யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பெருமாள்

ரணில் அரசின் தலைவிதி நாளை! ஆட்டம் காணுமா அரசு?

Recommended Posts

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான விவாதம் நாளை மாலை வரை தொடரும்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தையடுத்து நாளை மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பொது எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுக்கவுள்ளனர்.

https://www.tamilwin.com/politics/01/220090?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites

ஒரு நாட்டின் பணமும் பங்கு சந்தையும் ஒரு நாட்டின் அரசியல் வலுவை எதிர்வு கூற வல்லவை.

#1 : இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 177.4561 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது நேற்றையதினம் (09) ரூபா 177.7867 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள

 

#2: . பங்குச்சந்தை Market Closed
பங்கு மதிப்பு 18,372,150
புரள்வு 548,349,610.80

https://www.cse.lk/home/market

ஆக, அரசு கவிழும் மாதிரி தெரியவில்லை. 

Share this post


Link to post
Share on other sites
Quote

 

அதேவேளை, பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுக்கவுள்ளனர்.

 

அநேகமாக ஆதரவு தான்.  பிறகென்ன கூட்டம்??

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. 

parliment.jpg

ஜே.வி.பி.யின் பிரேரணையை ஆதரித்து 92 வாக்குகளும் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும் பதியப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்ததுடன் 13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 

https://www.virakesari.lk/article/60299

 

வாக்குறுதிக்காகவே பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் - ரிஷாத் 

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளக்கங்கள் நூறுவீதம் உண்மையாகும். என்றாலும் அரசாங்கத்துக்கு கொடுத்த வாக்குறுதியை பாதுகாப்பதற்காக மனசாட்சிக்கு விரோதமாக எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்தேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்க்கட்சி என் மீது முன்வைத்திருக்கும் பத்து குற்றச்சாட்டுக்களில் ஒன்றையேனும் நிரூபித்தால் நான் எனது அரசியலில் இருந்து விலகுவேன் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் இந்த சபையில் இனவாதத்தை கக்கி வருகின்றார். கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை திருப்ப முயற்சிக்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் இவரின் பேச்சைக்கேட்க முட்டாள்கள் அல்ல. எமக்கிடையே இருக்கும் பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ளலாம். 

அத்துடன் அவர் ஷாபி வைத்தியர் மீது மேற்கொண்ட குற்றச்சாட்டு பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்து அவர் எதிர்பார்க்கும் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றார். இது அவரின் மடமைத்தனமாகும். இதுபோன்ற பல இனவாத கருத்துக்களை தனது அரசியலுக்காக அவர் தெரிவித்து வருகின்றார் என்றும் இதன்போது குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/60302

 

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites

வக்கற்ற அரசாங்கத்தின் மீது  நம்பிக்கை வைப்பவர்கள் முட்டாள்கள் - வியாழேந்திரன் 

தமிழ் தலைமைகள் அரசாங்கத்தால் ஏமாற்றப்படவில்லை. மாறாக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு தமிழ் தலைமைகள் தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைத் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களாகியும அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத வக்கற்ற அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைப்பவர்கள் முட்டாள்களே என்று பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு இணங்கிய கடந்த வரவு - செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது. 

ஆனால் ஒரே இரவில் வர்த்தமானியில் வெளியிடக்கூடிய இந்த சிறிய விடயத்தைக் கூட செய்யாமல் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் இதே போன்று தான். வழங்கிய வாக்குறுதிகளையும் எவற்றையுமே நிறைவேற்றவில்லை. 

எனவே இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டு சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் எந்த தவறும் கிடையாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60265

Share this post


Link to post
Share on other sites

கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் பிரதமர் - ஜே.வி.பி.

கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து  மூலம் சம்பந்தன்  உள்ளிட்ட  தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு உத்தரவாதம் கொடுத்தே அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.  ரணில் விக்கிரமசிங்க வழமைபோன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சரியான ஒரு தீர்மானம் எடுத்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் வெற்றிகொண்டிருக்க முடியும். 

