• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Paanch

ராசவன்னியருக்குத் திருமணம்! வாழ்த்துவோம்!!

Recommended Posts

இனிய 60 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் வன்னியன் சார்
என்றும் இன்புற்றிருக்க வாழ்த்துகின்றேன்

Share this post


Link to post
Share on other sites

மகிழ்ச்சியான நிகழ்வு

வாழ்த்துக்கள்.. ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்க!

Edited by சண்டமாருதன்

Share this post


Link to post
Share on other sites

அன்பான தம்பதிகட்கு

அறுபதாம் கல்யாணம்.

அகம்குளிர்ந்து வாழ்த்துகின்றேன்,

ஆண்டு நூறைத்தொட்டிடட்டும்.

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für 60th wedding anniversary

 

திரு, திருமதி ராஜவன்னியர் தம்பதியினருக்கு....
இதயம் கனிந்த....  60´ம் கலியாண வாழ்த்துக்கள்.  :)
இன்று போல்... என்றும் நீண்ட நாட்கள்... மகிழ்ச்சியோடும்,  
ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டுகின்றேன். 🌝

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் அருளிய,

சசிவர்ணம், வல்வை சகாரா, தமிழினி, வாசி, ரதி, எப்போதும் தமிழன், நிலாமதி, அகஸ்தியன், வாத்தியார், சண்டமாருதன், நந்தி மற்றும் தமிழ்சிறி ஆகியோருக்கும்

மனமார்ந்த நன்றிகள்..!

இம்மாதிரி அறுபதாம், எண்பதாம் கல்யாணங்கள் தமிழ் நாட்டில் திருக்கடையூர் கோவிலில் மட்டுமே பெரும்பாலும் நடைபெறுவதாக ஐதீகம்.

சென்ற வருடமே நடைபெற வேண்டியது இவ்வருடம் சிறப்பாக  நடந்தேறியதில் என் மகளுக்கும், மகனுக்கும் பங்குண்டு.

தாத்தாவின் திருமண மணிவிழாவை என் பேரன் புன்னகையோடு மாலையணிந்து ரசித்தார். :)

 

இதுதான் திருக்கடையூர் கோவில்..:103_point_down:

 

 

 

Share this post


Link to post
Share on other sites

அறுபதாம் கல்யாணத்தைச் சிறப்பாகக் கொண்டாடிய ராசவன்னியன் தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, colomban said:

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் 

மன்னிக்கவும் எனக்கு ஒரு சந்தேகம். 
இவ்விழா நீங்கள் திருமணம் செய்து 60 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் விழாவா? அல்லது நீங்கள் 60 வயதை அடைந்ததினாலா? 

அப்படியானல் நீங்கள் 20 வதில் திருமணம் செய்திருந்தால் இப்பொழுது உங்களிக்கு 80 வயதா? நிச்சயாமாக உங்களுக்கு துபாயில் வேலை செய்யாக்கூடிய அனுமதி ம‌றுக்கப்ப்ட்டிருக்கும்.  எனக்கு நம்ப முடியவில்லை விளக்குவீர்களா?

அமீரகத்தில் பணிபுரிய 60 வயது உச்ச வரம்பு இருந்தாலும், பெரும்பாலும் துபாயில் 65 வயது வரை வேலை செய்யலாம். சில தனியார் நிறுவனங்களில் 70 வயதுவரை வேலை செய்பவர்களும் உண்டு. எல்லாம் அந்த நிறுவனத்தின் தொழில்முறை தேவையை பொறுத்தது.

ஒரு வித்தியாசம் மட்டுமுண்டு.

60 வயது வரை மூன்று வருடத்திற்கு ஒருமுறை வேலைக்கான ஒப்பந்தமும், விசாவும் புதுப்பிக்கப்படும்.

60 வயதை தாண்டிவிட்டால் வேலை கொடுப்பவர், எமக்கு இவரின் தனிதிறமைகள் வேலைக்கு அவசியம் என சிபாரிசு செய்யவேண்டும், வேலை விசாவிற்கான வைப்புத்தொகை அதிகரிக்கும், வருடம் ஒருமுறை மருத்துவ சோதனைக்கு சென்று தகுதி சான்றிதழ்(Medical Fitness Certificate) பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் வேலைக்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.

