• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையானது எமது நாட்டின் கெளரவம் மற்றும் இறையாண்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். அத்துடன் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோரே காரணமாகும். யுத்தக்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க தீர்மானித்தது. அதற்கான ஆவணத்தில் மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே மங்கள சமரவீர இதனை மேற்கொண்டிருந்தார். அன்று மங்கள சமரவீர கைச்சாத்திட்டதன் பின்விளைவேயே தற்போதும் நாங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/75822
  • "யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்." ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியனவற்றையும் முதலில் பயணத்தடையை விதிக்க தமிழர் தரப்பு முயதள வேண்டும். அத்துடன், இவ்வாறானவர்களின் வெளிநாட்டு வங்கி கணக்குகளையும் தடை செய்யவேண்டும். புகையை கொஞ்சம் ஊதி அணையவிடாமல் பாதுகாத்து நெருப்பாக்கி விட வேண்டும்.  
  • MCC ஒப்பந்ததம் தொடர்பாக  ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் தொடர்பான  பேராசிரியர் லலிதசிறி குனருவன் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/MCC-ஒபபநதம-அறகக-ஜனதபதயடம-கயளபப/175-245661
  • உங்களின் விமர்சனம் படத்தை பார்க்கத் தூண்டுகின்றது நண்பரே, பார்க்கலாம்.......!   👍
  • காதல் வெறுப்புநோயுள்ளவர்கள் தயவு செய்து சில்லுக்கருப்பட்டி படம் பார்க்கவும். அழகான அவசியமான காதலை அடக்கக முயல்வது பின்னர் பிறந்த குழந்தையின் சடலத்தை தோண்டியெடுப்பதில் வந்து முடிகிறது. குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட்டு அவர்கள் தேவையை அறிந்து வழிகாட்டுவது பெற்றோரின் கடமை, மாநகராட்சியினுடையது அல்ல. ஆனால் மாநகராட்சி இப்படி மழைக்கு முளைக்கும் காளான் போல கடைகளை அமைக்க அனுமதித்து இதனால் போக்கவரத்திற்குத் தடையும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை எங்களில் ஒருவனான அதிகாரியிடம் அந்த எங்களில் ஒருவனான வியாபாரி வழங்கிய கையூட்டு அனுமதித்து விட்டது. (இதுவரை கையூட்டு வழங்காத அல்லது வழங்க ஊக்குவிக்காதவர்கள் இருந்தால் மன்னிக்கவும்.) கலாச்சார காவலர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை நல்லூர் கோவில் திருவிழாவில் எதற்காக பொம்மை மற்றும் குளிர்களி  கடைகளை அமைத்து அங்கே துப்பாக்கி, வாள் பொம்மைகளை விற்க அனுமதிக்கிறார்கள். சாமி கும்பிட வேண்டிய இடத்தில் அவை எதற்கு என நிறுத்தியிருக்கலாமே. (செய்திருந்தால் அங்கும் தோிழுக்க டிரக்டர் தேவைப்பட்டிருக்கும்) வாழ்வாதாரத்திற்காக ஒரு இளம் குடும்பம் (அங்கே படத்தில் தொியும் இருவரும் கணவன் மனைவி என்ற எடுகோளுக்கமைய) தனக்கு தொிந்த, முடிந்த வழியில் பொருளீட்ட முயல்வதை கேள்விகேட்பவர்கள், இளம்பெண் விபச்சாரம், இளைஞன் தற்கொலை போன்ற அவலங்களை தடுக்க யாழ்ப்பாணத்தில் உடனடி சாத்தியமான தீர்வுகளையும் தரவேண்டும். சிறுவர்கள் மற்றும் மாணவர்களை வழிகாட்டுவதாக கூறிக் கொண்டு மேலும் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது சிறப்பான பயன் தராது. மாறக அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிப்பதும், சுய ஒழுக்கத்தையும், தைரியத்தையும் ஊக்குவிப்பதே சிறந்தது என எண்ணுகின்றேன்.