• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Paanch

ராசவன்னியருக்குத் திருமணம்! வாழ்த்துவோம்!!

Recommended Posts

பார்த்தால் மணமுடிக்கும் பருவத்தோற்றத்தில் வன்னியர், அவருக்கா அறுபது!!!! நம்பமுடியவில்லை🤔

வன்னியர் தம்பதிகளின் அறுதாம் ஆண்டுக் கல்யாணத்தை அவர்களின் பிள்ளைகள் திருக்கடையூர் கோவிலில் வெகு சிறப்பாக நடாத்திவைத்தார்கள்.

சகல செளபாக்கியங்களுடன் மேலும் இரண்டுபெற்று இனிதாக நாம் இருவர், நமக்கு நால்வர் என்று பலநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள்!!!!! 💐:88_raised_hands: 

201605171421560541_Sashtiapthapoorthi-Ceremony_SECVPF.gif

Edited by Paanch
 • Like 7
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

தோழருக்கு இனிய 60 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்..💐

Share this post


Link to post
Share on other sites

                 Image associée

இனிய  60 ம் நாள் திருமண நல் வாழ்த்துக்கள் ராசவன்னியன் தம்பதியினருக்கு......!  😀

Share this post


Link to post
Share on other sites

ராசவன்னியன் அண்ணருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

Share this post


Link to post
Share on other sites

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 

Share this post


Link to post
Share on other sites

இனிய  60 ஆவது திருமண நல்வாழ்த்துக்கள், ராஜவன்னியன்.

Share this post


Link to post
Share on other sites

வன்னியர் தம்பதிகளுக்கு....இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....!

Share this post


Link to post
Share on other sites

வன்னியர் தம்பதிகளுக்கு

 அறுபதாவது திருமண நல்வாழ்த்துக்கள்.

nature-photo6.png  

 

பிள்ளை பேரப்பிள்ளைகளுடன் சகல சௌபாக்கியங்களுடனும் நீடூழிவாழ வாழ்த்துகின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

இனிய திருமண நாள் வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites

இனிய  60 ஆவது திருமண நல்வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் 

மன்னிக்கவும் எனக்கு ஒரு சந்தேகம். 
இவ்விழா நீங்கள் திருமணம் செய்து 60 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் விழாவா? அல்லது நீங்கள் 60 வயதை அடைந்ததினாலா? 

அப்படியானல் நீங்கள் 20 வதில் திருமணம் செய்திருந்தால் இப்பொழுது உங்களிக்கு 80 வயதா? நிச்சயாமாக உங்களுக்கு துபாயில் வேலை செய்யாக்கூடிய அனுமதி ம‌றுக்கப்ப்ட்டிருக்கும்.  எனக்கு நம்ப முடியவில்லை விளக்குவீர்களா?

Share this post


Link to post
Share on other sites

ராசவன்னியன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் sir

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்களை அருளிய,

பாஞ், புங்கை, தமிழ்தேசியன், ஜெகதா துரை, சுவி, ஏராளன், நந்தன், நுணாவிலன், பெருமாள், குமாரசாமி, மோகன், பகலவன், வாதவூரான், கொழும்பான், ஈழப்பிரியன் மற்றும் ராஜா1982

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அறுபதாம் கல்யாணம் மிக இனிமையானதுதான்.. எனது பிள்ளைகள், பேரப்பிள்ளை மற்றும் உறவுகளுடன் நடந்தது.

மயிலாடுதுறை அருகேயுள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சிறப்பாக நேற்று காலை நடைபெற்றது.

பல முதியவர்களின் திருமணமும் மண்டபத்தில் அருகருகே நடந்தது. கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் இதற்காகவே தொடர்ந்தன.

கோவிலின் வாசலில் பல மணமக்கள் மாலையும் கழுத்துமாக திரிவதை பார்க்க இனம் புரியாத சந்தோசம். பல இளவயதினர் மணிவிழா கண்ட முதிய மணமக்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதையும் கண்டேன்.

