Jump to content

மக்களின் காணிகள் மக்களுக்கே சென்றடைய வேண்டும் ;வடமாகாண ஆளுநர்


Recommended Posts

மக்களின் காணிகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் நாளை பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான காணிவிடுவிக்கப்படவுள்ளது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சியில் கருத்து தெரிவித்தார். 

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல்  வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாக ஆளுநர் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

இதன்போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்,

உண்மையில் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இன்று வெள்ளிக்கிளமை 20 ஏக்கருக்கு அதிகமான காணி விடுவிக்கப்படவுள்ளது.. இவை அனைத்தையும் தனித்னியாகவே செய்ய முடிகின்றது. இதற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை. அவர்கள் வெறுமனே காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர். 

Govenor_4to__7_.png

மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும். அதேபோன்று அரச திணைக்களங்களின் காணிகளும் உரிய முறைப்படி பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.

பூநகரியில் உள்ள கயூ தோட்ட காணி பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது, அதனை கூட்டுறவு முறையிலான பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த காணியும் விடுவிக்கப்பட்டு அவ்வாறான பயன்பாட்டிற்காக கையளிக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60336

 

பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொருதொகுதி காணிகள் விடுவிப்பு 

யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  தலைமையில் இன்று (12) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

003.jpg

யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ஒத்துழைப்போடு விடுவிக்கப்படும் குறித்த காணிகள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன்  ஆளுநர் அதனை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு முரளிதரனிடம் வழங்கினார். 

2015 ஆண்டு முதல் இன்றுவரை யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2963 ஏக்கர் காணிகள்  பொதுமக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளமையை குறிப்பிட்ட  ஆளுநர், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60360

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.