Jump to content

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமனம் – மக்கள் கொண்டாட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_6366.jpg

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமனம் – மக்கள் கொண்டாட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.

இதன் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதனை வரவேற்று நேற்று மாலை கல்முனை மாநகரில் இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவந்த கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனும் பங்குகொண்டதுடன் அவரை இளைஞர்கள் தூக்கி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட நகர்வு காரணமாக இந்த கணக்காளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கல்முனை-வடக்கு-பிரதேச-செ-3/

Link to comment
Share on other sites

கூட்டமைப்பின் காட்டில் மழை. அடுத்த தேர்தல்வரையில் ஈரம் நிலைக்குமா......🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட நகர்வு காரணமாக இந்த கணக்காளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரே வா ...
சும்மாவா சொன்னங்கோ .....அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட  உதவ மாட்டார்கள் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமனம்- பட்டாசுகளால் அதிர்ந்தது கல்முனை

பாறுக் ஷிஹான்

IMG_6405.jpg?zoom=1.1024999499320984&res

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அறிந்த இளைஞர்கள் வீதியில் வெடி கொழுத்தி ஆராவாரம் செய்தனர்.

வியாழக்கிழமை (11.07.19) இரவு 9 மணியளவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் ஒன்று கூடிய இளைஞர்கள் குழு கல்முனை தரவை பிள்ளையார் கோயில் முன்றல்,கல்முனை ஐக்கிய சதுக்க முன்றல், கல்முனை வாடி வீட்டு சுற்றுவட்டம், உள்ளிட்ட பகுதியில் வெடிகள் கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.

இதன் போது அங்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

“நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்த்து வாக்களித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளில் ஒன்றான கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நிரந்தர கணக்காளர் ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.இத் தகவலை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்தகவலை அறிந்த எமது கல்முனை வாழ் தமிழர்கள் நகரமெங்கும் பட்டாசுகளை கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். எமது இளைஞர்களுடன் இணைந்த வெற்றி கொண்டாட்டம் எந்தவொரு இனத்தையும் வெறுப்பேற்றும் நோக்கம் அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

எமக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியானது எந்த இனத்திற்கோ மதத்திற்கோ எதிரானது அல்ல . எமக்கு இந்த வெற்றி கிடைப்பதற்கு முழு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பே தவிர வேற எந்த கட்சியுமல்ல. எனவே எமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய தேரர்கள்,மதகுருமார்கள் ,பொது அமைப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றி” என கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இதே வேளை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நிதி அதிகாரம் வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதியை தப்பவிட்டு மிகுதி அரசின் மீது பிழை கண்டுபிடிக்க முயன்றதால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக சுமந்திரன்  தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டதக்கது.

IMG_6387.jpg?zoom=1.1024999499320984&res

IMG_6366.jpg?zoom=1.1024999499320984&resIMG_6367.jpg?zoom=1.1024999499320984&res

 

Link to comment
Share on other sites

'அடுத்த' தமிழர் பிரச்னையை வெல்வதற்கு எமது மக்கள் 'அடுத்த  "நம்பிக்கை இல்லா" பிரேரணை வரை நம்பிக்கையுடன்  காத்திருக்க வேண்டுமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ரணிலுக்கு தான் அரசியல் ரீதியான வெற்றி என்று சொல்லினம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.