• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
pri

சில ஞாபகங்கள் 2

Recommended Posts

தொண்ணூறுகளின் மத்தியில் பேராதனை படிப்பு முடிந்து போனது. வேலை தேட வசதியாக கொழும்புக்கு நகர வேண்டியிருந்தது. வெள்ளவத்தையிலோ பம்பலப்பிட்டியிலோ தங்குவதற்கு வெளிநாட்டு காசோ அல்லது கொழுத்த சம்பளம் தருகிற தொழிலோ வாய்க்கவில்லை. கொஞ்சம் தள்ளி கல்கிசையில் மலிவாக அறையொன்று வாடகைக்கு கிடைத்தது. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் விரும்பிய நேரத்தில் 100 அல்லது 101 பஸ்சில் தொற்றி புறக்கோட்டை வரை பயனிக்கலாம் என்பதால் அதுவே சிலகாலம் இருப்பிடமானது.
 
ஓடியன் தியேட்டருக்கு எதிராக காலி வீதியில் இருந்த அறையின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும் அதற்கு கீழே பழக்கடை ஒன்றும் இருந்தது. மாத்தறையை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் பழக்கடையை நடத்தினார். அதற்கு பக்கத்தில் இரண்டு தமிழ்க்கடைகள் இருந்தது. ஒன்று பலசரக்கு கடை , மற்றையது கொமினிகேசன்.
காரைநகரை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அந்த கடைகளை நடத்தினார்கள்.
வெளியில் கொட்டிக்கிடக்கிற சந்தோசங்களிலோ பொழுதுபோக்குகளிலோ அவர்கள் தலை காட்டுவது கிடையாது.
தவம் செய்வதை போல கடையும் வியாபாரமும் என மூழ்கிக் கிடப்பார்கள்.
விடுமுறை நாட்களிலும் பின்னிரவுகளிலும் அந்த கடைகள் திறந்திருக்கும்.
சிலசமயங்கலில் குடித்துவிட்டு வந்து யாரேனும் சிகரெட் கடனுக்கு கேட்பார்கள். அவர்கள் தர முடியாது என்பார்கள். போதை தலையில் தாண்டவமாட கடன் கேட்டவன் பற தெமலா என்றும் கொட்டியா என்றும் கத்துவான். அவர்கள் காதில் வாங்கிகொள்ளாமல் தங்கள் வேலையை பார்பார்கள். ஆச்சரியமாக இருக்கும்.
அவர்களின் கடின உழைப்பையும் பணம் சம்பாதிபதையும் பார்த்து பொறாமை படுகிற அயலவர் பேச்சை பல தடவைகள் கேட்டிருக்கிறேன் .

வெளிநாட்டுக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் நம்மவர் புண்ணியத்தில் அந்த காலத்தில் கொமினிகேசன் வியாபாரமும் கொடிகட்டி பறந்தது.
 
ஒரு நாள் காலை கொமினிகேசன் மூடியிருந்தது. அதற்கு முன்னால் சின்னதாக கூட்டம் இருந்தது. அந்த தமிழ் இழைஞனை போலீஸ் கைது செய்ததாகவும் அவனிடம் தூள் இருந்ததாகவும் அவர்கள் பேசிகொண்டார்கள். வழமையை போல அந்த சம்பவமும் மனிதர்களும் மறந்து போனது.
 
அண்மையில் பத்திரிகையில் தூக்குத் தண்டனைக்கு காத்திருகப்பவர் பட்டியலை பார்க்க கிடைத்தது. அந்த தமிழ் இளைஞனின் பெயரும் அதில் இருந்தது.
 • Like 4
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

உங்களது ஞாபகங்களின் பகிர்தலுக்கு நன்றி pri, கொஞ்சம் வேதனையான சமாச்சாரம்தான்.....!  🙂

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, ஏராளன் said:

கடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ?

வேறு ஏதுவான இருக்க முடியும்
ஒருவனின் கடின உழைப்பையும் அதனால் அவன் முன்னேற்றம் அடைவதையும் பார்த்துச் சகிக்க முடியாதவர்கள் எதோ சதி செய்திருப்பதாகவே தெரிகின்றது

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள்  suvy  ,ஏராளன், வாத்தியார் .