அரசாங்க வேலையெனில் மூன்று வருடத்திற்கு விசாவும், தனியார் நிறுவன வேலையென்றால் இரு வருட விசாவும் கிட்டும். 

நான் பணிபுரிவது அரசாங்க வேலை என்பதால் 60 வயதிற்கு மேற்பட்டும் சில வருடமாக அது பாட்டுக்கு ஓடுது..!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

ராசவன்னியன்,
மங்களகரமான சஷ்டியப்த பூர்த்தி வாழ்த்துக்கள்.
இதில் உள்ள விசேடம்   என்னவென்றால் பிள்ளைகள் முன்னின்று நடத்தி வைப்பது , இங்கேயும் எனது இந்திய நண்பரொருவரின் சஷ்டியப்தத்திற்கு சென்றிருந்தேன் , வெகு மன நிறைவான  விழாவாக இருந்தது.
இலங்கையர்களில் இந்த வழக்கம் பெரிதாக இல்லை , மடிசார் காட்டுவார் என்றால் நாங்களும் ட்ரை பண்ணலாம் என்று துணைவியாரிடம் கேட்டிருக்கிறேன்;  சாடையாக தலையாட்டியிருக்கிறார்.
மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்….


 

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, வல்வை சகாறா said:

ராசவன்னியன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்

 

ராசவன்னியருக்குத் திருமணம் வாழ்த்துவோம்  என்ற

தலைப்பை போட்ட பாஞ்சை என்ன செய்யலாம்?

"உவகை" நிலவரப்படி முதிய இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் பாஞ்சின் பதிவு கொஞ்சம் துணுக்குற வைத்துவிட்டது.

பாஞ்சின் பதிவு துணுக்குற வைக்கவில்லை வல்வை சகாறா அவர்களே!

நான் உவகையை நாடியிருந்தால் நிச்சயம் உவகை ஒரு பெண்ணை அவருக்குத் தேடியிருக்கும்.

வன்னியரும் பாஞ்சு வந்திருப்பார்... சுப்பிரமணியராகி தேவிகளோடு காட்சி தந்திருப்பார். 

என் பதிவு...! வன்னியரை, நம்நாட்டுச் சுப்பிரமணிய சுவாமியாகாமலும் காப்பாற்றியுள்ளது.!! 

 

 

 • Like 1
 • Confused 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்களை வழங்கிய,

கிருபன், சாமானியன், சுவைப்பிரியன், அபராஜிதன் ஆகியோருக்கும் நன்றி..! 🙏

14 hours ago, Paanch said:

வன்னியரும் பாஞ்சு வந்திருப்பார்... சுப்பிரமணியராகி தேவிகளோடு காட்சி தந்திருப்பார். 

what.gif    

ஏற்கனவே பின் தலையில் சொட்டை விழ ஆரம்பித்துவிட்டது.

இதில் நீங்கள் வேறையா..?

 

Share this post


Link to post
Share on other sites

மகிழ்ச்சியாக தம் மணி விழாவை கொண்டாடிய ராசவன்னியன் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.  அவர்களை மதித்து அவர்களை மகிழ்வித்த பேரப் பிள்ளைகளுக்கும் ஏனைய அவரின் உறவுகளுக்கும் வாழ்த்துகள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் சார் அவர்களே.🌹

Share this post


Link to post
Share on other sites
On 8/19/2019 at 3:40 PM, tulpen said:

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் சார் அவர்களே.🌹

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, திரு.துல்பன்.  100_pray.png

