைகளுக்கு" - "பகையுணர்வுக்கு" கருத்துக்கள தனிமடற் சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்.

3. ஒரு கருத்துக்கள உறுப்பினர்க்கு இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் (நிர்வாகத்தினர் தவிர) தன்னோடு தொடர்புகொள்வது விருப்பமில்லையெனின் தனிமடல் சேவையில் அவரை தடைசெய்யும் அனைத்து உரிமையும் உள்ளது.

4. கருத்துக்களம் சாராத வேறு விடயங்களை - குறிப்பாக கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை வேறு சேவைகளின் ஊடாக பேசிக்கொள்ளலாம். அவைபற்றி நீங்கள் அறிந்திராவிடின், சில உதாரணங்கள் இதோ: தொலைபேசி, மின்னஞ்சல் சேவை, msn messenger, yahoo messenger போன்றவைகள்.

5. யாழ் கருத்துக்களத்தில் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விபரங்களை - உதாரணம்: மின்னஞ்சல் முகவரி - தவறான முறையில் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விபரங்களை வெளியில் வேறு நபர்களுக்கு, நிறுவனங்களுக்கு வழங்குவது தவிர்க்கப்படவேண்டும்.

6. தனிமடல்களை பொதுக் களத்தில் இடுவதுவும் - அதுபற்றி பொதுக்களத்தில் விவாதிப்பதுவும் - தடைசெய்யப்பட்டுள்ளது. கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு அனுப்பும் தனிமடலை அவரது அனுமதியின்றி இன்னொருவருக்கு (நிர்வாகத்தினர் தவிர) அனுப்புவது தவிர்க்கப்படவேண்டும்.

7. ஒரு கருத்துக்கள உறுப்பினர் பற்றி ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களுக்கு அவதூறான செய்திகளை, வதந்திகளை மற்றும் கோள்மூட்டல்களை பரப்புவதுவும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

8. தவறான முறையில் தனிமடல் சேவை பயன்படுத்தப்படுவது பற்றி அறிந்தால் கருத்துக்கள நிர்வாகத்துக்கு அறியத்தாருங்கள்.

9. தனிமடல் சேவை ஊடாக பிற கருத்துக்கள உறுப்பினர்களால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படின் அதனை நிர்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள்.

10. ஆதாரமான தனிமடல்களினை உடனே அழிக்காமல் - சேமித்து வைத்து நிர்வாகத்தினருக்கு அனுப்புங்கள்.

மேற்கண்ட விடயங்களை கவனத்தில் எடுத்து அனைத்து கருத்துக்கள உறுப்பினர்களும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

தனிப்பட்ட பிரச்சனை

யாழ் கருத்துக்களத்தை (முன்னரே குறிப்பிட்டது போன்று) உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை, பகையுணர்வினை வளர்த்துக்கொள்ளும் இடமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாம். இது ஒரு கருத்தாடற் களம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவேண்டியுள்ளது.

  1. கருத்துக்களில் இருக்கும் முரண்பாடுகள் தாண்டி அனைவரும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதே எமது அவா.
  2. கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்துக்களத்துக்கு அப்பால் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்.
  3. உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை "மறைமுகமாகவோ, நேரடியாகவோ" களத்தில் எழுதாதீர்கள்.
  4. மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஒருவரைத் தாக்கி எழுதுவதைத் தவிர்க்கவும்.
  5. உங்களின் (கருத்தக்களம் சாராத) தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்துக்கள நிர்வாகம் தீர்த்துவைக்க முடியாது.
  6. கருத்துக்களம் சார்ந்த பிரச்சனைகளாக இருப்பின் நிர்வாகத்தினருக்கு அறியத்தாருங்கள்.
இவையனைத்துமே கருத்துக்கள விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இருந்தும் சில உறுப்பினர்கள் பொறுப்பற்று செயற்படுவது வருத்தமளிக்கிறது. நாம் யாரையும் நேரடியாக சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அனைவரும் நட்போடும், பொறுப்போடும் கருத்துக்களத்தை அடுத்தகட்ட வளர்ச்சிப்பாதையில் நகர்த்திச்செல்ல ஒத்துழைக்கவேண்டும் என்பதே எமது விருப்பு.

Share this post


Link to post
Share on other sites

அறிவுறுத்தல்

உங்களின் தனிப்பட்ட விபரங்களை யாழ் கருத்துக்களம் ஊடாகவோ, யாழ் கருத்துக்கள தனிமடற் சேவையூடாக பகிர்ந்துகொள்வதால் வரும் விளைவுகளுக்கு யாழ் இணையம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது. உங்கள் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு. இணையத்தைப் பொறுத்தவரை முதலில் நீங்களே உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

எச்சரிக்கை

தயவுசெய்து வேறு ஒரு தளத்திலிருந்து எடுத்து ஒரு ஆக்கத்தை யாழ் இணைய கருத்துக்களத்தில் இணைக்கும்போது, அவ்வாக்கம் பெறப்பட்ட இடத்தைக் குறிப்பிடுங்கள். முன்னரும் பலமுறை நாம் அறிவுறுத்தியிருக்கும். ஏனைய கருத்துக்கள உறவுகளும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். எனவே, இனிவரும் காலங்களில் பெறப்பட்ட இடம் குறிப்பிடப்படாவிட்டால் அவ் ஆக்கத்தை நீக்க வேண்டி ஏற்படும் என்பதை நட்புடன் அறியத்தர விரும்புகிறோம்.

Share this post


Link to post
Share on other sites

அறிவுறுத்தல்

நீங்கள் எழுதும் கருத்துக்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தொழில்நுட்ப/அறிவியற் சொற்களுக்குத் தமிழ் தெரியாவிட்டால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதுவதில் பிரச்சனையில்லை. அவற்றுக்கு தமிழ்ச் சொற்கள் தெரிந்தவர்கள் உடனுக்குடன் அதன் கீழேயே உரிய தமிழ்ச் சொற்களை பதில் கருத்தாக இணைக்கலாம்.

மற்றும், கருத்துக்களின் இடையே முழு வசனங்களை ஆங்கிலத்தில் எழுதுவதையும் தவிர்க்கவும். இது தமிழ்க் கருத்துக்களம் என்பதை நினைவில் வைத்திருக்கவும். யாழ் கருத்துக்களத்தின் வாசகர்கள்/நோக்கர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பாலும் உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்கள். அவர்கள் வாழும் நாடுகளில் பேசப்படும் மொழிகள் வேறுபடும். ஆனால் அனைத்துத் தமிழர்களையும் இணைக்கும் மொழியாகவும், தாய் மொழியாகவும் இருப்பது தமிழ் மொழி.

எனவே, தயவுசெய்து தமிழில் கருத்தாடுங்கள். தமிழால் இணைந்திருப்போம்.

Share this post


Link to post
Share on other sites

அறிவித்தல்

யாழ் இணையத்தின் செய்தி அலசல், கருத்துப்படம் ஆகியவற்றுக்கான உப பிரிவுகள் நிகழ்வும் அகழ்வும் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான இணைப்பு யாழ் இணைய முகப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும், செய்திக் குழுமத்தினர் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்க முடியும். ஏனையவர்கள் பதிலளிக்க மட்டுமே முடியும்.

அண்மைக்காலமாக யாழ் இணையத்தில் வாரம் ஒரு செய்தி அலசல், வாரம் ஒரு கருத்துப்படம் வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இவற்றை ஒழுங்கமைத்து செய்து வருபவர்கள் யாழ் இணையத்தின் செய்திக் குழுமத்தினர். நீங்களும் கருத்துப்படம் (cartoon) வரைவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், தரப்படும் கருப்பொருளுக்கு ஏற்ப கருத்துப்படங்களை வரைய முடியுமெனின் யாழ் இணைய நிர்வாகத்துடன் தனிமடலூடாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அறிவித்தல்

கருத்துக்களக் குழுமங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடிப்படைக் குழுமங்கள், செயல்நிலைக் குழுமங்கள் என இரண்டு வகைக் குழுமங்கள் உள்ளன. முன்னர் போன்று அல்லாமல், இப்போது கருத்துக்கள உறவுகள் என்னும் குழுமம் ஒன்று மட்டுமே அடிப்படைக் குழுமங்களின் தலைமைக் குழுமமாக உள்ளது. கருத்துக்கள உறவுகள் குழுமத்தில் இருப்பவர்களுக்கு அனைத்துப் பகுதியிலும் அனுமதியுள்ளது. குறிப்பாக அனைவராலும் செய்திப் பகுதிக்குள் (ஊர்ப்புதினம், உலக நடப்பு) செய்திகளை இணைக்கமுடியும்.

கருத்துக்களக் குழுமங்கள் தொடர்பான மேலதிக விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்: கருத்துக்களக் குழுமங்கள்

எனவே, செய்திகளை இணைக்கும் போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். ஏற்கனவே அந்த செய்தி உள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். அப்பொழுதுதான் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இருக்கும். மற்றும், செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது அதன் மூலத்தைக் குறிப்பிடுதல் வேண்டும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, மட்டுறுத்தினர்களின் வேலைப்பளுவைக் குறையுங்கள்.

அடுத்து, உலக நடப்பு பிரிவில் இணைக்கும் செய்திகளில் குறிப்பாக "மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கணவன், கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனைக் கொன்ற மனைவி, 60 வயதுக் கிழவன் 13 வயது சிறுமியைத் திருமணம் முடித்தார், சிறுவனுக்கு முகமெல்லாம் முடி" போன்ற செய்திகளை தயவுசெய்து செய்தித் திரட்டி பிரிவுக்குள் இணைக்கவும்.

இறுதியாக, புதினம் தளத்தின் செய்திகளை ஊர்ப் புதினம் பிரிவில் கருத்துக்கள உறவுகள் இணைக்க வேண்டியதில்லை. அவை தானியங்கியாக ஊர்ப் புதினம் பகுதியில் இணைக்கப்படும். செய்திகளின் தலைப்பு மட்டுமே இணைக்கப்படும். முழுச்செய்தியையும் படிக்க அத்தலைப்பின் கீழ் உள்ள இணைப்பை அழுத்தி புதினம் தளத்துக்குச் சென்று படிக்கலாம். செய்தி தொடர்பான கருத்துக்களை எழுத வேண்டுமென்றால் மட்டும், அதனை மேற்கோள் காட்டி எழுதவும்.

* மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் கருத்துக்கள நிர்வாகத்தினருடன் தொடர்புகொள்ளவும்.

Share this post


Link to post
Share on other sites

அறிவுறுத்தல்

கருத்துக்கள உறவுகளே, தயவுசெய்து கருத்துக்கள விதிமுறைகளை கடைப்பிடியுங்கள். கருத்துக்களத்தில் உள்ள இந்தக் "கவிதைப் பூங்காடு" பிரிவு கவிதைப் பிரசவத்துக்கானது. கவிதையில் அரிச்சுவடி பழகுபவர்களும், கவிதை எழுதுவதில் நல்லாற்றல் பெற்றவரும் எந்தவிதப் பாகுபாடுமின்றி கலந்துகொள்ளும் இடம். எழுதப் பழகுபவர்களை ஊக்குவிக்கிற அதே நேரம், அவர்கள் விடுகிற பிழைகளை ஆக்கபூர்வமான முறையில் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிச் சுட்டிக்காட்டப் படுகிறபோது பிழைகளைத் திருத்திக் கொள்வதன் மூலமே நல்ல படைப்பாளியாக உருவாக முடியும். இவன் சின்னப் பயல்/இவர்களுக்கு என்ன தெரியும் என்கிற உணர்வு விமர்சகர்களுக்கும், இவர்கள் யார் எனக்குச் சொல்வதற்கு என்கிற உணர்வு படைப்பாளிகளுக்கும் இருக்கக்கூடாது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கவிதை எழுதுகிற போக்கு கருத்துக்களத்தில் தொடர்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். வெளி முரண்பாடுகளை கருத்துக்களத்திலும் தொடர்வது பண்பான செயலாக இருக்காது. அதேபோல் கருத்துக்களத்தின் ஒரு தலைப்பில் ஏற்படுகிற முரண்பாட்டை, இன்னொரு தலைப்புக்கும் கொண்டு சென்று சக கருத்துக்கள உறவுகளை தாக்கும் செயல்களையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கவிதைப் பூங்காடு பிரிவில் கவிதை எழுதும் அனைத்து இளங் கவிஞர்களுக்கும் வளர்ந்துவரும் கவிஞர்களுக்கும் யாழ் இணைய நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

