Jump to content

பால் பக்கெட்டுகளுக்கு தடை.. ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

HC order to ban multi-layered plastic wrappers in which consumables such as milk, oil, biscuits and medicine

பால் பக்கெட்டுகளுக்கு தடை.. ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகளை பிளாஸ்டிக்கில் விற்க ஐகோர்ட் தடை.

பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு செல்லும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதில் அவற்றை பாட்டிலில் விற்பனை செய்யவது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மறு சூழற்சி செய்யும் செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம்தேதி முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி 1ம்தேதியில் இருந்து பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓரளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.

இந்நிலையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகள் 100 சதவீதம் மறு சூழற்சி செய்யக்கூடியவை என்றும் வாதிட்டனர்.

எனினும் நீதிமன்றம் பிளாஸ்டிக்குக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க மறுத்துவிட்டடது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கண்டிப்பான முறையில் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அத்துடன் ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை பாட்டில்கள் மூல அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் பால் மட்டுமில்லாமல் ஆயில், பிஸ்கட், நொறுக்கு தீனிகள், சாக்லேட்டுகள், மெனிசன்கள் உள்பட பலவற்றுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்றும் தடைவிதித்தனர்.

மறு சுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால் தான் தடையின் நோக்கம் நிறைவேறும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக்குகளுக்கும் தடை விதிக்கவில்லை என்றால் இந்த உத்தரவு வெறும் காதிக உத்தரவாகத்ததான் இருக்க முடியும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/hc-order-to-ban-multi-layered-plastic-wrappers-in-which-consumables-milk-oil-biscuits-356739.html
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.