Sign in to follow this  
கிருபன்

பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள துடிக்கும் ஜனாதிபதி

Recommended Posts

பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள துடிக்கும் ஜனாதிபதி

எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 10 புதன்கிழமை, மு.ப. 03:25 Comments - 0

image_b151f18510.jpgஇலங்கை வரலாற்றில் எந்தவோர் அரசியல்வாதியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல், தமது அரசியல் இருப்புக்காக, இவ்வளவு மாற்றுத் திட்டங்களைப் பற்றிச் சிந்தித்திருக்க மாட்டார்கள். அவரது சில திட்டங்கள், ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், அவை அனைத்தும் அவரது இருப்புக்காகவே என்பது தெளிவான விடயமாகும்.   

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் அவர், தமது முன்னாள் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்தினரைச் சிறையில் அடைத்து, தமது எதிர்காலத்தைப் பலப்படுத்திக் கொள்ள முயன்றார். ஐக்கிய தேசியக் கட்சி, அத்திட்டத்தை முறியடிக்கவே, அவர் மறுபுறம் திரும்பி, தாமும் மஹிந்தவுடன் இணைந்து, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்தவைப் பிரதமராக நியமித்தார்.  

மஹிந்தவின் குடும்பத்தினரைச் சிறையில் தள்ளிவிட முயன்ற மைத்திரி, பின்னர் மஹிந்த தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, அடுத்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல்களில் வெற்றி பெறும் நிலை ஏற்படவே, பெரமுனவின் சார்பில், மீண்டும் ஜனாதிபதியாக முயன்றார்.   

அது தோல்வியடையவே, தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள முயன்றார். அதுவும் தோல்வியடைந்த போது, தமது பதவிக் காலம் ஆரம்பித்த நாளை, நீதிமன்றத்தின் மூலம் பிற்போட்டு, அதன் மூலம், தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள நினைத்தார்.   

அந்த முயற்சி, உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத் தாக்குதல்களை அடுத்து, சில மாதங்களாக, அவரது நிகழ்ச்சி நிரலிலிருந்து ஒதுக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த நினைத்தார்.   

அதற்கிடையே அவர், மக்களைக் கவரலாம் என நினைத்து, போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதாக அறிவித்தார். இப்போது, மீண்டும் பதவிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்கான முயற்சி, மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்துள்ளது.  

மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனவரி ஒன்பதாம் திகதி, ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அப்போது அமுலில் இருந்த அரசமைப்பின் படி, அவர் ஆறு வருடங்கள் பதவியில் இருக்கலாம்.   

ஆனால், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்களில் இருந்து, ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டது. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலமும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதியோடு முடிவடைகிறது என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.   

ஆனால், இந்தப் பதவிக் காலக் குறைப்பு, தமது ஆறு வருட பதவிக் காலத்தைப் பாதிக்கவில்லை என்று, ஜனாதிபதி கடந்த வருடம் ஜனவரி மாதம் கூற முயன்றார். அதனை, நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளவும் முயன்றார்.   

அதன்படி அவர், அதே மாதம் தமது பதவிக் காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என, உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கேட்டார். அது, ஆறு வருடங்களே என, அப்போதைய சட்டமா அதிபரும் தற்போதைய பிரதம நீதியரசருமான ஜயந்த ஜயசூரிய நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலமும் ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம், அப்போது தீர்ப்பு வழங்கியது.   

கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு, சில தினங்களுக்கு முன்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவுமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, “ஜனாதிபதி, தமது பதவிக் காலம் எப்போது ஆரம்பித்தது என, உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோர உத்தேசித்துள்ளார்” என்று கூறினார்.   

ஆனால், சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவடையும் முன், அதாவது ஏப்ரல் 21 ஆம் திகதி, தவ்ஹீத் ஜமாஆத் பயங்கரவாதிகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதும் நடத்திய தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதியின் இந்தத் திட்டம் அடிபட்டுப் போயிற்று. அதைப் பற்றிப் பேசுவதற்கு, அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது, அந்த விடயம் மீண்டும் ஊடகங்களில் உலாவி வருகிறது.   

முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஜனவரி மாதம், தமது பதவிக்காலம் ஆறு வருடங்களா, அல்லது ஐந்து வருடங்களா என உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்ட போது, தமது பதவிக் காலத்தை 2020ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதிக்கு அப்பால், அதாவது, 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி வரை நீடித்துக் கொள்வதே, அவரது நோக்கமாக இருந்தது.  

அதையடுத்து, இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில், அவர், தமது பதவிக் காலம் எப்போது ஆரம்பித்தது என, உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கோரப் போவதாக தயாசிறி ஜயசேகர கூறினார். அதனையே, இப்போது ஜனாதிபதி செய்யப் போகிறார். அதன் நோக்கமும் தமது பதவிக் காலத்தை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதிக்கு அப்பால் நீடித்துக் கொள்வதேயாகும்.   

தமது பதவிக் காலம், தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற 2015ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், தமது பதவிக் காலத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால், அத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்ற திகதியிலிருந்தே தமது பதவிக் காலம் ஆரம்பித்துள்ளது எனக் கருதப்பட வேண்டும் என்பதே, இப்போது அவரது நிலைப்பாடாக இருக்கிறது. அதன் நோக்கமும் தமது பதவிக் காலத்தை, 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதிக்கு அப்பால், நீடித்துக் கொள்வதேயாகும்.  

கடந்த ஏப்ரல் மாதம், இந்தக் கருத்தை தயாசிறி ஜயசேகர முன்வைத்த போது, 2015ஆம் திகதி ஜூன் 21ஆம் திகதியே சபாநாயகர் 19ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்குத் தமது ஒப்புதலை வழங்கினார் என அவர் கூறியிருந்தார். ஆனால், உண்மையிலேயே 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியே சபாநாயகர் அந்த ஒப்புதலை வழங்கியிருந்தார். அதனைத் திருத்தி, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதியே, தமது பதவிக் காலம் ஆரம்பித்துள்ளது என, ஜனாதிபதி இப்போது வாதிடுவதாக ஊடகங்கள் தெரிவித்தன.   

உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டால், ஜனாதிபதியின் பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு மே மாதம் 15 திகதியே முடிவடையும். அதாவது, சட்டப்படி 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அவர் ஏன், தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள முயல்கின்றார் என்பதைத் தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  

பதவிக் காலத்தை நீடித்து ஜனாதிபதி என்ன சாதிக்கப் போகிறார்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என, கடந்த வருடம் உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்டதில் சிறிதளவு நியாயமும் இருந்தது.   

ஏனெனில், ஆறாண்டு காலமாக இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்தை, ஐந்தாண்டுகளாகக் குறைத்த 19ஆவது அரசமைப்புத் திருத்தம், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரே நிறைவேற்றப்பட்டது.  

எனவே, ஏற்கெனவே ஆறு ஆண்டுகளுக்காக மக்கள் ஆணையை பெற்றவரது பதவிக் காலமும் குறைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் சிலரிடம் ஏற்படக்கூடும்.  

ஆனால், ஜனாதிபதியின் ஏனைய நடவடிக்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது, அவரது நோக்கம் அது மட்டுமா என்ற சந்தேகமும் எழுகிறது. குறிப்பாக, தமது பதவிக் காலம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்கும் அவரது திட்டத்தையும், சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் உடனடியாகப் பொதுத் தேர்தலொன்றை நடத்தும் அவரது திட்டத்தையும் கருத்தில் கொள்ளும் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்துவதே அவரது நோக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.   

தமது பதவிக் காலத்தை ஆறு வருடங்களாக, அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி வரையிலோ, அதனை 2020ஆம் ஆண்டு மே மாதம் வரையிலோ நீடித்துக் கொள்வதில் அவர் எதனை சாதிக்கப் போகிறார்? ஐந்து வருட பதவிக் காலத்துக்குள், சாதிக்காத எதையும் அந்தப் பதவிக் கால நீடிப்புகளால் சாதிக்கப் போவதில்லை. ஆனால், இந்தப் பதவிக் கால நீடிப்புகளால் அவருக்கு நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடையும்முன் அதனைக் கலைக்க அதிகாரம் கிடைக்கிறது.  

19ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும்முன், தேர்தலில் தெரிவான நாடாளுமன்றமொன்றை ஒரு வருட காலத்துக்குப் பின்னர் கலைக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. 19ஆவது அசமைப்புத் திருத்தம், ஜனாதிபதியின் அந்த அதிகாரத்தைப் பறித்து, நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தில், நாலரை ஆண்டுகள் கழிந்த பின்னர், அதனைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியது.  

அதாவது, அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்குப் பின்னரே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். ஜனாதிபதியின் பதவிக் காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்றோ அல்லது 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும் என்றோ, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவரால் நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாகப் பொதுத் தேர்தலை நடத்த அதிகாரம் கிடைத்துவிடுகிறது.   

சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், இந்த வருடத்துக்குள்ளேயே பொதுத் தேர்தலை நடத்த, அவர் திட்டமிட்டதைக் கருத்திற் கொள்ளும் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கிறது போல் தெரிகிறது.  

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடித்து, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போடுவதன் மூலம், அவர் எதைச் சாதிக்க முயற்சிக்கிறார்? அது முடியாது போனால், சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி, எதைச் சாதிக்க முயல்கின்றார்?   

இப்போதைக்கு, மஹிந்தவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவே, ஜனாதிபதி வேட்பாளராக வருவார் போல்த் தெரிகிறது. ஆனால், அதற்கு முன்னர், பொதுத் தேர்தல் நடைபெற்று பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால் நிலைமை மாறலாம்.  

அந்தத் தேர்தலில் மஹிந்த பிரதமராகலாம். அதற்காக ஜனாதிபதியாக இருந்து கொண்டே அவருக்கு உதவியளித்து, அதன் பின்னர் அவர் மூலம் பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என மைத்திரி நினைக்கிறாரோ தெரியாது. ஆனால் அது சாத்தியப்படாது.   

ஏனெனில், பொதுத் தேர்தல் மூலம் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகப் பதவியேற்றால், அவர் முன்னரைப் போல் உடனடியாக ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று, 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வரலாம். அதன் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தாமே போட்டியிடலாம்.  

ஆனால், முன்னர் மைத்திரி திட்டமிட்டபடி, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பொதுத் தேர்தலை முன் கூட்டியே, இவ்வருடமே நடத்த முற்பட்டால், மஹிந்தவுக்கு அவ்வாறு 18ஐ மீண்டும் கொண்டு வரக் காலம் போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், சட்டப் படி டிசம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.   

அதாவது, நவம்பர் இரண்டாம் வாரத்துக்கு முன்னராவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு முன்னர், சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்தி, பொதுத் தேர்தலையும் நடத்த முடியுமா என்பது சந்தேகமே. அவ்வாறாயின், ஜனாதிபதி எதற்காக இவ்வாறு பல திட்டங்களை போடுகிறார்.   

பதவிக் காலத்தை நீடிப்பதன் மூலமும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அவரால் ஒரு விடயத்தை மட்டும் நிச்சயமாகச் சாதிக்க முடியும். அதாவது, தமது பரம எதிரியாக மாறியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அவரது பதவிக் காலம் முடிவடையும்முன் பதவி துறக்கச் செய்ய முடியும். அதுதான் பல்வேறு உத்திகள் மூலம், அவர் நிறைவேற்றிக் கொள்ளப் போகும் நோக்கமா என்று இறுதியாக நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பதவிக்-காலத்தை-நீடித்துக்-கொள்ள-துடிக்கும்-ஜனாதிபதி/91-235076

