Jump to content

சில ஞாபகங்கள் 2


pri

Recommended Posts

தொண்ணூறுகளின் மத்தியில் பேராதனை படிப்பு முடிந்து போனது. வேலை தேட வசதியாக கொழும்புக்கு நகர வேண்டியிருந்தது. வெள்ளவத்தையிலோ பம்பலப்பிட்டியிலோ தங்குவதற்கு வெளிநாட்டு காசோ அல்லது கொழுத்த சம்பளம் தருகிற தொழிலோ வாய்க்கவில்லை. கொஞ்சம் தள்ளி கல்கிசையில் மலிவாக அறையொன்று வாடகைக்கு கிடைத்தது. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் விரும்பிய நேரத்தில் 100 அல்லது 101 பஸ்சில் தொற்றி புறக்கோட்டை வரை பயனிக்கலாம் என்பதால் அதுவே சிலகாலம் இருப்பிடமானது.
 
ஓடியன் தியேட்டருக்கு எதிராக காலி வீதியில் இருந்த அறையின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும் அதற்கு கீழே பழக்கடை ஒன்றும் இருந்தது. மாத்தறையை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் பழக்கடையை நடத்தினார். அதற்கு பக்கத்தில் இரண்டு தமிழ்க்கடைகள் இருந்தது. ஒன்று பலசரக்கு கடை , மற்றையது கொமினிகேசன்.
காரைநகரை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அந்த கடைகளை நடத்தினார்கள்.
வெளியில் கொட்டிக்கிடக்கிற சந்தோசங்களிலோ பொழுதுபோக்குகளிலோ அவர்கள் தலை காட்டுவது கிடையாது.
தவம் செய்வதை போல கடையும் வியாபாரமும் என மூழ்கிக் கிடப்பார்கள்.
விடுமுறை நாட்களிலும் பின்னிரவுகளிலும் அந்த கடைகள் திறந்திருக்கும்.
சிலசமயங்கலில் குடித்துவிட்டு வந்து யாரேனும் சிகரெட் கடனுக்கு கேட்பார்கள். அவர்கள் தர முடியாது என்பார்கள். போதை தலையில் தாண்டவமாட கடன் கேட்டவன் பற தெமலா என்றும் கொட்டியா என்றும் கத்துவான். அவர்கள் காதில் வாங்கிகொள்ளாமல் தங்கள் வேலையை பார்பார்கள். ஆச்சரியமாக இருக்கும்.
அவர்களின் கடின உழைப்பையும் பணம் சம்பாதிபதையும் பார்த்து பொறாமை படுகிற அயலவர் பேச்சை பல தடவைகள் கேட்டிருக்கிறேன் .

வெளிநாட்டுக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் நம்மவர் புண்ணியத்தில் அந்த காலத்தில் கொமினிகேசன் வியாபாரமும் கொடிகட்டி பறந்தது.
 
ஒரு நாள் காலை கொமினிகேசன் மூடியிருந்தது. அதற்கு முன்னால் சின்னதாக கூட்டம் இருந்தது. அந்த தமிழ் இழைஞனை போலீஸ் கைது செய்ததாகவும் அவனிடம் தூள் இருந்ததாகவும் அவர்கள் பேசிகொண்டார்கள். வழமையை போல அந்த சம்பவமும் மனிதர்களும் மறந்து போனது.
 
அண்மையில் பத்திரிகையில் தூக்குத் தண்டனைக்கு காத்திருகப்பவர் பட்டியலை பார்க்க கிடைத்தது. அந்த தமிழ் இளைஞனின் பெயரும் அதில் இருந்தது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது ஞாபகங்களின் பகிர்தலுக்கு நன்றி pri, கொஞ்சம் வேதனையான சமாச்சாரம்தான்.....!  🙂

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஏராளன் said:

கடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ?

வேறு ஏதுவான இருக்க முடியும்
ஒருவனின் கடின உழைப்பையும் அதனால் அவன் முன்னேற்றம் அடைவதையும் பார்த்துச் சகிக்க முடியாதவர்கள் எதோ சதி செய்திருப்பதாகவே தெரிகின்றது

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நன்றிகள்  suvy  ,ஏராளன், வாத்தியார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் நிர்ச்சயமற்ற வாழ்வே 
இலங்கையில் உறுதியானது.
இதில் தமிழரின் நிலை மிகவும் கவலைக்கிடமானது காரணம் 
அப்ப அப்ப முஸ்லீம்களும் சிங்கள காடைகளுடன் கூடி தமிழரை வதைத்தது 
சொத்துக்களை சூறையாடி கொள்வார்கள். 
அதுபோதாது என்று எம்மினத்திலேயே கூடியிருந்து குழிபறிக்க என்று 
ஒரு நாதாரி கூட்டம் வந்து பிறந்து இருக்கிறது. 

இப்படி கதைகளாக வாழும் இனமாக மாறிவிட்டோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களே வைத்து 
அவர்களே எடுத்து
கைது பண்ணுவது ரொம்ப காலமாகவே நடக்கிறது.இது இலங்கையில் மட்டுமல்ல பலநாடுகளிலும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரப்  பட்டு... உழைத்ததன் பலன்... சிலரின் பொறாமையால்... தூக்குத்  தண்டனையா. 
இந்தக் கதையை... கேட்க கவலையாக உள்ளது.
ஸ்ரீலங்காவில்... தமிழன் என்றாலே.... கேட்பதற்கு நாதி அற்றவன் என்றாகி விட்டது. 

Link to comment
Share on other sites

maruthankeny , தமிழ் சிறி ,ஈழப்பிரியன்  உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த  நன்றி .
இந்த சம்பவத்தை இப்போது  எழுத்துவதுக்கு இரண்டு காரணங்கள் என்னை உறுதித்தியது .

1) மைத்திரியின்  போதைபொருள் சம்பந்தமான குற்றங்களுக்கு மரணதண்டனை 
என்கிற அறிவிப்பை பெரும்பாலான நண்பர்கள் சரியான முடிவு என்றே நம்புகிறார்கள் .

2) இனவாதத்திலும் ஊழலிலும் ஊறிப்போன இலங்கை காவல்துறையே குற்றவாளிகளை 
நீதிமன்றங்களில் நிறுத்துகிறார்கள் என்கிற உண்மையை மறந்துபோகிறார்கள் . 

இப்படி தொடங்கி விடுதலை பேசுகிறவர் தலைகளுக்கு மாற்றுவதற்கு அவர்களுக்கு  நீண்ட நெடும்  காலம் தேவைப்படாது ..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா - செரீனா கஞ்சா வழக்கு நினைவுக்கு வருகிறது. "அரச பயங்கரவாதம்.."

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.