Share this post


Link to post
Share on other sites

அறிவுறுத்தல்

கருத்துக்கள உறவுகளுக்கு வணக்கம்,

மதங்கள்

கருத்துக்களத்தில் மதப் பிரச்சாரம் செய்யும் வகையிலான பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது என்று நாம் குறிப்பிட்டுள்ளோம். நீங்கள் மதப் பற்றாளராக இருக்கலாம், பற்றில்லாதவராக இருக்கலாம், கடவுள் நம்பிக்கையாளராக இருக்கலாம், நம்பிக்கையில்லாதவராக இருக்கலாம். அது உங்களின் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் பாற்பட்டது. ஆனால், கருத்துக்களத்தைப் பொறுத்தவரை மதங்களைப் பிரச்சாரப்படுத்தும் நோக்கிலான (அது இந்து மதமாகவோ, கிறிஸ்தவமாகவோ, இஸ்லாமாகவோ அல்லது வேறு மதங்களாக இருக்கலாம்) கருத்துக்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வரையறுக்கப்பட்ட மதங்கள் தாண்டி மானுடம், மக்கள் வாழ்வு, நன்நெறி, சீர்கேடுகள், சீர்திருத்தங்கள், பண்பாடு, தனிமனித ஒழுக்கம் போன்ற விடயங்கள் சார்ந்து கருத்துக்களை வைக்கலாம். மதம் சார்ந்த பதிவாக இருந்தாலும் விவாதத்திற்கு உட்படுத்தக்கூடிய பதிவாக அமைந்தால் வரவேற்கத்தக்கது.

விமர்சனம்

- கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

- சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.

- ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கருத்துக்கள விதிமுறைகளில் உள்ளவை. ஒருவரைப் பற்றி விமர்சிப்பதற்கு உங்களுக்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது. அதேநேரம், கருத்துக்கள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்றபட்டவர்கள் அல்ல. அதேநேரம், விமர்சனம் என்ற பெயரில் - குடிகாரர் வீதியில் போறவர் வாறவர்களை வசைபாடுவது போன்றோ - நாய்கள், வீட்டுக் கதவைத் தாண்டிப் போகிறவர்களையெல்லாம் பார்த்து குரைப்பது போன்றோ எழுதாதீர்கள். விமர்சிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் - அது பெரியாராக இருக்கலாம், சாயி பாபாவாக இருக்கலாம், டக்ளஸ் அல்லது கருணாவாக இருக்கலாம், ராஜபக்சா அல்லது கருணாநிதியாக இருக்கலாம் - பண்பான முறையிலும், கருத்தியற் தளத்தில் நின்றும் விமர்சியுங்கள். யாழ் இணைய கருத்துக்களம் ஒன்றும் சாராயக்கடை அல்ல - இது ஒரு கருத்தாடற் களம். கருத்தாடற் பண்பைப் பேணுவது இங்கு அவசியம். மேம்போக்காக - வசைபாடலாக - வீதியோரச் சுவர்க் கிறுக்கல்களாக ஒருவர் பற்றி எழுதுவீர்களானால் - அது யார் பற்றியதாக இருந்தாலும் - நீக்கப்படும்.

