• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்       சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றது.   http://tamil.adaderana.lk/news.php?nid=125114
    • இராணுவத்தினர் மீது தாக்குதல்; எட்டு இளைஞர்களுக்கு பிணை     -எம்.றொசாந்த். யாழ். நாகர் கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  யாழ். நாகர் கோவில் பகுதியில் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியதை அடுத்து அங்கு கூடியவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து மறுநாள் 16ஆம் திகதி அதிகாலை இராணுவத்தினர் நாகர் கோவில் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள்.  அதன் போது நான்கு இளைஞர்களை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் தொடர்ந்து வந்த நாட்களிலும் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து மேலும் நான்கு இளைஞர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.  இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட எட்டு இளைஞர்களும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று (29) வரை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.  இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான்  நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இளைஞர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.  அதன் போது எட்டு இளைஞர்கள் சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தார்.  எட்டு இளைஞர்களையும் பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இரு தரப்பின் நீண்ட வாதத்தின் பின்னர், எட்டு இளைஞர்களையும் தலா  5 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும் , ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.   http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இராணுவத்தினர்-மீது-தாக்குதல்-எட்டு-இளைஞர்களுக்கு-பிணை/71-244711
    • பாட்டலியின் சாரதியிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு       பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவரின் சாரதி துசித திலும் குமார கொழும்பு நீதவான் முன்னிலையில் இரகசிக வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நேரஞ்சனா டி சில்வாவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் துசித திலும் குமார என்ற சந்தேகநபர் கடந்த 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   http://tamil.adaderana.lk/news.php?nid=125127
    • பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித்திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம். அமெரிக்கா அறிவித்துள்ள திட்டத்தின்படி ஜெருசலேம் பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக இருக்கும்.   பாலத்தீன சுதந்திர அரசு பாலத்தீன சுதந்திர அரசை முன்மொழிந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேற்கு கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையாண்மையையும் அங்கீகரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை தனது அருகில் வைத்துக் கொண்டு இந்த அமைதி திட்டத்தை வெள்ளை மாளிகையில் அறிவித்த டிரம்ப், "இதுதான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு" என்றும் கூறினார். பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "இது சதித்திட்டம்" என்று கூறி அமெரிக்காவின் முன்மொழிவினை புறக்கணித்துள்ளார். எங்களது உரிமை விற்பனைக்கு அல்ல மஹ்மூத் அப்பாஸ், "நான் டிரம்பிற்கும், பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கும் ஒன்றை சொல்ல விழைகிறேன். ஜெருசலேம் விற்பனைக்கு அல்ல, எங்கள் உரிமைகளைப் பேரம் பேச முடியாது. அவை விற்பனைக்கு அல்ல. உங்களது சதித்திட்டம் வெல்லாது," எனக் கூறி உள்ளார். சர்வதேச அளவில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான செயல்திட்டமானது டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷனரின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டது. ஒரு பக்கம் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இஸ்ரேல் ராணுவம் மேற்கு கரையில் தமது படைகளை மீண்டும் நிறுத்தியது. இதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் காசாவில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். மேற்கு கரையில் 4 லட்சம் இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. சர்வதேச சட்டத்தின்படி அவை சட்டவிரோதமானது. ஆனால், இஸ்ரேல் இதில் முரண்படுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES திட்டத்தின் முக்கிய முன் வரைவுகள் என்னென்ன? எந்த பாலத்தீனரும், இஸ்ரேலியரும் தங்கள் இடத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட மாட்டார்கள். அதாவது, இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்கு கரையில் உள்ள யூத குடியேற்றங்களில் எந்த மாற்றமும் இல்லை. இஸ்ரேலின் பகுதியாக டிரம்ப் கூறும் திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தின் மீது இஸ்ரேலுக்கு உள்ள இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரிக்கும். இஸ்ரேல் செய்ய விரும்பும் பிராந்திய ரீதியிலான சமரசங்களைக் காட்டுவதாக டிரம்ப் தெரிவிக்கும் ஒரு கருத்துரு வரைபடமும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும். பாலத்தீன தரப்புக்குக் கிழக்கு ஜெருசலேத்தில் ஒரு தலைநகரை இந்த வரைபடம் அளிக்கிறது. இங்கு அமெரிக்கா தங்களின் தூதரகத்தைத் திறக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் அறிவித்துள்ள திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தில் 15 சதவீதத்துக்கு மேலாக பாலத்தீனர்களுக்கு கட்டுப்பாடு கிடைப்பதாக தெரிவித்துள்ள பாலத்தீன விடுதலை அமைப்பான பிஎல்ஓ, இதனை ''வரலாற்று சிறப்பு வாய்ந்த பாலத்தீனம்'' என்று கூறுகிறது. ஜெருசேலம் ''பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக தொடர்ந்து இருக்கும்''. இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரு தரப்பும் ஜெருசலேம் தொடர்பாக தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. 1976 மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததாகக் கூறும் பாலத்தீனம் அந்நகரை தங்களின் எதிர்கால தனி நாட்டுக்கு தலைநகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.   https://www.bbc.com/tamil/global-51290837
    • இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட பெண் குணமடைந்தார்!        by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சீனப்பெண் சிகிச்சைகளை அடுத்து குணமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பாரிய திட்டங்களில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையில்-கொரோனா-வைரஸ்/