Jump to content

வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் - மாவை சேனாதிராஜா


Recommended Posts

இரண்டு ஆண்டுகால  அவகாசத்தில் அரசியல் தீர்வை  பெற்றுத்தருவோம்  என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது.  

வாக்குறுதிக்கு அமைய  இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

mawai_senadhiraja.jpg

கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆரோக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் கல்முனை விவகாரம் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது  குறித்து அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் மேட்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இதன்போது எமது மக்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்வு விடயங்கள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி செயட்பாடுகள் குறித்து பிரதமருக்கு தெளிவுபடுத்தினேன் என அவர் இதன் போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60621

 

பிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழப்புடன் இருக்க வேண்டும் - தயாசிறி 

தேர்தல்கள் நெருங்குவதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று மீண்டும் அந்த மக்களின் பொய் வாக்குறுதியையே வழங்கியுள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன் இந்த வாக்குறுதிகளுக்கு ஏமாறாமல் தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டடு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/60614

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

வாக்குறுதிக்கு அமைய  இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

எத்தனை தடவை வாக்குறுதி?எத்தனை தடவை ஏமாற்றம்.

இதெல்லாம் பழகிப் போயிருக்குமே?

Link to comment
Share on other sites

அதி­காரப் பகிர்வு

தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்ற அர­சியல் தீர்வு அதி­கார பலத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. மீளப் பெற முடி­யாத காணி உரித்­து­டைய பிராந்­திய ஆட்சி நிர்­வாக உரிமை சார்ந்­தது. அதனை அவர்கள் சமஷ்டி முறை­யி­லா­னதோர் அர­சியல் தீர்­வாக குறிப்­பி­டு­கின்­றார்கள். 

ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட பேரின அர­சி­யல்­வா­திகள் ஒற்­றை­யாட்­சி­யையே அர­சியல் தீர்­வுக்­கான அடிப்­படை கொள்­கை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். சமஷ்டி என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்­பது அவர்­களின் நிலைப்­பாடு. ஒற்றை ஆட்­சியின் கீழ் தமிழ் மக் கள் எதி­ர்பார்க்­கின்ற அதி­காரப் பகிர்வு சாத்­தி­ய­மற்­றது. 

பல்­லின மக்கள் பல மதங்­களைச் சார்ந்­த­வர்கள் வாழ்­கின்ற நாடு என்ற வகையில் பலரும் இந்த நாட்டைத் தமது தாய்­நா­டாக உரிமை கொள்­ளத்­தக்க வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். அந்த பல்­லி­னத்­தன்­மைக்­கான இணக்­கப்­பாட்டை எட்­டு­வதில் பல சிக்­கல்­களை எதிர் கொள்ள வேண்டி இருக்­கின்­றது. 

பெரும்­பான்மை இனம் என்ற மேலா­திக்க எண்­ணமும், மேலாண்மை அர­சியல் போக்கும் பேரின அர­சி­யல்­வா­தி­களை ஏனைய இன மக்­களின் உரி­மை­களை மதித்துச் செயற்­ப­டு­வ­தற்­கான தடைக்­கற்­க­ளாக இருக்­கின்­றன. இந்தத் தடைக்­கற்­களைக் கடந்து வர­வேண்டும் என்ற பரந்த மனப்­பான்மை கொண்­ட­வர்­களை பேரின அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் காண முடி­ய­வில்லை. 

https://www.virakesari.lk/article/60581

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாயில் வடை சுடுவது எல்லாம் பழைய ஸ்ரைல் ..

20270204-indian-food-vada-with-chutney-a

கூடவே இரண்டு வகை சம்பலையும் சுட சுட அரைத்து தருவதுதான் புது ஸ்ரைல்..😢

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

வாக்குறுதிக்கு அமைய  இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

இது எத்தனையாவது வாக்குறுதி!
மக்களுக்கு பல வாக்குறுதிகளை யார் கொடுத்தது?
இப்போது யார் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்?

மாவை சேனாதிராஜா இப்படியே எவ்வளவு காலத்துக்கு தமிழ் மக்களை ஏமாற்றி ஈனப் பிழைப்பு நடத்தப் போகிறார்?

மாவை சேனாதிராஜா தலைமையிலுள்ள தமிழரசுக் கட்சியின் திருடர் பட்டாளத்துக்கு தேர்தல் நடுக்கம் ஆரம்பித்துள்ளது?

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

வாக்குறுதிக்கு அமைய  இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

இந்த குள்ளநரிக்கு சிங்கத்தின் சிலிர்ப்பு பொருத்தமா இல்லையே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.