திணிப்புகள், திசைதிருப்பல்கள்

தலைப்புக்கு அவசியமற்ற வகையில் அர்த்தமற்ற வலிந்த திணிப்புகள் மேற்கொள்ளப்படுதல் தவிர்க்கப்படவேண்டும். வேறு தலைப்புகளில் தொடரும் விவாதங்களை, அவசியமற்று இன்னொரு தலைப்பிலும் திணித்து அந்தத் தலைப்பின் நோக்கை திசைதிருப்புவது அனுமதிக்கபடமாட்டாது.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • ம்.நானும் பக்கத்து தோட்டத்து சந்திரனோடை நிண்டு ஒரு படம் அனுப்பினால் தாங்குவியளோ?
    • சன்னதியான் துணை சிமோனா ஸ்ராச 24 முன்ஸ்ரர் 15.06.1983 என்ரை செல்லம் பரிமளம் அறிவது.                                                                        நான் நல்ல சுகம். அதுபோல் நீங்களும் சுகமாயிருக்கு சன்னதியானை வேண்டுறன். எப்படியப்பா இருக்கிறீர்?💖 நான் இவ்வளவு கடிதம் போட்டும் ஏன் ஒரு பதில் கடிதம் கூட போடேல்லை. அப்படி நான் என்ன பாவம் செய்தனான்.💔 ஒரு படம்  அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை    போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு  போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐 இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு? உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே? நீங்களும் கொப்பரை மாதிரி  கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை. நான் இஞ்சை வெளிக்கிடுறதுக்கு முதல் நாள் பின்னேரப்பார்  நானும் நீங்களும் துரவுப்புட்டிக்கு பின்னால நிண்டு கதைச்சதையெல்லாம் மறந்து போனியள் போலை கிடக்கு.உங்களோடை அந்த பின்நேர தருணத்தை நான் ஒவ்வொருநாளும் நினைத்து வாடுறன் தெரியுமே💞 உண்மையிலையே நீர் ஈவு இரக்கம் இல்லாத கல்நெஞ்சுக்காரியப்பா. கந்தசாமி கோயில் திருவிழா இப்ப நடக்குமெண்டு நினைக்கிறன். போனவருசத்துக்கு அதுக்கு முதல் வருச வேட்டைத்திருவிழா ஞாபகமிருக்கோ..அதுதான் அந்த கச்சான் சுருள்.....😻 பின் பனங்காணியுக்கை கொண்டுவந்து தந்த கொழுக்கட்டை இப்பவும் என்ரை வாயிலை இனிச்சுக்கொண்டேயிருக்கு.  ❣️ கடியன் என்ன செய்யிறான்? அவன் இல்லாட்டில் எங்கடை சந்திப்புகள் பெரிய சோலியளிலை முடிஞ்சிருக்கும். 🐕  இருந்தாலும்  ஒருக்கால் கொண்ணரோடை கடியன் போகேக்கை கடியன் என்னைப்பாத்து வாலாட்டினது கொண்ணருக்கு இனி இல்லையெண்ட அவமானம். அதுக்குப்பிறகுதானே கொண்ணர் என்னை நோட் பண்ண வெளிக்கிட்டவர். சரி செல்லம்.கோவங்களை மறந்து இனியாவது கடிதம் போடுமப்பா.... .இஸ் லீப டிஸ்.💖 நான் இப்ப நல்லாய் ஜேர்மன் பாசை கதைப்பன். wie geht es dir mein schatz 💌 இத்துடன் முடிக்கிறன் அன்பு அத்தான் 💓  
    • என் உயிர் உன்னிடம்   ❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது. ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்... ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது. ❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான். அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்..., ❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர். ❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அக்கறை, என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது. ❤அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. ❤ குழந்தை பிறந்த நேரமோ என்னமோ! கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான். ❤அவர்களின்  நெருக்கம் குறைந்தது. ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது. ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது. ❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள். ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். ❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் "நீ முன்பை விட இப்போது இல்லை! மிகவும் மாறிவிட்டாய்! நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று நான் வீட்டை விட்டு எங்கோ போகிறேன்! தயவுசெய்து என்னை தேடாதே!" என்று எழுதி படுக்கையறையின் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவாள் கட்டிலுக்கும் கீழே ஒழிந்துக்கொண்டாள். ❤கோபம் தனிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியே உள்ளே வந்த கணவன் கட்டிலில் இருந்த கடிதத்தை படித்து அதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான். "மச்சான்! இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா! பிசாசு பொய்டாடா!" என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான். ❤கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுகிறாள். "அடப்பாவி! என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே! எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah! பேசிட்டுப்போறான்!!" என்று பொலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கிறாள். ❤"அடியே லூசு பொண்டாட்டி!" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி! ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு! ❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி!!!" இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே "நான் எங்கும் போலங்க! வீட்லதாங்க இருக்கேன்!" நீங்க எங்க இருக்கிங்க!!! ஏனுங்க!!! என்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள். ((பொதுவாக ஆண்கள் சொத்து வாங்கும்போது தன் மனைவி பெயரிலும், கடன் வாங்கும்போது தன்னுடைய பெயரிலும் வாங்குவார்கள். *அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால்* : 💜கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும்! 💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும். # நேசியுங்கள்.                நேசிக்கப்படுவீர்கள்...# http://sivamindmoulders.blogspot.com/search/label/கட்டுரைகள்?updated-max=2017-03-07T21:31:00-08:00&max-results=20&start=6&by-date=false
    • இந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில்  வெளிவந்த நகைச்சுவை காட்சியும்    
    • பாரம்பரிய பெருமை மிகுந்த காசி ! நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது.     காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது!   கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது!   உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.    'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும்.    கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது.    அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது.    இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட  பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள்!    இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன.   எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை!   கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது.    இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன.    படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை! சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது.   படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம்!   காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள்!   தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது!   மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை! புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம்.   ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான்.    காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம்!    ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.   இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது.   முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது!   தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.   தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது! லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம்! வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது! கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும்.    இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது.   காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம்.    காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம்!   காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள்.   காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும்.   படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும்.  . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.   காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம்.   காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது!    ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த  புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம்!       "காசி" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..? காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..? 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.     http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் :  https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=!4m2!3m1!1s0x0:0x48600e4fcdfb7b13?hl=en-US