நம் யாழ்க்கள 'பாஞ்' பெரியவரிடம் ஆசி வாங்க செய்தி அனுப்பினேன், அவர் இங்கே பகிர்ந்துவிட்டார்.

அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மீண்டும் நன்றிகள்..!

 

thaks02-Editted.jpg

Edited by ராசவன்னியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

maxresdefault.jpg

இன்று பரவலாக பிள்ளைகளால் பெற்றவர்களிற்கு 60-ம் கல்யாணம் நடாத்தி வைக்கும் பண்பாடு நிலவுகின்றது. இருந்தும் பலருக்கும் 60-ம் ‌பிற‌ந்த நா‌ள் ம‌ட்டு‌ம் அ‌வ்வளவு ‌சிற‌ப்பு ஏ‌ன்? அ‌ந்த ஆ‌ண்டி‌ல் ம‌ட்டு‌ம் ‌‌மீ‌ண்டு‌ம் ‌திருமண‌ம் அதாவது 60-‌ம் க‌ல்யாண‌ம் நடாத்தப்படுகின்றது என்பதன் காரணம் தெரிவதில்லை.
கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர்.

ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள், அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் கருதலா‌ம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.

சஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க (ஆங்கில காலண்டர்படி அல்ல). ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும். ஆங்கில வருடத்தை பார்க்காமல் பஞ்சாங்கம் பார்த்து, இந்த நாளில்தான் 60ம் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக் கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

அவன்தனது இந்திரியங்களின் இச்சைகளுக்கும் உட்பட்டு வாழ்கிறான்.ஆனால் அறுபதாவது வயது அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமைய வேண்டும். அதற்குப் பிறகு அவன் உலக பந்தங்களை விட்டுவிட முயல வேண்டும். இதை நினைவு படுத்தவே அவனுக்கு அறுபதாவது வயதில் மனைவியைப் பக்கத்தில் உட்காரவைத்துப் பக்குவமாக ஒரு கல்யாணத்தையும் நடத்துகிறார்கள்.

எழுபது வயதில் அவன் மனமுதிர்ச்சி பெற்று,சப்தரிஷிகளைப் போன்ற பக்குவ நிலையைஅடைகிறான்.

என்பதாவது வயதில் எட்டுத் திசைகளையும் பாதுகாக்கும் காவலர்களான தெய்வங்கள் அவனுக்கு வழிகாட்டுகிறார்கள்.அப்போது அந்த தம்பதியர் நல்லகதி பெற மீண்டும் ஒரு கல்யாணமே செய்து கொள்கிறார்கள்.

தொண்ணூறாவது வயதில் நவக்கிரங்களின் முழு ஆசியும் அவனுக்கு கிடைக்கிறது.

நூறாவது வயதைஅடைவது மிகவும் சிரமம். அப்படி அடைந்தவர்களுக்கு ஐம்புலன்கள் - உண்பது (ருசி), நடப்பது, மறுப்பது (கழிவு), காண்பது, உணர்வது ஆகிய ஐந்து செயல்களுமே - கட்டுப்பட்டு அடங்கி விடுகின்றன. இது உன்னதமான நிலை. இதை அடக்குவது சிரமம். இதை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத்தான் "நீ நூறு வயது வாழவேண்டும்"என்று கூறி பெரியோர்கள் வாழ்த்துகின்றனர்.

முக்கியமாக 60ம் கல்யாணம் நடத்துவது அவர்களோட சந்ததியினரின் நன்மைக்காகத்தான்னு சொன்னாங்க. இது அவங்க பிள்ளைகளோட கடமையும் கூடன்னு சொன்னாங்க.பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடாத்தி வை‌‌ப்பது போக, ‌பி‌ள்ளைக‌ள் பெ‌ற்றவ‌ர்களு‌க்கு நடாத்தி வைப்பதுதான் 60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் ‌மற்றுமொரு சிற‌ப்பாகு‌ம்.

-படித்தது.

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

ராசவன்னியன் ஐயாவுக்கு  இனிய 60ஆம்  ஆண்டு கல்யாண நல்வாழ்த்துக்கள். 
தொடரட்டும் இந்த பயணம் ... இனிதே இன்னும் பல ஆண்டுகள். 🙏

Share this post


Link to post
Share on other sites

ராசவன்னியன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்

 

ராசவன்னியருக்குத் திருமணம் வாழ்த்துவோம்  என்ற

தலைப்பை போட்ட பாஞ்சை என்ன செய்யலாம்?

"உவகை" நிலவரப்படி முதிய இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் பாஞ்சின் பதிவு கொஞ்சம் துணுக்குற வைத்துவிட்டது.

Share this post


Link to post
Share on other sites

ராஜவன்னியன் அண்ணாவிற்கு 60வது பிறந்தநாள் வாழ்த்துக்களும் 60 ம் கல்ணயான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!!

Share this post


Link to post
Share on other sites

வன்னியர் தம்பதிகளுக்கு....இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....!

Share this post


Link to post
Share on other sites

ராஜவன்னியன் அண்ணாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...தம்பதியினருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்...வாழ்க,வளமுடன் 

Share this post


Link to post
Share on other sites

ராஜவன்னியர் தம்பதிகளுக்கு இனிய 60 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

ராஜா வன்னியன்  அவர்களுக்கு இனிய அறுபதாம் கல்யாண வாழ்த்துக்கள்.
 தம்பதிகள் மென் மேலும் உடல் உளம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • புதய நாடாளுமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 5 மாதங்களிற்கு பின்னர், நாடாளுமன்றம்- நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது.   நடந்து முடிந்த தேர்தலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். யாழில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார். இம்முறை நாடாளுமன்றத்தில் 28 தமிழ் பேசும் தமிழர்கள் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 25 பேர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்கிறார்கள். முன்னாள் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவாகியுள்ளார். அது தவிர, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல்கள் மூலம் மேலும் இருவர் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர். யாழ் மாவட்டம் அங்கஜன் ராமநாதன் சிவஞானம் ஶ்ரீதரன் எம்.ஏ சுமந்திரன் த.சித்தார்த்தன் டக்லஸ் தேவனந்தா கஜேந்திர குமார் பொன்னம்பலம் சி.வி விக்னேஸ்வரன் வன்னி மாவட்டம் சார்ல்ஸ் நிர்மலநாதன் செல்வம் அடைகலநாதன் வினோ நோகராதலிங்கம் குலசிங்கம் திலீபன் திருகோணமலை மாவட்டம் ஆர்.சம்பந்தன் மட்டக்களப்பு மாவட்டம் சிவனேசதுரை சந்திரகாந்தன் சாணக்யா ராகுல் கோவிந்தன் கருணாகரன் சதாசிவம் வியாழேந்திரன் கண்டி மாவட்டம் எம். வேலுகுமார் நுவரெலியா மாவட்டம் ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ரமேஸ்வரன் பழனி திகாம்பரம் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மயில்வாகனம் உதயகுமார் பதுளை மாவட்டம் வடிவேல் சுரேஸ் அரவிந்தகுமார் கொழும்பு மாவட்டம் மனோ கணேசன் இது தவிர, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக முன்னாள் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.க ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுள்ளதால், அதற்காக தமிழர் நியமிக்கப்பட வாய்ப்பு குறைவு. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக ஒருவர் தெரிவாகுவார். அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேசியப்பட்டியல் மூலம் ஒருவர் தெரிவாகுவார். https://www.pagetamil.com/139170/
  • இன்னும் உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை  இலங்கையில் உள்ள தமிழர்களையும் யாரும் காப்பாற்ற முடியாது 2009 ற்கு பிறகு தீர்வு எடுத்து தருகிறோம் என பேய்க்காட்ட மட்டுமேமுடியும் சிலரால்  ஞானசாரதேரர் காப்பாற்ற வந்தாலும் அதை தடுக்க சில தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறவாதோர்கள் இந்த தேர்தலில் க்ண்ணுற்றோம் நாங்கள்  உன்மையை சொல்லணும் கூட்டமைப்பை மண் கவ்வ வச்சிருக்கம் அது போதும் மக்கள் என்னத்தை விடும்புகிறார்கள் மட்டக்களப்பிலும் , அம்பாறையிலும் என சொல்லி இருக்கிறம் வேணுமென்றாக் சில நாட்களுக்கு பின் ஆய்வுக்கட்டுரைகள் வரும் இணைக்கிறோம்  முஸ்லீம்களால் எல்லை கிராமங்கள் மட்டுமே காணிகள் பிடிப்பது  , இனமாற்றும் நடவடிக்கைகள் ,  அடாவடிகள் எல்லாம் எல்லா காலத்திலும் நடந்துகொண்டுதான் வருகிறது அப்படி தடுத்து நிறுத்தியதாக  கூட்டமைப்பு எம்பிக்கள் யாராவது சொல்லி இருக்கிரார்களா இல்லை அவர்கள் அவர்கள் வேலையை பார்க்கட்டும் நாங்கள் எங்கள்வேலையை பார்ப்போம் நாங்கள் உழைத்தால்தான் சோறு இன்று வரைக்கும் அரசியலால் ஒரு கிலோ அரிசி  கிடைச்சிருக்குமா என்பது என் 35 வயது வாழ்வில் சந்தேகமே . அதாவுல்லா கிட்டதட்ட பல தமிழர்களுக்கு வேலை வழங்கியுள்ளார் ஏன் தமிழர்களும் வாக்கு அளித்துள்ளார்கள் ஆக மக்களுக்கு செலவுக்கும் வாழ்க்கை நடத்துவதற்கும் பணம் தேவை தேசியம் தேவையில்லை , தீர்வும் தேவை இல்லை என அவரவர் வயிற்றுக்கும் மட்டுமே தெரியும்  வெளிநாடுகளிலிருந்து  பார்ப்பபவர்களுக்கு தெரியாது கிழக்கு நிலமை வாழ்ந்து பார்ப்பவனுக்கே அதன் அருமை தெரியும்  கடக்ட் மச்சி  ஒன்றை தக்க வைக்க ஆள் வேண்டுமென்ற நினைப்புத்தான் எங்களுக்கும் இதன் அர்த்தம் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன்   
  • அரசியல் ரீதியான தந்திரோபாயமாக ஒற்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்.   யாழ்.நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இன்று (7) காலை யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், உருவாகியுள்ள சவால் மிக்க ஆட்சிக்காலத்தை எதிர்கொள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்ப தொடர்பில் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர் கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமானது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் கடந்த காலத்தை பார்க்கும் போது சிலர் அந்த ஒன்றுமையை உடைக்கும் வண்ணமாகவும், அந்த கொள்கை ரீதியான ஒற்றுமைக்கு எதிரான சிந்தனையுடனும், செயற்பாட்டுடனும் நடந்து வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆகவே அரசியல் ரீதியான தந்திரோபாயமாக இவ்வாறான ஒன்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும். ஏதோ ஒரு அரசியல் ரீதியான தந்திரோபாயமாக நாங்கள் எல்லோரும் சேர வேண்டும், நாங்கள் அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த பயனும் இல்லை. இதுவரை காலமும் எங்களுடைய கொள்கை ரீதியான விடயங்களை புறக்கணித்து, அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர்கள்தான சுமந்திரன் போன்றவர்கள். அவர்கள் திடீரென மாறுவார்கள் என்று எங்களால் சிந்திக்க முடியாது. ஆனால் எங்ளிடையே கொள்கை ரீதியான ஒன்றுமை அவசியம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்றார். https://www.pagetamil.com/139182/