Jump to content

ராசவன்னியருக்குத் திருமணம்! வாழ்த்துவோம்!!


Recommended Posts

பார்த்தால் மணமுடிக்கும் பருவத்தோற்றத்தில் வன்னியர், அவருக்கா அறுபது!!!! நம்பமுடியவில்லை🤔

வன்னியர் தம்பதிகளின் அறுதாம் ஆண்டுக் கல்யாணத்தை அவர்களின் பிள்ளைகள் திருக்கடையூர் கோவிலில் வெகு சிறப்பாக நடாத்திவைத்தார்கள்.

சகல செளபாக்கியங்களுடன் மேலும் இரண்டுபெற்று இனிதாக நாம் இருவர், நமக்கு நால்வர் என்று பலநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள்!!!!! 💐:88_raised_hands: 

201605171421560541_Sashtiapthapoorthi-Ceremony_SECVPF.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் தம்பதிகளுக்கு....இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழருக்கு இனிய 60 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                 Image associée

இனிய  60 ம் நாள் திருமண நல் வாழ்த்துக்கள் ராசவன்னியன் தம்பதியினருக்கு......!  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் அண்ணருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் தம்பதிகளுக்கு....இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் தம்பதிகளுக்கு

 அறுபதாவது திருமண நல்வாழ்த்துக்கள்.

nature-photo6.png  

 

பிள்ளை பேரப்பிள்ளைகளுடன் சகல சௌபாக்கியங்களுடனும் நீடூழிவாழ வாழ்த்துகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் 

மன்னிக்கவும் எனக்கு ஒரு சந்தேகம். 
இவ்விழா நீங்கள் திருமணம் செய்து 60 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் விழாவா? அல்லது நீங்கள் 60 வயதை அடைந்ததினாலா? 

அப்படியானல் நீங்கள் 20 வதில் திருமணம் செய்திருந்தால் இப்பொழுது உங்களிக்கு 80 வயதா? நிச்சயாமாக உங்களுக்கு துபாயில் வேலை செய்யாக்கூடிய அனுமதி ம‌றுக்கப்ப்ட்டிருக்கும்.  எனக்கு நம்ப முடியவில்லை விளக்குவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் sir

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களை அருளிய,

பாஞ், புங்கை, தமிழ்தேசியன், ஜெகதா துரை, சுவி, ஏராளன், நந்தன், நுணாவிலன், பெருமாள், குமாரசாமி, மோகன், பகலவன், வாதவூரான், கொழும்பான், ஈழப்பிரியன் மற்றும் ராஜா1982

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அறுபதாம் கல்யாணம் மிக இனிமையானதுதான்.. எனது பிள்ளைகள், பேரப்பிள்ளை மற்றும் உறவுகளுடன் நடந்தது.

மயிலாடுதுறை அருகேயுள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சிறப்பாக நேற்று காலை நடைபெற்றது.

பல முதியவர்களின் திருமணமும் மண்டபத்தில் அருகருகே நடந்தது. கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் இதற்காகவே தொடர்ந்தன.

கோவிலின் வாசலில் பல மணமக்கள் மாலையும் கழுத்துமாக திரிவதை பார்க்க இனம் புரியாத சந்தோசம். பல இளவயதினர் மணிவிழா கண்ட முதிய மணமக்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதையும் கண்டேன்.

நம் யாழ்க்கள 'பாஞ்' பெரியவரிடம் ஆசி வாங்க செய்தி அனுப்பினேன், அவர் இங்கே பகிர்ந்துவிட்டார்.

அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மீண்டும் நன்றிகள்..!

 

thaks02-Editted.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

இன்று பரவலாக பிள்ளைகளால் பெற்றவர்களிற்கு 60-ம் கல்யாணம் நடாத்தி வைக்கும் பண்பாடு நிலவுகின்றது. இருந்தும் பலருக்கும் 60-ம் ‌பிற‌ந்த நா‌ள் ம‌ட்டு‌ம் அ‌வ்வளவு ‌சிற‌ப்பு ஏ‌ன்? அ‌ந்த ஆ‌ண்டி‌ல் ம‌ட்டு‌ம் ‌‌மீ‌ண்டு‌ம் ‌திருமண‌ம் அதாவது 60-‌ம் க‌ல்யாண‌ம் நடாத்தப்படுகின்றது என்பதன் காரணம் தெரிவதில்லை.
கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர்.

ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள், அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் கருதலா‌ம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.

சஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க (ஆங்கில காலண்டர்படி அல்ல). ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும். ஆங்கில வருடத்தை பார்க்காமல் பஞ்சாங்கம் பார்த்து, இந்த நாளில்தான் 60ம் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக் கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

அவன்தனது இந்திரியங்களின் இச்சைகளுக்கும் உட்பட்டு வாழ்கிறான்.ஆனால் அறுபதாவது வயது அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமைய வேண்டும். அதற்குப் பிறகு அவன் உலக பந்தங்களை விட்டுவிட முயல வேண்டும். இதை நினைவு படுத்தவே அவனுக்கு அறுபதாவது வயதில் மனைவியைப் பக்கத்தில் உட்காரவைத்துப் பக்குவமாக ஒரு கல்யாணத்தையும் நடத்துகிறார்கள்.

எழுபது வயதில் அவன் மனமுதிர்ச்சி பெற்று,சப்தரிஷிகளைப் போன்ற பக்குவ நிலையைஅடைகிறான்.

என்பதாவது வயதில் எட்டுத் திசைகளையும் பாதுகாக்கும் காவலர்களான தெய்வங்கள் அவனுக்கு வழிகாட்டுகிறார்கள்.அப்போது அந்த தம்பதியர் நல்லகதி பெற மீண்டும் ஒரு கல்யாணமே செய்து கொள்கிறார்கள்.

தொண்ணூறாவது வயதில் நவக்கிரங்களின் முழு ஆசியும் அவனுக்கு கிடைக்கிறது.

நூறாவது வயதைஅடைவது மிகவும் சிரமம். அப்படி அடைந்தவர்களுக்கு ஐம்புலன்கள் - உண்பது (ருசி), நடப்பது, மறுப்பது (கழிவு), காண்பது, உணர்வது ஆகிய ஐந்து செயல்களுமே - கட்டுப்பட்டு அடங்கி விடுகின்றன. இது உன்னதமான நிலை. இதை அடக்குவது சிரமம். இதை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத்தான் "நீ நூறு வயது வாழவேண்டும்"என்று கூறி பெரியோர்கள் வாழ்த்துகின்றனர்.

முக்கியமாக 60ம் கல்யாணம் நடத்துவது அவர்களோட சந்ததியினரின் நன்மைக்காகத்தான்னு சொன்னாங்க. இது அவங்க பிள்ளைகளோட கடமையும் கூடன்னு சொன்னாங்க.பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடாத்தி வை‌‌ப்பது போக, ‌பி‌ள்ளைக‌ள் பெ‌ற்றவ‌ர்களு‌க்கு நடாத்தி வைப்பதுதான் 60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் ‌மற்றுமொரு சிற‌ப்பாகு‌ம்.

-படித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் ஐயாவுக்கு  இனிய 60ஆம்  ஆண்டு கல்யாண நல்வாழ்த்துக்கள். 
தொடரட்டும் இந்த பயணம் ... இனிதே இன்னும் பல ஆண்டுகள். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்

 

ராசவன்னியருக்குத் திருமணம் வாழ்த்துவோம்  என்ற

தலைப்பை போட்ட பாஞ்சை என்ன செய்யலாம்?

"உவகை" நிலவரப்படி முதிய இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் பாஞ்சின் பதிவு கொஞ்சம் துணுக்குற வைத்துவிட்டது.

Link to comment
Share on other sites

ராஜவன்னியன் அண்ணாவிற்கு 60வது பிறந்தநாள் வாழ்த்துக்களும் 60 ம் கல்ணயான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் தம்பதிகளுக்கு....இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...தம்பதியினருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்...வாழ்க,வளமுடன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியர் தம்பதிகளுக்கு இனிய 60 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா வன்னியன்  அவர்களுக்கு இனிய அறுபதாம் கல்யாண வாழ்த்துக்கள்.
 தம்பதிகள் மென் மேலும் உடல் உளம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.