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மிகவும் நல்ல விடயம்....!!!! ஆனால் முன் பதிவுகளில் வீழ்ச்சி உள்ளது போல் தெரிகிறது; வழக்கமாக 50%மாக இருப்பது இந்த முறை 30%மாக வீழ்ச்சி அடைந்தது  உள்ளது, இதற்கு காரணம் முன் பதிவுகள்  வழக்கமாக ஏப்பிரல் முதல் ஜூன் மாத காலப் பகுதியில் தான் மேற்கொள்ளப்படும், ஆனால் பாதுகாப்பு நிலவரம் சிக்கலாக இருந்தால் வீழ்ச்சி கண்டு இருக்க கூடும், அதை விட தேர்தல் இடம்பெறுவதும் காரணமாக இருக்கலாம்.
  • சஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019 சஹ்ரானுடனான காணொளி தொடர்பில் ஹக்கீம் விளக்கம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (19.10.19) கண்டி, கலகெதர தேர்தல் தொகுதியில் ஹத்தரலியத்தவில் நடைபெற்றபோது   கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம்  சில சிங்கள மொழி இலத்திரனியல் ஊடகங்களில் என்னையும் தீவிரவாதி ஸஹரானையும் தொடர்புபடுத்தி பழைய காணொளியொன்றை ஒளிபரப்பி, பொது மக்கள் மத்தியில் தவறான மனப்பதிவை ஏற்படுத்தக்கூடிய விஷமத்தனமான செய்தியொன்று பரப்பப்பட்டது. 2015 ஓகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பில் போட்டிட்ட ஹிஸ்புல்லாஹ் படுதோல்வியடைந்தார். அதன்பின், பின்கதவால் சென்ற ஹிஸ்புல்லாஹ், அவர் எதிர்த்துப் போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தேசியப்பட்டியல் ஆசனமொன்றை பெற்றுக்கொண்டார். அதன்பின், உடனடியாக குண்டர்களை கொண்டு அவரது அரசியல் எதிரிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை தாக்கினார். அத்துடன் அவர்களது வீடுகளுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் பாரதூரமான சேதங்களையும் ஏற்படுத்தினார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவிடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளையடுத்து, ஹிஸ்புல்லாஹ்வின் அடாவடித்தனத்தினால் பாதிப்புக்குள்ளானவர்களை வைத்தியசாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டேன். நிலைமைகளை நேரில் கண்டறிய கட்சி முக்கியஸ்தர்களுடன் சேதம் விளைவிக்கப்பட்ட இடங்களுக்கும் சென்றேன். அப்படிச்சென்ற இடமொன்றில் ஏனையவர்களுடன் ஒருவராக பயங்கரவாதி சஹ்ரானும் இருந்திருக்கிறான். அப்போது அவனைப்பற்றி எனக்கு தெரிந்திருக்கவில்லை. இந்த செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்து சில வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தல் இப்போது அதை தூக்கிப்பிடிக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதால், சிங்கள மக்கள் மத்தியில் இனவாத பிரசாரத்தை முன்னெடுப்பதற்காக இந்தக் கதையை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பேணி, சகவாழ்வுக்காக பாடுபட்டுவரும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். எமது கட்சியின் உயரிய நோக்கங்களை சிதறடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான கீழ்த்தரமான சதித்திட்டங்களை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவம் நடைபெற்ற சூழ்நிலை பற்றி ஹிஸ்புல்லாஹ்வே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் எங்கள் முன்னிலையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்த போலிப் பிரசாரம் குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இவற்றுக்கு முகம்கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒருபோதும் பின்நிற்காது என்றார்   http://globaltamilnews.net/2019/132148/
  • பிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019   மஜூரான் சதானந்தன் எதிர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு மீதான விசாரணை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களுடன், தனியாக அரச தரப்பு வழக்கை நீதிமன்றம் கேட்டது. இந்த நாளுக்கான வழக்கு அமர்வின் நிறைவில், நீதிமன்றத்தினால் எதிர்த் தரப்பு வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை தலைமை நீதிபதி 2019 நவம்பர் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தின் ஆரம்ப அமர்வு நீதிபதிகளால் 2019 ஜனவரி 21 ஆம் திகதி வழங்கப்பட்ட பிடியாணை, நடைமுறைக் குறைபாடுகள் காரணமாக,  2019 பிப்ரவரி 01ஆம் திகதி  வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரும்பப் பெற்றார். வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் பிரிகேடியர் பெர்னாண்டோ மீதான குற்றத்தீர்ப்பு குறித்த இங்கிலாந்தின் பொது ஒழுங்கு சட்டத்தின் 4 மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட முந்தைய குற்றத்தீர்ப்பை 2019 மார்ச் 15 ஆம் திகதி நீக்கியதுடன், ´பிரதிவாதி பிரதிநிதித்துவம் இல்லாமல் தண்டிக்கப்பட்டார்´ எனத் தீர்மானித்து, ´நடைமுறை நியாயத்திற்கு வழிவகுத்த தொடர் தவறுகள் அல்லது பிழைகளை´ மேற்கோள் காட்டி, 1980 ஆம் ஆண்டின் நீதவான் நீதிமன்றச் சட்டத்தின் 142 ஆம் பிரிவின் கீழ் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுத்தது. லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைக்கப்பட்ட ஒரு இராஜதந்திரி என்ற வகையில் பிரிகேடியர் பெர்னாண்டோ 1961 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்தின் படி இராஜதந்திர விடுபாட்டுரிமைகளுக்கு தகுதியுடையவர் என்று இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தெரிவித்தது. பரஸ்பரமான இந்தக் கடமையை மதிக்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது   http://globaltamilnews.net/2019/132140/
  • ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ? நிலாந்தன்… October 19, 2019   ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த சுயாதீனக் குழுவும் மிகவும் பிந்தி விட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் அதைவிட பிந்தி விட்டார்கள். சுயாதீன குழு கட்சித் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காலம் பிந்தி விட்டது என்றுதானே சொன்னார்கள்? அப்படி என்றால் அதை குறித்து முதலில் சிந்தித்திருக்க வேண்டியது யார்? சில ஆயர்களும் சில சாமியார்களும் சில அரசியல் விமர்சகர்களும்தானா? அரசியலை முழு நேரத் தொழிலாகக் கொண்ட அதற்காக சம்பளம் வாங்குகின்ற அரசியல் தலைவர்கள்தானே அதைப்பற்றி முதலிலேயே சிந்தித்திருக்க வேண்டும்? அதை சிந்தித்திருக்க வேண்டிய வேண்டிய ஒரு காலகட்டத்தில் சிந்திக்காமல் இருந்துவிட்டு அதைப்பற்றி சிந்தித்த ஒரு சிவில் அமைப்பிடம் நீங்கள் பிந்திவிட்டீர்கள் என்று கூறும் தலைமைகளை எப்படி பார்ப்பது? அது அவர்களுடைய தொழில் அல்லவா? ஆனால் அவர்களில் எவரும் அதை பற்றி சிந்தித்திருக்கவில்லை. எந்த சிங்களத் தலைவரோடு எப்படி டீல் வைத்துக் கொள்ளலாம் என்றுதான் சிந்தித்தார்கள். ஆனால் தமிழ்ப் பேரம் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரோடுதான் தொடங்குகிறது என்பது ஏன் அவர்களுக்கு தெரியாமல் போனது? தமிழ் தலைவர்கள் யாருமே நீண்டகால நோக்கில் சிந்திப்பதில்லையா? தூர நோக்கோடு சிந்தித்திருந்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை திட்டமிட்டு கட்டியெழுப்பி இருந்திருக்கலாம். அது நடக்கவில்லை. அதைப் பற்றி சிந்தித்திருக்கவேண்டிய தலைவர்கள் சிந்திக்கவில்லை. சில ஆயர்களும் சாமியார்களும் கருத்துருவாக்கிகளுமே சிந்தித்தார்கள். அதுவும் மிகப் பிந்தி சிந்தித்தார்கள். இது எதைக் காட்டுகிறது? தமிழ் தலைவர்களுக்கு எது பேரம் என்பதில் சரியான தெளிவு இல்லை. இன்னும் கூராகச் சொன்னால் பேர அரசியலைக் குறித்து அவர்களிடம் சரியான தரிசனம் எதுவும் கிடையாது. இதுதான் உண்மை. இவ்வாறான ஒரு பாரதூரமான வெற்றிடத்தில்தான் ஒரு சுயாதீன குழு ஒரு பொது வேட்பாளரை குறித்து மிகவும் பிந்திச் சிந்தித்து. என்பதனால் அது காரியம் ஆகவில்லை. இப்பொழுது அத்தெரிவு ஒரு சிவாஜிலிங்கமாக சுருங்கிவிட்டது. இனி சிவாஜிலிங்கத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும். ஒரு பொதுத் தமிழ் பொது வேட்பாளர் இல்லாத வெற்றிடத்தில் அதற்கு நிகரான மற்றொரு தெரிவு பகிஷ்கரிப்பு தான். ஆனால் பகிஸ்கரிப்பு எனப்படுவது வெளியுலகத்துக்கு எதிர்மறையான செய்தியை கொடுக்கும். மேலும் தமிழ் மக்களுக்கு இப்பொழுது மிஞ்சி இருப்பது ஒரே செயல் வழி. அதுதான் தேர்தல் வழி. தமக்கு மிஞ்சியிருக்கும் ஒரே செயல் வெளியையும் மூடுவதா? அல்லது அந்த வெளிக்குள் இறங்கி விளையாடி பார்ப்பதா? இல்லை. விளையாட முடியாது. பகிஸ்கரிக்கப்போகிறோம் என்று சொன்னால் அது ஒரு நிலைப்பாடு மட்டுமல்ல. மாறாக அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அதை ஒரு தமிழ் கூட்டு உளவியல் ஆக மாற்ற வேண்டும். அதற்கென்று வளங்களைக் கொட்டி உழைக்க வேண்டும். அப்படி செய்யும் போது கீழிருந்து மேல் நோக்கிய ஒரு மக்கள் மைய கட்டமைப்பை கட்டி எழுப்பலாம். அது ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டுமல்ல அதற்குப் பின்னரும் குறிப்பிட்ட கட்சிக்கு ஒரு பெரிய அடித்தளமாக அமையும். ஆனால் அப்படி உழைத்து பகிஷ்கரிப்பை வெற்றி பெறச் செய்ய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரா? தமிழ்பொது வேட்பாளரையும் பகிஸ்கரிப்பையும் விடடால் ஏனைய எல்லா தெரிவுகளும் மங்கலானவைதான் துலக்கமில்லாதவைதான். சஜித்துக்கு சாதகமானவைதான். இதைப் பிழிவாகச் சொன்னால் பொது வேட்பாளருக்கும் பகிஸ்கரிப்புக்கும் இடையில் இருக்கும் எந்த ஒரு தெரிவும் சஜித்துக்கு எப்படி தமிழ் மக்களின் ஆணையை வாங்கிக் கொடுப்பது என்பது குறித்து மறைமுகமான வழிகளில் சிந்திப்பதுதான். அந்த முடிவை எப்படி புதிய வார்த்தைகளால் நியாயப்படுத்துவது என்று சிந்திப்பதுதான். இவ்வாறு மங்கலான தெரிவுகளைக் கொண்ட ஒரு பேரக் களத்தில்தான் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ஐந்து கட்சிகளின் கூட்டு செயற்படப்போகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால்தான் தமிழ் பேரம் துலக்கமாகவும் சிங்கள வேட்ப்பாளர்களை இறங்கி வரச் செய்யும் விதத்திலும் கூர்மையானதாக இருக்கும். அப்படி ஒரு பொது வேட்பாளர் இல்லாத வெற்றிடத்தில்தான் சஜித் பிரேமதாச இறுமாப்போடு கதைக்கிறார். கோத்தபாய ராஜபக்ச அதை இனவாதிகளுக்கு தீனியாக மாற்றுகிறார். உண்மையில் ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் தலைவர்கள் தயாரில்லை என்பது ஒருவிதத்தில் இறங்கி வருவதுதான். உச்சமான பேரத்தை பிரயோகிக்க தமிழ்த் தலைவர்கள் தயாரில்லை என்பத்தைத்தான் அது காட்டுகிறது. ஆனால் அப்படி இறங்கி வந்து ஒரு பொது ஆவணத்தை தயாரித்திருக்கும் ஐந்து கட்சிகளையும் அஸ்கிரிய பீடத்தின் பிரமுகர் எவ்வாறு பார்க்கிறார்? அஸ்கிரிய பீடத்திற்கு அதிகம் நெருக்கமான ராஜபக்ச அணி அதை எப்படி பிரச்சாரம் செய்கிறது? அதைவிடக் கேவலம் சஜித் என்ன சொல்கிறார் என்பது. எந்த ஒரு நிபந்தனைக்கும் அவர் அடிபணிய மாட்டாராம். நிபந்தனைகளுக்கு இணங்கி லட்சக்கணக்கான வாக்குகளை பெறுவதை விடவும் நிபந்தனைகளுக்கு இணங்காது தோல்வியடைந்து வீட்டுக்கு செல்லவும் அவர் தயாராம். இப்படிப்பட்ட சஜித்துக்கு தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்க வேண்டும் என்று எப்படி கேட்பது? இதுதான் பிரச்சினை. ஐந்து