Jump to content

மஹிந்த மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் என்ன செய்­வது ? - இரா. சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் என்ன செய்­வது ?

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும். அவர்­களின் அர­சாங்­கத்தில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் பட்ட துன்­பங்­களை நாம் மறக்­க­வில்லை. 

sambanthan.jpg

ஆக­வேதான் இந்த அர­சாங்­கத்தை வீழ்த்­தா­துள்ளோம் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார். 

இன்னும் சிறிது காலத்தில் பொதுத் தேர்தல் வரும்.  அதில் மக்கள் தமக்­கான அர­சாங்­கத்தை உரு­வாக்­கிக்­கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை பிர­தமர், அர­சாங்கம் மற்றும் அமைச்­ச­ர­வைக்கு எதி­ராக ஜே.வி.பி கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான 

இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில் 

கடந்த உயிர்த்த ஞாயிறு  தாக்­குதல்  நடத்­தப்­போ­வ­தாக அர­சாங்­கத்­துக்கு தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அயல் நாட்டில் இருந்து தகவல் கிடைத்தும் அதனை அர­சாங்கம் கருத்­தில்­கொள்­ள­வில்லை. இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்தை வீழ்த்த மக்கள் விடு­தலை முன்­னணி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வந்­துள்­ளது. இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் அர­சாங்கம் தோற்றால் அர­சாங்கம் பதவி விலக வேண்டும். அப்­படி இந்த அர­சாங்கம் பதவி வில­கினால் அடுத்­த­தாக யார் ஆட்­சியை அமைப்­பது என்ற கேள்வி உள்­ளது. அவ்­வா­றான நிலையில் மஹிந்த ராஜபக் ஷவே மீண்டும் ஆட்­சியை அமைப்பார். 

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித்­தேர்தல் மற்றும் பொதுத்­தேர்­தல்­களில் மக்கள் ஜனா­தி­ப­தி­யையும் அர­சையும் மாற்­றி­ய­மைத்­தனர். இதற்கு பல கார­ணங்கள் உள்­ளன. மனித உரிமை மீறல்கள் சமூக,பொரு­ளா­தார உரிமை மீறல்கள் கடந்த ஆட்­சியில்  இடம்­பெற்­றன. இதனால் தமிழ் மக்­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டனர். ஆனால் தற்­போ­தைய அரசு அவ்­வா­றான செயல்­களை செய்­ய­வில்லை. மனித உரிமை விட­யங்­களில் முன்­னைய அரசை விடவும்  மிகவும் சிறப்­பா­னது என்று சொல்­ல­மு­டி­யாத போதிலும் ஓர­ளவு சிறப்­பாக செயற்­பட்­டுள்­ளனர்.  

இந்த  நிலையில் தற்­போ­தைய அர­சாங்கம் மாற்­றப்­பட்டு புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தால் இவர்கள் சிறு­பான்மை மக்­களை எவ்­வாறு நடத்­து­வார்கள் என்ற எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை. கடந்த ராஜபக் ஷ ஆட்­சியில் அதி­க­மாக வடக்கு கிழக்கு தமிழ் மக்­களே பாதிக்­கப்­பட்­டனர் .  எனவே புதிய அரசின் தமிழ் மக்கள் தொடர்­பான கொள்கை தெரி­யாது தற்­போ­துள்ள அரசை நாம் எப்­படி எதிர்த்து வாக்­க­ளிப்­பது?நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எப்­படி ஆத­ர­வ­ளிப்­பது? 

 விரைவில் பொதுத்­தேர்தல் நடக்­க­வுள்­ளது. புதிய அரசு அர­சி­ய­ல­மைப்­பின்­படி தேர்ந்­தெ­டுக்­கப்­படும். இன்று  காலை [நேற்று] திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள எனது வீட்­டுக்கு முன்­பாக இளை­ஞர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

 தமக்கு சம்­பந்தன் வேலை வாய்ப்பு பெற்­றுத்­த­ர­வில்­லை­யென குற்றம்­சாட்­டினர். இன்று [நேற்று] அர­சுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்­டு­மெ­னக்­கூ­றினர். இந்த அரசில் கூட எமது  இளை­ஞர்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்லை. 

அவர்­க­ளுக்­கான வேலை வாய்ப்­புக்கள் கிடைக்க வேண்டும்.  தமிழ் மக்கள் தொடர்­பான தமது கொள்­கையை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­குக்­கூட நாம் ஆத­ர­வ­ளித்­துள்ளோம். ஆனால் பொதுஜன பெரமுன தமிழ் மக்கள் தொடர்பான தமது கொள்கையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. 

எனவே இது தொடர்பில் எதுவும் தெரியாது தற்போதுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்?எனவே கடவுள் அனுக்கிரகத்துடன் நாம் ஒரு முடிவை எடுத்தது அதன்படி செயற்படுவோம் என்றார்.

 

https://www.virakesari.lk/article/60319

 

Link to comment
Share on other sites

சுமந்திரன்-தெரிவித்துள்ள-கருத்து

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படும் தமிழ்த் தரப்பினரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க கூடாது என தெரிவிக்கின்றனர் என கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கான்பதை தவிர்த்து அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருவதாக சில தமிழ் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எமது செய்தி சேவை வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

http://www.hirunews.lk/tamil/220155/சுமந்திரன்-தெரிவித்துள்ள-கருத்து

Link to comment
Share on other sites

வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 13 பேர்

13-MPs-%281%29%20%281%29.jpg?itok=CnJvywbi

அரசாங்கத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் டக்ளஸ் தேவானந்தா, துமிந்த திஸ்ஸாநாயக்க, சிவசக்தி ஆனந்த உள்ளிட்ட 13 பேர் கலந்துகொள்ளவில்லை.

பிரேரணைக்கு எதிராக தமிழ்க் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (11) அரசாங்கத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஜே.வி.பியினரால் முன்வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

 

 
 

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக 92 பேர் வாக்களித்திருந்தனர். எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தனர்.

  1. டக்ளஸ் தேவானந்தா
  2. சிவசக்தி ஆனந்தன்
  3. வீ.இராதகிருஷ்ணன்
  4. உதய கம்மன்பில
  5. விஜேதாஸ ராஜபக்‌ஷ
  6. துமிந்த திஸாநாயக்க
  7. எஸ்.பி. நாவின்ன
  8. மஹிந்த சமரசிங்க
  9. துனேஷ் கங்கந்த
  10. அசோக்க பிரியந்த
  11. மொஹான் லால் கிரேரு
  12. சந்திரசிறி கஜதீர
  13. சரத் சந்திரசிறி முத்துக்குமாரன ஆகியோர் வாக்கெடுப்பின்போது கலந்துகொள்ளவில்லை.

எதிரணியிலுள்ள ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நம்பிகையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தடுப்பதற்கு இருந்த தனது பொறுப்பை அரசாங்கம் மீறியிருப்பதாகக் கூறி அரசுக்கு எதிராக ஜே.வி.பியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்திருந்தனர்.

https://www.thinakaran.lk/2019/07/12/உள்நாடு/37114/வாக்கெடுப்பில்-கலந்துகொள்ளாத-13-பேர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.