(பல நாட்கள் கழித்து யாழ் களம் வந்துள்ளதால், இன்றுதான் கவனிக்க நேர்ந்தது.)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ம்ம் ஒரு நாளைக்கு வடிவேலர்,ஒரு நாளைக்கு பப்பி வேற தாத்தா.‌...😀
  • நான் சொல்ல வந்த தை சொல்லவிட்டீர்கள், இனி வேலையில்லை, நடையை கட்டுவம். 🚶‍♂️ புழுக்கொடியல் மாவிற்கு தேங்காய் பூ சீனி போட்டு குழைத்து விடிய ஒரு உருட்டை சாப்பிட்டு பாருங்கள் பிளேன்ரியுடன், அந்த மாதிரி இருக்கும் சுவை   நல்ல கேள்வி😂, வாய்விட்டு சிரித்துவிட்டேன்
  • மாமனார், கணவரை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா: 8 வயது மகளுக்கும் தொற்று உறுதி ஆனது   மாமனார் அமிதாப் பச்சன், கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது 8 வயது மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நடிகை ரேகாவின் பங்களாவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திப்பட உலகினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பதிவு: ஜூலை 13,  2020 05:45 AM மும்பை,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த மும்பை பங்களா வீட்டு வாசலில் மாநகராட்சி சார்பில் பேனர் தொங்கவிடப்பட்டு இருப்பதையும், மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததையும் படத்தில் காணலாம். கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவுடன் உலகம் போராடிக்கொண்டு இருக்கிறது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இந்த நோய்க்கிருமியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்த்தொற்று அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 8½ லட்சத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி இருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் அமிதாப் பச்சனின் மகனும், பிரபல நடிகருமான 44 வயது அபிஷேக் பச்சனும் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வலைத்தளத்தில் பதிவிட்டார். தனக்கும், தனது தந்தைக்கும் நோய்த் தொற்றின் தாக்கம் லேசாக இருப்பதாகவும், அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்றும் அதில் அவர் கேட்டுக்கொண்டார். அவர்கள் இருவரும் மும்பை வில்லேபார்லேயில் உள்ள நானாவதி தனியார் ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து நானாவதி தனியார் ஆஸ்பத்திரியின் டாக்டர் அப்துல் சமத் அன்சாரி கூறுகையில், “தந்தை- மகன் இருவரும் தாங்கள் நன்றாக இருப்பதை உணர்கிறார்கள். நன்றாக தூங்கினார்கள். காலையில் சிற்றுண்டி சாப்பிட்டார்கள். அவர்களது உடல் நிலை சீராக உள்ளது” என்றார். பல்வேறு உடல் உபாதைகளால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக அமிதாப் பச்சன் ஏற்கனவே சில தடவை கூறி இருக்கிறார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை அறிந்து அவரது ரசிகர்களை கலக்கம் அடைந்து உள்ளனர். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அமிதாப்பச்சனின் மனைவி நடிகை ஜெயாபச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும், முன்னாள் உலக அழகியுமான 46 வயது ஐஸ்வர்யா ராய், அவரது 8 வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஜெயாபச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து இருப்பதாகவும் மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று மாலை தெரிவித்தார். ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவரும் நோய்த் தொற்று அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொற்றுக்கு ஆளாகாத ஜெயா பச்சனும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. 2-வது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுவதாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டு உள்ள நானாவதி ஆஸ்பத்திரி முன்பு நேற்று காலை முதலே ரசிகர்கள் திரள தொடங்கினர். சாலையில் அவர்கள் கூடி நின்றதால், கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மும்பை ஜூகு பகுதியில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா முன்பும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அந்த பங்களாவிலும், அமிதாப்பச்சனின் அலுவலகத்திலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். அத்துடன் அந்த பங்களா ‘சீல்‘ வைக்கப்பட்டு, அது தொடர்பான அறிவிப்பு பேனரும் அங்கு வைக்கப்பட்டது. இதுதவிர மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் மேலும் பங்களாக்களுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13033331/Corona-to-Aishwarya-Rai-following-Husbanad-and-fatherinlaw.vpf  
  • தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா: 3,617 பேர் குணம்; 68 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் 4,244 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 77 ஆயிரத்து 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 617 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரையில் 89 ஆயிரத்து 532 பேர் குணம் அடைந்து உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் என 68 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 32 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, விருதுநகரில் தலா 4 பேரும், காஞ்சீபுரம், தூத்துக்குடியில் தலா 3 பேரும், தேனி, ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். தற்போது மொத்த கொரோனா உயிரிழப்பு 1,966 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 843 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 870 முதியவர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 203 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 571 முதியவர்களும் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக 41 ஆயிரத்து 325 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதுவரை 15 லட்சத்து 42 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13040657/Corona-for-4244-newcomers-in-Tamil-Nadu-3617-cured.vpf