கட்சிகளும் கூட்டாக தயாரித்த ஆவணம் அதன் கால முக்கியத்துவம் காரணமாக தென்னிலங்கை இனவாதிகளுக்கு தீனியாக மாறிவிட்டது. தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டது போல ஒரு தோற்றம் உருவாகியது தென்னிலங்கையில் இனவாதிகளை ஐக்கிய படுத்துவிட்டது என்று சில கையாலாகாத தமிழர்கள் புலம்பத் தொடங்கி விட்டார்கள். அப்படி என்றால் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது பேரத்தை முன்வைக்கக் கூடாது என்று இவர்கள் கேட்கிறார்களா? ஆனால் தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் உருப்பெருக்கி காட்டும் அளவுக்கு ஐந்து கட்சிகளின் ஐக்கியமானது நிரந்தரமாக இருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்காக அவசரமாக ஏற்படுத்தப்பட்ட ஐக்கியம் இது. இப்படி ஒரு ஐக்கியத்துக்கு போக வேண்டிய தேவை அதில் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு இருந்தது. குறிப்பாக கூட்டமைப்புக்கு அது ஒரு வரப்பிரசாதம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட தனது வாக்கு வங்கியில் 35 விகிதத்தை அக்கட்சி இழந்து விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து திருத்திய வீதிகள் வாக்குகளாக மாறுமா என்ற சந்தேகம் உண்டு. குறிப்பாக ரணில் வேட்பாளராக நின்றிருந்தால் கூட்டமைப்பு இந்தளவுக்கு இறந்கி வந்திருக்குமா? எனவே கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் கூட்டமைப்பை தற்காலிகமாக மீள இணைத்து விட்டார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நீக்கியதன் மூலம் அவர்களுக்கு இரட்டை லாபம். அதை விடப் பெரிய ஒரு லாபமும் உண்டு. அது என்னவெனில் மேற்படி ஐந்து கட்சிகளின் கூட்டை தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் எந்த அளவுக்கு எதிர்க்கிறார்களோ அதே அளவுக்கு தமிழ் வாக்குகள் இக்கூட்டின் பின் செல்லும். தமிழரசுக் கட்சி வழமைபோல தேர்தல் நேரத்தில் எதிர்ப்பு அரசியல் என்ற முகமூடியை வசதியாக அணிந்து கொண்டு தனது வாக்கு வங்கியை பெருக்கிக்கொள்ள இது உதவும். இப்படிப் பார்த்தால் மேற்படி ஐந்து கட்சிகளின் கூட்டினால் அதிக லாபம் கூட்டமைப்புக்குத்தான்.ஒரு மாற்று அணியை நோக்கி சிந்திக்கப் பட்டு வந்த ஒரு சூழலில் அந்த மாற்று அணிக்கு பதிலாக கூட்டமைப்பு மீள இணைக்கப்பட்டு விட்டதா? ஈ.பி.ஆர்.எல்.எப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் தெரிவிக்கும் கருத்துக்களின்படி கூட்டினை ஒரு கொள்கைக் கூட்டாக அவர்கள் கருதவில்லை என்று தெரிகிறது. இது தற்காலிகமானது. ஜனாதிபதி தேர்தலுக்கானது. எதிர்காலத்தில் நிரந்தரமான ஒரு கூட்டை உருவாக்குவது என்று சொன்னால் அதற்கு முதலில் ஒரு கொள்கை ஆவணம் வரையப்பட வேண்டும். அதன்மீது ஐக்கியத்துக்கான உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். எனவே இக்கூட்டை நிரந்தரமானதாகக் கருதத் தேவையில்லை. பொதுஆவணத்தை உருவாக்கும் பணிகள் முடிவடைந்த பின் பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அறிக்கையின் இறுதிப் பகுதியில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ……..’தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்று இம் முயற்சியில் இறங்கிய நாம் ஐந்து கட்சிகள் உடன்பட்டு வந்த நிலையில் அவர்களிடம் இப்பொது ஆவணத்தை ஒப்படைத்து இதனடிப்படையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்ததோடு அவர்கள் அரசியல் தலைவர்கள் என்ற வகையிலும் நாம் பொறுப்பு வாய்ந்த மாணவர்களாய் ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டவர்கள் என்ற வகையிலும் இவ்விடயத்தினை அவர்களிடமே ஒப்படைத்து விலகிக்கொண்ட நிலையில் கலந்துரையாடல்களின் முன்னேற்றங்களின் அடிப்படையில் அரசியல் கட்சி