ampanai

பிள்ளையார் ஆலய உடைப்பும் இனப்படுகொலையின் ஒரு வெளிப்பாடே - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

Recommended Posts

திருகோணமலை, கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலையின் ஒரு வெளிப்பாடாகும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பல்லாயிரம் காலங்களுக்கு முற்பட்ட இந்த புராதன வரலாற்றுப் பகுதியை தமிழ் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கடும் எதிர்ப்புக்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைத்து விகாரை கட்டப்பட்டுவரும் செய்தி தமிழ் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதுஇலங்கையின் ஆதிவாசிகளான தமிழ் மக்களின் இருப்பு இன்னும் இந்த நாட்டில் எத்தனை காலத்துக்கு இருக்கப்போகின்றது என்ற கேள்வியை இது ஏற்படுத்துகிறது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

முன்னெப்போதும் இல்லாதவகையில் காணி அபகரிப்பு நடவடிக்கைகளும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகளும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு வாழ்விடங்களின் வரலாறு திட்டமிடப்பட்டவகையில் திரிபுபடுத்தப்பட்டு செயற்கையான சான்றுகள் உருவாக்கப்பட்டு பௌத்தமயமாக்கலும் சிங்களமயமாக்கலும் இடம்பெறுகின்றன. இதற்கு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவலி அதிகாரசபை, வீடமைப்பு அதிகார சபை, வனவள திணைக்களம், இராணுவம் போன்றன நன்கு ஒருங்கிணைந்தவாறு செயற்படுகின்றன என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

http://www.hirunews.lk/tamil/220398/பிள்ளையார்-ஆலய-உடைப்பும்-இனப்படுகொலையின்-ஒரு-வெளிப்பாடே-விக்னேஸ்வரன்-குற்றச்சாட்டு

Share this post


Link to post
Share on other sites

கூட்டமைப்பு இதுவரை உருப்படியாக ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை!

இதற்கும் ஏதாவது அன்பளிப்புகள் கூட்டமைப்பின் தலைமைகளுக்கு கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, போல் said:

கூட்டமைப்பு இதுவரை உருப்படியாக ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை!

இதற்கும் ஏதாவது அன்பளிப்புகள் கூட்டமைப்பின் தலைமைகளுக்கு கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை!

பிள்ளையாருக்கும் கூட்டமைப்புக்கும் என்ன சம்பந்தம்.? ஒரே ஒரு சம்பந்தம்தான் தெரிகிறது. பிள்ளையார் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டார். கூட்டமைப்பும் இருந்த இடம் தெரியாமல் அழியப் போகிறது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.