Jump to content

முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சக் கட்டம் - ஆரிப் சம்சுதீன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சக் கட்டம் - ஆரிப் சம்சுதீன்

 

உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான  ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை  முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக்னேஸ்வரன் ஐயா தமிழ் சமூகத்துக்கு விடுத்து உள்ள விண்ணப்பத்தை பத்திரிகையில் நான் படித்தேன். இது அப்பட்டமாக இனவாதத்தின் உச்சத்தை தொட்டுள்ள கருத்து நிலைப்பாடு ஆகும்.

59682616_2359056400820686_45143166230410

ஏனென்றால் எவருக்கும் எங்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காணிகளை விற்று வாங்குவது சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையாக இருத்தல் வேண்டுமே ஒழிய இதில் இனவாதத்தை புகுத்துவது அழகோ, முறையோ அல்ல. அரசியலை, அழுத்தத்தை, வன்முறையை பிரயோகித்து காணிகள் எந்த தரப்பினராலும், எந்த வகையிலும் கைப்பற்றப்படவோ, கையகப்படுத்தப்படவோ கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் உடுத்த உடுப்போடு 24 மணி நேரத்துக்குள் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஒரேயடியாக வெளியேற்றப்பட்ட வரலாற்று துயரத்தில் இருந்து நாம் இன்னும் மீண்டு விடவில்லை.

இந்நிலையில் விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களின் இவ்வாறான கருத்துக்கள் தமிழ் இளைஞர்களை மீண்டும் தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. அத்துடன் இவ்வாறான கருத்துகள் தமிழ் பேசும் மக்களை நிரந்தரமாக பிரித்து வைப்பனவாக உள்ளன. அரசியல் பிழைப்புகளுக்காக முன்வைக்கப்படுகின்ற பிழையான கருத்துகளால் மக்கள் தவறாக வழி நடத்தப்படுவதே காலம் காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் நீடித்த சக வாழ்வுக்கு சங்கடம் கொடுப்பதாகவும் உள்ளது.

 

https://www.virakesari.lk/article/60046

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை அரசியல் தலைவர்கள் பேசும் தமிழர் வெறுப்பு இனவாத்தில் நூறில் ஒரு பங்கு கூட கிடையாது விக்கியரின் பேச்சு முதலில் அவரின் ஆட்கள் பேசும் ஒலி நாடாவை போட்டு காட்டனும் அவருக்கு . ஏன் காணும் மடவளவை யாழ் முஸ்லீம் இணையம்கள் கக்கும் தமிழர் வெறுப்பு கொஞ்ச நஞ்சமா ?

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

காணிகளை விற்று வாங்குவது சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையாக இருத்தல் வேண்டுமே ஒழிய இதில் இனவாதத்தை புகுத்துவது அழகோ, முறையோ அல்ல.

கறையான் புற்றெடுக்க, கறையான்களைத் துரத்திவிட்டு பாம்பு குடிகொள்வதுபோல் நாங்கள் தமிழர் மண்ணில் குடிகொண்டோம் என்று இவர்களின் தலீவர் கிசுபுல்லா நாட்டுமக்கள் அனைவரும் அறியக்கூறியதை... இந்தச் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் வசதியாக மறந்துவிட்டார்போல் தெரிகிறது.

தவிர விக்கினேசுவரன் ஐயா இப்படிக் கூறினாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல.. சிங்களவர்களுக்கும் விற்கக் கூடாது. ஏனெனில்.. இவர்கள் ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காகவே காணிகளை கொள்வனவு செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

காத்தான்குடியில் ஒரு தமிழனோ ஒரு சிங்களவனோ கடை போடமுடியுமா?

மாற்றுமதத்தார்க்கு அங்கு இடம் கொடுக்கக்கூடாது என்று எழுதப்படதாத சட்டமே

வைத்திருக்கிறார்கள். முஸ்லிம் அரசியல்(வி)வாதிகள் போல் விக்கி ஐயா குறுகிய வட்டத்துக்குள் சிந்திப்பவரல்ல ,அவர் பேசியிருக்க மாட்டார் ஆனால் ஐயா பேச வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.