தலைவர்களே தொடர்ச்சியாக இவ் விடயத்தினை கையாள்வார்கள்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து கட்சிகளின் கூட்டை உருவாக்கும் பொழுது அனுசரணையாளர்களாகத்தொழிற்பட்டார்களா அல்லது வசதி வழங்குனர்களாகத் தொழிற்பட்டார்களா? அனுசரணையாளர்களாகச் செயற்பட்டிருந்திருந்தால் பல்கலைக்கழகம் ஐக்கியத்தை ஏற்படுத்திய பின் விலகி நிற்க கூடாது. கட்சிகளின் கூட்டு தென்னிலங்கையில் உள்ள பிரதான வேட்பாளர்களோடு பேசி ஒரு முடிவை எடுக்கும் வரை மாணவர்கள் அனுசரணை புரியவேண்டும். அந்த முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட தீர்மானத்தை எடுப்பதற்கும் மாணவர்கள் அனுசரணை புரிய வேண்டி இருக்கும். ஒரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து அனுசரணை புரியும் அளவுக்கு தொழில்சார் திறனுடனும் இருப்பதில்லை. எனவே இது விடயத்தில் கட்சிகள் கொள்கை ஆவணத்தை விட்டு விலகிச் செல்லாமல் இருப்பதற்கும் சிங்கள வேட்பாளர்கள் ஆவணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொழுது அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திப்பதற்கும் அல்லது கூட்டமைப்பு கூறுவது போல ஆவணத்தில் உள்ள கோரிக்கைகளில் குறைந்தது அறுபது விகிதத்தையாவது ஏற்றுக் கொள்ளும் ஒரு வேட்பாளரோடு எந்த அடிப்படையில் ஒத்துழைப்பது என்பதற்கு உரிய வழிவகைகளை கண்டு பிடிப்பதற்கும் பொருத்தமான அனுசரணையாளர்கள் தேவை. அதைக் கட்சித் தலைவர்களை செய்து முடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பேரவையால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழுவும் பல்கலைக்கழக மாணவர்களும் தலையீடு செய்திருக்காவிட்டால் அரசியல்வாதிகள் மேற்கண்ட முடிவை எடுத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. எனவே இனிமேலும் அரசியல் கட்சிகளின் மீது சிவில் சமூகங்களின் தலையீடு அவசியம். அவாறான தார்மீகத் தலையீடே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்குள்ள ஒரே பாதுகாப்பு உத்தரவாதம் ஆகும்.   http://globaltamilnews.net/2019/132132/    
  • நிமலராஜனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்….. October 19, 2019 சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 19ஆவது நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) மாலை இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, சுடரேற்றி , உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழில் யுத்தம் உக்கிரமாக இருந்த வேளையில், தமது உயிரையும் பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்திலிருந்து தற்துணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் நிமலராஜன். யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையிலுள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு நிமலராஜன் சுட்டுப்  படுகொலை செய்யப்பட்டார். ஐந்து தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இரு ஆயுததாரிகள் நிமலராஜனின் தந்தையையும் கத்தியால் தாக்கி விட்டு கைக்குண்டை வீசி தப்பிச் சென்றிருந்தனர். இந்தத் தாக்குதலில் நிமலராஜனின் தந்தை, தாய் உட்பட மருமகனும் காயமடைந்தனர். ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில், அதியுயர் பாதுகாப்பு பகுதிக்குள் ஆயுததாரிகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதம் நுழைந்தது எவ்வாறு என்ற சந்தேகம் இன்றுவரை மக்கள் மத்தியிலுள்ளது. ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 19 வருடங்காளாகியும் சூத்திரதாரிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   http://globaltamilnews.net/2019/132129/