யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ampanai

ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் உதயமான புதிய தேசிய கூட்டணி ; ஒப்பந்தமும் கைச்சாத்து

Recommended Posts

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

DSC08903.jpg

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இதன்போது கலந்து கொண்டனர்.

DSC08931.jpg

இலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தேசிய கூட்டணி அங்குராப்பணம் செய்யப்பட்டது.

இதன்போது இந்த தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றின் பொது செயலாளர்கள் இணைந்து உடனபடிக்கையில் கைச்சாத்திட்டனர்.

DSC08897.jpg

அந்தவகையில் இ.தொ.கா சார்பாக பொது செயலாளர் அனுஷா சிவராஜா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

இப் புதிய கூட்டணியை ஆரம்பிப்பதற்கு முன்பாக இன்று காலை றம்பொடையில் உள்ள ஆஞ்சிநேயர் ஆலயத்தில் ஆசி வேண்டிய சமய வழிபாடுகளும் இடம்பெற்றது. 

vlcsnap-2019-07-11-12h30m59s354.jpg

இதில் பெருந்திரளான மக்களோடு கூட்டணியில் இணைந்துள்ள உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/60260

Share this post


Link to post
Share on other sites

முகத்தாருக்கு பயம்பிடிச்சிட்டோ!

Share this post


Link to post
Share on other sites

அனைத்து தரப்பினரும் இணைந்தே உருவாக்கப்பட வேண்டும்..


தமிழ் மக்களுக்குள் ஒரு கூட்டணி உருவாகுமானால் அது அனைத்து தரப்பினரும் இணைந்தே உருவாக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி முதலான கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டது.

குறித்த கூட்டணியலில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோதே விக்னேஸ்வரன் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

http://www.hirunews.lk/tamil/220111/அனைத்து-தரப்பினரும்-இணைந்தே-உருவாக்கப்பட-வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு