யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ampanai

மாற்றுக்காணிகள், இழப்பீடுகள் வேண்டாம் ; இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கர் காணியை என்னிடம் திருப்பித்தாருங்கள் - காணி உரிமையாளர்

Recommended Posts

யாழ்.மிருசுவில் - ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கர் காணியை தன்னிடமே திருப்பி தருமாறு காணி உரிமையாளரான தம்பிராசா மகேஸ்வரி  கோரிக்கை விடுத்துள்ளதுடன் மாற்றுக் காணி மற்றும் இழப்பீடு வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2011ஆம் ஆண்டு சுமார் 5 இலட்சம் ரூபா செலவு செய்து எனது காணியை துப்புரவு செய்தேன். 2012ஆம் ஆண்டு எனது காணிக்குள் அடாத்தாக புகுந்த இராணுவத்தினர் காணிக்குள் நுழைய கூடாது என கூறியதுடன் காணியை சுவீகரித்து விட்டனர்.

இதன் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக வழக்கு தொடர்ந்தபோதும் தென்னம் தோட்டத்தை விடவும் தேசிய பாதுகாப்பு முக்கியமானது என தெரிவித்த நிலையில்,  எனது காணியில் நிரந்தரமாக இராணுவத்தினர் இருந்துவிட்டனர். சுமார் 50 ஏக்கர் காணியை எனது பிள்ளைகள் மருமக்கள் மற்றும் பேரபிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்திருக்கிறேன்.

 

7899.jpg

 

என்னுடைய பிள்ளைகள் மற்றும்  நான் வாழ்ந்த அந்த காணியில் வாழவேண்டும் என நானும் அவர்களும் ஆசைப்படுகின்றோம். என்னுடைய காணிக்காக நான் செல்லாத இடமே இல்லை. கடைசியாக பாராளுமன்ற உறுப்பினர்,  சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக மேன்முறையீடு செய்திருக்கின்றோம். அவர் நீதியை பெற்றுக் கொடுப்பார் என நம்புகிறேன்.

இதேபோல வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் சென்றிருந்தேன். அவர் எனது காணி இராணுவத்திற்காக எடுக்கப்பட்டுவிட்டதாம். ஆகவே மாற்று காணி தருகிறாராம் அதுவும் யாழ்ப்பாணத்தில் மாற்று காணி வழங்ககூடிய வசதிகள் இல்லை ஆகவே வேறு மாவட்டங்களில் மாற்று காணிகள் தருவதாகவும் அதுவும் இலங்கையில் வாழ்பவர்களுக்கு சொந்தமான 25 ஏக்கர் காணிக்கான மாற்று காணியே தருவதாகவும் வெளிநாட்டில் உள்ளவர்களுடைய காணிகளை தரமாட்டோம் எனவும் சொல்கிறார்.

ஏன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டில் வாழ்ந்தால் இலங்கையில் காணி கொடுக்க முடியதா ? எமக்கு எங்களுடைய காணி வேண்டும். மாற்று காணிகள் இழப்பீடுகள் வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60228

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ampanai said:

சுரேன் ராகவனிடம் சென்றிருந்தேன். அவர் எனது காணி இராணுவத்திற்காக எடுக்கப்பட்டுவிட்டதாம். ஆகவே மாற்று காணி தருகிறாராம் அதுவும் யாழ்ப்பாணத்தில் மாற்று காணி வழங்ககூடிய வசதிகள் இல்லை ஆகவே வேறு மாவட்டங்களில் மாற்று காணிகள் தருவதாகவும் அதுவும் இலங்கையில் வாழ்பவர்களுக்கு சொந்தமான 25 ஏக்கர் காணிக்கான மாற்று காணியே தருவதாகவும் வெளிநாட்டில் உள்ளவர்களுடைய காணிகளை தரமாட்டோம் எனவும் சொல்கிறார்.

சம் சும் செய்கிற மாமா வேலையை விட இவர் சூப்பராய் செய்யிறார் .

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, பெருமாள் said:

சம் சும் செய்கிற மாமா வேலையை விட இவர் சூப்பராய் செய்யிறார் .

அந்த கோதாரி விழுந்த கோஷ்ரியளிட்டையிருந்து  நல்லததை எதிர்பார்க்கிறது எங்கடை முட்டாள்த்தனம்.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு