Jump to content

"தலைமை ஏற்க தயார்..: என்னைக் கொலை செய்ய ரூபா 25 மில்லியன் ஒப்பந்தம்": சபாநாயகரின் விசேட செவ்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தலைமை ஏற்க தயார்..: என்னைக் கொலை செய்ய ரூபா 25 மில்லியன் ஒப்பந்தம்": சபாநாயகரின் விசேட செவ்வி

"அடுத்த ஆட்சியில் தமிழ்த் தலைவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும்"

நாட்டில் எந்த வகையான அரசாங்கங்கள் அமைய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள். ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றாலும் அரசியல் நெருக்கடிகள் உருவானாலும் நிலையான தேசிய கொள்கை காணப்படுமாயின் அது நாட்டுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது என வீர­கே­ச­ரி வார வெளியீட்டுக்கு வழங்­கிய விசேட செவ்வியில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார். 

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு : 

கேள்வி:- நீங்கள் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றிய காலத்தில் வடக்கில் சேவை­யாற்­றிய அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்ள முடி­யுமா?

பதில்:- 1965ஆம் ஆண்டு முதல் 1972வரை­யி­லான காலப்­ப­கு­தியில் இரா­ணு­வத்தில் இருந்­த­போது, நான் பூந­கரி மற்றும் இயக்­கச்சி இரா­ணுவ முகாம்­களில் பணி­யா­றி­யி­ருந்தேன். 

அக்­கா­லத்தில் யுத்தம் இருக்­க­வில்லை. பூந­கரி முகாம் சிறி­ய­வொரு தக­ரக்­கொட்­டி­லா­கவே இருந்­தது. நாட்டின் மொத்த இரா­ணுவ எண்­ணிக்­கையும் 8ஆயி­ர­மா­கவே இருந்­தது. இக்­கா­லத்தில் வெளி­யாரின் அத்­து­மீ­றல்­க­ளையும் கடத்­தல்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­து­வதும், பொருட்கள் கள­வா­டப்­ப­டு­வதை தடுப்­ப­துமே எமது கட­மை­யாக இருந்­தது. அப்­பி­ர­தே­சத்தில் உள்ள தமி­ழர்கள் மிகவும் அன்­பா­ன­வர்கள். அவர்­களும் நாமும் உணவுப் பொருட்­களைக் கூட பரி­மாற்­றிக்­கொள்வோம். அந்­த­ள­வுக்கு உற­வுகள் இருந்­தன.

virakesari.jpg

கேள்வி:- சபா­நா­ய­க­ராக பதவி வகிக்கும் காலத்தில் நீங்கள் முகங்­கொ­டுத்த மிகப்­பெரும் சவா­லாக எதனைக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- இலங்கை பாரா­ளு­மன்றம் உல­கத்தில் உன்­ன­த­மான சபை­களுள் ஒன்­றா­க­வுள்­ளது. ஆனால், ஒரு­சி­லரின் செயற்­பா­டு­களால் இந்த உய­ரிய சபையின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த ஒக்­டோ­பரில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆட்சி மாற்றம் இலங்கை போன்ற ஜன­நா­யக நாடொன்றில் நிகழ்ந்­தமை மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தா­க­வுள்­ளது. 

அதனால் தான் எனக்கு ஜன­நா­ய­கத்தின் பக்­க­மாக செயற்­பட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. இச்­ச­ம­யத்தில் சபையில் மிளகாய்த் தூள் வீசப்­பட்­டது. எனக்கு அசிட் வீசு­வ­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. அதற்­கப்பால் என்னைக் கொலை செய்­வ­தற்­காக ரூபா 25 மில்­லி­ய­னுக்­கான ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. 

மேலும், தற்­போது பாரா­ளு­மன்­றத்­திற்கு உறுப்­பி­னர்­களின் வருகை மிகவும் குறை­வாக உள்­ளது. குறிப்­பாக, சிறு­பான்மை உறுப்­பி­னர்­களை விடவும் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களின் வரு­கையே மிக குறை­வாக உள்­ளது.  இவ்­வி­டயம் தொடர்பில் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு பொறுப்­புக்கள் உள்­ளன. சபை நட­வ­டிக்­கைகள் மக்கள் பணத்தில் நடை­பெ­று­கின்­றன. அவற்றில் இவ்­வா­றான பின்­ன­டை­வுகள் ஏற்­ப­டு­கின்­ற­போதே மக்கள் குற்­றச்­சாட்­டுக்­களை, விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றார்கள். 

கேள்வி:- ஒக்­டோ­பரில் அர­சியல் புரட்­சி­யின்­போது தாங்கள் பக்­கச்­சார்­பாக செயற்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­ற­னவே? 

பதில்:- ஆம், 80ஆச­னங்­களைக் கொண்­ட­வர்கள் 120 ஐ விடவும் ஆச­னங்­களை கொண்­ட­வர்­க­ளி­டத்­தி­லி­ருந்து ஆட்­சியை கைப்­பற்ற முனைந்­த­போது ஜன­நா­யக விழு­மி­யங்­களின் அடிப்­ப­டையில் பெரும்­பான்மை தரப்பின் பக்­க­மாக செயற்­பட வேண்­டிய நிலைமை எனக்கு ஏற்­பட்­டது. ஜன­நா­யக விழு­மி­யங்­களில் செயற்­பட்­ட­மை­யைதான் பக்­கச்­சார்பு என்று குறித்­து­ரைக்­கின்­றார்கள். அவ்­வாறு செயற்­பட்­டதன் மூலம் ஜன­நா­ய­கத்தின் மீதான நம்­பிக்கை எதிர்­கால சந்­த­தி­யி­னரின் மத்­தியில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தோடு, பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களும் பாது­காக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி:- ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு இடை­யி­லான முரண்­பா­டுகள் அதி­க­ரித்­து­வ­ரு­கின்ற நிலையில் எஞ்­சிய காலப்­ப­கு­தி­யை­யா­வது சுமு­க­மாக கொண்டு செல்­வ­தற்­கான முயற்­சி­களை எடுத்­து­வ­ரு­கின்­றீர்­களா? 

பதில்:- இரு தலை­வர்­களும் வெ வ்வேறு கொள்­கை­யினைக் கொண்­டி­ருப்­பதன் கார­ண­மா­கவே முரண்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. ஆரம்­பத்­தி­லேயே பொதுக்­கொள்­கை­­யொன்றை அமைத்­தி­ருந்தால் இத்­த­கைய நிலை­மைகள் ஏற்­பட்­டி­ருக்­காது. ஆகவே, அடுத்து ஆட்­சியில் அம­ரப்­போ­கின்ற ஜனா­தி­பதி பொதுக்­கொள்­கை­யொன்றை உரு­வாக்­க­வேண்டும். அதன் மூலம் பல­மான பொரு­ளா­தார நிலை­மை­களை ஏற்­ப­டுத்­து­வ­துடன் பிரி­வினை பற்­றிய சிந்­த­னைகள் வள­ராது இனங்­களை ஒன்­று­ப­டுத்­து­வ­தற்கும் விரைந்து நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:- குறிப்­பாக, தமிழ் மக்கள் மத்­தியில் அதிக எதிர்­பார்ப்­பினை ஏற்­ப­டுத்­திய புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் முடங்­கி­ய­மைக்­கான காரணம் என்ன? 

பதில்:- புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் சரி­யான வழியில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போதும், பொது­ஜன முன்­னணி தரப்பில் உரிய ஒத்­து­ழைப்­புக்கள் வழங்­கப்­பட்­டி­ருந்தால் அதில் வெற்றி கண்­டி­ருக்க முடியும். ஆனால், அவ்­வா­றான நிலை­மைகள் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. 

ஆகவே,  இந்த விட­யங்­க­ளையும்,  மாகாண சபை முறை­மையில் உள்ள குறை­பா­டுகள், அவற்­றுக்­கான தேர்­தல்­களை முறை­யாக நடத்­துதல் உள்­ளிட்ட அனைத்­தையும் கவ­னத்தில் கொண்டு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அடுத்த தலை­வரின் முன்­னுள்ள முக்­கிய கட­மை­யா­கின்­றது. 

கேள்வி:- நீண்­ட­கா­ல­மாக நிலவும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு குறித்து உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- இப்­பி­ரச்­சி­னையை நான் வெளித்­தோற்­றத்­தினை வைத்து பார்ப்­ப­தில்லை. அடிப்­ப­டையில் நாம் அனை­வரும் ஒரு­புள்­ளி­யி­லி­ருந்தே தோற்றம் பெற்­ற­வர்கள் என்று நினைக்­கின்றேன். 

மானிட விஞ்­ஞான ரீதியில் நோக்­கு­மி­டத்து இரு­த­ரப்­பி­னரும், கொக­சோயிட் என்ற மனித வர்க்­கத்­திற்கு உட்­பட்­ட­தாக இருப்­ப­தோடு  மொழி­களின் அடிப்­ப­டைத்­தன்­மை­களும் ஒன்­றோ­டொன்று ஒத்­துப்­போ­கின்­றன. உதா­ர­ண­மாக, சிங்­கள, தமிழ் மக்கள் அம்மா  என்றே அழைப்­ப­தோடு, தமி­ழர்கள் அப்பா என்று கூறும்­போது சிங்­க­ள­வர்கள் அப்­பச்சி என்றே அழைக்­கின்­றார்கள். இந்து மக்கள் வழி­படும் தெய்­வங்­களை பௌத்­தர்­களும் நம்­பிக்­கை­யுடன் வழி­ப­டு­கின்­றார்கள்.

எமது கலா­சா­ரத்­திலும், முக்­கிய பல ஒற்­று­மைகள் காணப்­ப­டு­கின்­றன. சூரிய பக­வானை முதன்­மை­யாகக் கொண்டு கொண்­டா­டப்­படும் தமிழ் சிங்­கள புது­வ­ருட பூஜை­வ­ழி­பா­டுகள், பண்­பா­டுகள், கலை­கள் போன்­ற­வற்றை வைத்­துப்­பார்க்கும் போது நாம் அனை­வரும் ஓர் மனித குலத்­திற்கு உட்­பட்­ட­வர்கள் என்­பது தெளி­வாக புல­னா­கின்­றது. இந்த வர­லாற்று ரீதி­யான மானிட விஞ்­ஞா­னத்­தினை புரிந்து கொள்­வதன் ஊடாக ஒரு­வ­ருக்கு ஒருவர் மத்­தியில் அன்பு, கௌர­வத்­தினை ஏற்­ப­டுத்த முடியும். இவ்­வாறு, பரந்த அளவில் சிந்­திக்கும் போது ஒரே மக்கள் இனத்­திற்குள் பிரி­வி­னை­வாத பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வது என்­பது கேள்­விக்­கு­றி­யா­கின்­றது. 

கேள்வி:- தமிழ் மக்கள் தனித்­துவ அடை­யா­ளத்­தினை கொண்­ட­வர்கள் என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?

பதில்:- சிங்­கள மக்­களைப் போன்று தமிழ் மக்­க­ளுக்கும் தனித்­து­வ­மான கலா­சாரம் உள்­ளது. அக்­க­லா­சார அடை­யா­ளங்­களை நாம் மதிக்க வேண்டும். அனைத்து குடி­மக்­க­ளுக்கும் இலங்கை எமது தாய்­நாடு என்ற உணர்வு ஏற்­ப­டு­வ­தற்கும் அவர்கள் அனை­வ­ருக்கும் சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்கும் சந்­தர்ப்­பத்­தினை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும். அது அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. விசே­ட­மாக, வடக்­கினை செழிப்பு மிக்க பூமி­யாக்­கு­வ­தற்கு தமிழ் மக்கள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டுள்­ளனர். எம்­மைப்­போ­லவே அவர்­க­ளுக்கும் அவர்­களின் மூதா­தை­யர்கள் தொடர்­பாக, கௌர­வமும் அபி­மா­னமும் உள்­ளது. எனினும் வர­லாற்­றினை பார்க்­கின்­ற­போது ஓரி­னத்­துக்கு நிகழும் அசா­தா­ர­ணங்­களை அர­சியல் நோக்­கங்­க­ளின்றி அவ­தா­னத்­து­டனும் புரிந்துணர்­வு­டனும் தீர்த்­துக்­கொள்­வ­தற்கு எமக்கு முடி­யாது போயுள்­ளது. 

கேள்வி:- அதற்­காக தாங்கள் கொண்­டி­ருக்­கின்ற தனித்­து­வ­மான சிந்­த­னைகள் எவை?

பதில்:-  எமது பாட­சாலைக் காலத்தில் அனைத்­தின மாண­வர்­களும் ஒரே­பா­ட­சா­லையில் கல்வி கற்­றனர். சிங்­கள விளை­யாட்டு கழ­கங்­களில் தமிழ் வீரர்கள் விளை­யா­டி­னார்கள். அதன்­மூலம் மாண­வர்கள் மத்­தியில் சகோ­த­ரத்­துவம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது. ஆகவே, ஆரம்ப பாட­சா­லை­யி­லி­ருந்து இன உற­வுக்­கான புதிய கலா­சா­ரத்­தினை ஆரம்­பிக்க வேண்டும். ஒவ்­வொரு பாட­சா­லை­க­ளிலும் அனைத்து இனம், மதம் தொடர்­பான தெளிவு ஏற்­படும் வகையில் நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட வேண்டும்

. இது தொடர்­பான பல முக்­கிய யோச­னை­களை பாரா­ளு­மன்­றத்தில் தேசிய, மத, நல்­லி­ணக்­கத்­திற்­கான நிலை­யான துறைசார் மேற்­பார்­வைக்­கு­ழு­விடம் முன்­வைக்­கப்­பட்டு அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இன­ரீ­தி­யாக குரோ­தங்­களை ஏற்­ப­டுத்தும் கருத்­துக்­களை பிரஸ்­தா­பிப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். அதற்­காக வெறுப்பு பேச்­சுக்­களைத் தடுப்­ப­தற்­கான சட்டம் இயற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. 

கேள்வி:- கூட்டு அர­சாங்­கத்தின் கார­ணத்­தி­னா­லேயே நாட்டில் அர­சியல் நெருக்­கடி நிலை­மைகள் மேலெழுந்­துள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?

பதில்:- அயல் நாடான இந்­தி­யா­வினை நோக்கும் போது கடந்த மூன்று நான்கு தசாப்த கால­மாக கூட்டு அர­சாங்­கமே இருந்து வரு­கின்­றது. இதில் இரு­பக்­கங்கள் உள்­ளன. எந்த வகை­யான அர­சாங்கம் உரு­வா­னாலும்,  இறு­தியில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக மக்­களே உள்­ளனர். அர­சாங்­கத்தின் முடிவைத் தீர்­மா­னிக்க வேண்­டி­யது மக்­க­ளி­ட­முள்ள ஜன­நா­யக உரி­மைக்­கான வாக்­கு­களே ஆகும். எந்­த­வ­கை­யான அர­சாங்கம் உரு­வா­னாலும் ஆட்சி மாற்­றங்கள் இடம்­பெற்­றாலும் நாடு என்ற ரீதியில் பொது­வான தேசிய கொள்­கை­யொன்று அமைக்­கப்­பட வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மா­கின்­றது. அது அவ்­வப்­போது மாற்றம் அடை­யாது, நிலை­யான தேசிய கொள்­கை­யாக இருத்தல் வேண்டும். இந்த நிலை­யான தேசிய கொள்­கையில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். இவ்­வாறு தேசிய கொள்­கைக்குள் ஒன்­று­பட முடி­யு­மாயின்  அர­சியல் நெருக்­க­டிகள் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தாது.

கேள்வி:- 19ஆவது திருத்­தச்­சட்டம் பல குறை­பா­டு­களை கொண்­டி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா? 

பதில்:- ஆம், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் வரையில் தற்­கா­லி­க­மா­கவே 19ஆவது திருத்­தத்­தினை உரு­வாக்­கினோம். நிறை­வேற்று அதி­கா­ரத்­தினை நீக்கி புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக பாரா­ளு­மன்­றத்­தினை பலப்­ப­டுத்­தவே முனைந்தோம். ஆனால் நிறை­வேற்று அதி­காரம் மட்டும் குறைக்­கப்­பட்­டுள்ள அதே­நேரம், புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மா­கா­மை­யினால் தான் தற்­போது பிரச்­சி­னைகள் எழுந்­துள்­ளன.

கேள்வி:- 19ஆவது திருத்தம் இரு அதி­கார மையங்­களை தோற்­று­வித்­துள்­ள­தல்­லவா? 

பதில்:- இரு அதி­கார மையங்­களும் உரு­வா­கி­யுள்­ளன. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கினால் தான் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு கிட்டும். 

கேள்வி:- நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்டும் என்­பதில் நீங்கள் உறு­தி­யாக இருக்­கின்­றீர்­களா? 

பதில்:- ஆம், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஐக்­கிய தேசியக் கட்­சியே அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இருப்­பினும் அதில் பாத­க­மான விட­யங்கள் அதி­க­மாக இருக்­கின்­றன என்­பதை அக்­கட்­சியே பிற்­கா­லத்தில் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. ஏனைய அனைத்து கட்­சி­களும் ஆரம்பம் முதலே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மைக்கு எதி­ரான நிலைப்­பா­டு­க­ளையே கொண்­டி­ருந்­தன. 1995ஆம் ஆண்டு கதிர்­கா­மத்தில் இடம்­பெற்ற ஐ.தே.கவின் கட்சி மாநாட்டில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்க வேண்டும் என்ற யோச­னையை நானே முன்­வைத்தேன். ஆகவே, இம்­மு­றைமை நீக்­கப்­பட வேண்டும், பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­தன்மை முழு­மை­யாக இருக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே உள்ளேன். 

கேள்வி:- உங்­க­ளு­டைய அர­சியல் பய­ணத்தின் அடுத்­த­கட்டம் எப்­ப­டி­யி­ருக்கப் போகின்­றது?

பதில்:- இரா­ணு­வ­சே­வையில் இருந்த எனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தா­லேயே அர­சி­யலில் பிர­வே­சித்தேன். அந்த அடிப்­ப­டையில் எனது அர­சியல் பய­ணத்தில் எவ்­வி­த­மான எதிர்­பார்ப்­புக்­களும் இருந்­தி­ருக்­க­வில்லை. எதிர்­கா­லத்­திலும் இருக்­கப்­போ­வ­தில்லை. இல­வ­சக்­கல்­வியை பெற்­ற­மையால் அதற்­கான பிர­தி­யு­ப­கா­ர­மாக இய­லு­மான வரையில் நாட்­டுக்கு சேவை செய்ய வேண்டும் என்­பது தான் எனது பிர­தான நோக்­க­மாக இருக்­கின்­றது. 

நான், தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அழைப்­பி­லேயே அர­சியல் பிர­வேசம் செய்தேன். பின்னர், கட்­சியின் தவி­சாளர், பிர­தித்­த­லைவர், கொழும்பு மேயர், மேல்­மா­காண சபை எதிர்க்­கட்­சித்­த­லைவர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர், மின்­சக்தி அமைச்சர் என பல பத­வி­களை வகித்தேன். இவை அனைத்­துமே நான் கேட்­டுப்­பெற்றுக் கொண்­டவை அல்ல.  சுதந்­தி­ர­ம­டைந்த பின்னர் மூவின மக்­களும் அந்­நி­யோன்­ய­மாக வாழ்ந்­ததைப் போன்­ற­தொரு சூழல் மீண்டும் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பது தான் எனது விருப்­பமும் கன­வு­மாக உள்­ளது.

கேள்வி:- மக்கள் சேவையை தொடர்ந்தும் விரும்பும் நீங்கள், அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ராக முன்­மொ­ழி­யப்­பட்டால் கள­மி­றங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வுள்­ளீர்­களா?

பதில்:- எதிர்­கா­லத்தில் என் மூல­மாக சேவைகள் ஆற்­றப்­பட வேண்டும் என்ற நிலைமை ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊடாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­ற­போது அதனை சீர்­தூக்கி பார்க்க முடியும். அதே­நேரம், ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மையின் இணக்­கத்­துடன் கட்­சியின் உயர்­மட்டம் முதல் அடி­மட்டம் வரை­யி­லான அனைத்து தரப்­பி­னரும் ஏக­ம­ன­தான நிலைப்­பாட்­டுடன் எனக்­கான அழைப்­பினை விடுக்­கின்­ற­போது நாட்டில் நிலை­யான ஆட்­சி­மு­றை­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான கால எல்லை வரையில் தற்­கா­லி­க­மான தலை­மைத்­து­வத்தை வகிப்பது பற்றி சிந்­திக்க முடியும். அத­னை­வி­டுத்து நானாக கோரியோ அல்­லது போட்டி போட்டோ பத­வியைப் பெற­வேண்­டிய அவ­சியம் எனக்கு இல்லை.

கேள்வி:- எதிர்­வரும் காலத்தில் தென்­னி­லங்கை தலை­வர்கள் மீது தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் எந்த அடிப்­ப­டையில் நம்­பிக்கை வைக்க முடியும்?

பதில்:- நம்­பிக்கை என்­பது பிர­தான தேர்­தல்­களில் கள­மி­றங்கும் வேட்­பா­ளர்­களைப் பொறுத்தே ஏற்படும். ஆனால் டட்லி சேனநாயக்கவின் காலத்தில் வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்றனர். அதன் பின்னர் அங்குள்ள தலைவர்கள் பிராந்திய அரசியலையே பின்பற்றி வருகின்றார்கள். இந்த நிலைமைகள் மாறவேண்டும். அவர்கள் அடுத்த ஆட்சிக்காலத்தில் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும். புத்திஜீவிகளாக இருக்கும் அவர்களின் பங்களிப்பு முழு நாட்டுக்கும் அவசியமாகின்றது. உதாரணமாக, சிரேஷ்ட உறுப்பினராக இருக்கும் சம்பந்தன் மீது நாம் அபிமானத்தினைக் கொண்டிருக்கின்றோம். அவர் போன்று வெ3வ்வேறு அரசியல் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்று தம்மினத்திற்கும் முழுநாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும்.

கேள்வி:- நீங்களும் ஒரு சிங்கள, பௌத்த தலைவரா? 

பதில்:- இனம், மதம் என்பன பிறப்பின் மூலமே எனக்கு கிடைத்தன. அவை நான் கேட்டுப்பெற்றுக்கொண்டவையல்ல. மனிதர் கள் ஒரே இனம் என்பதை புத்த பெருமான் போதித்துள்ளார். உண்மையான பௌத்தன் இனவாதத்தினையோ மதவாதத்தினையோ கொண்டவராக இருக்க முடியாது. நான் ஏனைய  இன மதங்களுக்கு மதிப்பளிக்கும் சமத்து வத்தினை ஏற்றுக்கொள்ளும் சிங்கள பௌத்தன்.

நான் சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களையும் அதனைய டுத்து 21நாட்களின் பின்னர் அப்பாவி முஸ்லிம் 

மக்களை இலக்காக கொண்டு மினுவாங் கொடையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்க ளையும் கண்டிக்கின்றேன்.  பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளை கண்டிப்பதைப் போன்றே 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் எம் சகோதர தமிழ் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை கொடூரத் தாக்குதல்களையும் கண்டிக்கின்றேன்.என்னைப் 

பொறுத்தவரையில் அனைத்து பிரிவினைவா திகளும் இறுதியில் மக்கள் நிம்மதியாக உயிர் வாழும் உரிமையை இழக்கச் செய்பவர்களே.

நேர்காணல்: ஆர். ராம்

 

https://www.virakesari.lk/article/60422

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.