Share this post


Link to post
Share on other sites

முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் நிர்ச்சயமற்ற வாழ்வே 
இலங்கையில் உறுதியானது.
இதில் தமிழரின் நிலை மிகவும் கவலைக்கிடமானது காரணம் 
அப்ப அப்ப முஸ்லீம்களும் சிங்கள காடைகளுடன் கூடி தமிழரை வதைத்தது 
சொத்துக்களை சூறையாடி கொள்வார்கள். 
அதுபோதாது என்று எம்மினத்திலேயே கூடியிருந்து குழிபறிக்க என்று 
ஒரு நாதாரி கூட்டம் வந்து பிறந்து இருக்கிறது. 

இப்படி கதைகளாக வாழும் இனமாக மாறிவிட்டோம். 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

அவர்களே வைத்து 
அவர்களே எடுத்து
கைது பண்ணுவது ரொம்ப காலமாகவே நடக்கிறது.இது இலங்கையில் மட்டுமல்ல பலநாடுகளிலும் நடக்கிறது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கஸ்ரப்  பட்டு... உழைத்ததன் பலன்... சிலரின் பொறாமையால்... தூக்குத்  தண்டனையா. 
இந்தக் கதையை... கேட்க கவலையாக உள்ளது.
ஸ்ரீலங்காவில்... தமிழன் என்றாலே.... கேட்பதற்கு நாதி அற்றவன் என்றாகி விட்டது. 

Share this post


Link to post
Share on other sites

maruthankeny , தமிழ் சிறி ,ஈழப்பிரியன்  உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த  நன்றி .
இந்த சம்பவத்தை இப்போது  எழுத்துவதுக்கு இரண்டு காரணங்கள் என்னை உறுதித்தியது .

1) மைத்திரியின்  போதைபொருள் சம்பந்தமான குற்றங்களுக்கு மரணதண்டனை 
என்கிற அறிவிப்பை பெரும்பாலான நண்பர்கள் சரியான முடிவு என்றே நம்புகிறார்கள் .

2) இனவாதத்திலும் ஊழலிலும் ஊறிப்போன இலங்கை காவல்துறையே குற்றவாளிகளை 
நீதிமன்றங்களில் நிறுத்துகிறார்கள் என்கிற உண்மையை மறந்துபோகிறார்கள் . 

இப்படி தொடங்கி விடுதலை பேசுகிறவர் தலைகளுக்கு மாற்றுவதற்கு அவர்களுக்கு  நீண்ட நெடும்  காலம் தேவைப்படாது ..
 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஜெயலலிதா - செரீனா கஞ்சா வழக்கு நினைவுக்கு வருகிறது. "அரச பயங்கரவாதம்.."