ஆனால் பிற்பகல் 4.30 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேசசபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் சம்பந்த  உள்ளிட்ட  தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு  இணக்கம்  தெரிவித்திருந்தார். 

எழுத்துமூல வாக்குறுதிகளை அடுத்தே கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழைமை போன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டார். அகவே இவர்கள் அரசாங்கத்தை கப்பம் மூலமாகவே காப்பாற்றியுள்ளனர். இவர்களுக்கு இல்லையென்றால் 119 வாக்குகள் கிடைதிருக்காது என்றார். 

https://www.virakesari.lk/article/60306

Share this post


Link to post
Share on other sites

தமிழ் தேசிய கூட்டமைப்பு இரணில் அரசை ஆதரித்து அதை காப்பாற்றியது உண்மை என்றால், அதற்கு அவரக்ளுக்கு கிடைத்தது கல்முனை வடக்கு பிரதேச சபை தரமுயர்த்தல் என மேலே உள்ள செய்தி குறிப்பு கூறுகின்றது.

இதை விட பெரிதாக ஒன்றும் கொடுக்காமல் இரணில் அரசு தன்னை தக்கவைத்ததே அதி சாதுரியமாக தெரிகின்றது.

Share this post


Link to post
Share on other sites
48 minutes ago, ampanai said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு இரணில் அரசை ஆதரித்து அதை காப்பாற்றியது உண்மை என்றால், அதற்கு அவரக்ளுக்கு கிடைத்தது கல்முனை வடக்கு பிரதேச சபை தரமுயர்த்தல் என மேலே உள்ள செய்தி குறிப்பு கூறுகின்றது.

இதை விட பெரிதாக ஒன்றும் கொடுக்காமல் இரணில் அரசு தன்னை தக்கவைத்ததே அதி சாதுரியமாக தெரிகின்றது.

அம்பனை, ஜே.வி.பி  எப்பவும் சுதந்திரக் கட்சியை (இப்ப பொ.ஐ. முன்னணி) ஆட்சிக்குக் கொண்டு வந்து தங்களை கிங் மேக்கர்களாக வைத்திருக்க விரும்பும் மூன்றாம் சிங்களத் தரப்பு என்பது என் அபிப்பிராயம். ரணிலுக்கு ஆதரவு தெரிவித்திரா விட்டால் மகிந்த குழுவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர்களாவோம். எப்பவும் உள்ள சிங்களத் தலைமைகளில் எது எங்களைக் குறைவாக வருத்துகின்றனர் என்று தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தான் த.தே.கூ முடிவெடுக்கிறது என நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

அரசுக்கு ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை;சபையில் சம்பந்தன்

அரசுக்கு ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை.திருகோணமலை யில் எனது வீட்டின் முன்னால் இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால் இந்த அரசை கவிழ்த்துவிட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் இரா.சம்பந்தன்.

அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்;

இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை விட கொஞ்சம் பரவாயில்லை. கடந்த ஆட்சியின் போது இருந்ததை விட இந்த அரசு மனித உரிமைகள் விடயத்தில் பரவாயில்லை. இந்த அரசை கவிழ்த்துவிட்டு நாம் என்ன என்ன செய்யப்போகிறோம். எனவே நாங்கள் கவனமாக செயற்பட வேண்டும்.

இன்று திருகோணமலையில் என் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தது. எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை . இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாங்கள் சரியான தீர்மானம் எடுப்போம்.

http://thinakkural.lk/article/31654

Share this post


Link to post
Share on other sites

27 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

sri-lankan-parliament-300x199.jpgசிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர், 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்றும் இன்றும் நடந்த விவாதங்களை அடுத்து, இன்று மாலை 6.35 மணியளவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஆதரவாக 92 வாக்குகளே கிடைத்தன.

இதனால் 27 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ஐதேக மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஜேவிபி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

http://www.puthinappalakai.net/2019/07/11/news/38949

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு