Jump to content

7 சதவீத உச்சவரம்பை நீக்கும் கிரீன் கார்டு மசோதா நிறைவேறியது: அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி

Recommended Posts

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டு வழங்க விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்கும் மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

 இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக எச்1பி விசாவில் செல்கின்றனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர்கள் போன்ற உயர்திறன் கொண்ட பணியாளர்கள், அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு, அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை  அட்டையான, ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும். ஆனால், தற்போதைய அமெரிக்க சட்டத்தின்படி, பிறநாட்டை சேர்ந்தவர்கள் 7 சதவீதம் பேர் மட்டும் கிரீன்கார்டு பெற முடியும். இதனால், பல ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் கிரீன் கார்டு பெற முடியாமல் அவதிப்பட்டு வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
 
இந்நிலையில், ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீத கிரீன் கார்டு மட்டுமே வழங்கப்படும் என்ற உச்சவரம்பை நீக்குவதற்கான `உயர்திறன் கொண்ட குடியேற்றவாசிகள் சட்டம் 2019’ என்ற மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 435 உறுப்பினர்களில் 365 பேர் ஆதரவாகவும், 65 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், இந்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், கிரீன்கார்டு பெறுவதற்கான சதவீத உச்சவரம்பு நீக்கப்பட்டு,  குடும்பம் சார்ந்த முறை செயல்படுத்தப்படும். இதன் மூலம், குடும்பம் அடிப்படையிலான கிரீன்கார்டு பெறுவதற்கான உச்சவரம்பு 15 சதவீதமாக உயரும்.

இந்த மசோதா செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டு, அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டால், பல ஆண்டுகளாக கிரீன் கார்டு பெற காத்திருக்கும் இந்தியர்கள் அதிகளவில் பலன் அடைவார்கள். ஆனால், செனட்டில் உள்ள ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர்களில் பலர், இந்த மசோதாவுக்கு எதிராக உள்ளதாக கருதப்படுவதால், இதை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளதாக தெரிகிறது. பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கலிபோர்னியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு, வாஷிங்டனின் சியாட்டில், கிரேட்டர் வாஷிங்டன் பகுதிகளில் வாழும் இந்திய ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த மசோதாவை செனட்டிலும் விரைவில் நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509523

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமெரிக்கப் பச்சை அட்டை விடயத்தில் இந்தியர்கள் சீனர்களை விட மிகவும் சுயநலத்துடன் நடந்து கொள்வதாகவே எனக்குப் படுகிறது.

முதலில் இது பற்றிய ஒரு சிறு அறிமுகம்: ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையான குடியேறிகளை அவர்களின் தொழில் தருனரோ அல்லது குடும்பத்தினரோ அல்லது சுயமாகவோ விண்ணப்பம் செய்து நிரந்தர வதிவிட அட்டையான பச்சை மட்டை வழங்கப் படுகிறது. இப்போதுள்ள விதிகளின் படி, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அனுமதிக்கப் படும் விண்ணப்பங்கள் 7% இனைத் தாண்டாதவாறு அமெரிக்கா பேணுகிறது. பல்லினத் தன்மையை உருவாக்கும் நல்ல நோக்கமே இந்த 7% கட்டுப்பாட்டின் அடிப்படை. ஆனால், இக்கட்டுப்பாட்டினால் அதிக குடியேறிகளை ஒவ்வொரு வருடமும் அனுப்பும் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் மக்கள் பச்சை அட்டை பெற 5 முதல் 10 ஆண்டுகள் வரை காவலிருக்க வேண்டும். அந்தக் காவலிருக்கும் காலத்தில் அவர்கள் அமெரிக்காவில் வேலை செய்யவும், பயணங்கள் செய்யவும் அனுமதி உண்டு.  இதை விரும்பாத இந்தியர்கள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் நன்கொடைகள் மூலமும் வேறு ஆதரவுகள் மூலமும் lobby செய்து தற்போதைய காங்கிரஸ் பெரும்பான்மையான ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவைப் பெற்று இந்த சட்டத்தை காங்கிரசில் முன்னகர்த்தியுள்ளனர். ஆனால், செய்தியில் இருப்பது போல, மேல் சபையான செனட்டில் இந்த 7% கட்டுப் பாட்டை நீக்குவதால் ஏனைய நாடுகளில் இருந்து வரும் குடியேறிகள் அநீதியான விதத்தில் பின் தள்ளப் படுவார்கள் என்று நம்பும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்தச் சட்டம் செனட்டில் தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்.

இது சட்டமானால், ஒரு ஆண்டில் நிரந்தர வதிவிடம் பெறும் 100 பேரில் 60- 80 பேர் இந்தியர்களாக இருப்பர். மேலும், குடும்ப அனுசரனையால் கிடைக்கும் வதிவிட உரிமையை  15% ஆக அதிகரிக்கும் போது, அதிலும் 90% ஆன இந்தியப் பெற்றோரும், மாமன் மச்சான் மாருமே வந்து சேருவர். மற்ற எல்லா நாடுகளின் மக்களும் அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை பெறவும் தொழில் பெறவும் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டி வரும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செனெட்டில் இந்த சட்ட மூலம் தோற்க கடவது. போறபோக்கில் அமேரிக்காவையே இந்தியா ஆக்கிவிடுவார்கள் போல.

செனேட்டும் ஆதரித்தாலும் டிரம்பின் ஓப்புதல் வேண்டுமா?

23 hours ago, Justin said:

26 minutes ago, goshan_che said:

செனெட்டில் இந்த சட்ட மூலம் தோற்க கடவது. போறபோக்கில் அமேரிக்காவையே இந்தியா ஆக்கிவிடுவார்கள் போல.

செனேட்டும் ஆதரித்தாலும் டிரம்பின் ஓப்புதல் வேண்டுமா?

ஒரு சட்டம் நிறைவேற மூன்று ( காங்கிரஸ், செனட், சனாதிபதி ) அரச கட்டமைப்புகளும் அங்கீகரிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

செனெட்டில் இந்த சட்ட மூலம் தோற்க கடவது. போறபோக்கில் அமேரிக்காவையே இந்தியா ஆக்கிவிடுவார்கள் போல.

செனேட்டும் ஆதரித்தாலும் டிரம்பின் ஓப்புதல் வேண்டுமா?

ட்ரம்பின் கையெழுத்துத் தான் இது சட்டமாக மாறத் தேவையான கடைசி அனுமதி. வாக்காளர்களாக இருக்கும் இந்திய வம்சாவழி அமெரிக்கர்கள் இந்தச் சட்டத்தை இப்போது முன்னகர்த்த அழுத்தம் கொடுப்பது 2020 தேர்தலில் ட்ரம்புக்கு தங்கள் வாக்குகள் தேவை என்பதை அறிந்து தான்! எனவே செனட்டில் வென்றால் ட்ரம்ப் நிச்சயம் கையெழுத்திடுவார்! ஆனால், செனட்டில் சட்டத்தின் நீண்ட கால விளைவுகள் பற்றி அறிந்த ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே எம் ஒரே நம்பிக்கை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த நாடுகளின் குடிவரவு சட்டங்களில் அமெரிக்கவின் சட்டமே மிகவும் இறுக்கமானது பக்கத்தில் உள்ள‌ கனடாவின் குடிவரவு சட்டம் இலகுவானது என நினக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/14/2019 at 9:17 AM, colomban said:

வளர்ந்த நாடுகளின் குடிவரவு சட்டங்களில் அமெரிக்கவின் சட்டமே மிகவும் இறுக்கமானது பக்கத்தில் உள்ள‌ கனடாவின் குடிவரவு சட்டம் இலகுவானது என நினக்கின்றேன்.

வளர்ந்த நாடுகள் என்று பார்க்கையில், சுவிஸ் குடிவரவுச் சட்டங்கள், அமெரிக்காவை விடக் கடுமை என்று நினைக்கிறேன். சில வளர்ந்த ஆசிய நாடுகளில் குடியேற்றக் கொள்கைகளோ சட்டங்களோ இல்லை. சில வருடங்கள் முன்பு வரை ஜப்பானில் அகதிகளை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்ற சட்டங்களோ வரைமுறைகளோ இல்லாமல் வட கொரிய அகதிகள் அலைந்து திரிய வேண்டிய நிலை இருந்தது.

மேற்கு நாடுகளின் அரசுகள் எப்போதும் solution-oriented ஆக விடயங்களை அணுகுவதால் குடிவரவுக் கொள்கைகள் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.