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பாட்டலியின் சாரதியிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு       பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவரின் சாரதி துசித திலும் குமார கொழும்பு நீதவான் முன்னிலையில் இரகசிக வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நேரஞ்சனா டி சில்வாவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் துசித திலும் குமார என்ற சந்தேகநபர் கடந்த 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   http://tamil.adaderana.lk/news.php?nid=125127
  • பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித்திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம். அமெரிக்கா அறிவித்துள்ள திட்டத்தின்படி ஜெருசலேம் பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக இருக்கும்.   பாலத்தீன சுதந்திர அரசு பாலத்தீன சுதந்திர அரசை முன்மொழிந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேற்கு கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையாண்மையையும் அங்கீகரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை தனது அருகில் வைத்துக் கொண்டு இந்த அமைதி திட்டத்தை வெள்ளை மாளிகையில் அறிவித்த டிரம்ப், "இதுதான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு" என்றும் கூறினார். பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "இது சதித்திட்டம்" என்று கூறி அமெரிக்காவின் முன்மொழிவினை புறக்கணித்துள்ளார். எங்களது உரிமை விற்பனைக்கு அல்ல மஹ்மூத் அப்பாஸ், "நான் டிரம்பிற்கும், பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கும் ஒன்றை சொல்ல விழைகிறேன். ஜெருசலேம் விற்பனைக்கு அல்ல, எங்கள் உரிமைகளைப் பேரம் பேச முடியாது. அவை விற்பனைக்கு அல்ல. உங்களது சதித்திட்டம் வெல்லாது," எனக் கூறி உள்ளார். சர்வதேச அளவில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான செயல்திட்டமானது டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷனரின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டது. ஒரு பக்கம் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இஸ்ரேல் ராணுவம் மேற்கு கரையில் தமது படைகளை மீண்டும் நிறுத்தியது. இதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் காசாவில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். மேற்கு கரையில் 4 லட்சம் இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. சர்வதேச சட்டத்தின்படி அவை சட்டவிரோதமானது. ஆனால், இஸ்ரேல் இதில் முரண்படுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES திட்டத்தின் முக்கிய முன் வரைவுகள் என்னென்ன? எந்த பாலத்தீனரும், இஸ்ரேலியரும் தங்கள் இடத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட மாட்டார்கள். அதாவது, இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்கு கரையில் உள்ள யூத குடியேற்றங்களில் எந்த மாற்றமும் இல்லை. இஸ்ரேலின் பகுதியாக டிரம்ப் கூறும் திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தின் மீது இஸ்ரேலுக்கு உள்ள இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரிக்கும். இஸ்ரேல் செய்ய விரும்பும் பிராந்திய ரீதியிலான சமரசங்களைக் காட்டுவதாக டிரம்ப் தெரிவிக்கும் ஒரு கருத்துரு வரைபடமும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும். பாலத்தீன தரப்புக்குக் கிழக்கு ஜெருசலேத்தில் ஒரு தலைநகரை இந்த வரைபடம் அளிக்கிறது. இங்கு அமெரிக்கா தங்களின் தூதரகத்தைத் திறக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் அறிவித்துள்ள திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தில் 15 சதவீதத்துக்கு மேலாக பாலத்தீனர்களுக்கு கட்டுப்பாடு கிடைப்பதாக தெரிவித்துள்ள பாலத்தீன விடுதலை அமைப்பான பிஎல்ஓ, இதனை ''வரலாற்று சிறப்பு வாய்ந்த பாலத்தீனம்'' என்று கூறுகிறது. ஜெருசேலம் ''பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக தொடர்ந்து இருக்கும்''. இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரு தரப்பும் ஜெருசலேம் தொடர்பாக தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. 1976 மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததாகக் கூறும் பாலத்தீனம் அந்நகரை தங்களின் எதிர்கால தனி நாட்டுக்கு தலைநகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.   https://www.bbc.com/tamil/global-51290837
  • இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட பெண் குணமடைந்தார்!        by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சீனப்பெண் சிகிச்சைகளை அடுத்து குணமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பாரிய திட்டங்களில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையில்-கொரோனா-வைரஸ்/
  • ’வன்னியிலும் செல்வாக்கு உள்ளது’     -க. அகரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செல்வாக்கு, வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. ஆகையால், டெலோவிலிருந்து விலகிச் சென்றவர்களால், இவ்விரு இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தமுடியுமென நான் நினைக்கவில்லையென, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். டெலோவின், வவுனியா மாவட்ட தலைமை அலுவலகத்தை கோவில்குளத்தில் இன்று (28) திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சிங்களத் தேசிய வாதம் பேசப்படுவதுடன், தமிழ் மக்களின் அபிலாசைகள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமையையே பார்க்கின்றோமென நினைவுபடுத்திய அவர், தமிழர்கள்  அனைவரும் பிரிந்து நின்றால், அது தமிழ் மக்களின் பலத்தையே பாதிக்கும் என்றார். http://www.tamilmirror.lk/வன்னி/டலவகக-வனனயலம-சலவகக-உளளத/72-244672
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம்   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.   http://tamil.adaderana.lk/news.php?nid=125111